கட்டுமானத்துறையில் (Oil & Gas) பணி புரிவது ரொம்ப கொடுமையானது,சில நேரங்களில் 18 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்,மற்ற சில நேரங்களில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்க வேண்டியிருக்கும்.அதுவும் நான் குவாலிட்டி கண்ட்ரோல் ஆய்வாளராக இருப்பதால் இன்ஸ்பெக்ஷன் இருந்தால் மட்டும் சைட்டிற்கு போனால் போதுமானது,மற்ற நேரங்களில் அலுவலகம் தான்.
தற்போது பணி புரியும் புராஜெக்ட் முடியும் தறுவாயில் உள்ளதால் கடந்த 3 மாதமாக சுத்தமாக வேலை இல்லை,காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நேரத்தை கடத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.முடிந்தவரை எல்லாப் பதிவுகளையும் படித்து விடுவேன் சில நேரங்களில் பழைய பதிவுகளையும்.
கடந்த மாதம் ஒரு நாள் ஐடி டிபார்ட்மென்டிலிருந்து எங்க டீம் லீடர்க்கு ஒரு ஓலை வந்தது.புராஜெக்ட்டில் இணையத்தை அதிகம் உபயோகிக்கும் டாப் 10 நபர்களுள் எங்கள் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர் எனவும்,இணைய உபயோகத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அல்லது இணைப்பு துண்டிக்கப் படும் எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
அந்த நாலு மக்களும் என்னை கொடுமையாகப் பார்த்தார்கள்,எப்ப பார்த்தாலும் நீ தான் நெட்ல இருக்க,உன் பேர் வரல எங்க பேர் மட்டும் எப்படி வந்தது என்றனர்.
அதுல ஒரு சேட்டன் நான் பேப்பர் மட்டும் தான் படிப்பேன்,அப்புறம் கொஞ்ச நேரம் வீட்டுக்கு பேசுவேன் என் பேரும் வந்திருச்சே என்றார்.(கொஞ்ச நேரம்னா சேட்டனோட அகராதில காலையில 2 மணி நேரம்,மாலையில் 2 மணி நேரம் ஜிடாக்ல அதுவும் வெப் கேமோடனு அர்த்தம்)
தமிழ் நண்பர் ஒருவர் அலுவக மெயில் 10 வரிக்கு மேல வந்தாலே படிக்க மாட்டாரு.அது என்ன மேட்டர்னு படிச்சு சொல்லுங்கன்னு நமக்கு அனுப்புவாரு,அவ்ளோ பெரிய படிப்பாளி.வண்ணத்திரைல படம் பாக்குறது (படம் மட்டும்) தமன்னா,நமீதா படம் டவுன்லோட் பண்றதுனு தன் நேரத்தை உபயோகமா செலவிடுவார்.
நான் அவரைக் கூப்பிட்டு அண்னண் உண்மைத்தமிழன் அவர்களின் மானிட்டர் பதிவைக் காமிச்சேன்.
யோவ் என்ன இவ்ளோ பெரிசா இருக்கு என்ன மேட்டரு?
அது ஒன்னுமில்ல அவரோட மானிட்டர் ரிப்பேர் ஆயிருச்சாம் அதத்தான் அண்னண் சுருக்கமா எழுதியிருக்காரு என்றேன்.
மானிட்டர் ரிப்பேர் ஆனதுக்கு இவ்ளோ பெரிசா மிரண்டு விட்டார் நண்பர்.
இப்ப தெரியுதா என் பேர் ஏன் வரலைனு இவரோட பதிவுகளைப் படிச்சாலே போதும் இன்னும் ஒரு வருஷம் ஓட்டிடுவேன்.உங்கள மாதிரி நான் எந்த டவுன்லோடும் பண்றதில்லேனு சொன்னேன்.
நண்பர்கள் இப்ப மெயில் பார்க்கவும்,பேப்பர் படிக்கவும் மட்டும் இணையத்தை உபயோகப்படுத்துகிறார்கள்,மற்ற நேரங்களில் படம் பார்க்கிறார்கள்.எந்த படத்தையும் விட்டு வைப்பதில்லை ஹர்ட் லாக்கரில் தொடங்கி நம்ம பையா வரை.
நான் மட்டும் வழக்கம் போல.
ஒரு தமிழனை இழிச் சொல்லில் இருந்து காப்பாற்றிய பதிவுலகம் வாழ்க.குறிப்பாக அண்னண் உண்மைத் தமிழன்.அவர் தினமும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும் என்று அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
6 comments:
hahha arumai
ம்ம்ம்... நடத்துங்க....
இனிமேல் அவங்க பேரு வராது.... ஆனால், உங்க பேரு வந்துரும் ராசா :-)))
Super :))
நன்றி LK
நன்றி க.பாலாசி
நன்றி ரோஸ்விக்
வரும் ஆனா வராது
நன்றி பிரசன்னா
பதிவுலகம் வாழ்க.....
:)))))
கருத்துரையிடுக