அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 21 பிப்ரவரி, 2011
சனி, 4 செப்டம்பர், 2010
எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே!
அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்! 
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!
இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!
'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?
எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!
இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்
ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரை
Thanks - Vikatan.com
திங்கள், 12 ஜூலை, 2010
ச்சும்மா
வெளிநாட்டுப் பதிவர்கள் ஏதேனும் விவாதத்தில் கருத்துச் சொன்னால்.. ஆரோக்கியமாக எதிர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும். அதை விடுத்து ஏசி அறையில் இருந்து கொண்டு பேச வேண்டாம் எனக் கூறுவது என்ன நியாயம் எனத் தெரியவில்லை.
தகவலுக்காக
தகவலுக்காக
(circular from Bupa Middle East (Medical Insurance Company), indicating that the temperature in the major cities of the Kingdom will be rising in coming weeks, i.e. Jeddah may reach 52 C, Alkhobar / Dammam may reach 55 C & Riyadh unbelievable 59 C. )
ஐயாமார்களே..அம்மாமார்களே ஏசி என்பது நம்ம ஊரில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருக்கலாம்..இங்க அப்படியல்ல.பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் சாதாரண மளிகை கடை வரை.. இவ்வளவு ஏன் சலூன் கடைகளில் கூட ஏசி கட்டாயமிருக்கும் இங்குள்ள வெப்பத்தைச் சமாளிக்க.ஏசி ரூமில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள்.. அவர்களுக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உரிமையில்லை என நினைப்பவர்களுக்கு....பெரிய கம்பெனிகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களில் இருந்து..மளிகை கடை,சின்ன ஹோட்டல்கள், சலூன் கடைகளில் வேலை செய்பவர்கள் வரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்கள்.பெரும்பாலனோர் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான்.பொழப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வளவே.
இனியாவது வெளிநாட்டுப் பதிவர்கள் சொல்வதில் உடன்பாடில்லை எனில் விவாதம் செய்யுங்கள்...ஏசி யை இழுக்காமல்...

******************************************************
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும்.."நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சி நான் விரும்பி பார்க்கும் ஒன்று.இனிமையான குரல்களில் மறக்க முடியாத பழைய பாடல்களைப் பாடுகிறார்கள்.பாடல் மற்றும் படம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளது.உதாரணம்.. "அத்தை மடி மெத்தையடி" பாடல் இடம் பெற்ற கற்பகம் படத்தில் தான் கே ஆர் விஜயா அறிமுகமானார்..மேலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் புகழ் பெற்ற கற்பகம் ஸ்டுடியோ உருவானது.பாடல் பற்றிய பிரபலங்களின் கருத்துக்களும் சுவையாக உள்ளது.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
****************************************
உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்று விட்டது.. ஆக்டோபஸ்ஸின் கணிப்பும் கூட வென்று விட்டது.நேற்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவுதான்.ஏகப்பட்ட மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.ஐந்து கோல் அடித்ததோடு..மூன்று கோல்கள் அடிக்க உறுதுணையாயிருந்த ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு தங்க காலணி விருது கிடைத்தது.
******************************************
2050 இல் இந்தியாவின் ஜனத்தொகை 200 கோடியாக இருக்கும்..இது அப்போதைய சீனாவை விட அதிகம்.(தகவல் உபயம் ஏசியாநெட் ரேடியோ)நம்முடைய பெரு நகரங்களின் நிலைமைய நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.வயல்வெளிகள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது..இன்னொரு பிரச்சினை தண்ணீர்ப் பஞ்சம்.அதற்குள்ளாக பசித்தால் ஒரு மாத்திரை,தாகம் எடுத்தால் ஒரு மாத்திரை என மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
**********************************************
பிடித்த பஞ்ச் டயலாக்
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
நரேந்திர மோடி
குஜராத் முதல்வர்.
***********************************************
சனி, 10 ஜூலை, 2010
பதிவுலக சண்டை - தலைவர்கள் வேண்டுகோள்
பதிவர்களுக்குள் நடைபெறும் புனைவு,எதிர் புனைவு,சவால்,எதிர் சவால்கள்,சண்டை சச்சரவுகளைக் கேள்விப்பட்டு நம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்.
கலைஞர்
கலைஞர்
தனி மனித தாக்குதல் திராவிட நாகரிகமல்ல(குல்லுக பட்டர்,அண்டங்காக்கை எல்லாம் ஞாபகம் வந்தால் கழகம் பொறுப்பல்ல).பிணக்குகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்பதிவாளர்கள் அடிக்கடி தங்களுக்குள் பாராட்டு விழாக்கள் நடத்திக் கொள்ள வேண்டும்,இதன் மூலம் பிரச்சினைகளை வளர விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய உதவிகளை ஜெகத்திடம் செய்யச் சொல்லியிருக்கிறேன். வலைப்பதிவாளர்களையும் ஒரு குடும்பமாகக் கருதி நானும் கலந்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.இதன் பிறகும் சண்டை,சச்சரவுகள் தொடர்ந்தால் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
ஜெயலலிதா
அடுத்து தமிழகத்தில் அமையப் போவது கழக ஆட்சிதான்.தற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவேன் என உறுதியளிக்கிறேன்.இதனை மீறி யாரேனும் சண்டையில் ஈடுபட்டால் நமது எம்ஜிஆரில் உங்கள் வலைப்பதிவு பெயர் வெளியிடப் படும்.
வைகோ
வலைப்பதிவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு எனது தலைமையில், கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் ஆறு மாத கால "மறுமலர்ச்சி" நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர் அனைவரும் நடைபயணத்தில் கலந்து கொண்டால்,ஆறு மாத காலத்திற்கு பதிவு எழுத யாருமேயில்லாமல் சண்டை தானாகவே நின்று விடும் என்பதை கருத்தில் கொண்டே இந்த பயணம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க்குடிதாங்கி
வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட அணியில் நின்று, தொடர்ந்து வாதாடுவாதலேயே சண்டை தொடர்கிறது எனக் கருதுகிறேன்.மாறாக பதிவர்கள் வாரமொருமுறை அணி மாறி வாதாடினால் சண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொடர்ந்தால் காடுவெட்டி குரு களம் இறக்கி விடப்படுவார் என நினைவு படுத்த விரும்புகிறேன்.
இம்சை அரசன்

மதம்,சாதி,அரசியல்,புனைவு என தனித்தனியாக வலைபதிவுகள் தொடங்கப்படும். சண்டை போட விரும்புவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வலைபதிவுகளில் சென்று சண்டையிட்டுக் கொல்ல(ள்ள)லாம்.சிறந்த மதச்சண்டை பதிவர்,சிறந்த அரசியல் ச்ண்டைப் பதிவர்,சிறந்த புனைவுப் பதிவர் போன்ற விருதுகள் உருவாக்கப்பட்டு, விருது பெறுபவர்களுக்குப் பரிசாக அக்காமாலா மற்றும் கப்சியில் ஊறப்போட்ட பாம்புச்சட்டை,முயல் போன்றவை வழங்கப்படும்.
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
புதன், 23 ஜூன், 2010
செம்மொழி மாநாட்டின் பயன்கள் - 28 சூன் 2010
கோவையில் இன்று 23-06-2010 முதல் 27-06-2010 வரை நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்படும் பயன் என்ன?மக்களின் வரிப் பணம் தான் வீணாகிறது என்று சில பதிவர்கள் இடுகை போட்டுள்ளார்கள். 27ந் தேதி மாநாடு முடிவடைகிறது,28 ந் தேதி நடக்கப் போகும் அதிசயங்கள் குறித்து அரசு வெளியிடப் போகும் அறிக்கை இதோ......
செம்மொழி மாநாட்டால் விளைந்த நன்மைகள்
செம்மொழி மாநாட்டால் விளைந்த நன்மைகள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 149 அடியாக உயர்த்திக் கொள்ள கேரள அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.அதற்கான கடிதத்தை கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் நேற்று முதல்வரை சந்தித்து வழங்கினார்.
வருடா வருடம் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் சரியாக கொடுக்கப்படும்,இனி எந்த சூழ்நிலையிலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற மாட்டோம் என
வருடா வருடம் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் சரியாக கொடுக்கப்படும்,இனி எந்த சூழ்நிலையிலும்,மழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற மாட்டோம் என
கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து நதிகளும் இணைக்கப்பட்டு விட்டதால் இனி விவசாயிகள் முப்போகம் விளைவிக்கலாம்.அதற்கு தேவையான உரங்களை அழகிரி வீட்டின் பின்புறம் உள்ள உரக்கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்,மேலும் அதற்காகும் போக்குவரதது செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்,இனி இலங்கை கடல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ளலாம்,அதோடு மட்டுமில்லாமல் பிடித்த மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம்.அதற்கு தேவையான அரிசி,எண்ணெய்,மசாலா சாமன்களை தந்து உதவ இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடை பெற்று வந்த மின் திட்டப் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்து விட்டது,ஆகவே இனி தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று முதல்வரை சந்தித்து இனிமேல் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லாருக்கும் இல்வசக் கல்வி அளிக்கப் போவதாக "துண்டைப் போட்டு தாண்டி" உறுதியளித்துள்ளனர்.இனி அமைச்சரின் பிள்ளைகளும்,ஆண்டியின் பிள்ளைகளும் அருகருகே அமர்ந்து கல்வி பயிலலாம்.
பொது விநியோக கடைகளில் வழங்கப்பட்டு வந்த 1 ரூபாய் அரிசி,இன்று முதல் தரம் உயர்த்தப் பட்டு "பாசுமதி" அரிசி வழங்கப்படும்.மேலும் பருப்பு,காய்கறிகள்,என்ணெய்,மசாலாப் பொருட்கள் முதல் தாளிக்க தேவையான கடுகு,கறிவேப்பிலை வரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வழங்கப்படும்.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அறவே நீக்கப்பட்டு விட்டது,அதோடு ஒரு ஆசிரியருக்கு ஒரு மாற்று ஆசிரியர் (சப்ஸ்டியூட்)ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.முதன்மை ஆசிரியர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவர் பணியை மேற்கொள்வார்.இதன் மூலம் பள்ளிகளில் தங்கு தடையில்லாமல் வகுப்புகள் நடைபெறும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் அரசு வேலை கிடைத்தாகி விட்டது.இனி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள்,பிற்காலத்தில் எந்த அரசு அலுவகலத்தில் வேலை செய்ய விருப்பமோ,அந்த அலுவலகத்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் கடிதம் பெற்றுக் கொள்ளலாம்.
முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக சாலைகளில் போக்குவரத்து ஒரு போதும் நிறுத்தப்படாது.அவர்கள் இனி இரவு பனிரெண்டு மணிக்கு மேல்,அதிகாலை ஆறு மணிக்குள் மட்டும் சாலையில் செல்வார்கள்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடி தண்ணீர் வழங்க "அக்வாஃபீனா" நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் "அக்வாஃபீனா" தண்ணீர் உறுதி.
ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் நோக்கில்,அனைத்து தனியார் மருத்துவமனைகளுடனும் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.இனி அனைவரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இருண்டு கிடக்கும் பனை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற, கள் இறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான கலயம்,அரிவாள் போன்றவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தின் அனைத்துச் சாலைகளும் நமீதாவின் கன்னம் போல் வழவழப்பாக மாற்றப்படும், அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடக்கின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

********************************************************************
இனி செம்மொழி மாநாடு நடத்தியதால் விளைந்த "முக்கியமான" நன்மைகள்.
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாலும்,அரசியல் நடத்த வேறு வழியில்லாததாலும், தோன்றியதிலிருந்து தமிழர்களுக்கு நன்மை மட்டுமே செய்து வரும் திமுக,காங்கிரஸ் தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கலைக்கப்பட்டு விட்டன.இதைக் கேள்விப்பட்ட முதல்வர்,"மறப்போம் மன்னிப்போம்" என்ற தமிழர் பண்பாட்டின் படி ஜெயலலிதா அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.இந்த உணர்ச்சிமயமான சந்திப்பில் உடனிருந்த அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி,தயாநிதி மாறன் மற்றும் சசிகலா,வைகோ,ராமதாஸ், திருமா, விஜயகாந்த்,பாண்டியன் ஆகியோர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் அந்த பகுதியே வெள்ளக் காடானது.
செம்மொழி மாநாட்டோடு நடந்த தமிழ் இணையத்தள மாநாட்டின் மூலம் மின்னஞ்சல் அனுப்ப கற்றுக் கொண்ட முதல்வர், இனிமேல் யாருக்கும் கடிதம் எழுதப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளார்.
வியாழன், 17 ஜூன், 2010
அவரவர் நியாயங்கள்
தன்னுடைய வெளிப்படையான செயல்பாடுகளின் மூலம் பொது மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றிருக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் திரு சகாயம், கிராமங்களில் முகாம்கள் நடத்தி பட்டா, சிட்டா முதல் தேவைப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் , கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டார்.(மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்கள், பணிபுரியும் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பது நடைமுறை விதி) இது, கிராம நிர்வாக அலுவலர்களை உசுப்பி விடவே, அவர்களில் பலரும் ஒன்று கூடி, ஆட்சியருக்கு எதிராக கடந்த 30.04.10 அன்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
நன்றி விகடன்
அண்மையில் நடைபெற்ற முதல்வரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னைப் பல்கலைக்"கழக" துணைவேந்தர் திருவாசகம் "முதல் அமைச்சர் கருணாநிதியின் எழுத்துக்கள்தான் நோபல் பரிசு பெற தகுதியானவை" என்று அல்லக்கைகளே கூச்சப்படும் படி ஒரு பனிக்கட்டி மலையை வைத்தார்.இப்படிப்பட்ட அதிகாரிகள் மத்தியில் திரு.சகாயம் போன்றவர்கள் நமக்கு கிடைப்பது அத்தி பூத்தாற் போலத்தான்.
கடமையைச் செய்யும் இவரைப் போன்ற அதிகாரிகளை எதிர்ப்பது என்ன நியாயம்???
தொழிற்சாலைகளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்கள்.எந்த ஊருக்குச் செல்கிறார்களோ,அந்த ஊரின் பிரபலமான் உணவகத்தில் மதிய உணவு தொழிற்சாலையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விடும்.உதாரணத்திற்கு ராஜபாளையம் கூரைக்கடை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் மற்றும் பல.இது தவிர மேல் வருமானமும் உண்டு. இந்த குழுவின் உதவிப் பொறியாளர் குறைந்தது தினமும் ஆயிரம் ரூபாய் கிம்பளம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்பது செவி வழிச் செய்தி.
இந்நிலையில் இரு உதவிப் பொறியாளர்களுக்கும் சண்டை மூண்டது பலர் பார்க்க.எத்தனை நாளைக்கு நான் மட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல??? நாற்காலியை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல,நான் இந்த பதவிக்கு வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது முடியாது என இவர் சொல்ல நிலவரம் கலவரமானது.அன்றைய தினம் மாலையில் சமாதானப் பேச்சுவார்த்தை செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெற்றது.இரு உதவிப் பொறியாளர்களும் தத்தமது சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.ஒருவர் நேரடியாக உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.மற்றொருவர் பதவி உயர்வின் மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டயதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருவரும் இப்போதைக்கு அப்படியே தொடர்வதாகவும்,ஆறு மாதத்திற்கு பின்னர் பரஸ்பரம் நாற்காலிகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடுமையான விவாதத்திற்கு பின் முடிவாகியாகதாக பின்னர் அறிந்தேன்.
இதில் இரண்டு சங்கமும் லஞ்சம் வாங்க கூடாது என்றெல்லாம் கூறவில்லை,சண்டை போட்டுக் கொள்ளாமல் சரி சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றன!! அதுவும் லஞ்ச காசில் வாங்கி குடுத்த காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவைக் மடிப்பாக்கத்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேரத்தில் சைதாப்பேட்டையிலிருந்து வரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இடத்திற்கு செல்ல.சில நேரங்களில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து பயணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து ஆட்டோவின் பின்புறம் தட்டுவார் "போ போ இங்க நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த ரேட்டுக்கு வராது,வருகிற மற்ற ஆட்டோக்களையும் வர விட மாட்டார்கள்.இங்கு மட்டுமல்ல சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் தினமும் காணக் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதே சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள் பற்றிய பாராவின் பதிவு.
ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
******************************************************************
தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார் அவர்கள், அவ்வப்போது மாறு வேடத்தில் மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று, லஞ்சம் வாங்குபவர்களுக்கும்,பணியில் கவனக்குறைவாக இருப்பவர்களுக்கும் தக்க தண்டணையை அளித்து வருகிறார்(கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்).இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!
''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!
நன்றி விகடன்
அண்மையில் நடைபெற்ற முதல்வரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய சென்னைப் பல்கலைக்"கழக" துணைவேந்தர் திருவாசகம் "முதல் அமைச்சர் கருணாநிதியின் எழுத்துக்கள்தான் நோபல் பரிசு பெற தகுதியானவை" என்று அல்லக்கைகளே கூச்சப்படும் படி ஒரு பனிக்கட்டி மலையை வைத்தார்.இப்படிப்பட்ட அதிகாரிகள் மத்தியில் திரு.சகாயம் போன்றவர்கள் நமக்கு கிடைப்பது அத்தி பூத்தாற் போலத்தான்.
கடமையைச் செய்யும் இவரைப் போன்ற அதிகாரிகளை எதிர்ப்பது என்ன நியாயம்???
********************************************************************************
நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு வருட பயிற்சியில் இருந்த போது நடந்த சம்பவமிது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாவட்டந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த மாவட்டத்திலுள்ள துணை மின் நிலையங்களின் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு குழுவும், தொழிற்சாலைகளின் (HT Service,LTCT Service) மின் அளவிகள் கண்காணிப்பு,சோதனை மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்ள மற்றொரு குழுவும், தனித்தனி உதவிப் பொறியாளர் தலைமையில் இயங்கும். தினந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது துணை மின் நிலையம் என அட்டவணை வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும்,சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.இரு குழுவுக்கும் தனித்தனி வாகன வசதிகளுண்டு.இதில் துணை மின் நிலையங்கள் செல்லும் குழு,குடிப்பதற்கு தண்ணீர் முதல் கொண்டு அலுவலத்திலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எந்த மேல் வருமானமும் கிடையாது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாவட்டந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த மாவட்டத்திலுள்ள துணை மின் நிலையங்களின் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு குழுவும், தொழிற்சாலைகளின் (HT Service,LTCT Service) மின் அளவிகள் கண்காணிப்பு,சோதனை மற்றும் பராமரிப்புகளை மேற்கொள்ள மற்றொரு குழுவும், தனித்தனி உதவிப் பொறியாளர் தலைமையில் இயங்கும். தினந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது துணை மின் நிலையம் என அட்டவணை வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும்,சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.இரு குழுவுக்கும் தனித்தனி வாகன வசதிகளுண்டு.இதில் துணை மின் நிலையங்கள் செல்லும் குழு,குடிப்பதற்கு தண்ணீர் முதல் கொண்டு அலுவலத்திலிருந்தே எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எந்த மேல் வருமானமும் கிடையாது.
தொழிற்சாலைகளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்கள்.எந்த ஊருக்குச் செல்கிறார்களோ,அந்த ஊரின் பிரபலமான் உணவகத்தில் மதிய உணவு தொழிற்சாலையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு விடும்.உதாரணத்திற்கு ராஜபாளையம் கூரைக்கடை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் மற்றும் பல.இது தவிர மேல் வருமானமும் உண்டு. இந்த குழுவின் உதவிப் பொறியாளர் குறைந்தது தினமும் ஆயிரம் ரூபாய் கிம்பளம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்பது செவி வழிச் செய்தி.
இந்நிலையில் இரு உதவிப் பொறியாளர்களுக்கும் சண்டை மூண்டது பலர் பார்க்க.எத்தனை நாளைக்கு நான் மட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல??? நாற்காலியை மாற்றிக் கொள்ளலாம் என்று அவர் சொல்ல,நான் இந்த பதவிக்கு வந்தே ஒரு வருடம் தான் ஆகிறது முடியாது என இவர் சொல்ல நிலவரம் கலவரமானது.அன்றைய தினம் மாலையில் சமாதானப் பேச்சுவார்த்தை செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெற்றது.இரு உதவிப் பொறியாளர்களும் தத்தமது சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.ஒருவர் நேரடியாக உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.மற்றொருவர் பதவி உயர்வின் மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு வந்தவர்,இவர் "பட்டயதாரிகள்" சங்கத்தைச் சார்ந்தவர்.பூட்டிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருவரும் இப்போதைக்கு அப்படியே தொடர்வதாகவும்,ஆறு மாதத்திற்கு பின்னர் பரஸ்பரம் நாற்காலிகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடுமையான விவாதத்திற்கு பின் முடிவாகியாகதாக பின்னர் அறிந்தேன்.
இதில் இரண்டு சங்கமும் லஞ்சம் வாங்க கூடாது என்றெல்லாம் கூறவில்லை,சண்டை போட்டுக் கொள்ளாமல் சரி சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றன!! அதுவும் லஞ்ச காசில் வாங்கி குடுத்த காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவைக் மடிப்பாக்கத்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேரத்தில் சைதாப்பேட்டையிலிருந்து வரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இடத்திற்கு செல்ல.சில நேரங்களில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து பயணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து ஆட்டோவின் பின்புறம் தட்டுவார் "போ போ இங்க நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த ரேட்டுக்கு வராது,வருகிற மற்ற ஆட்டோக்களையும் வர விட மாட்டார்கள்.இங்கு மட்டுமல்ல சென்னையில் எல்லா ஏரியாக்களிலும் தினமும் காணக் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதே சென்னையில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுபவர்கள் பற்றிய பாராவின் பதிவு.
லக்கிலுக்கின் பதிவு.
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சிஐடியு சங்கத்தை சார்ந்தவர்கள்.ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்குப் போராடும்? தோழர்கள் தங்கள் சங்கத்தை சார்ந்தவர்களை மாற்றலாமே? மீட்டர் போட்டு ஓட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் நியாயமான ரேட்டிலாவது ஓட்டச் செய்யலாமே??ஒரு வேளை ஆட்டோவில் செல்பவர்கள் எல்லாரும் அம்பானிகள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
எல்லாருமே தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்க போராடுகிறோம்னு சொல்றாங்க!சரி அதிலாவது ஒற்றுமையா இருக்காங்களன்னு பார்த்தா அதுவும் கிடையாது.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே தொழிற்சங்கங்கள்! நாளிதழின் ஒரு பக்கத்தில் அரசை எதிர்த்து ஒரு சங்கம் போராட்ட அறிவிப்பு செய்தால்,அதே நாளிதழின் மற்றொரு பக்கத்தில் எங்கள் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று வேறொரு சங்கத்தின் அறிவிப்பு.
இதில் சில சங்கங்கள் தேர்தல் நெருக்கத்தில் கழகங்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக அறிக்கைகள் வேறு விடுகின்றன.
ஜனநாயக நாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா?? அதுவும் சரிதான்.!

வியாழன், 20 மே, 2010
நன்றி நவிலல்
இப்போதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு சூனா பானா சங்கம் ஒண்ணுமில்லாத ஒரு காரியத்துக்கு நம்ம முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது.அவரும் அறிவாலயத்துக்கு வரவழைத்து,தன் அமைச்சரவை சகாக்கள் புடை சூழ சால்வையை ஏற்றுக் கொள்கிற மாதிரி புகைப்படங்களை மீடியாக்களுக்கு வழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.,
இதே ரேஞ்சில் போனால் இன்னும் யார் யாரெல்லாம் முதல்வருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும்............
சீசன் நேரங்களில் தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி,சேலையை கடத்தி வந்து விற்பனை செய்து பிழைத்து கொண்டிருந்த எங்களுக்கு,இலவச டிவி வழங்குவதன் மூலம், ஆண்டு முழுவதும் தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி, எங்கள் வாழ்வில் "ஒளி" ஏற்றி வைத்த "தமிழனத்தலைவர்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி.
தமிழக இலவச டிவி சகாய விலைக்கு விற்பனை செய்யும் சேட்டன்கள் சங்கம் கேரளா.
**********************************
பைசா நகர சாய்ந்த கோபுரத்துக்கு இணையாக,கோவையில் ஏழை எளிய மக்களுக்குக்காக வீட்டு வசதித் துறை மூலம் சாய்ந்த வீடுகள் கட்டித் தந்த "ஏழைப் பங்காளன்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
கோவை அம்மன்புரத்துக்கு குடிபுக பயப்படுவோர் சங்கம்
**********************************
கோவை நகரில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த மரங்களை, போர்க்கால அடிப்படையில் வெட்டி,கோவையை துபாயாக மாற்றிய "சுற்று சூழல் காவலர்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
செம்மொழி பேசுவோர் சங்கம் கோவை
************************************
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முறையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி,நொடித்துப் போன எங்கள் தொழிலை ஏற்றம் காண வைத்த "தொழிற் துறையின் நண்பன்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
இலவச அரிசி பயன்படுத்தும் ஹோட்டல் முதலாளிகள் சங்கம்
**************************************
எல்கேஜி படிக்கும் பையன் கூட இ மெயில் மூலம் லீவு லெட்டர் அனுப்பும் இந்த காலத்தில், முக்கியமான பிரச்சனைகளுக்கு மத்திய அரசை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் "தகவல் தொழில் நுட்ப புரட்சி நாயகன்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
தபால் துறை ஊழியர்கள் சங்கம்
***************************************
+2 தேர்வில், 25 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதல் இடம் பிடித்தும்,இது வரை மாவட்டத்தில் எந்த ஒரு அரசு கல்லூரிக்கும் அனுமதி வழங்காத "கல்விப் புரட்சி வேந்தன்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
விருதுநகர் மாவட்ட தனியார் கல்லூரிகள் சங்கம்
*****************************************
எங்கள் பலத்தை நாங்களே அறியாமல் ஓட்டுக்கு அம்பதும்,நூறும் வாங்கி கொண்டிருந்ததை மாற்றி ஒரு ஓட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளி வழங்கி,எப்படா நம்ம எம் எல் ஏ பரலோகம் போவார்,இடைத் தேர்தல் வரும் என ஏங்க வைத்த "ஜனநாயக காவலர்" டாக்டர் கலைஞருக்கு நன்றி நன்றி
அனைத்துலக அப்பாவி வாக்காளர்கள் சங்கம்.
******************************************
குறிப்பு: ஆட்டோ அனுப்ப வேண்டிய முகவரி அபுதாபியிலிருந்து வடமேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவனத்தில் தனியே தன்னந்தனியே அமைந்துள்ள மாமன்னார் & கம்பெனி
பின்குறிப்பு:ஆட்டோக்காரரிடம் ஜிபிஎஸ் குடுத்து அனுப்ப மறக்க வேண்டாம்.

செவ்வாய், 11 மே, 2010
அரசர்கள் Vs அரசியல்வாதிகள்
அரசர்கள் - தங்கள் பெயருக்கு முன்னால் ஏகப்பட்ட பட்ட பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தவர்கள்.அது பெரும்பாலும் அவர்கள் தலைமையேற்று நடத்திய,போர்களில் பெற்ற வெற்றியை பறை சாற்றுவதாக இருக்கும்.
அரசியல்வாதிகள் - இவர்களும் நிறைய பட்டப் பெயர்களை கொண்டிருப்பவர்கள் ஆனால் அதுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது.ஏதாவது அல்லக்கை கொடுத்த "தானே உக்காந்த தானைத் தலைவன்" பட்டத்தை கூட வெட்கமில்லாமல் போஸ்டரில் போட்டுக் கொள்வார்கள்.
************************
அரசர்கள் - பலதார மணம் முடிக்கும் வழக்கம் உடையவர்கள் எனினும் பட்டத்து அரசிக்கே அதிக அதிகாரம்.
அரசியல்வாதிகள் - இவர்களும் அப்படியே,ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்பவர்கள்.ஆனால் இங்கு எல்லாருக்கும் அதிகாரம் உண்டு.மனைவிகளும்,துணைவிகளும் கிச்சனில் இருந்த படியே அரசில் தலையிடும் அதிகாரம் கொண்டவர்கள்.
**********************************
அரசர்கள் - தங்கள் வாரிசுகளிலிருந்து ஒருவருக்கு பட்டத்து இளவரசாக முடி சூட்டி,அவருக்கு எல்லா வித பயிற்சிகளையும் அளித்து,அரசர் ஆக்கியவர்கள்.
அரசியல்வாதிகள் - பதவிக்கு வர தகுதி,திறமை எல்லாம் தேவையில்லை. அரசியல்வாதிக்கு வாரிசாக இருப்பதே பெரிய தகுதி தான்.ஏழாவது பொண்டாட்டியின் எட்டாவது வாரிசுக்கும் ஏதாவது ஒரு பதவி நிச்சயம்.

அரசர்கள் - அரண்மனைகளில் வாழ்ந்தவர்கள்,தங்கள் பாதுகாப்புக்கென தனியே படை வைத்திருந்தவர்கள்.
அரசியல்வாதிகள் - ஆரம்பத்தில் குடிசையில் வாழ்ந்தாலும்,பதவி வந்த பின் அரண்மனை போன்ற பெரிய வீடுகளில் வாழ்பவர்கள்.அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்தாலும்,தனியே குண்டர் படை வைத்துக் கொள்பவர்கள்.
**********************************************
அரசர்கள் - வெளியிலிருந்து வரும் எதிரியை வெற்றி கொள்ள, கூட்டு சேர்ந்து போராடியவர்கள்.
அரசியல்வாதிகள் - இவர்களும் எதிரியை,தேர்தலில் வெற்றி கொள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எதிரியையும்,கூட்டாளியையும் சுழற்சி முறையில் மாற்றிக் கொண்டிருப்பவர்கள்.
***************************************************
அரசர்கள் - தங்கள் முன்னோர்களை மதித்தவர்கள்.முன்னோர்கள் காட்டிய வழியில் சென்று,அவர்களை விட பெரிய வெற்றியை அடைந்தவர்கள்.
அரசியல்வாதிகள் - தேர்தல் காலங்களில் மட்டும் முன்னோர்களை மதிப்பவர்கள்.அவர்களை காட்டிலும் அதிக சொத்துக்களை குவித்துக் கொண்டிருப்பவர்கள்.
**********************************************************
அரசர்கள் - "மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான்" போல வாழ்ந்தவர்கள்.

அரசியல்வாதிகள் - வெட்கம்,மானம்,சூடு,சொரணை என்பதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதாக வாழ்பவர்கள்.
************************************************************
அரசர்கள் - அரசாட்சி என்ற பெயரில் மக்களாட்சி செய்தவர்கள்.
அரசியல்வாதிகள் - மக்களாட்சி என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருப்பவர்கள்.

புதன், 28 ஏப்ரல், 2010
ராஜீவ் படுகொலை மர்மங்கள்
"ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பின்னணி,அதற்கான காரணங்கள்,சம்பந்தப்பட்டுள்ள நபர்கள்,நிறுவனங்கள்,சதிகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் ஆறாண்டு கால விசாரணைக்குப் பிறகு அளித்த அறிக்கையில் இன்னும் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை என்றது.
அதன் பின்னர் அமைக்கப் பட்ட சிறப்பு விசாரணைக்குழு பத்தாண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.விசாரணை இன்னும் முடிந்த பாடில்லை.காங்கிரஸ்காரகள் விவரம் தெரியாமல் பேசக் கூடாது"
சென்ற வார "விண்" தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட திருச்சி வேலுச்சாமி (இவரும் காங்கிரஸ்காரர் தான்)அவர்கள் ராஜீவ் படுகொலை பற்றி பேசியது.அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணையத்தில் தேடிய போது குமுதம் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டி புத்தக வடிவில் கிடைத்தது.
பேப்பரில் பெயர் வரவேண்டும் என்பதற்காக பொத்தாம் பொதுவாக பேசும் காங்கிரஸ்காரர்கள் யாரும் இதுவரை விசாரணைக்கு எந்த விதத்திலும் உதவ வில்லை என்று குறிப்பிடும் வேலுச்சாமி,ஜெயின் கமிஷன் விசாரணை,ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பின்னணி,அதற்கான காரணங்கள்,சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றிய பல்வேறு கேள்விக்கு விரிவாக பதிலளித்துள்ளார்.
முழுவதும் படிக்க

வியாழன், 22 ஏப்ரல், 2010
சங்கம் ஏற்றுக் கொள்ளுமா??
தீபிகா படுகோன் மேட்ச் பார்க்க வந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் கண்டிப்பாக ஜெயித்து விடும் என்று மல்லையா மகன் நம்புவதாக ஒரு கிசுகிசு படித்தேன்.ஆனால் செமி ஃபைனலில் அந்த சென்டிமென்ட் வேலைக்காகவில்லை.என்ன தான் சென்டிமென்ட் அழகா இருந்தாலும் நல்லா விளையாடினா தான் ஜெயிக்க முடியும்.
8888888888888888888
லட்சக்கணக்கான மக்களை கூட்டிட்டு வரணும்,திருநெல்வேலியே அலறணும்,பஸ் கார் ஓண்ணும் போக வழி இருக்க கூடாது,ஊர் முழுக்க டிராபிக் ஜாம் ஆக்கணும்,திருநெல்வேலியை ஸ்தம்பிக்க வைக்கணும்.
நான் சென்னையில் தலைவரை சந்தித்த போது அவர் கேட்டார் "நீ ஒரு திமுக காரன் அதுவும் கவுன்சிலர் நீ எப்படிய்யா நம்ம மாநாட்டுக்கு முன்னாடி நின்னு வேலை செய்ற" என்று
நான் சொன்னேன் அவரிடம் "எனக்கு சாதி தான் முக்கியம் அதுக்கப்புறம் தான் கட்சி,கவுன்சிலர் எல்லாம்" என்று.
திருநெல்வேலியில் அடுத்த மாதம் நடக்கப் போகும் சாதி அமைப்பின் மாநாட்டுக்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பேச்சு தான் மேலே உள்ளது,அதுவும் டிவியில்.பேசிய இருவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
நல்லாருங்கப்பு உங்க மனசு போல நல்லாருங்க.
888888888888888888888888888888888888888
மின்வெட்டு பிரச்சினை - கடந்த ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்த படாததால் தான் இப்போது மின்சாரம் பற்றாக் குறையாக உள்ளது.
ஏழைகளுக்கு நிலம் வழங்குதல் - கடந்த ஆட்சியில் எடுக்கப் பட்ட தரிசு நிலங்கள் கணக்கை நம்பி தான் நாங்கள் உறுதி அளித்தோம்.ஆனால் அந்த கணக்கு தவறானது என இப்போது தெரிய வந்துள்ளது.ஆகவே தான் தொடர்ந்து நிலம் வழங்க இயலவில்லை.
முன்னாள் முதல்வர் போட்ட "நோட்" காரணமாகத் தான் பார்வதி அம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.
என்னாங்கடா நடக்குது இங்க?????
ஆட்சிக்கு வந்து நாலு வருசத்துக்கு மேல ஆயும் இன்னும் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அவங்க மேலயே பழி சொல்லிகிட்டே இருங்க....வெளங்கிரும்.
888888888888888888888888888888888888888888888888888888888888
வாயால் சிரிக்க கூடாத ஜோக் ஒண்ணு...
கலைஞர் ஐந்தாவது முறையாக முதல்வராக இருப்பவர்.86 வயது ஆனவர்.அவர் சட்டசபையில் பொய் சொல்ல மாட்டார்.
-சொன்னது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர்.
8888888888888888888888888888888888888888888888888
சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.
அண்னண் மணிஜீ அறை கூவல் விடுத்துள்ளார்.
சென்னைக்கு வந்தால் மட்டும் என்ன செய்து விட முடியும் அல்லது சென்னையில் இருப்பவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்?? பதிவு எழுதுதவதை தவிர?
ஒரு லோக்கல் கவுன்சிலரை கூட எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது என்பது தானே நிதர்சனம்.முன்னாள் அமைச்சரயே போற போக்குல போட்டுத் தள்ளிடறாங்க? இதுல நாமெல்லம் எம்மாத்திரம்????????
மற்றபடி தமிழக அரசியல் பற்றி எழுத சென்னைக்கு வரணும்னா, அப்ப அமெரிக்கா பற்றி எழுதறதுக்கு அமெரிக்கா போகனுமா???????
போக்குவரத்து செலவுகளை சங்கம் ஏற்றுக் கொள்ளுமா??
8888888888888888888888888888888888888888888888888888888888
புதன், 21 ஏப்ரல், 2010
கட்டைல போறவனே 81+
பேரன் பேத்திக்கு கூட கல்யாணம் ஆயிருச்சு
புத்தி தான் இன்னும் வந்த பாடில்ல..
பெரிய மனுசன் செய்ற சோலியா இது
செய்றதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு
வயசான காலத்துல வெந்ததை தின்னமா
கெடந்தமான்னு இல்லாமா??
இந்த சோலி தேவையா ஒனக்கு? ஊர் வம்பு
இழுக்கறதே பொழப்பா போச்சு
யார் யாருக்கோ வருது ஒனக்கு
வர மாட்டக்கே??
சாகறதுக்குள்ள இன்னும் எங்கள என்ன
பாடு படுத்த காத்திருக்கியோ?????????
புத்தி தான் இன்னும் வந்த பாடில்ல..
பெரிய மனுசன் செய்ற சோலியா இது
செய்றதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு
வயசான காலத்துல வெந்ததை தின்னமா
கெடந்தமான்னு இல்லாமா??
இந்த சோலி தேவையா ஒனக்கு? ஊர் வம்பு
இழுக்கறதே பொழப்பா போச்சு
யார் யாருக்கோ வருது ஒனக்கு
வர மாட்டக்கே??
சாகறதுக்குள்ள இன்னும் எங்கள என்ன
பாடு படுத்த காத்திருக்கியோ?????????
வியாழன், 11 மார்ச், 2010
கலக்கல் சகாயம் ஐஏஸ்
ஏரு... சோறு... காரு... நம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை!
நம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை! நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யத்தான் உழவர் சந்தைகள். இது ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே' என்றபடி நாமக்கல் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயம். முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளிலும் இதை ஆரம்பிக்கும் வேலைகள் நடக்கின்றன.
காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது நாமக்கல் உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.
இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்டு சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த உணவுகளை சமைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது.
கடைக்குத் தேவையான மாவு, இன்னும் மத்த பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் நாமக்கல்லுக்குக் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் துணை வேளாண்மை அலுவலர் சோமு, இங்கு விவசாயிகளால் விற்பனை செய்யப்படும் பாரம்பர்ய உணவுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுவட்டார மக்கள், அதிக அளவில் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். சுற்று வட்டார விவசாயிகள் தாங்கள் தயார் செய்த உணவு வகைகளை எல்லோரும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் விற்றாலும், நாளன்றுக்கு சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்கள்.
இன்றைக்கெல்லாம் ஒரு உணவகத்துக்குள் நுழைந்தால்... குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் திருப்தியான உணவைச் சாப்பிட முடியாத நிலையில்... 15, 20 ரூபாய்க்குள் இங்கு சத்தான உணவுகளைச் சாப்பிடலாம்.
'ஆட்டுக்கால் கிழங்கு' என்று ஒரு வகை கிழங்கு கொல்லிமலையில் பரவலாகக் காணப்படுகிறது. (ஆட்டின் கால் போன்று வடிவம் இருக்கும்) இந்தக் கிழங்கை சூப் செய்து விவசாயிகள் விற்கின்றனர். இது... மூட்டுவலி, உடல் உபாதை, உடல் சூடு, போன்ற பல வகையான நோய்களைப் போக்கும்.
இப்படி ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்ட உணவு வகைகள், சுவையாக கிடைப்பதால்... கூட்டம் அதிகமாக வருகிறது. விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கிறது'' என்று சொன்னார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பேசும்போது, “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று ஆலோசனை சொன்னார்
-நன்றி பசுமை விகடன்
திங்கள், 4 ஜனவரி, 2010
" இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து"
காமராஜர் சாலை
ராயபுரம் கடற்கைரக்கு அடுத்த நிலையில் சென்னை மக்களின் மாலை நேர உல்லாசபுரியாக இருந்த "ஹைகோர்ட் பீச்" என்றைழக்கப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் எதிரலைமந்த பரந்த கடற்கரை. கடற்கைரயில் வடபுறம் உள்ள மக்கள் அங்கு செல்ல, இடையில் வரும் இரயில்வே கிராசிங்கை கடந்தே போக வேண்டும். மின்சார தொடர்வண்டிகள் அதிகமாக செல்கின்ற நிலையில், மக்களின் நடமாட்டம், வாகன போக்குவரத்தும் ரயில்வே கதவைடப்பால் தடைபடும்.
இந்நிலையில்தான் ரிசர்வ் பேங்க் கட்டிடம் பிரமாண்டமான உருவில் சகல வசதிகளுடன் இப்போதிருக்கும் இடத்தில் கட்டப்பட்டு விட்டது. இதனால் மாலை நேர கடற்கரைக் கூட்டத்துடன், வங்கி செயல்படும் நேரம் மக்கள் கூட்டம் ரயில்பாதையில் கூடத்தொடங்கி போக்குவரத்துக்கு சிக்கேலற்ப்பட்டது.
இதிலிருந்து மக்களுக்கு வசதி செய்து தர வேண்டுமெனில், ஒன்று, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், அல்லது தரை வழிப்பாலம் அமைக்க வேண்டும். வடபுறம் பாரிமுனை இருந்ததால் அங்கு மேம்பாலம் கட்ட சாத்தியமில்லை என முடிவாயிற்று. அப்படியானால், தரைவழிப்பாலம் அமைத்து ரயில்வே பாதைக்கும், மக்களின் போக்குவரத்திற்க்கும் வழியைமைக்க வேண்டும்.
இது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி உயர்மட்ட குழுவினரும் தமிழக பொதுப்பணி துறையினரும் (PWD) ஆய்வு மேற்கொண்டனர்.அவர்கள் ஆய்வின் முடிவுப்படி தரைப்பாலம் கட்டினால்
1) ரிசர்வ் பாங்க் கட்டிட அடித்தளம் பாதிக்கப்பட்டு கட்டிடத்தில் விரிசல் ஏற்படலாம்.
2) அருகில் கடல் இருப்பதால் பாலத்தின் உட்புறம் ஊறிவரும் நீருற்றை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாது.
இந்த முடிவோடு முதலைமச்சர் காமராஜரை சந்திக்க சென்றனர்.
காமராஜ் கேட்டார், "என்ன முடிவெடுத்திருக்கீங்க ?" குழுவினர் சொன்னார்கள் " ஐயா! தரைவழிப்பாலம் கட்ட முடியாது என்றே நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்".
காமராஜர் புன்னைகத்தார், அடுத்து உறுதியான குரலில் சொன்னார்
" முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியிலருந்து வந்தீங்க... தரை வழிப்பாலம் கட்றோம்... நீங்க சொல்ற எந்த குறைபாடும் வராமல் கட்டி முடிக்கிறோம். இந்த உலகத்தில மனிதனால் செய்ய முடியாதென்பது எதுவுமே கிடையாது. நீங்க புறப்படலாம்" என்றார்,வந்தவர்கள் சென்றனர்.
" இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து" அதற்க்குரிய வல்லுனர்களை அழைத்து, பொறுப்பை ஒப்படைத்தார்.
இன்று நாள் நாள் தோறும் மக்கள் கடந்து செல்லும் "காமராஜர் சாலை" தரைவழிப் பாலம் உருவானது.
-நன்றி காமராஜர் வாழ்க்கை வரலாறு
சனி, 26 டிசம்பர், 2009
ச்சும்மா
ஸ்பெக்ட்ரம் போயி லிபரான் வந்தது டும் டும் டும்
லிபரான் போயி தெலுங்கானா வந்தது டும் டும் டும்
தெலுங்கானா போயி கவர்னர் சிடி வந்தது டும் டும் டும்
தீவிர ஆலோசனை -பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
நடந்தது...........
நடக்கிறது........
நடக்கும்..............
ஒரு வேளை நிஜத்திலும் இது தான் நடக்குதோ என்னவோ????
**********************************
லிபரான் போயி தெலுங்கானா வந்தது டும் டும் டும்
தெலுங்கானா போயி கவர்னர் சிடி வந்தது டும் டும் டும்
தீவிர ஆலோசனை -பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
நடந்தது...........
நடக்கிறது........
நடக்கும்..............
ஏசியா நெட் (மலையாளம்) டிவியில் சென்டர் ஃஃப்ரெஷ் மிட்டாய்க்கு ஒரு விளம்பரம் வரும்.அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ஒரு மீட்டிங்கில் தலைவர் சொல்வார் இப்ப எதுக்கு எல்லாரும் கூச்சல் போடறிங்க சமோசா குடுத்தாச்சு,போண்டா குடுத்தாச்சு வேற என்ன வேணும் பாயாசம் வேணுமா கொடுத்திரலாம் அப்படின்னு.
ஒரு வேளை நிஜத்திலும் இது தான் நடக்குதோ என்னவோ????
**********************************
மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.காங்கிரசின் விடிவெள்ளி என கொண்டாடப் படும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.
**********************************கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ரஜினி.
**********************************'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?
தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
**********************************பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பணம் படைத்தவர்கள், படைபலம் கொண்டவர்கள் நமது ஜனநாயகத்தை கடத்திக் கொண்டு போகின்றனர். அரசியலையும், தேர்தலில் போட்டியிடுவதையும் வணிகமயமாக்கி வருகின்றனர். இத்தகைய அவலங்கள் நீங்கி, நமது ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் உரிமையையும், பலத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்
நீங்க நல்லவரா கெட்டவரா?????
**********************************
திங்கள், 21 டிசம்பர், 2009
இரை காணா புலி
உங்களில் ஒருவன் என்று வந்தவனுக்கு வர்ணம் பூசி
ரசித்தீர்கள்
யோகியாக உருவெடுத்தவனை நோக்கி தூர தேசத்தின்
போலி என்றீர்கள்
வேட்டையாட வந்தவனோடு பரமபதம் விளையாடி
மகிழ்ந்தீர்கள்
இதோ
காத்திருக்கிறீர்கள் அடுத்ததை நோக்கி
இரை காணா புலி போல தீராப்
பசியோடு
வியாழன், 10 டிசம்பர், 2009
'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
'யாரு... என்.டி.ஆர். காருவா... ஓய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டிகாருவா...?' என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... இவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்!
அந்த இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘கங்கை கொண்ட பகீரதன்’ என்று பெயர் சூட்டி, மக்கள் அவரை மனதார பூஜிக்கிறார்கள்!
அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க இவர் செய்தது... அணைகள் கட்டி, விவசாயத்துக்கான நீராதாரத்தைப் பெருக்கிக் கொடுத்ததுதான்
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கண்ணாவரம் என்ற இடத்திலும், கோதாவரியின் குறுக்கே தௌலெஸ்வரம் என்ற இடத்திலும் இவர் கட்டிய அணைகள்தான், இன்று சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தந்து, பல லட்சம் விவசாயிகளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டுள்ளது.
தமிழகத்திலும்கூட... இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்-கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லையில் இவர் ஏற்படுத்திய அணை (அணைக்கரை), பல லட்சம் விவசாயிகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இவருடைய பெயர்கூட தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா... என்பதே சந்தேகம்தான். இத்தகைய அணைகளை உருவாக்குவதற்காக ஆர்தர் காட்டன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அடகு வைத்தார் என்பது எத்தனை பெரிய தியாகம். இத்தனைக்கும் நம்மை அடக்கி ஆள்வதற்காக இங்கே வந்து சேர்ந்த ஆங்கிலேயப் பட்டாளத்தில் இவரும் ஒருவர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
ஆர்தர் காட்டன், 15 வயதிலே இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து, கட்டுமானப் பொறியாளராகத் தேர்ச்சி பெற்றவர். 18 வயதில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, அப்போதைய தலைமைப் பொறியாளரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார்.
'வந்தோமா, அனுபவிச்சோமா...' என்றில்லாமல், 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கடமை உணர்வோடு பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரிகளும் அப்போது இருக்கத்தான் செய்தார்கள். அவர்களில் ஒருவராக சுற்றிச் சுழன்றார் ஆர்தர் காட்டன்.
''இந்திய நாட்டின் வறுமையைப் போக்க ஒரே மருந்து... இந்த தேசத்தின் நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதுதான்'' என்று சொன்னவர், வெய்யில், மழை என்று பாராமல் தென் இந்திய நதிகளின் மூலம் முதல் சங்கமம் வரை குதிரையில் தனித்துப் பயணம் செய்து, அளவை மற்றும் வரைபடம் தயார் செய்தார். காடு, மேடுகளில் திரிந்ததில் பல தடவை விஷக் காய்ச்சலில் சிக்கி, உயிர் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பணியின் மீதான... மக்களின் மீதான ஆர்வத்தால், தன் சொந்தக் குடும்பத்தைக் கூட கவனிக்காமல், வேலை... வேலை என்று அழைந்ததில் மனைவி கோபித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார். இதற்கு நடுவே, காடுகளில் குடியிருந்ததால் பாம்பு கடிக்கு தன் செல்ல மகளை வேறு பறிகொடுத்தார். அப்படியும் கூட தன்னுடைய முயற்சிகளில் இருந்து ஆர்தர் காட்டன் பின்வாங்கவே இல்லை.
''ஏய்யா... காட்டன், இந்திய நாட்டு மக்களுக்காக நீ ஏன் உன் சொந்தக் குடும்பத்தை, சுகத்தையெல்லாம் தியாகம் செய்யணும்?" என்று மூத்த அதிகாரிகள் கேட்டபோது, ஆர்தர் சொன்ன பதில், ''நான் இந்திய மக்களை காதலிக்கிறேன்" என்பதுதான். அதில் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளாதவராக வலம் வந்தார் ஆர்தர் காட்டன். அதன் பலனாக நமக்குக் கிடைத்த நீர்ப் பாசனத் திட்டங்கள்... இன்றைக்கும் தென்இந்தியாவில் நிலைத்து நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படியிருக்கும்போது... ஒவ்வொரு வீட்டிலும், ஆர்தர் காட்டனுக்கு சிலை வைத்தாலும் கூட பொருத்தமானதாகத்தான் இருக்கும்!
நன்றி-பசுமை விகடன்.
எங்கேயோ பிறந்து இந்த மண்ணின் மீது காதல் கொண்டு தன் சுக துக்கங்களை தவிர்த்து தொலை நோக்கோடு திட்டங்கள் பல தீட்டி செயல்படுத்திய இவரைப் போன்றோர் ஒருபுறம்.
இங்கேயே பிறந்து வளர்ந்து மண்ணுக்காக இல்லாமல் "சொந்த மக்களுக்காக" தொலை நோக்கோடு திட்டங்கள் தீட்டுபவர்கள் இன்னொரு புறம்.பாலங்கள் கட்டியதையும், சாலைகள் அமைத்ததையும் கூட தம் ஆட்சிகளின் சாதனையாக சொல்லிக் கொள்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன்பது ஒரு அரசாங்கத்தின் கடமை தானே, இதில் சாதனை என்று சொல்ல என்ன இருக்கிறது.போகிற போக்கில் மழை பெய்வதையும்,வெயில் அடிப்பதையும் கூட தங்களின் சாதனையாக் கூறிக் கொள்வார்கள் போல!!!!!!!!!!
திட்டங்கள் தீட்ட முதல்வர்,செயல்படுத்த அமைச்சர்கள்,அவற்றை கண்காணிக்க துணை முதல்வர்,இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த முறை தமிழகத்தில் மட்டுமே உள்ளது என நம் நிதியமைச்சர் சொல்கிறார்.அதில் அநேகமான திட்டங்கள் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குபவை.
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஒரு தொடரின் பாடல் வரிகள்,
"பசியென்று வருபவர்க்கு மீன் தரமாட்டோம்,சொந்தத்தில் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்போம்"
ஒரு பாடலசிரியருக்கு தெரிந்த இந்த விசயம் நாட்டை ஆள்பவருக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியமே.
சனி, 5 டிசம்பர், 2009
எங்கே எம்.பி.-க்கள்?
பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
எங்கே போயிருப்பார்கள்???? இந்த லகுட பாண்டிகள்
பிரியாணி,சரக்கு,மோதிரம்,கம்மல்,மூக்குத்தி,பணம் போன்றவற்றை தேர்தல் கமிசனுக்கு தெரியாமல் மக்களிடம் சேர்ப்பது எப்படி என இடைத் தேர்தலுக்காக நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கலாம்
"கெட்டப்ப" மாத்திட்டு செட்டப்போடு ஊர் சுத்த போயிருக்கலாம்
கிரிக்கெட் பாக்க போய் சேவாக் 300 அடிக்க மிஸ் பண்ணியதால் நொந்து போய் தானே 600 "அடித்து" விட்டு பிளாட் ஆயிருக்கலாம்
ரோடே போடாமல் பில் போட்டு சுருட்டிய கலெக்சனை கவுண்ட் பண்ண அடிப்பொடிகளோடு ரூம் போட்ருக்கலாம்
"நான் நடிச்சா தாங்க மாட்ட" ஒரு பாடாவதி படத்துக்காக பன்ச் டயலாக் பேசி கலைச்சேவை செய்து கொண்டு இருந்திருக்கலாம்
மாவட்ட செயலாலருக்கும் ஒன்றிய செயலாலருக்கும் இடையே நடக்கும் மகளிர் அணித் தலைவிய யார் வச்சுக்குவது என்ற அதி முக்கிய பிரச்சனைய பஞ்சாயத்து பண்ண போயிருக்கலாம்
எது சிறந்தது கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா? பட்டிமன்றம் பாக்க தன் மனைவி மற்றும் துணைவியோடு சேர்ந்து போயிருக்கலாம்
தொகுதி மக்களுக்காக சுழன்று சுழன்று பணியாற்றியதால் ஏற்பட்ட களைப்ப போக்க "அந்த" நடிகையோடு தன் பண்ணை வீட்டில் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம்
கூட்டமே இல்லாத பொதுக்கூட்டத்தில் வரலாறு தெரியுமா உனக்கு? புவியியல் தெரியுமா உனக்கு?என்று அங்கு இல்லாத எதிர்க்கட்சி ஆளிடம் வீராவேசமாக கேள்வி கேட்டு கொண்டிருந்திக்கலாம்
ஆளுங்கட்சி அமைச்சர் இவரை அழைக்காமலேயே திறப்பு விழா நடத்தி திறந்து வைத்த,கக்காவெல்லாம் போன "கக்கூசை" வீம்புக்காக மறுதிறப்பு செய்ய போயிருக்கலாம்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)