லீவுக்கு போய்ட்டு திரும்ப வராமல் வேறு கம்பெனிக்கு பணிக்கு செல்வதும் குற்றமாம்.இனி அப்படி செய்தால் மீண்டும் GCC க்குள் நுழைய முடியாதாம்.
அடங் கொக்க மக்கா நானெல்லாம் அப்படித் தான் 4 வருஷத்தில் 3 கம்பெனி மாறிவிட்டேன்.இப்ப கூட இன்னொரு கம்பெனிக்கு மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அப்ப அதுக்கு ஆப்பா??????
அவ்வ்வ்வ்வ்.........
3 comments:
அன்பின் சுந்தர்,
அது ஒன்றுமில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அன்றைய அரபுகள் செய்த அடிமை வாணிகத்தை கொஞ்சம், கொஞ்சமாக தடுத்து கடைசியில் முழுமையாக ஒழித்து கட்டினார்கள். அன்று கருப்பினத்தை சார்ந்த, அடிமையாக இருந்த பிலால்(ரலி) அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து குறைஷி அரபுகள் பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த புனித தலமான காஃபாவின் மீதேறி தொழுகைக்கான அழைப்பை (அதான்-பாங்கு) விடுக்கச்சொல்லி கட்டுடைத்தார்.முஹம்மது நபி (ஸல்) அன்று உடைத்த கட்டை இதுவரை எவரும் திரும்ப கட்ட இயலவில்லை. இதை தெளிவாக விளங்கிக்கொள்வதற்காக ஒரு ஒப்புமை - திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள பெரிய கோபுரத்தில் உள்ள கருவறையில் தலித் சகோதரர் ஒருவர் நுழைந்து வேதம் சொல்வது போல. இப்போது விளங்கி இருக்கும் !!!. நிறைய பேருக்கு இது விளங்காது. அதனால் தான் இந்த ஒப்புமை :-).
ஆனால் தற்போதைய "அரபுலக துளுக்கன்ஸ்" இந்த அடிமை வாணிகத்தை மறுபடியும் கொண்டு வருகிறார்கள். அதன் 2010 க்கான வடிவத்தின் ஒரு பகுதி தான் இது. கூர்ந்து கவனித்தால் பழைய அடிமை முறைக்கும் இதற்கும் அணுவளவு கூட வித்தியாசம் இருக்காது. பணியாளர்களை இந்த அரபுலக துளுக்கன்ஸ் அடிமைகளைப்போல் பாவிக்கவே இந்த அவசர சட்டம். இதில் முழுக்க முழுக்க அந்த அரபுகளின் நலனே மிகைத்திருக்கிறது.அரபு எஜமானன்களின் விருப்பத்திற்கு எதிராக பணியாளர்கள் (அடிமைகள்) எதுவும் செய்ய இயலாத படி இந்த சட்டம் உள்ளது. கூடிய விரைவில் இந்த எஜமானன்கள் முற்றாக அழிக்கப்பட இறைவனுக்கு ஒரு காரணம் வேண்டுமில்லையா? அதனால் தான் ஆப்பை தேடிப்போய் அமர்கிறார்கள் இந்த சனியன்கள். ஆக அடுத்த பெரும் பூகம்பம் அங்கே வர வாய்ப்பை உருவாக்கி விட்டனர் இந்த கேடுகெட்ட அரபுகள்.இது பற்றி பிறகு விவரமாக தகவல் தருகிறேன். அது வரை பொறுத்திருக்கவும்.
with care & love,
Muhammad Ismail .H, PHD.,
இதுக்கும் ஆப்பு வச்சிட்டாங்களா!
இவங்க கொடுமை தாங்க முடியலை சார்.
என்னா தல..
இதுக்கும் ஆப்பா :((
கருத்துரையிடுக