நம்மில் சிலருக்கு விமர்சனம் எழுதாவிட்டால் தூக்கமே வராது. தமிழ்,தெலுகு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம் என எந்த மொழிப் படங்களையும் விட்டு வைப்பதில்லை.விட்டால் போஜ்புரி படத்துக்கும் சுட சுட விமர்சனம் எழுதுவார்கள்.
வேட்டைக்காரனை குறி வைத்து தாக்குகிறார்கள்.படமே இன்னும் வெளி வரவில்லை அதற்குள்ளாகவே ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகள். பாடல்களுக்கும்,ட்ரெய்லர்களுக்கும் ஏற்கனெவே விமர்சனங்கள் எழுதி தீர்த்தாயிற்று.படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளரை விட,விஜயை விட இவர்கள் தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விமர்சிக்க!
இன்னும் சிலர் நுணுக்கமாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உன்னைப் போல் ஒருவனில் கமல் போட்டுருந்த செருப்பு காமன் மேன் போடும் செருப்பு போலில்லை என புலம்புகிறார்கள்.
நடோடிகளைப் பற்றி எல்லாரும் ஆஹோ ஓஹோ என்கிறார்களே என்று படம் பார்க்க போனேன் ஆனால் படம் சாதாரணமாகத்தான் இருக்கிறது,படத்தில் கொண்டாடும் அளவிற்கு எதுவுமில்லை - இது நடோடிகள் படம் பற்றி ஒரு பதிவர் உதிர்த்த முத்து.
யோகியை பொறுத்தவரை இயக்குனர் சிவா, யோகி ட்ஸோட்சியின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட படம், படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படத்தின் பாதிப்பு என்று நானே சொல்லியிருக்கிறேன் என்று கூறிய பின்பும்,யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ட்ஸோட்சி படத்தை தமிழ் மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அல்லது பார்க்க போகிறார்கள்? மொழி புரியாமல் படம் பார்த்து ரசிக்க எல்லாராலும் முடியுமா?
நீங்களே ஒத்துகொண்ட படி அருமையான படமான ட்ஸோட்சியை அவர்கள் யோகி மூலமாக பார்க்கட்டுமே.சினிமா என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கூறுவீர்களானால் ஆகச் சிறந்த உலக சினிமாவாக கருதும் ஒரு படத்தை உங்கள் நண்பர்களுக்கும்,சுற்றத்தவர்களுக்கும் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்??
எல்லாப் படங்களுக்கும் மார்க் போட்ட விகடன் எடுத்த சிவா மனசுல சக்தி படம் எப்படியிருந்தது? அநேகப் படங்களுக்கு 40க்கு கீழே மார்க் போட்ட அவர்களுக்கு 100 மார்க் போட/எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.அவர்களால் ஏன் அப்படி ஒரு படத்தை தயாரிக்க முடியவில்லை?
பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நல்ல சினிமா எடுப்பது எப்படி என விதிமுறைகள் உண்டாக்கி கொடுத்து விட்டீர்களென்றால் இயக்குனர்களுக்கு வேலை எளிதாகிப் போகும்.
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)