எவன்யா கண்டுபிடிச்சான் இந்த எழவெடுத்த டி20 ஐ னு தனியா புலம்பிக் கிட்டு இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி மாவீரர் பத்ரிநாத்.அப்போது வணக்கம் சார் என்ற படி வருகிறார்கள் இருவர் கேமராவுடன்.
கேமராவைப் பார்த்தவுடன் பத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் (மனதுக்குள்) சே ரெண்டு மூணு நாளா எந்த பேப்பர பார்த்தாலும் முரளி விஜயைப் பத்தி பக்கம் பக்கமா எழுதறுனாங்க நல்லவேளை இப்பாவது நம்மள தேடி வந்தாங்களே என்றபடி வாங்க வாங்க என்கிறார்.
சார் நாங்க கேக்ரான் மேக்ரான் பத்திரிகையிலிருந்து வர்ரோம் ஒரு சின்ன பேட்டி வேணும்
ஓ தாரளாமா போட்டோ போடுவிங்க இல்ல? கன்பர்ம் செய்து கொள்கிறார் பத்ரி
இனி பேட்டியிலிருந்து
உத்தப்பா,யூசுப் பதான் போன்ற வீரர்கள் எல்லாம் அதிரடியில் மிரட்டும் போது நீங்க மட்டும் டெஸ்ட் மேட்ச் மாதிரியே விளையாடுறீங்களே ஏன்?
நான் என்ன பண்றது? வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் பேட்டைத் தொட்டாலே ரஞ்சி(இது அந்த ரஞ்சி இல்ல)தான் ஞாபகம் இருக்கு மீதி எல்லாம் மறந்துறது.அது மட்டுமில்லாம நாலாவது ஆளா தான் பேட் பண்ண விடுறாங்க,டின்னர் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டு பெவிலியன்ல உக்காந்து லேசா அசந்தாப்ல இருக்கும் போது எழுப்பி பேட்டிங் பண்ண சொல்றாங்க.களத்துக்கு போனாலும் அசதி போக மாட்டக்கு.விஜய் மாதிரி என்னையும் ஒப்பனிங்கல இறக்கினால் சும்மா பின்னிருவேன்.
அது சரி ஆனா நேத்து மேட்ச்ல தில்ஸ்கூப்,ரிவர்ஸ்விப் எல்லாம் அடிச்சிங்களே?
அதுக்கு பேர்தான் நோகாமா நோங்கெடுக்கிறது.அந்த ஷாட்டுக்கெல்லாம் உயிரைக் கொடுத்து அடிக்க வேண்டாம் பாருங்க லேசா தட்டி விட்டா போதும் பவுண்டரிதான்.
அப்புறம் பந்து ஃபீல்டர் கைக்குப் போனதுக்கப்புறமும் ரன் எடுக்க ஓடப் பார்க்கிறீங்களே அது ஏன்?
சும்மா ஓரே இடத்துல நின்னுகிட்டே இருந்தா தூங்கிடுவேன்.அதுக்காகத்தான் அப்பப்ப ஒரு சின்ன வார்ம் அப்
சிக்சர்னு ஒரு வஸ்து கிரிக்கெட்ல இருக்கு தெரியுமா உங்களுக்கு?
ஆமா லேசா ஞாபகத்துல இருக்கு.ந்ம்ம முரளி விஜய் கூட ராஜஸ்தான் மேட்ச்ல அடிச்சாரே அதானே.எப்படியும் நானும் 2020 ஐபிஎல்லஅடிப்பேன்.
ஐபிஎல்ல உங்க சாதனைன்னு எதை சொல்லுவிங்க?
நான் பேட் பண்ணும் போது தான் அதிகமா சேனல் மாத்தறாங்களாம்.நான் பேட் பண்ணும் போது தான் டிவி ரிமோட் வீட்டுப் பெண்கள் கைக்கு போகுதாம்.அவங்க விருப்பமான சீரியல் பார்க்குறாங்கலாம், இத நான் சொல்லல எனக்கு வர்ற கடிதங்கள் சொல்லுது,தினமும் ஆயிரத்துக்கு மேல வருது.,அதனால தாய்மார்களோட ஆதரவு பெற்ற ஒரே ஐபிஎல் பேட்ஸ்மேன் நான் தான். இதை விட வேற என்ன வேணும்?
பேட்டியை முடிச்சுக்கலாமா என்க்கு பிராக்டிஸ் இருக்கு என்றார் பத்ரி
சார் கடைசியா ஒரு கேள்வி டீம்ல எவ்வளவோ பேர் வெளியில இருக்கும் போது உங்களுக்கு மட்டும் தொடர்ந்து விளையாட சான்ஸ் கிடைக்குதே எப்படி?
எனக்கு,தோனிக்கு ஏன் டீம் மேனஜ்மென்டுக்கே தெரியல.அதுக்காக ஒரு கமிட்டி போட்டிருக்காங்க கூடிய சீக்கிறம் தெரிஞ்டும்.
- சென்னையிலிருந்து காத்தவராயன்
படம் லென்ஸ் பாண்டியன்