பையா படம் ரீலிஸ் ஆனதில் இருந்து தினமும் நாள் தவறாமல் இரவு கலைஞர் டிவியில் "அடடா மழைடா அடை மழைடா" பாடல் ஒளிபரப்பாகிறது. (தயாநிதி வாழ்க)
மயில் தோகை போல நீ வளைந்து ஆடும் போது என்ற பாடல் வரிக்கு ஆடும் போது நம் மனதும் ஆடுகிறது.
என் தேவதை எங்கே என் தேவதை எங்கே அது சந்தோசமா ஆடுது இங்கே என்ற பாடல் வரியில் தமன்னா தனித்து ஆடும் போது பளிச் என தெரிகிறது,நான் அருவியைச் சொன்னேன்.
இந்த பாடலைப் பார்க்கும் போது கல்லூரியில் வந்த தமன்னவா என வியக்க வைக்கிறார்.பாரேன் இந்த பிள்ளைக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு!!!!!!!!!!
********************************************************************************************************************
அங்காடித் தெரு இயக்குனர்கள் பார்வையில்(கலைஞர் டிவி) என்ற நிகழ்ச்சியில் அமீர், சசிக்குமார்,சசி,மிஷ்கின், சமுத்திரக்கனி, தங்கர்பச்சான், விக்ரமன் ஆகியோர் பங்கு பெற்று படம் பற்றிய தங்கள் கருத்துக்களை இயக்குனர் வசந்தபாலன் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
கனி தன் தங்கையை வழி அனுப்பிவிட்டு வரும் போது பேசிக் கொள்ளும் காட்சியை தனக்கு மிகவும் பிடித்ததாகவும் காதலை இதை விட இயல்பாக சொல்ல முடியாதெனவும் சசி சொன்னார்.
என்ன பண்ணான் என்ற கதைநாயகனின் கேள்விக்கு என் மாரை பிடிச்சு கசக்கினான் என கனி பதிலளிக்கும் காட்சியும் அதை தொடர்ந்த என்னை செருப்பால அடிச்சுரு கனி என்ற காட்சியும் தன்னை கவர்ந்ததாக மிஷ்கின் குறிப்பிட்டார்.
குறுக்கிட்ட வசந்தபாலன் தான் இந்த வசனத்தை அஞ்சலியிடம் சொல்லப் போகையில் தான் கூசிப் போய் அஞ்சலியின் முகம் பார்க்காமால் திரும்பிக் கொண்டு இந்த காட்சியைப் பற்றி சொன்னதாக கூறினார்.மேலும் இந்த காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆனது,தான் ரீடேக் எதுவும் கேக்கவில்லை என்றார்.
சசிக்குமார் தனக்கு பிடித்த காட்சியாக நண்பர்களுக்கிடையே நிகழும் அந்த மழை நேர உரையாடலை சொன்னார்.இந்த படத்தில் நட்பும் இருக்கிறது என அவர் சொன்ன போது,மற்ற எல்லாரும் "நட்பு" பற்றி நீங்க சொன்னா சரியா இருக்கும் என்று கலாய்த்தார்கள்.
வசந்தபாலன் பேசுகையில் பாடல்கள் ஒரு படத்தை தாங்கும் பில்லர்கள் என தன் குரு ஷங்கர் குறிப்பிடுவார் எனவும்,தான் பாடல்களுக்காக மிகவும் மெனக்கெடுவதாகவும் குறிப்பிட்டார்.
அழகியில் ஆரம்பித்த மாற்று சினிமா,காதல்,வெயில், பருத்திவீரன், சுப்ரமணியபுரம்,நாடோடிகள் என நீள்கிறது என்ற வசந்தபாலன்,90 களில் இருந்த ஹீரோக்களின் பின்னால் இயக்குனர்கள் தேதி கேட்டு அலையும் பழக்கத்தை அமீர்,சசி,சசிக்குமார் போன்றோர் உடைத்துவிட்டனர்,ஒரு புது ஹீரோ இருந்தால் போதும் படம் பண்ணலாம் என்ற தைரியம் இருக்கிறது, இது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
**********************************************************************************************************************
ஆங் சொல்ல மறந்துட்டேன்.பையா பாடலைத் தொடர்ந்து "விண்ணைத் தாண்டி வருவாயா" பட பாடல்களும் தினமும் நாள் தவறாமல் இரவு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
அது சரி தமிழ்ல எவ்வளவோ சேனல் இருக்கும் போது நான் ஏன் கலைஞர் டிவி பார்க்கிறேன்?
ஏன்னா அந்த சேனல் மட்டும் தான் எங்க கேம்ப்ல தெரியுது!!!!!!!!
************************************************************************************************************************
7 comments:
தமன்னா படம் போட்டதுக்காக ரெண்டு வோட்டு போடலாம்னு நினைச்சேன். ஆனா தமிழ்மணம் ஒரு ஓட்டுக்கு மேல அனுமதிக்க மாட்டேங்குது.. :(((
இப்படியும் ஒரு விசயம் இருக்கோ தெரியாம போச்சே !
உண்மையில் எதுவும் புதுமை இல்லை....
" படிக்காதவன் " சொன்னது போல் "தம்மண்ணாவை பார்க்க பார்க்க பிடிக்கிறது..."
அன்புடன்,
மதி...
@முகிலன் நன்றி நண்பா
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி நண்பா
@Mathi நன்றி நண்பா
//"தம்மண்ணாவை பார்க்க பார்க்க பிடிக்கிறது..."//
அதே
http://www.youtube.com/watch?v=eQ9NEZXsfzg&feature=player_embedded
அங்காடித்தெரு குறித்த இயக்குனர்கள் பார்வை மிக நல்லாயிருந்தது. மேலுள்ள இணைப்பில் பார்க்காதவர்கள் பார்க்கலாம். இதில் உள்ள இயக்குனர்கள் அனைவரும் சமூக நோக்கம் கொண்டவர்கள்.
தமன்னாவோடத எங்க கொண்டாந்து செருவுறீங்க? அத புறம்பா வைச்சுகுங்க.
பகிர்வுக்கு நன்றி
//ஏன்னா அந்த சேனல் மட்டும் தான் எங்க கேம்ப்ல தெரியுது!!!!!!!!//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
நன்றி பெயரில்லா
//தமன்னாவோடத எங்க கொண்டாந்து செருவுறீங்க? //
எல்லாம் ஒரு மார்க்கெட்டிங் தான்
நன்றி அக்பர்
கருத்துரையிடுக