skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2010

எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே!

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

ஜுனிய‌ர் விக‌ட‌னில் வெளியான‌ க‌ட்டுரை
Thanks - Vikatan.com

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:25 AM 8 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தேவாசுர‌ம்

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:07 AM 1 comments
Labels: சினிமா

திங்கள், 12 ஜூலை, 2010

ச்சும்மா

வெளிநாட்டுப் ப‌திவ‌ர்க‌ள் ஏதேனும் விவாத‌த்தில் க‌ருத்துச் சொன்னால்.. ஆரோக்கிய‌மாக‌ எதிர் விவாத‌ம் செய்ய‌ வேண்டும் அல்ல‌து பேசாம‌ல் இருக்க‌ வேண்டும். அதை விடுத்து ஏசி அறையில் இருந்து கொண்டு பேச‌ வேண்டாம் என‌க் கூறுவ‌து என்ன‌ நியாய‌ம் என‌த் தெரிய‌வில்லை.

த‌க‌வ‌லுக்காக‌
(circular from Bupa Middle East (Medical Insurance Company), indicating that the temperature in the major cities of the Kingdom will be rising in coming weeks, i.e. Jeddah may reach 52 C, Alkhobar / Dammam may reach 55 C & Riyadh unbelievable 59 C. )

ஐயாமார்க‌ளே..அம்மாமார்க‌ளே ஏசி என்ப‌து ந‌ம்ம‌ ஊரில் ஒரு ஸ்டேட்ட‌ஸ் சிம்ப‌லாக‌ இருக்க‌லாம்..இங்க அப்ப‌டிய‌ல்ல‌.பெரிய‌ சூப்ப‌ர் மார்க்கெட் முத‌ல் சாதார‌ண‌ ம‌ளிகை க‌டை வ‌ரை.. இவ்வ‌ள‌வு ஏன் சலூன் க‌டைக‌ளில் கூட‌ ஏசி க‌ட்டாய‌மிருக்கும் இங்குள்ள‌ வெப்ப‌த்தைச் ச‌மாளிக்க‌.ஏசி ரூமில் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌க்கார‌ர்க‌ள்.. அவ‌ர்க‌ளுக்கு அடித்த‌ட்டு ம‌க்களின் பிர‌ச்சினையில் க‌ருத்துச் சொல்ல‌ உரிமையில்லை என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு....பெரிய‌ க‌ம்பெனிக‌ளில் உய‌ர் ப‌தவிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளில் இருந்து..ம‌ளிகை க‌டை,சின்ன‌ ஹோட்ட‌ல்க‌ள், சலூன் க‌டைக‌ளில் வேலை செய்ப‌வர்க‌ள் வ‌ரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்க‌ள்.பெரும்பால‌னோர் ம‌த்திய‌ த‌ர‌ வ‌ர்க்க‌த்தைச் ‌சார்ந்த‌வ‌ர்க‌ள் தான்.பொழ‌ப்புக்காக‌ வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வ‌ள‌வே.

இனியாவ‌து வெளிநாட்டுப் ப‌திவ‌ர்க‌ள் சொல்வ‌தில் உட‌ன்பாடில்லை எனில் விவாத‌ம் செய்யுங்க‌ள்...ஏசி யை இழுக்காம‌ல்...
******************************************************
க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிப‌ர‌ப்பாகும்.."நெஞ்ச‌ம் ம‌ற‌ப்ப‌தில்லை" நிக‌ழ்ச்சி நான் விரும்பி பார்க்கும் ஒன்று.இனிமையான குர‌ல்க‌ளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌ழைய‌ பாட‌ல்க‌ளைப் பாடுகிறார்க‌ள்.பாட‌ல் ம‌ற்றும் ப‌ட‌ம் ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் சுவார‌ஸ்ய‌மாக‌ உள்ளது.உதார‌ண‌ம்.. "அத்தை ம‌டி மெத்தைய‌டி" பாட‌ல் இட‌ம் பெற்ற‌ க‌ற்ப‌க‌ம் ப‌ட‌த்தில் தான் கே ஆர் விஜ‌யா அறிமுக‌மானார்..மேலும் இந்த‌ ப‌ட‌த்தின் வெற்றிக்குப் பிற‌கு தான் புக‌ழ் பெற்ற‌ க‌ற்ப‌க‌ம் ஸ்டுடியோ உருவான‌து.பாட‌ல் ப‌ற்றிய‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளும் சுவையாக‌‌ உள்ள‌து.

"சிங்கார‌ வேல‌னே" கேட்கும் போது ஜான‌கி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வ‌ருவ‌தை த‌விர்க்க‌ முடிய‌வில்லை.
****************************************
உல‌க‌க் கோப்பையை ஸ்பெயின் வென்று விட்ட‌து.. ஆக்டோப‌ஸ்ஸின் க‌ணிப்பும் கூட‌ வென்று விட்ட‌து.நேற்றைய‌ ஆட்ட‌த்தில் விறுவிறுப்பு குறைவுதான்.ஏக‌ப்ப‌ட்ட‌ ம‌ஞ்ச‌ள் அட்டைக‌ள் காட்ட‌ப்ப‌ட்ட‌ன‌.ஐந்து கோல் அடித்த‌தோடு..மூன்று கோல்க‌ள் அடிக்க‌ உறுதுணையாயிருந்த‌ ஜெர்ம‌னியின் தாம‌ஸ் முல்ல‌ருக்கு த‌ங்க‌ கால‌ணி விருது கிடைத்த‌து.
******************************************
2050 இல் இந்தியாவின் ஜ‌ன‌த்தொகை 200 கோடியாக‌ இருக்கும்..இது அப்போதைய‌ சீனாவை விட‌ அதிக‌ம்.(த‌க‌வ‌ல் உப‌ய‌ம் ஏசியாநெட் ரேடியோ)ந‌ம்முடைய பெரு ந‌க‌ர‌ங்க‌ளின் நிலைமைய‌ நினைத்துப் பார்க்க‌வே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.வ‌ய‌ல்வெளிக‌ள் எல்லாம் பிளாட்டுக‌ளாக‌ மாறி வ‌ருகிற‌து..இன்னொரு பிர‌ச்சினை த‌ண்ணீர்ப் ப‌ஞ்ச‌ம்.அத‌ற்குள்ளாக‌ ப‌சித்தால் ஒரு மாத்திரை,தாக‌ம் எடுத்தால் ஒரு மாத்திரை என‌ ம‌க்க‌ள் பய‌ன்பாட்டிற்கு வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப‌டுவ‌தற்கில்லை.
**********************************************
பிடித்த‌ ப‌ஞ்ச் ட‌ய‌லாக்
குஜ‌ராத் ம‌க்க‌ளுக்கு மின்வெட்டு என்றால் என்ன‌வென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான‌ ம‌க்களுக்கு மின்சார‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாது.

ந‌ரேந்திர‌ மோடி
குஜ‌ராத் முத‌ல்வ‌ர்.
***********************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:05 AM 9 comments
Labels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம், சமூக‌ம், சினிமா

செவ்வாய், 6 ஜூலை, 2010

க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)

இரு வீட்டின் எதிர்ப்புக‌ளை மீறி காத‌ல் திரும‌ண‌ம் செய்து, ஒரு குழ‌ந்தையும் பெற்று ம‌கிழ்ச்சியாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும் போது தீடிரென‌ கணவ‌ன் இந்த‌ உல‌கத்தை விட்டே போய் விட்டால்?
அதுவும் அந்த‌ பெண் முழுக்க‌ முழுக்க‌ க‌ண‌வ‌னின் ச‌ம்பாத்திய‌த்தை ம‌ட்டும் சார்ந்து வாழும் சூழ்நிலையில்???

இப்ப‌டித்தான் ஆர‌ம்பிக்கிற‌து ச‌த்ய‌ன் அந்திக்காடு இய‌க்கிய‌  "க‌த‌ துட‌ருன்னு"  ப‌ட‌ம். குடும்ப‌க் க‌தைக‌ளை கொஞ்ச‌ம் காமெடி க‌ல‌ந்து சொல்வ‌து இவ‌ர‌து பாணி.இதுவும் அப்ப‌டியே.

வித்யா (ம‌ம்தா மோக‌ன்தாஸ்),ஷ‌நாவாஸ்(ஆசிப் அலி) இருவ‌ரும் காத‌ல் திரும‌ண‌ம் புரிந்து த‌னியே வாழ்ப‌வ‌ர்க‌ள்.அவ‌ர்க‌ளுக்கு ஒரே ம‌க‌ள் ல‌யா.வித்யா த‌ன் ம‌ருத்துவ‌ ப‌டிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஷ‌நாவாஸை காத‌லித்து க‌ல்யாண‌ம் செய்து கொண்ட‌வ‌ள்.ஒர் ம‌ழைக்கால‌ இர‌வில் ம‌க‌ள் ஆசைப்ப‌ட்ட‌ மாம்ப‌ழ‌ம் வாங்க‌ சென்ற‌ ஷ‌நாவாஸ்,ஆள் மாறாட்ட‌த்தில் கொலை செய்ய‌ப்ப‌ட்டு விடுகிறான்.வித்யாவின் வாழ்க்கை அந்த‌ ஓரிர‌வில் த‌லைகீழாக‌ மாறிவிடுகிற‌து.மெல்ல‌ இய‌ல்பு வாழ்க்கைக்கு திரும்ப‌ முற்ப‌டும் போதுதான் பண‌த்தேவை புரிகிற‌து.

க‌ண‌வ‌னின் வ‌ருமான‌ம் நின்று விட்ட‌ சூழ்நிலையில்,தான் ஒரு வேலைக்கு முய‌ற்சி செய்ய‌ க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ம் ஏற்ப‌டுகிற‌து. செல‌வுக‌ளை ச‌மாளிக்க‌ த‌ன் ந‌கைக‌ளை விற்கிறாள், குழ‌ந்தையின் ப‌ள்ளிப் பேருந்தை நிறுத்தி விட்டு,தானே தின‌மும் ந‌ட‌த்தி கூட்டிச் செல்கிறாள்.வாட‌கை கொடுக்க‌ முடியாத‌ நிலையில் வீட்டு ஓன‌ர்க்கு ப‌ய‌ந்து பார்க்குக‌ளில் நேர‌ம் க‌ட‌த்துகிறார்க‌ள் அம்மாவும், குழ‌ந்தையும்.வாட‌கை குடுக்க‌ முடியாம‌ல், இருந்த‌ வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷ‌ன் பிளாட்ஃபார்ம்க்கு மாறுகிறார்க‌ள்.

எதிர்பாராத‌ த‌ருண‌த்தில் வாட‌கை ஆட்டோ ஓட்டும் பிரேம‌னை (ஜெய‌ராம்) ச‌ந்திக்க‌,இவ‌ர்க‌ளின் க‌தையை கேட்ட‌ அவ‌ன், த‌ன் கால‌னிக்கு அழைத்துச் சென்று ப‌க்க‌த்து வீட்டில் த‌ங்க‌ வைக்கிறான்.இத‌ற்கிடையில், வித்யாவின் க‌ண‌வ‌ன் இற‌ந்த‌ பிற‌கு குழ‌ந்தை த‌ங்க‌ளிட‌ம் தான் வ‌ள‌ர‌ வேண்டும் என்று க‌ண‌வ‌ன் வீட்டாரின் மிர‌ட்ட‌ல் வேறு.

வித்யா எப்ப‌டி இந்த‌ நிலையிலிருந்து மீண்டு ஜெயிக்கிறாள் என்ப‌தே மீதி க‌தை.

ம‌ம்தாவுக்கு பாச‌ஞ்ச‌ர் ப‌ட‌த்திற்கு அப்புற‌ம் ப‌ட‌ம் முழுதும் வ‌ரும்ப‌டியாக‌  ஒரு ந‌ல்ல‌ வாய்ப்பு இந்த‌ப் ப‌ட‌ம்.ஜெய‌ராமுக்கு ஹீரோயின் கிடையாது,ச‌ண்டை கிடையாது,ஒரு கேர‌க்ட‌ராக‌ ம‌ட்டும் வ‌ந்து போகிறார்.
இவ‌ர்க‌ள் த‌விர‌ கேபிஏசி ல‌லிதா,ம‌ம்முக்கோயா போன்றோரும் உண்டு.

ராஜாவின் இசையில் பாட‌ல்க‌ள் அட்ட‌காச‌ம்,"ஆரோ" என்று தொட‌ங்கும் முத‌ல் பாட‌ல் சூப்ப‌ரோ சூப்ப‌ர்.

என‌க்குப் பிடித்த‌ காட்சிக‌ள்
இட‌ம் வாங்க‌வே ப‌ணம் இல்லாத‌ போது புரோக்க‌ருட‌ன் வீடு க‌ட்ட‌ இட‌ம் பார்ப்ப‌து,இங்க‌ தான்  பெட்ரூம்,இல்ல‌ இங்க‌ தான் என‌ க‌ண‌வ‌னும், ம‌னைவியும் இல்லாத‌ வீட்டுக்கு ச‌ண்டை போட்டுக் கொள்வ‌து.

கால‌னியில் த‌னித்து வ‌சிக்கும் இன்னொசென்ட், ம‌க‌ன் வீட்டை விட்டு வெளியேற்றிட‌, வ‌ய‌தான‌ கால‌த்திலும் சைக்கிளில் லாட்ட‌ரி விற்றுப் பிழைக்கிறார்,இவ‌ர‌து ம‌னைவி வேறோரிட‌த்தில் வேலை செய்கிறார்.எல்லாத்தையும் உள்ளுக்குள் சுருட்டி வைத்து விட்டு,வெளியே ம‌கிழ்ச்சியாக‌ அலைகிறார் இன்னொசென்ட்.ம‌னுஷ‌ன் திரையில் வ‌ந்தாலே தியேட்ட‌ரில் விசில் ப‌ற‌க்கிற‌து.

தின‌ம் ஒரு யூனிஃபார்ம்,தின‌ம் ஒரு க‌ட்சிக் கொடி என‌ எல்லா க‌ட்சி பொதுக்கூட்ட‌ங்க‌ளுக்கும் ஆ‌ள் ச‌ப்ளை செய்ப‌வ‌ராக‌ ம‌ம்முக்கோயா.250 ரூபாய்,ஒரு குவார்ட்ட‌ர்,ஒரு பிரியாணி பொட்ட‌ல‌ம் இது தான் கேர‌ளா முழுக்க‌ ஸ்டாண்ட‌ர்டு ரேட்,அதுக்கு மேல‌ குடுக்க‌ முடியாதுன்னு சொல்லும் காட்சி.

ரியாலிட்டி ஷோவில் பைய‌ன் "எலிமினேட்" ஆகிய‌த‌ற்க்காக‌,தெருவே அந்த‌ வீட்டில் கூடி ஏதோ எழ‌வு வீடு மாதிரி சோக‌மாக‌ உட்கார்ந்திருப்ப‌து.

"பொண்ணுங்க‌ன்னா என் பொண்ணு மாதிரி இருக்க‌ணும்,தேவையில்லாம‌ வெளியே எங்கேயும் போக மாட்டா,கோயிலுக்கு போற‌தோட‌ ச‌ரி" இப்ப‌டி அடிக்க‌டி சொல்லிக் கொண்டிருக்கும் கேபிஏசி ல‌லிதாவின் ம‌க‌ள் கோயில் பூசாரியோடு ஓடிப் போவ‌து.

வ‌ழ‌க்க‌மான‌ ச‌த்ய‌ன் அந்திக்காடு ப‌ட‌ம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:23 PM 5 comments
Labels: சினிமா, ம‌லையாளம்

புதன், 23 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010

கோவையில் இன்று 23-06-2010 முத‌ல் 27-06-2010 வ‌ரை ந‌ட‌க்க‌ப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்ப‌டும் ப‌ய‌ன் என்ன‌?ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் தான் வீணாகிற‌து என்று சில‌ ப‌திவ‌ர்க‌ள் இடுகை போட்டுள்ளார்க‌ள். 27ந் தேதி மாநாடு முடிவ‌டைகிற‌து,28 ந் தேதி ந‌ட‌க்கப் போகும் அதிச‌ய‌ங்க‌ள் குறித்து அர‌சு வெளியிட‌ப் போகும் அறிக்கை இதோ......

செம்மொழி மாநாட்டால் விளைந்த‌ ந‌ன்மைக‌ள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் ம‌ட்ட‌த்தை 149 அடியாக‌ உய‌ர்த்திக் கொள்ள‌ கேர‌ள‌ அர‌சு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்துள்ள‌து.அத‌ற்கான‌ க‌டிதத்தை கேர‌ள‌ நீர்ப்பாச‌ன‌ துறை அமைச்ச‌ர் பிரேம‌ச‌ந்திர‌ன் நேற்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து வ‌ழ‌ங்கினார்.

வ‌ருடா வ‌ருட‌ம் த‌மிழ‌க‌த்திற்கு சேர‌ வேண்டிய‌ த‌ண்ணீர் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌டும்,இனி எந்த‌ சூழ்நிலையிலும்,ம‌ழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற‌ மாட்டோம் என‌
க‌ர்நாட‌க‌ அர‌சு அறிவித்துள்ளது.

த‌மிழ‌க‌த்தின் அனைத்து ந‌திக‌ளும் இணைக்க‌ப்ப‌ட்டு விட்டதால் இனி விவ‌சாயிக‌ள் முப்போக‌ம் விளைவிக்க‌லாம்.அத‌ற்கு தேவையான‌ உர‌ங்க‌ளை அழ‌கிரி வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ உர‌க்கிட‌ங்கிலிருந்து பெற்றுக் கொள்ள‌லாம்,மேலும் அத‌ற்காகும் போக்குவ‌ர‌தது செல‌வை அர‌சே ஏற்றுக் கொள்ளும்.

க‌ட‌லில் மீன் பிடிக்க‌ச் செல்லும் மீன‌வ‌ர்க‌ள்,இனி இல‌ங்கை க‌ட‌ல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ள‌லாம்,அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் பிடித்த‌ மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே ச‌மைத்து சாப்பிட்டு வ‌ர‌லாம்.அத‌ற்கு தேவையான‌ அரிசி,எண்ணெய்,ம‌சாலா சாம‌ன்க‌ளை த‌ந்து உத‌வ‌ இல‌ங்கை அர‌சுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்டுள்ளது.

த‌மிழ்நாட்டில் ந‌டை பெற்று வ‌ந்த‌ மின் திட்ட‌ப் ப‌ணிக‌ள் அனைத்தும் நேற்றுட‌ன் முடிந்து விட்ட‌து,ஆக‌வே இனி த‌மிழ‌க‌த்தில் மின் வெட்டு என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் த‌னியார் க‌ல்லூரிக‌ள் கூட்ட‌மைப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இன்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து இனிமேல் அனைத்து த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் எல்லாருக்கும் இல்வ‌ச‌க் க‌ல்வி அளிக்க‌ப் போவ‌தாக‌ "துண்டைப் போட்டு தாண்டி" உறுதிய‌ளித்துள்ள‌ன‌ர்.இனி அமைச்ச‌ரின் பிள்ளைக‌ளும்,ஆண்டியின் பிள்ளைக‌ளும் அருக‌ருகே அம‌ர்ந்து க‌ல்வி ப‌யிலலாம்.

பொது விநியோக‌ க‌டைக‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ 1 ரூபாய் அரிசி,இன்று முத‌ல் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்டு "பாசும‌தி" அரிசி  வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.மேலும் ப‌ருப்பு,காய்க‌றிக‌ள்,என்ணெய்,ம‌சாலாப் பொருட்க‌ள் முத‌ல் தாளிக்க‌ தேவையான‌ க‌டுகு,க‌றிவேப்பிலை வ‌ரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர் ப‌ற்றாக்குறை அற‌வே நீக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து,அதோடு ஒரு ஆசிரிய‌ருக்கு ஒரு மாற்று ஆசிரிய‌ர் (ச‌ப்ஸ்டியூட்)ஒருவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.முத‌ன்மை ஆசிரிய‌ர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவ‌ர் ப‌ணியை மேற்கொள்வார்.இத‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளில் த‌ங்கு த‌டையில்லாம‌ல் வ‌குப்புக‌ள் ந‌டைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌ அனைவ‌ருக்கும் அர‌சு வேலை கிடைத்தாகி விட்ட‌து.இனி பள்ளிக‌ளில் ஒன்றாம் வ‌குப்பு சேரும் மாண‌வ‌ர்க‌ள்,பிற்கால‌த்தில் எந்த‌ அர‌சு அலுவ‌கல‌த்தில் வேலை செய்ய‌ விருப்ப‌மோ,அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் க‌டித‌ம் பெற்றுக் கொள்ள‌லாம்.

முத‌ல்வ‌ர்,துணை முத‌ல்வ‌ர் ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ சாலைக‌ளில் போக்குவ‌ர‌த்து ஒரு போதும் நிறுத்த‌ப்ப‌டாது.அவ‌ர்க‌ள் இனி இர‌வு ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல்,அதிகாலை ஆறு ம‌ணிக்குள் ம‌ட்டும் சாலையில் செல்வார்க‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளுக்கும் குடி த‌ண்ணீர் வ‌ழ‌ங்க‌ "அக்வாஃபீனா" நிறுவ‌ன‌த்துட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.குழாய்க‌ள் ப‌திக்கும் வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இந்த‌ மாத‌ இறுதிக்குள் அனைவ‌ருக்கும் "அக்வாஃபீனா" த‌ண்ணீர் உறுதி.

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கும் சிற‌ப்பான ம‌ருத்துவ‌ சேவை வ‌ழ‌ங்கும் நோக்கில்,அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுட‌னும் அர‌சு ஒப்பந்த‌ம் போட்டுள்ள‌து.இனி அனைவ‌ரும் அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் இல‌வ‌ச‌ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இருண்டு கிட‌க்கும் ப‌னை விவ‌சாயிக‌ளின் வாழ்வில் ஒளியேற்ற‌, க‌ள் இற‌க்க‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ க‌ல‌ய‌ம்,அரிவாள் போன்ற‌வ‌ற்றை அருகிலுள்ள காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் பெற்றுக் கொள்ள‌லாம்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துச் சாலைக‌ளும் ந‌மீதாவின் க‌ன்ன‌ம் போல் வ‌ழ‌வ‌ழ‌ப்பாக‌ மாற்ற‌ப்ப‌டும், அத‌ற்கான‌ ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இவ்வாறு அந்த‌ செய்திக்குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
********************************************************************

இனி செம்மொழி மாநாடு ந‌ட‌த்திய‌தால் விளைந்த‌ "முக்கிய‌மான‌" ந‌ன்மைக‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் தீர்க்க‌ப்ப‌ட்டு விட்டதாலும்,அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ வேறு வ‌ழியில்லாத‌தாலும், தோன்றிய‌திலிருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை ம‌ட்டுமே செய்து வ‌ரும் திமுக‌,காங்கிர‌ஸ் த‌விர்த்த‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் க‌லைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.இதைக் கேள்விப்ப‌ட்ட‌ முத‌ல்வ‌ர்,"ம‌றப்போம் ம‌ன்னிப்போம்" என்ற‌ த‌மிழ‌ர் ப‌ண்பாட்டின் ப‌டி ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளை நேற்று அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்தார்.இந்த‌ உண‌ர்ச்சிம‌யமான‌ ச‌ந்திப்பில் உட‌னிருந்த‌ அமைச்ச‌ர்க‌ள் துரைமுருக‌ன்,பொன்முடி,த‌யாநிதி மாற‌ன் ம‌ற்றும் ச‌சிக‌லா,வைகோ,ராம‌தாஸ், திருமா, விஜ‌ய‌காந்த்,பாண்டிய‌ன் ஆகியோர் சிந்திய‌ ஆன‌ந்த‌க் க‌ண்ணீரில் அந்த‌ ப‌குதியே வெள்ள‌க் காடான‌து.

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:35 PM 18 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா, புனைவு, மொக்கை

செவ்வாய், 18 மே, 2010

ச்சும்மா

எங்க‌ ஆபிஸ்ல‌ சீனிய‌ர் ஒருத்த‌ன், ந‌ம்மை அடிமைப் ப‌டுத்தி ஆண்டாண்டு கால‌ம் ஆண்ட‌ தேச‌த்தை சேர்ந்த‌வ‌ன்.தெனம் நாங்கெல்லாம் ல‌ன்ஞ்சுக்கு கெள‌ம்புர‌ப்போ இவ‌ன் ம‌ட்டும் ஷார்ட்ஸ்,டீ ச‌ர்ட் மாத்திட்டு கையில‌ ஒரு ஃபோல்டிங் சேர்,ஒரு புக்கோட‌ ஃஆபிஸ்க்கு பின்னாடி போவான்.(ஃஆபிஸ்ஸ‌ சுத்தி ம‌ண‌லும் ம‌ண‌ல் சார்ந்த‌ இட‌மும் தான்)

தாங்க‌ முடியாம‌ ஒரு நாள் அவ‌ன்கிட்ட‌ போய் கேட்டுட்டேன்.சாப்பிட‌ கூட‌ வ‌ராம‌ அப்ப‌டி என்ன‌ தான்டா ப‌டிக்குறேன்னு.அதுக்கு அவ‌ன் சொன்ன‌ ப‌தில கேட்டு.......... ஸ் அப்பா முடிய‌ல‌.

அவ‌ன் அடுத்த‌ மாச‌ம் லீவுல‌ ஊருக்குப் போறானாம். அதான்
தென‌மும் 45 c வெயில்ல‌ ச‌ன் பாத் எடுத்து "வொயிட்" க‌ல‌ர‌ கொஞ்ச‌ம் "பிர‌வுன்" க‌ல‌ர‌ ஆக்க‌ முய‌ற்சி செய்ற‌னாம்,ஏன்னா அவ‌ன் பொண்டாட்டி ப‌ய‌ங்க‌ர‌ வொயிட் க‌ல‌ராம்,இவ‌ன் கொஞ்ச‌ம் பிர‌வுன் ஆயிட்டா அவ‌ளுக்கு இவ‌ன‌ பாத்து பொறாமை ஆயிடுமாம்.

அட‌ப்பாவி  ம‌க்கா இந்த‌ அக்குறும்ப‌ கேக்க‌ யாருமே இல்லையா???????

அவ‌ன‌வ‌ன் ப‌ய‌ங்க‌ர‌ க‌ருப்புல‌ இருந்து மீடிய‌ம் க‌ருப்பு க‌ல‌ர் ஆகிற‌துக்கு என்னென்ன‌ பாடு ப‌ட‌ வேண்டியிருக்கு.டே கீரிம்,நைட் கீரிம்,ஏஜ் மிராக்கிள்,யுவி கீரிம்ன்னு மார்கெட்ல‌ என்னென்ன‌ கீரிம் புதுசா வ‌ருதோ அதெல்லாம் வாங்கி ச‌ம்ப‌ள‌த்துல‌ பாதி காசு இதுக்கே செல‌வாகுது.
இவ‌ன் என்னட‌ன்னா.......

இதுக்குப் பேரு தான் கெர‌க‌சார‌மோ.
******************************************************** 
(ஏசியாநெட் ரேடியோவில் கேட்ட‌து)
சார் பேர் சொல்லுங்க‌ எங்கேயிருந்து பேச‌றீங்க‌

நான் சார்ஜால‌ இருந்து ராம‌சாமி

சொல்லுங்க‌ ராம‌சாமி என்ன‌ வேலை பாக்கிறீங்க‌

ம‌ன்னார் அண்ட் க‌ம்பெனியில‌ எஞ்சினிய‌ரா இருக்கேன்

ஓகே உங்க‌ளுக்காக‌ ஒரு சூப்ப‌ர் சாங் வ‌ந்துகிட்டே இருக்கு யாருக்கு "டெடிகேட்" ப‌ண்ண‌ப் போறிங்க‌

என் வொய்ஃபுக்கு

வொய்ஃபு பேரு என்ன‌,அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌

முனிய‌ம்மா,ஹ‌வுஸ் வொய்ஃப் தான்

உங்க‌ளுக்கு எத்த‌ன‌ குழ‌ந்தைக‌ள்

அய்யோ இன்னும் எங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆக‌லை,நிச்ச‌ய‌தார்த்தம் தான் முடிஞ்சிருக்கு
??????????????????
************************************************** 
 கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க‌ ரெண்டு கொடுமை  ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்.

இப்ப‌ வ‌ருகிற‌ த‌மிழ் ப‌ட‌ங்க‌ளுக்கு ப‌ய‌ந்து ம‌லையாள‌ க‌ரையோர‌ம் ஓதுங்குனா அங்க‌ அத‌ விட‌ பெரும் கொடுமையா இருக்கு.

"ச‌ட்டாம்பி நாடு"ன்னு ஒரு ப‌ட‌ம் ம‌ம்மூக்கா ந‌டித்து ஷ‌ஃபி இய‌க்கிய‌து. ச‌ட்டாம்பின்னா ர‌வுடின்னு அர்த்த‌ம்.ப‌ட‌த்த‌லைப்புக்கு நேர்மை செய்றேன் பேர்வ‌ழின்னு ப‌ட‌ம் பூரா ர‌வுடிக‌ள் தான். ம‌ம்முட்டி,சித்திக், ம‌னோஜ் கே ஜெய‌ன்,ஜ‌ணார்த்த‌ன‌ன்,ச‌லீம் குமார்,சிராஜ் இது போதாத‌ன்னு ஹீரோயின் ல‌ட்சுமி ராய் பேச‌ற‌தும் ர‌வுடி மாதிரி தான்.இதுல‌ ம‌ம்முட்டி வேற‌ க‌ன்ன‌ட‌ம் க‌ல‌ந்த‌ ம‌லையாள‌ம் பேச‌ற‌ன்னு ஒரு மாதிரி இழுத்து இழுத்து பேச‌றாரு.ம‌லைக‌ன்ன‌ட‌த்துல‌ ப‌ஞ்ச் ட‌ய‌லாக் பேசிட்டு கிள‌ம்பும் போது தீம் மியுஸிக் வேற‌....

அடுத்த‌ ம‌ம்முட்டி ப‌ட‌ம் "போக்கிரிராஜா" டிரெய்ல‌ர் பாக்கும் போதே மிர‌ட்டுது.
ம்ம் எப்ப‌டி இருந்த‌ சேட்ட‌ன்மார் இப்ப‌டி ஆயிட்டாங்க‌.
******************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:13 PM 11 comments
Labels: அனுப‌வ‌ம், சினிமா

திங்கள், 3 மே, 2010

தென்னையைப் பெத்தா இள‌நீரு,பிள்ளையைப் பெத்தா க‌ண்ணீரு

வ‌ருச‌ம் பூரா ந‌ம்ம‌ளே தான் பாத்துக்க‌ணுமா ஏன் உங்க‌ த‌ம்பி வீட்ல‌ கொஞ்ச‌ நாள் போய் இருந்தா என்ன‌வாம்?

மெட்ராஸ் அம்மாவுக்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ராது அவ‌ன் தான் ப‌ண‌ம் அனுப்ப‌றான் இல்ல‌ அப்புற‌ம் என்ன‌?

ப‌ண‌ம் அனுப்புனா ம‌ட்டும் போதுமா? போன த‌ட‌வை கூட்டிட்டு போய்ட்டு ஒரு மாச‌த்துல‌ கொண்டு வ‌ந்து விட்டுட்டாக‌.ஒரு மாச‌ம் வ‌ச்சிக்கிருதே க‌ஷ்ட‌மா இருக்க‌ன்னா கால‌ம் பூரா பாக்குற‌ என‌க்கு எப்ப‌டி இருக்கும்?

பெத்த‌ அம்மாவை யார் வீட்டில் வைத்துக் கொள்வ‌து என்ற‌ பிர‌ச்சினை.

இன்னும் சில‌ வீட்டில் அப்பா சென்னையில் பெரிய‌ ம‌க‌ன் வீட்டில் இருக்கும் போது,அம்மா ம‌துரையில் சின்ன‌ ம‌க‌ன் வீட்டில் இருப்பாங்க‌.அந்திம‌க் கால‌த்தில் ம‌னம் விட்டு பேச‌,த‌ங்க‌ளின் க‌ட‌ந்த‌ கால‌த்தை அசை போட‌, துணை தேவைப் ப‌டும் நேர‌த்தில், த‌னித் த‌னியே கால‌னை எதிர்பார்த்து கால‌ம் த‌ள்ள‌ வேண்டியிருக்கும்.
இந்த அவசர உலகத்தில் பெத்தவங்களை கவனிக்கக்கூட பிள்ளைகளுக்கு நேரம் இல்லை. வ‌ய‌தான‌ கால‌த்தில் பெற்றோரை த‌விக்க‌ விடும் பிள்ளைக‌ளைப் ப‌ற்றி பேசுவ‌து தான் இந்த‌ மூன்று ம‌லையாள‌ப் ப‌ட‌ங்க‌ளும்.

கேர‌ளா க‌ஃபே மொத்த‌ம் ப‌த்து க‌தைக‌ளை உள்ளட‌க்கிய‌து,அதிலொன்று ப்ரிட்ஜ்.

வ‌ய‌தான,க‌ண் பார்வைய‌ற்ற‌ தாயை பார்த்துக் கொள்ள முடியாம‌ல் திண்டாடும் ஒருவ‌ன்,அந்த‌ தாயின் க‌ட‌ல் காணும் (க‌டைசி)ஆசையை தீர்ப்ப‌தாக‌க் கூறி அழைத்து செல்வான்.க‌ட‌ற்க‌ரைக்கு சென்று அலையில் கால் ந‌னைய‌ச் செய்து,சாலையோர‌ உண‌வ‌க‌த்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து,தியேட்ட‌ருக்கு ப‌ட‌ம் பார்க்க‌ அழைத்து கொண்டு போவான்.இடைவேளையில் குடிப்ப‌த‌ற்கு ஏதாவ‌து வாங்கி வ‌ருகிறேன் என்று சொல்லிட்டு,த‌ன் அம்மாவை தியேட்ட‌ரிலேயே விட்டுட்டு அழுது கொண்டே வெளியேறி விடுவான்.

மற்றொரு ப‌க்க‌ம் தாயில்லாத‌ சிறுவ‌ன் வ‌ள‌ர்க்கும் பூனை,அவ‌னது த‌ந்தைக்கு பிடிக்காத‌தால் பூனையை வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ சிறுவ‌னிட‌ம் இருந்து ப‌றித்துக் கொண்டு போய் வீட்டிலிருந்து வெகு தூர‌த்தில் விட்டு வ‌ருவார்.பூனையை பிரிந்து த‌விக்கும் சிறுவ‌ன் காய்ச்ச‌லில் வ‌ழுவான்.சிறுவ‌னின் த‌விப்பைக் க‌ண்டு அவ‌ன‌து த‌ந்தை மீண்டும் பூனையை எடுத்து வ‌ரும் நோக்கில்,பூனையை விட்ட‌ இட‌த்தில் போய் தேடி,பூனை கிடைக்காத‌தால் ஏமாற்ற‌த்தோடு வீடு திரும்பும் போது,தாயை தியேட்ட‌ரில் விட்டுட்டு போகிற‌வ‌ன் ப‌ஸ்ஸில் அந்த‌ ப‌க்க‌மாக‌ செல்வான்.

க‌டைசியில் அந்த‌ க‌ண்பார்வைய‌ற்ற‌ தாய் க‌‌ட‌ற்க‌ரையில் உட்கார்ந்திருக்க‌, பூனை அருகில் விளையாடிக் கொண்டிருப்பதாக‌ ப‌ட‌ம் முடியும்.


ம‌ன‌சின‌க்க‌ரே




ச‌த‌ய‌ன் அந்திக்காடு இய‌க்கிய‌ "ம‌ன‌சின‌க்க‌ரே" என்ற‌ ப‌ட‌த்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.ஒன்று பணக்கார வீட்டைப் பற்றியது,இன்னொன்று சாதாரண ஏழைக் குடும்பத்தைப் பற்றியது.

கொச்சு திரேசா (ஷீலா) கணவனை இழந்த,அறுபது வ‌ய‌தைக் கடந்த பெரிய‌ பணக்காரி. பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,வேலைக்காரி என‌ பெரிய‌ ப‌ங்க‌ளாவில் வ‌ச‌தியாக‌ வாழும் திரேசா,பாச‌த்துக்கும்,எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும் ஏங்குப‌வ‌ர்.வ‌ய‌சான‌ கால‌த்தில் கிழவி வீட்டில் வேளா வேளைக்குச் சாப்பிட்டு,பேசாம‌ல் இருக்க வேண்டும் என‌ பிள்ளைக‌ள் எதிர்பார்க்கிறார்க‌ள்.தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.

இன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் (இன்னொசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.மாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.

ஒரு காட்சியில் கே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம்,சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையாக‌ தோழியிட‌ம் சொல்லிட்டு,பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று க‌ண் க‌ல‌ங்குவார்.


இந்த‌ இர‌ண்டு குடும்ப‌ங்க‌ளிலும் வ‌ரும் பிர‌ச்சினைக‌ள் முற்றி,க‌டைசியில் திரேசா த‌ன் வ‌ச‌தியான வாழ்க்கை,த‌ன் அன்பை புரிந்து கொள்ளாத‌ பிள்ளைக‌ளை உத‌றி விட்டு உண்மையான பாச‌த்தை நேடி ரெஜியின் அம்மாவாக‌ சென்று விடுவார்.

 ராப்ப‌க‌ல்




க‌ம‌ல் இய‌க்கிய‌ "ராப்ப‌க‌ல்" என்றொரு அருமையான‌ ப‌ட‌ம்.பிள்ளைக‌ள் எல்லாம் வெவ்வேறு ஊர்க‌ளில் செட்டிலாகி விட‌,அர‌ண்ம‌னை போன்ற‌ வீட்டில் த‌னித்து வாழும் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள் (சார‌தா),அவ‌ருக்கு துணையாக‌ கிருஷ்ண‌ன் (ம‌ம்முட்டி) என்ற‌ வேலைக்கார‌ன்.சிறு வ‌ய‌திலிருந்தே அந்த‌ வீட்டில் வேலை செய்யும் கிருஷ்ண‌னை த‌ன் சொந்த‌ ம‌க‌ன் போல‌ பாவிக்கிறார் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்,த‌ன் சொந்த‌ பிள்ளைக‌ளிட‌ம் கிடைக்காத‌ அன்பும்,பாச‌மும் அவ‌ருக்கு கிருஷ்ண‌னிட‌ம் இருந்து கிடைக்கிற‌து.இந்த‌ சூழ்நிலையில் ஒட்டு மொத்த‌ குடும்ப‌மும் வீட்டில் ஒன்று கூடி அந்த‌ வீட்டை விற்று விட்டு,ச‌ர‌ஸ்வ‌தி அம்மாளை ஒரு ம‌க‌னின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல‌ முடிவெடுத்து,செய‌ல் ப‌டுத்துகிறார்க‌ள்.

கிருஷ்ண‌னிட‌ம் அழுது கொண்டே விடை பெறும் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்,ம‌க‌னின் ந‌க‌ர‌த்து வீட்டிலிருந்து ஒரே இர‌வில் காணாம‌ல் போய் விடுவார்.இத்த‌னை வ‌ருஷ‌ம் அம்மாவை பொன்னு போல‌ பார்த்துக் கொண்டேன், உன்னால‌ ஒரு நாள் பார்த்துக்க‌ முடிய‌லையா?ன்னு ச‌ண்டை போட்டு விட்டு த‌ன் வீட்டுக்கு திரும்பும் கிருஷ்ணனை எதிர்பார்த்து,த‌ன் மீதி வாழ்நாளை அவ‌ருட‌ன் அவ‌னின் அம்மாவாக‌ க‌ழிக்க‌ விரும்பி காத்திருப்பார் ச‌ர‌ஸ்வ‌தி அம்மாள்.

பெத்து,வ‌ள‌ர்த்து,ப‌டிக்க‌ வைத்து,வேலை வாங்கி கொடுத்து,ஆளாக்கிய‌ பெற்றோர்க‌ளை க‌வனிக்க‌ வேண்டிய‌து பிள்ளைக‌ளின் க‌ட‌மை என்ப‌தை உறுதி செய்ய‌ அர‌சு ச‌ட்ட‌ம் போட‌ வேண்டியிருக்கிற‌து.

பெற்றோரை கவனிக்காமல்விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க, 'பெற்றோர் மற்றும் முதியோர் வாழ்க்கைப் பொருளுதவிச் சட்டம்' ஒன்றை 2007-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்துக்கான முழு விதிமுறைகளையும் 2009-ம் ஆண்டு இறுதியில்தான் மத்திய அரசு வெளியிட்டது. அந்தச் சட்ட விதிமுறை, 'வயதான பெற்றோரைக் கவனிக்காமல்விடும் பிள்ளைகளைப்பற்றி பெற்றோர் புகார் செய்தால், பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யலாம்!' என்கிறது. இந்தச் சட்டத்தைப்பற்றி மக்கள் மத்தியில் பொதுவான விழிப்பு உணர்வு இன்னும் ஏற்படாத நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக நாமக்கல் மாவட்டத்தில் அப்பாவைத் தவிக்கவிட்ட மகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கைதுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர் சகாயம்!

ஒரு விச‌ய‌ம்' 'நாளைக்கு இதே முதுமை நமக்கும் வரும்" என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:33 AM 15 comments
Labels: அனுப‌வ‌ம், சமூக‌ம், சினிமா

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எஸ் யுவ‌ர் ஹான‌ர்


பெரிய‌ கிழி




தேங்க்ஸ்க்கா



வாவ்



தேங்க்ஸ்க்கா



எக்செல‌ண்ட்



தேங்க்ஸ்க்கா



ராக்கிங் ஃபெர்பார்மென்ஸ்



தேங்க்ஸ்க்கா



சான்ஸே இல்லை



தேங்க்ஸ்க்கா



காஸ்ட்யும் செல‌க்ச‌ன் சூப்ப‌ர்



தேங்க்ஸ்க்கா



எக்ஸ்பிர‌ஷ‌ன் ந‌ல்லாருந்த‌து டான்ஸ்ல‌ அது தான் முக்கிய‌ம்



தேங்க்ஸ்க்கா



ர‌வி ஒரு இட‌த்துல‌ லேசா த‌டுமாறினேயே ஏன் ஸ்டெப் ம‌ற‌ந்துட்டியா?



இல்ல‌க்கா மாரிய‌ தூக்கினேன்லே கால்ல‌ சுளுக்கிருச்சு அதான்க்கா



எங்க‌ கால‌ காட்டு



ப‌ர‌வாயில்லை கால் சுளுக்கியும் கூட‌ ந‌ல்லா ப‌ண்ணியிருக்கே வெரி குட்‌



******************************************************************************************************************



மோளே



அடிபொலி பெர்மான்ஸ் கேட்டோ



வ‌ள‌ர‌ ந‌ன்னாயிருந்தது



ப‌ச்ச‌ ச‌ர‌ண‌ம் பாடும் போது அல்ப‌ம் ச‌ங்க‌தி பிச‌கி மோளே



ச‌ங்க‌தி க‌லையாம் ப‌ட்டில்லோ



அது வ‌லிய‌ தெட்டில்ல கேட்டோ



ந‌மக்கு அடுத்த‌ பிரவாச‌ம் நோக்காம்



ஓகே ஆல் த‌ பெஸ்ட் மோளே

********************************************************************************************************************



நாட்ல‌ ஆறு ம‌ணிக்கு மேல‌ ஜ‌ட்ஜ்ங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌லை சாமியோவ்.......
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 5:12 PM 9 comments
Labels: சினிமா, மொக்கை

சனி, 10 ஏப்ரல், 2010

த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.

பையா ப‌ட‌ம் ரீலிஸ் ஆன‌தில் இருந்து தின‌மும் நாள் த‌வ‌றாம‌ல் இர‌வு க‌லைஞ‌ர் டிவியில் "அட‌டா ம‌ழைடா அடை ம‌ழைடா" பாட‌ல் ஒளிப‌ர‌ப்பாகிறது. (த‌யாநிதி வாழ்க‌)



ம‌யில் தோகை போல‌ நீ வ‌ளைந்து ஆடும் போது என்ற‌ பாட‌ல் வ‌ரிக்கு ஆடும் போது ந‌ம் ம‌ன‌தும் ஆடுகிற‌து.

என் தேவ‌தை எங்கே என் தேவ‌தை எங்கே அது ச‌ந்தோச‌மா ஆடுது இங்கே என்ற‌ பாட‌ல் வ‌ரியில் த‌ம‌ன்னா த‌னித்து ஆடும் போது ப‌ளிச் என தெரிகிற‌து,நான் அருவியைச் சொன்னேன்.

இந்த‌ பாட‌லைப் பார்க்கும் போது க‌ல்லூரியில் வ‌ந்த‌ த‌ம‌ன்னவா என‌ விய‌க்க‌ வைக்கிறார்.பாரேன் இந்த‌ பிள்ளைக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு!!!!!!!!!!
********************************************************************************************************************
அங்காடித் தெரு இய‌க்குன‌ர்க‌ள் பார்வையில்(க‌லைஞ‌ர் டிவி) என்ற‌ நிக‌ழ்ச்சியில் அமீர், ச‌சிக்குமார்,ச‌சி,மிஷ்கின், ச‌முத்திர‌க்க‌னி, த‌ங்க‌ர்ப‌ச்சான், விக்ர‌ம‌ன் ஆகியோர் ப‌ங்கு பெற்று ப‌ட‌ம் ப‌ற்றிய‌ த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை இய‌க்குன‌ர் வ‌ச‌ந்த‌பால‌ன் ம‌ற்றும் த‌யாரிப்பாள‌ர் அருண்பாண்டிய‌னுட‌ன் ப‌கிர்ந்து கொண்டார்க‌ள்.

க‌னி த‌ன் த‌ங்கையை வ‌ழி அனுப்பிவிட்டு வ‌ரும் போது பேசிக் கொள்ளும் காட்சியை த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌தா‌க‌வும் காத‌லை இதை விட‌ இய‌ல்பாக‌ சொல்ல‌ முடியாதென‌வும் ச‌சி சொன்னார்.

 என்ன‌ ப‌ண்ணான் என்ற க‌தைநாய‌க‌னின் கேள்விக்கு என் மாரை பிடிச்சு க‌ச‌க்கினான் என‌ க‌னி ப‌தில‌ளிக்கும் காட்சியும் அதை தொட‌ர்ந்த‌ என்னை செருப்பால‌ அடிச்சுரு க‌னி என்ற காட்சியும் த‌ன்னை க‌வ‌ர்ந்த‌தாக‌ மிஷ்கின் குறிப்பிட்டார்.

குறுக்கிட்ட‌ வ‌ச‌ந்தபால‌ன் தான் இந்த வச‌ன‌த்தை அஞ்ச‌லியிட‌ம் சொல்ல‌ப் போகையில் தான் கூசிப் போய் அஞ்ச‌லியின் முக‌ம் பார்க்காமால் திரும்பிக் கொண்டு இந்த‌ காட்சியைப் ப‌ற்றி சொன்ன‌தாக கூறினார்.மேலும் இந்த‌ காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆன‌து,தான் ரீடேக் எதுவும் கேக்க‌வில்லை என்றார்.

ச‌சிக்குமார் த‌ன‌க்கு பிடித்த‌ காட்சியாக‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கிடையே நிக‌ழும் அந்த‌ ம‌ழை நேர‌ உரையாட‌லை சொன்னார்.இந்த‌ ப‌ட‌த்தில் ந‌ட்பும் இருக்கிற‌து என அவ‌ர் சொன்ன‌ போது,ம‌ற்ற‌ எல்லாரும் "ந‌ட்பு" ப‌ற்றி நீங்க‌ சொன்னா ச‌ரியா இருக்கும் என்று க‌லாய்த்தார்க‌ள்.

வச‌ந்த‌பால‌ன் பேசுகையில் பாட‌ல்க‌ள் ஒரு ப‌ட‌த்தை தாங்கும் பில்ல‌ர்க‌ள் என‌ த‌ன் குரு ஷ‌ங்க‌ர் குறிப்பிடுவார் என‌வும்,தான் பாட‌ல்க‌ளுக்காக‌ மிக‌வும் மென‌க்கெடுவ‌தாக‌வும் குறிப்பிட்டார்.

அழ‌கியில் ஆர‌ம்பித்த‌ மாற்று சினிமா,காத‌ல்,வெயில், ப‌ருத்திவீர‌ன், சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்,நாடோடிக‌ள் என‌ நீள்கிற‌து என்ற‌ வ‌ச‌ந்த‌பால‌ன்,90 க‌ளில் இருந்த‌ ஹீரோக்க‌ளின் பின்னால் இய‌க்குன‌ர்க‌ள் தேதி கேட்டு அலையும் ப‌ழ‌க்க‌த்தை அமீர்,ச‌சி,ச‌சிக்குமார் போன்றோர் உடைத்துவிட்ட‌ன‌ர்,ஒரு புது ஹீரோ இருந்தால் போதும் ப‌ட‌ம் ப‌ண்ண‌லாம் என்ற‌ தைரிய‌ம் இருக்கிற‌து, இது தொட‌ர‌ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

**********************************************************************************************************************
ஆங் சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன்.பையா பாட‌லைத் தொட‌ர்ந்து "விண்ணைத் தாண்டி வ‌ருவாயா" ப‌ட‌ பாட‌ல்க‌ளும் தின‌மும் நாள் த‌வ‌றாம‌ல் இர‌வு க‌லைஞ‌ர் டிவியில் ஒளிப‌ர‌ப்பாகிறது.

அது ச‌ரி த‌மிழ்ல‌‌ எவ்வ‌ள‌வோ சேன‌ல் இருக்கும் போது நான் ஏன் க‌லைஞ‌ர் டிவி பார்க்கிறேன்?

ஏன்னா அந்த‌ சேன‌ல் ம‌ட்டும் தான் எங்க‌ கேம்ப்ல‌ தெரியுது!!!!!!!!

************************************************************************************************************************

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:57 AM 7 comments
Labels: அனுப‌வ‌ம், சினிமா

சனி, 26 டிசம்பர், 2009

ச்சும்மா

ஸ்பெக்ட்ர‌ம் போயி லிபரான் வ‌ந்தது டும் டும் டும்
லிபரான் போயி தெலுங்கானா வ‌ந்த‌து டும் டும் டும்
தெலுங்கானா போயி க‌வ‌ர்ன‌ர் சிடி வ‌ந்த‌து டும் டும் டும்

தீவிர‌ ஆலோச‌னை -பிர‌த‌ம‌ர் த‌லைமையில் அமைச்ச‌ர‌வை கூட்ட‌ம் ‍

ந‌ட‌ந்தது...........

ந‌ட‌க்கிற‌து........

ந‌ட‌க்கும்..............

ஏசியா நெட் (ம‌லையாளம்) டிவியில் சென்ட‌ர் ஃஃப்ரெஷ் மிட்டாய்க்கு ஒரு விள‌ம்ப‌ர‌ம் வ‌ரும்.அர‌சிய‌ல்வாதிக‌ள் க‌ல‌ந்து கொள்ளும் ஒரு மீட்டிங்கில் த‌லைவ‌ர் சொல்வார் இப்ப‌ எதுக்கு எல்லாரும் கூச்ச‌ல் போட‌றிங்க‌ ச‌மோசா குடுத்தாச்சு,போண்டா குடுத்தாச்சு வேற‌ என்ன‌ வேணும் பாயாச‌ம் வேணுமா கொடுத்திர‌லாம் அப்ப‌டின்னு.

ஒரு வேளை நிஜ‌த்திலும் இது தான் ந‌ட‌க்குதோ என்ன‌வோ????
**********************************
மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.காங்கிரசின் விடிவெள்ளி என கொண்டாட‌ப் ப‌டும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.
**********************************
கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ரஜினி.
**********************************
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் க‌ம‌ல் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?

தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
**********************************
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பணம் படைத்தவர்கள், படைபலம் கொண்டவர்கள் நமது ஜனநாயகத்தை கடத்திக் கொண்டு போகின்றனர். அரசியலையும், தேர்தலில் போட்டியிடுவதையும் வணிகமயமாக்கி வருகின்றனர். இத்தகைய அவலங்கள் நீங்கி, நமது ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் உரிமையையும், பலத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்

நீங்க‌ ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா?????
**********************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:58 PM 10 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா

சனி, 19 டிசம்பர், 2009

பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்




உச்ச‌க‌ட்ட‌ போர் ந‌ட‌க்கும் நேர‌த்தில் க‌ள‌த்தை விட்டு வில‌க‌ நினைக்கும் கார்க்கீ அவ‌ர்க‌ளுக்கு




நீங்க‌ள் தானே ந‌ம்ம‌ த‌ள‌ப‌தியின் "கீ" த‌ள‌ப‌தி



வெற்றியும் தோல்வியும் வீர‌ன‌க்கழ‌கு என்று ந‌ம் ராஜ‌குரு எஸ் ஏ சி கூறுவ‌தை ம‌ற‌ந்து விட்டீர்க‌ளா



க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு ப‌டை ப‌ல‌ வென்று இந்த‌ இட‌த்திற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள்தானே நாம்



க‌ள‌த்தில் நாம் சாய்த்த‌ "த‌ல‌"க‌ள் ஒன்றா இர‌ண்டா.. ஒராயிர‌ம் இருக்கும்



எத்த‌னை 250 நாள் போர் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் நாம், நாமே போரைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுவ‌தா



ஆட்சிக்கு வ‌ர‌ முய‌ற்சி செய்ய‌க் கூடாது என்று மிர‌ட்டுப‌வ‌ர்க‌ள் ஒருபுற‌ம்



க‌ட்சிக்கே வ‌ர‌ வேண்டாம் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் இன்னொரு புற‌ம்



இந்த‌ இக்க‌ட்டான நேர‌த்தில் ந‌ம் த‌லைவ‌ருக்கு தோளோடு தோள் நின்று போர‌ட வேண்டிய‌வ‌ர்க‌ள் நாம் என்ப‌தை ம‌ற‌ந்து விட்டு க‌ள‌ம் விட‌ முய‌ற்சிக்க‌ வேண்டாம்



த‌ள்ளாத‌ வ‌ய‌திலும் உளியை ஓசையோடு எடுத்துக் கொண்டு அவ‌ர் ந‌ட‌த்தும் போரைக் காண‌வே ஆயிர‌ம் பிற‌ப்புக‌ள் கூடும் போது ந‌ம‌க்கென்ன‌ குறை?



இது உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்ட‌ முடிவு என்ப‌தை நாங்க‌ள் அறிவோம்



த‌ய‌க்க‌ங்க‌ளை உத‌றி த‌ள்ளி விட்டு புய‌லென‌ கிள‌ம்பி "வாருங்க‌ள்" ச‌காவே



புர‌வியும்,வாளும்,நாங்க‌ளும் காத்திருக்கிறோம் உங்க‌ள் மீள் வ‌ருகையை எதிர் நோக்கி





/த‌லைவ‌ரின் உத்த‌ர‌வுப் படி/



சின்ன‌ த‌ள‌ப‌தி மாற‌வர்ம‌ன்

45 வ‌து ப‌டைப் பிரிவு
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:01 PM 15 comments
Labels: சினிமா, வேட்டைக்கார‌ன்

வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை

வேட்டைக்கார‌ன் விம‌ர்ச‌ன‌ங்க‌ள்



கேபிள் ச‌ங்க‌ர் - எலி வேட்டை


நடோடி இல‌க்கிய‌ன் - விஜயின் ரஜினிகள் ஆசை.

ப‌ரிச‌ல்கார‌ன் - பார்ட‌ரில் பாஸ்

ப‌ட்ட‌ர்ஃபிளை சூர்யா-சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை

இரும்புத்திரை அரவிந்த்- இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி

ஜெட்லி-வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....

த‌ண்டோரா-படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு
 
 
   
தின‌க‌ர‌ன் நாளித‌ழ்


வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை

சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.

இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.

விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:14 AM 17 comments
Labels: சினிமா, வேட்டைக்கார‌ன்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி


ZEE டிவியில் நேற்று PAA இயக்குன‌ர் பால்கி அவ‌ர்க‌ளின் பேட்டி ஒளிப‌ர‌ப்பானது.பட‌ம்,அமிதாப்,வித்யா பால‌ன்,இளைய‌ராஜா ப‌ற்றி சுருக்க‌மாக‌ பேசினார்.


பா வேறு ப‌ட‌ங்க‌ளைப் போலிருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ளே என்ற‌ கேள்விக்கு ப‌தில‌ளிக்கையில் Progeria என்ற வார்த்தைய‌ கேட்ட‌வுட‌னே அவ‌ர்க‌ளாக‌ ஏற்க‌னெவே அது ப‌ற்றி வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளுட‌ன் ஓப்பிட்டு க‌ருத்து சொல்கிறார்க‌ள்.எதையும் எத‌னுட‌னும் ஒப்பிடாதீர்க‌ள்.அவர்க‌ளுக்கெல்லாம் நான் சொல்வ‌து ஒன்றுதான்.இந்த‌ ப‌ட‌த்தின் க‌தையும்,திரைக்க‌தையும் எழுதிய‌து நான்.ஆனா அந்த‌ நோயை நான் உருவாக்க‌வில்லை.அது க‌ட‌வுள் உண்டாக்கியது.அதை வைத்து க‌தையை ம‌ட்டும் தான் நான் உருவாக்கினேன் என்றார்.

அமிதாப்புக்கு அறிமுக‌ம் என்று ஏன் டைட்டில் போட்டீர்க‌ள்?

சிரித்துக்கொண்டே ஆம் இந்த‌ ப‌ட‌த்தில் அமிதாப் அறிமுக‌ம் தான்.மொத்த‌மாக‌ அவ‌ரின் உருவ‌த்தை மாற்றி அமைத்திருக்கிறோம் அல்ல‌வா, ஆக‌வே தான் என்றார்.

வித்யா பால‌ன் ப‌ற்றி?

முத‌லில் அமிதாப்புக்கு அம்மா கேர‌க்ட‌ர் என்ற‌தும் அதிர்ந்து விட்டார்.பின் க‌தையை விள‌க்கினேன்,அம்மா கேர‌க்ட‌ர் என்றாலும் வ‌யதான அம்மா இல்லை.நீங்க‌ள் இப்ப‌டியே தான் இருப்பீர்க‌ள்,அமிதாப் வ‌ய‌தைத்தான் குறைக்கப் போகிறோம்,என்ற‌வுட‌ன் ஒத்துக் கொண்டார்.

ஆனால் ஒன்று அமிதாப்,அபிஷேக்,வித்யா மூவ‌ரில் யார் ந‌டித்திருக்க‌‌ விட்டாலும் இந்த‌ ப‌ட‌த்தை நான் எடுத்திருக்க‌ மாட்டேன் என்றார் உறுதியாக.

அமிதாப்பின் திரையுல‌ வாழ்வில் இந்த‌ கேர‌க்ட‌ர் மிக‌வும் முக்கிய‌மான‌து இல்லையா ?

சினிமாவில் இந்த கேர‌க்ட‌ர் முக்கிய‌மான‌து,அந்த‌ கேர‌க்ட‌ர் சிற‌ப்பான‌து என்று எதுவுமில்லை.அது அந்த‌ந்த‌ ப‌ட‌த்தின் தேவைக‌ளைப் பொறுத்த‌து.எனக்கு அமிதாப்பின் ந‌ஸிம் ப‌ட‌த்தின் காமெடி ரோல் தான் ரொம்ப‌ பிடிக்கும்.அத‌னால் அப்ப‌டியெல்லாம் ஒன்றுமில்லை

உங்க‌ளின் சீனிக‌ம் ப‌ட‌த்திலும் பா ப‌ட‌த்திலும் ஒரே இசைய‌மைப்பாள‌ர் தான்......

கேள்வியை முடிக்கும் முன்பே குறுக்கிட்ட‌ பால்கி இசைய‌மைப்பாள‌ர் இளைய‌ராஜா ம‌ட்டும‌ல்ல,ஒளிப்ப‌திவாள‌ர் பி சி ஸ்ரிராமும் சீனிக‌ம்மில் ப‌ணியாற்றிய‌வ‌ர்தான்.
இளைய‌ராஜாவைப் பொறுத்த‌வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ 900 ப‌ட‌ங்க‌ளுக்கு மேல் ப‌ணியாற்றியுள்ளார்,ஒரு ப‌ட‌த்துக்கு 5 பாட‌ல்க‌ள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாட‌ல்க‌ள்,அதில் 3000 பாட‌ல்க‌ள் மெலோடி ர‌க‌த்தை சேர்ந்த‌வை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷ‌னுக்கும் அவ‌ர் பாட‌ல் போட்டு விட்டார்,எந்த‌ இய‌க்குன‌ர்க்கு, எந்த‌ சிச்சுவேஷ‌னுக்கு பாட‌ல் தேவை என்றாலும் அவ‌ரிட‌ம் காபி ரைட் வாங்கி விட்டு தார‌ளாமாக உப‌யோக‌ப்படுத்தி கொள்ள‌லாம்.

ர‌ஹ்மான் வ‌ந்த‌ பிற‌கு தான் தென்னிந்திய‌ இசை ப‌ற்றி எல்லாருக்கும் தெரிய ஆர‌ம்பித்தது.ரா‌ஜாவைப் பற்றி அதிக‌ம் தெரியாம‌ல் போன‌த‌ற்கு கார‌ண‌ம்,அவ‌ர் உச்ச‌த்தில் இருந்த‌ போது இந்த‌ அள‌வு தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ர‌வில்லை.மீடியாவும் இப்போது இருப்ப‌து போலில்லை.அத‌னால் தான் நாட்டின் ஒரு ப‌குதி ம‌க்க‌ளுக்கு அவ‌ரைப் ப‌ற்றி அறிய‌வில்லை.அவ‌ர் இந்தியாவின் சிற‌ந்த‌ இசை மேதை என்றார்.

பா வுக்கு அடுத்து என்ன‌?
பெரிதாக‌ சிரித்துக்கொண்டே இப்போதைக்கு எந்த‌ ஐடியாவுமில்லை.சொல்ல‌ப் போனால் ப‌ட‌ம் பார்க்கிற‌ எண்ண‌ம் கூட‌ இல்லை.கொஞ்ச‌ நாளைக்கு கிரிக்கெட் பார்க்க‌ வேண்டும்.அது ம‌ட்டும் தான் என்றார்.



Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:26 AM 16 comments
Labels: அனுப‌வ‌ம், சினிமா

புதன், 9 டிசம்பர், 2009

PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்




67 வ‌ய‌து அமிதாப் ப‌ட‌த்தில் பிரஜோரியா நோயால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ 13 வ‌ய‌து ஆரோ வாக‌ எப்ப‌டி மாறினார் சில‌ ப‌ட‌ங்க‌ள்







தின‌மும் 4 முத‌ல் 5 ம‌ணி நேர‌ம் மேக்க‌ப் போட எடுத்துக் கொண்ட‌ நேர‌ம்





அமிதாப் மேக்க‌ப்புக்கு ம‌ட்டும் ப‌ட‌த்தின் ப‌ட்ஜெட்டில் 10 ச‌த‌வீத‌ம் செல‌வாகியுள்ளது




ஹாலிவுட் மேக்க‌ப் க‌லைஞ‌ர்கள் Christien Tinsley (THE PASSION OF THE CHRIST, CATWOMAN) and Dominie Till (THE LORD OF THE RINGS TRILOGY)  ஆகியோர் பணியாற்றியுள்ளன‌ர்




போட்ட‌ மேக்க‌ப்பை க‌லைப்ப‌த‌ற்கு ஏற‌த்தாழ‌ 2 ம‌ணி நேர‌ம் செல‌வாகுமாம்




மொத்த‌ம் 8 வித‌ வித‌மான CLAY லேய‌ர்க‌ள் அட‌ங்கியுள்ளது




மேக்க‌ப் போடும் 4 ம‌ணி நேர‌த்திற்கு திட‌ உண‌வோ திர‌வ‌ உண‌வோ எதுவும் கிடையாதாம்







அமிதாப் ஸ்பெஷ‌லாக‌ டிசைன் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ dentures  ப‌ய‌ன் ப‌டுத்தியுள்ளார்13 வ‌ய‌து சிறுவ‌னின் குர‌லுக்காக‌













ஸ்பிச் Pattern கொண்டு வ‌ருவ‌த‌ற்காக‌ எக்ஸ்ட்ரா Teeth ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்



அமிதாப் ஷீட்டிங் முழுவ‌தும் ம‌ட்டுமில்லாது,ட‌ப்பிங்கிலும் dentures ப‌ய‌ன் ப‌டுத்தியுள்ளார்











சிறுவ‌னின் குர‌லில் ஒரு பாட‌லும் பாடியுள்ளார் அமிதாப்









Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:13 PM 0 comments
Labels: அனுப‌வ‌ம், சினிமா, புகைப்ப‌ட‌ம்
« பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • மு.க‌ & ஜெ.ஜெ
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio