தீபிகா படுகோன் மேட்ச் பார்க்க வந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் கண்டிப்பாக ஜெயித்து விடும் என்று மல்லையா மகன் நம்புவதாக ஒரு கிசுகிசு படித்தேன்.ஆனால் செமி ஃபைனலில் அந்த சென்டிமென்ட் வேலைக்காகவில்லை.என்ன தான் சென்டிமென்ட் அழகா இருந்தாலும் நல்லா விளையாடினா தான் ஜெயிக்க முடியும்.
8888888888888888888
லட்சக்கணக்கான மக்களை கூட்டிட்டு வரணும்,திருநெல்வேலியே அலறணும்,பஸ் கார் ஓண்ணும் போக வழி இருக்க கூடாது,ஊர் முழுக்க டிராபிக் ஜாம் ஆக்கணும்,திருநெல்வேலியை ஸ்தம்பிக்க வைக்கணும்.
நான் சென்னையில் தலைவரை சந்தித்த போது அவர் கேட்டார் "நீ ஒரு திமுக காரன் அதுவும் கவுன்சிலர் நீ எப்படிய்யா நம்ம மாநாட்டுக்கு முன்னாடி நின்னு வேலை செய்ற" என்று
நான் சொன்னேன் அவரிடம் "எனக்கு சாதி தான் முக்கியம் அதுக்கப்புறம் தான் கட்சி,கவுன்சிலர் எல்லாம்" என்று.
திருநெல்வேலியில் அடுத்த மாதம் நடக்கப் போகும் சாதி அமைப்பின் மாநாட்டுக்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பேச்சு தான் மேலே உள்ளது,அதுவும் டிவியில்.பேசிய இருவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
நல்லாருங்கப்பு உங்க மனசு போல நல்லாருங்க.
888888888888888888888888888888888888888
மின்வெட்டு பிரச்சினை - கடந்த ஆட்சியில் தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்த படாததால் தான் இப்போது மின்சாரம் பற்றாக் குறையாக உள்ளது.
ஏழைகளுக்கு நிலம் வழங்குதல் - கடந்த ஆட்சியில் எடுக்கப் பட்ட தரிசு நிலங்கள் கணக்கை நம்பி தான் நாங்கள் உறுதி அளித்தோம்.ஆனால் அந்த கணக்கு தவறானது என இப்போது தெரிய வந்துள்ளது.ஆகவே தான் தொடர்ந்து நிலம் வழங்க இயலவில்லை.
முன்னாள் முதல்வர் போட்ட "நோட்" காரணமாகத் தான் பார்வதி அம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.
என்னாங்கடா நடக்குது இங்க?????
ஆட்சிக்கு வந்து நாலு வருசத்துக்கு மேல ஆயும் இன்னும் கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அவங்க மேலயே பழி சொல்லிகிட்டே இருங்க....வெளங்கிரும்.
888888888888888888888888888888888888888888888888888888888888
வாயால் சிரிக்க கூடாத ஜோக் ஒண்ணு...
கலைஞர் ஐந்தாவது முறையாக முதல்வராக இருப்பவர்.86 வயது ஆனவர்.அவர் சட்டசபையில் பொய் சொல்ல மாட்டார்.
-சொன்னது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர்.
8888888888888888888888888888888888888888888888888
சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.
அண்னண் மணிஜீ அறை கூவல் விடுத்துள்ளார்.
சென்னைக்கு வந்தால் மட்டும் என்ன செய்து விட முடியும் அல்லது சென்னையில் இருப்பவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்?? பதிவு எழுதுதவதை தவிர?
ஒரு லோக்கல் கவுன்சிலரை கூட எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது என்பது தானே நிதர்சனம்.முன்னாள் அமைச்சரயே போற போக்குல போட்டுத் தள்ளிடறாங்க? இதுல நாமெல்லம் எம்மாத்திரம்????????
மற்றபடி தமிழக அரசியல் பற்றி எழுத சென்னைக்கு வரணும்னா, அப்ப அமெரிக்கா பற்றி எழுதறதுக்கு அமெரிக்கா போகனுமா???????
போக்குவரத்து செலவுகளை சங்கம் ஏற்றுக் கொள்ளுமா??
8888888888888888888888888888888888888888888888888888888888
18 comments:
அறையிலே இருந்து கூவினா எப்படி சகா?
:)))
//அறையிலே இருந்து கூவினா எப்படி சகா?//
அத தான் சகா நானும் கேக்குறேன்
நிறுத்தி நிதானமாய் படித்தேன்... அத்தனையும் சமுகத்தின் அவலங்கள்...சகிக்க பழகிகொண்டோம்..
வெவகாரம் புடிச்ச ஆளுய்யா நீங்க.!
ஏசி இல்லாமல் நம்மால் போராட முடியுமா?
நண்பரே..சூன்யம் சொந்த செலவில்தான் வச்சுக்கணும்..
அதை போய் பெரிசு படுத்தறீங்களே..லூஸ்ல விடுங்க பாஸ்
//அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு..
நிறுத்தி நிதானமாய் படித்தேன்... அத்தனையும் சமுகத்தின் அவலங்கள்...சகிக்க பழகிகொண்டோம்..//
ஆமாம் நண்பரே
//♠ ராஜு ♠
வெவகாரம் புடிச்ச ஆளுய்யா நீங்க.!//
இதுல என்ன வெவகாரம் இருக்கு தலைவா
//மஞ்சூர் ராசா
ஏசி இல்லாமல் நம்மால் போராட முடியுமா?//
இல்லையே தலைவா அவர் ஏர் கூலர் தானே வச்சிருந்தாரு
// மணிஜீ......
நண்பரே..சூன்யம் சொந்த செலவில்தான் வச்சுக்கணும்..
அதை போய் பெரிசு படுத்தறீங்களே..லூஸ்ல விடுங்க பாஸ்//
சரிண்ணே விட்டாச்சு
அறையில இருந்து கூவினாதான் அதுக்குப் பெயர் அறைகூவல்...
நீங்களும் நல்லாத்தான் கூவறீங்க... :))
//நல்லா விளையாடினா தான் ஜெயிக்க முடியும்//
நண்பரே ஐபிஎல் பொறுத்தவரை பணம் கொடுக்க கொடுக்கத்தான் ஜெயிக்க முடியும்.....�
என்ன சொல்லி, என்ன செய்ய? நாட்டு நடப்பு அவலங்கள் இன்னும் வலுப்பெற்று கொண்டே வருகின்றன.
//நான் சொன்னேன் அவரிடம் "எனக்கு சாதி தான் முக்கியம் அதுக்கப்புறம் தான் கட்சி,கவுன்சிலர் எல்லாம்" என்று...//
வின் தொலைகாட்சியில் இந்த வசனத்தைக் கேட்டேன்.அதெப்படிங்க அரசியல் வாடை வீசுன உடனே ஆளுக பஞ்ச் டயலாக் ஆரம்பிச்சிடறாங்க.
இனிமேல் தமிழ்நாட்டுல ஜாதிக்கொடிதான் போங்க.
//சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.//
நல்லவேளை நான் இரண்டிலேயும் இல்ல.
என்னது!நீங்கள் அபுதாபியா?அப்ப நீங்களும் லிஸ்ட்ல இல்ல:)
வட்டு
//அறையில இருந்து கூவினாதான் அதுக்குப் பெயர் அறைகூவல்...//
அப்படியா சகா
துபாய் ராஜா
நீங்களும் நல்லாத்தான் கூவறீங்க... :))
நன்றி சீனியர்
Sangkavi
//நண்பரே ஐபிஎல் பொறுத்தவரை பணம் கொடுக்க கொடுக்கத்தான் ஜெயிக்க முடியும்.....//
கரெக்ட் சகா
Chitra
//என்ன சொல்லி, என்ன செய்ய? நாட்டு நடப்பு அவலங்கள் இன்னும் வலுப்பெற்று கொண்டே வருகின்றன.//
அதே தோழி
நன்றி ராஜ நடராஜன்
ராத்திரி இரண்டு மணிக்கு கூவினாலும்
பொழுது விடிய போறதில்லை
கருத்துரையிடுக