skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஜூலை, 2010

ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்

ப‌திவ‌ர்க‌ளுக்குள் ந‌டைபெறும் புனைவு,எதிர் புனைவு,ச‌வால்,எதிர் சவால்க‌ள்,ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளைக் கேள்விப்ப‌ட்டு ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் வெளியிட்ட‌ அறிக்கைக‌ள்.

க‌லைஞ‌ர்
த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் திராவிட‌ நாக‌ரிக‌ம‌ல்ல‌(குல்லுக‌ ப‌ட்ட‌ர்,அண்ட‌ங்காக்கை எல்லாம் ஞாப‌க‌ம் வ‌ந்தால் க‌ழ‌க‌ம் பொறுப்பல்ல‌).பிண‌க்குக‌ளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்ப‌திவாள‌ர்க‌ள் அடிக்க‌டி த‌ங்க‌ளுக்குள் பாராட்டு விழாக்க‌ள் ந‌ட‌த்திக் கொள்ள‌ வேண்டும்,இத‌ன் மூல‌ம் பிர‌ச்சினைக‌ளை வ‌ள‌ர‌ விடாம‌ல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய‌ உத‌விக‌ளை ஜெக‌த்திட‌ம் செய்ய‌ச் சொல்லியிருக்கிறேன். வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளையும் ஒரு குடும்ப‌மாக‌க் க‌ருதி நானும் க‌ல‌ந்து கொள்வேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌ன் பிற‌கும் ச‌ண்டை,ச‌ச்ச‌ர‌வுக‌ள் தொட‌ர்ந்தால் நானும் ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பிக்க‌ நேரிடும் என்ப‌தை எச்ச‌ரிக்கையாக‌ச் சொல்லிக் கொள்கிறேன்.

ஜெய‌ல‌லிதா
அடுத்து த‌மிழ‌க‌த்தில் அமைய‌ப் போவ‌து க‌ழ‌க‌ ஆட்சிதான்.த‌ற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வ‌ந்ததும் உங்க‌ளை நேரில் ச‌ந்தித்து பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காணுவேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌னை மீறி யாரேனும் ச‌ண்டையில் ஈடுப‌ட்டால் ந‌ம‌து எம்ஜிஆரில் உங்க‌ள் வ‌லைப்ப‌திவு பெய‌ர் வெளியிட‌ப் ப‌டும்.

வைகோ
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்குள் ஏற்ப‌ட்டுள்ள‌ இந்த‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளை தீர்க்கும் பொருட்டு என‌து த‌லைமையில், க‌ன்யாகும‌ரியில் இருந்து காஷ்மீர் வ‌ரை சுமார் ஆறு மாத‌ கால‌ "ம‌றும‌ல‌ர்ச்சி" ந‌டைப‌ய‌ண‌ம் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது. வ‌லைப்ப‌திவாள‌ர் அனைவ‌ரும் ந‌டைப‌ய‌ண‌த்தில் க‌ல‌ந்து கொண்டால்,ஆறு மாத‌ கால‌த்திற்கு ப‌திவு எழுத‌ யாருமேயில்லாம‌ல் ச‌ண்டை தானாக‌வே நின்று விடும் என்ப‌தை க‌ருத்தில் கொண்டே இந்த‌ ப‌ய‌ண‌ம் என‌ தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ்க்குடிதாங்கி
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அணியில் நின்று, தொட‌ர்ந்து வாதாடுவாதலேயே ச‌ண்டை தொட‌ர்கிற‌து என‌க் க‌ருதுகிறேன்.மாறாக‌ ப‌திவ‌ர்க‌ள் வார‌மொருமுறை அணி மாறி வாதாடினால் ச‌ண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொட‌ர்ந்தால் காடுவெட்டி குரு க‌ள‌ம் இற‌க்கி விட‌ப்ப‌டுவார் என‌ நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன்.

இம்சை அர‌ச‌ன்
ம‌த‌ம்,சாதி,அர‌சிய‌ல்,புனைவு என‌ த‌னித்த‌னியாக‌ வ‌லைப‌திவுக‌ள் தொட‌ங்க‌ப்ப‌டும். ச‌ண்டை போட‌ விரும்புவ‌ர்க‌ள் அத‌ற்கென‌ ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ வ‌லைப‌திவுக‌ளில் சென்று ச‌ண்டையிட்டுக் கொல்ல‌(ள்ள‌)லாம்.சிற‌ந்த‌ ம‌த‌ச்ச‌ண்டை ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ அர‌சிய‌ல் ச்ண்டைப் ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ புனைவுப் ப‌திவ‌ர் போன்ற‌ விருதுக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு, விருது பெறுப‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ரிசாக‌ அக்காமாலா ம‌ற்றும் க‌ப்சியில் ஊற‌ப்போட்ட‌ பாம்புச்ச‌ட்டை,முய‌ல் போன்ற‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

பொறுப்பி :  முன் ஜாமீன் மாதிரி,முன் ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் ச‌ண்டைக்கு வ‌ந்துராதீங்க‌ சாமிக‌ளா!!!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:11 PM 11 comments
Labels: அர‌சிய‌ல், ப‌திவுல‌க‌ம், மொக்கை

புதன், 7 ஜூலை, 2010

ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)

ஹ‌ய் டாடி வ‌ந்தாச்சு

என்ன‌ங்க‌ இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெள‌ம்புரேன்னு கால் ப‌ண்ணீங்க‌

பைக்க‌ ச‌ர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வ‌ந்தேம்மா அதான் லேட்

என்ன‌ பாப்பா இன்னிக்கு டீயூச‌ன் இல்லையா??

இல்ல‌ டாடி.. எங்க‌ மிஸ் வீட்ல‌ ஒரு ப‌ங்ஷ‌ன்

ஹோம் வொர்க் ப‌ண்ண‌ வைக்கிற‌ பொறுப்பு என் த‌லைல‌ ஹ‌ய்யோ எவளோ இருக்குதுங்க‌? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்ச‌து, இன்னும் கொஞ்ச‌ம் ரைம்ஸ் சொல்ல‌ வைக்க‌னும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு

ஓகே நான் கொஞ்ச‌ம் பிர‌ஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த‌ டிவியை கொஞ்ச‌ம் ஆன் ப‌ண்ணேன்,நீயூஸ் பார்க்க‌லாம்

என்ன‌ங்க‌ போன் பில் க‌ட்னீங்க‌ளா??

லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே க‌ட்டியாச்சு

அப்புற‌ம் ஹ‌வுஸ் ஓன‌ர் வ‌ந்திருந்தாருங்க‌..நாம‌ இங்க‌ வ‌ந்து டூ இய‌ர்ஸ் க‌ம்ப்ளீட் ஆயிருச்சுல்ல‌? நெக்ஸ்ட் ம‌ன்த்ல‌ இருந்து ரென்ட் த‌வுச‌ண்ட் ரூபிஸ் அதிக‌ம் வேணுமாம்..

இது வேற‌யா ?? ரென்ட் க‌ம்மியா இருந்தாலும் வாட்ட‌ர்,க‌ர‌ண்ட்,மெயின்டென‌ண்ஸ்னு த‌னித் த‌னியா புடுங்குறாங்க‌ள்ள‌...சீக்கிர‌ம் வேற‌ ஹ‌வுஸ் பாக்க‌ணும்...ஓகே அது கெட‌க்க‌ட்டும் இன்னிக்கு என்ன‌ டிப‌ன்மா??

பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அத‌னால‌ எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிப‌ன் இல்ல‌..நான் போய் குக்க‌ர் வைக்குறேன்.உங்க‌ளுக்கு வேணா உருளைக் கிழ‌ங்கு ஃபிரை ப‌ண்ண‌வா??

ம் ப‌ண்ணு.. என‌க்கு கொஞ்ச‌ம் சிஸ்ட‌த்துல‌ ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வ‌ர்றேன்

அய்யோ நீங்க‌ சிஸ்ட‌த்துல‌ உக்காந்தா எந்திக்க‌வே மாட்டீங்க‌ளே??

ஏ இல்ல‌ ஜ‌ஸ்ட் ஒரு ஹாப் அன் ஹ‌வ‌ர் தான்.அது இப்ப‌ த‌மிழ் சீச‌ன் இல்லியா?எல்லாரும் ப்யூர் த‌மிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க‌,இன்னிக்கு என‌க்கு ஒரு ஐடியா கெடைச்ச‌து நானும் ட்ரை ப‌ண்றேன்.நீ ரைஸ் ரெடி ப‌ண்ற‌துக்குள்ள முடிச்சுருவேன்..

என்ன‌வோ ப‌ண்ணுங்க‌

ந‌ம் தாய்மொழியை வ‌ள‌ர்க்க‌,அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌,அனைவ‌ரும் "ந‌ம் வீடுக‌ளில் த‌மிழை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துவோம்" என‌ உறுதி கொள்ள‌ வேணும்.......த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்தார் ந‌ம்ம‌ ப‌ச்ச‌,ம‌ஞ்ச‌,சிவ‌ப்பு, க‌ருப்பு, ரோஸ்,பிங்க் த‌மிழ்ப் ப‌திவ‌ர்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:26 AM 14 comments
Labels: மொக்கை

புதன், 23 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010

கோவையில் இன்று 23-06-2010 முத‌ல் 27-06-2010 வ‌ரை ந‌ட‌க்க‌ப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்ப‌டும் ப‌ய‌ன் என்ன‌?ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் தான் வீணாகிற‌து என்று சில‌ ப‌திவ‌ர்க‌ள் இடுகை போட்டுள்ளார்க‌ள். 27ந் தேதி மாநாடு முடிவ‌டைகிற‌து,28 ந் தேதி ந‌ட‌க்கப் போகும் அதிச‌ய‌ங்க‌ள் குறித்து அர‌சு வெளியிட‌ப் போகும் அறிக்கை இதோ......

செம்மொழி மாநாட்டால் விளைந்த‌ ந‌ன்மைக‌ள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் ம‌ட்ட‌த்தை 149 அடியாக‌ உய‌ர்த்திக் கொள்ள‌ கேர‌ள‌ அர‌சு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்துள்ள‌து.அத‌ற்கான‌ க‌டிதத்தை கேர‌ள‌ நீர்ப்பாச‌ன‌ துறை அமைச்ச‌ர் பிரேம‌ச‌ந்திர‌ன் நேற்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து வ‌ழ‌ங்கினார்.

வ‌ருடா வ‌ருட‌ம் த‌மிழ‌க‌த்திற்கு சேர‌ வேண்டிய‌ த‌ண்ணீர் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌டும்,இனி எந்த‌ சூழ்நிலையிலும்,ம‌ழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற‌ மாட்டோம் என‌
க‌ர்நாட‌க‌ அர‌சு அறிவித்துள்ளது.

த‌மிழ‌க‌த்தின் அனைத்து ந‌திக‌ளும் இணைக்க‌ப்ப‌ட்டு விட்டதால் இனி விவ‌சாயிக‌ள் முப்போக‌ம் விளைவிக்க‌லாம்.அத‌ற்கு தேவையான‌ உர‌ங்க‌ளை அழ‌கிரி வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ உர‌க்கிட‌ங்கிலிருந்து பெற்றுக் கொள்ள‌லாம்,மேலும் அத‌ற்காகும் போக்குவ‌ர‌தது செல‌வை அர‌சே ஏற்றுக் கொள்ளும்.

க‌ட‌லில் மீன் பிடிக்க‌ச் செல்லும் மீன‌வ‌ர்க‌ள்,இனி இல‌ங்கை க‌ட‌ல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ள‌லாம்,அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் பிடித்த‌ மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே ச‌மைத்து சாப்பிட்டு வ‌ர‌லாம்.அத‌ற்கு தேவையான‌ அரிசி,எண்ணெய்,ம‌சாலா சாம‌ன்க‌ளை த‌ந்து உத‌வ‌ இல‌ங்கை அர‌சுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்டுள்ளது.

த‌மிழ்நாட்டில் ந‌டை பெற்று வ‌ந்த‌ மின் திட்ட‌ப் ப‌ணிக‌ள் அனைத்தும் நேற்றுட‌ன் முடிந்து விட்ட‌து,ஆக‌வே இனி த‌மிழ‌க‌த்தில் மின் வெட்டு என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் த‌னியார் க‌ல்லூரிக‌ள் கூட்ட‌மைப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இன்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து இனிமேல் அனைத்து த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் எல்லாருக்கும் இல்வ‌ச‌க் க‌ல்வி அளிக்க‌ப் போவ‌தாக‌ "துண்டைப் போட்டு தாண்டி" உறுதிய‌ளித்துள்ள‌ன‌ர்.இனி அமைச்ச‌ரின் பிள்ளைக‌ளும்,ஆண்டியின் பிள்ளைக‌ளும் அருக‌ருகே அம‌ர்ந்து க‌ல்வி ப‌யிலலாம்.

பொது விநியோக‌ க‌டைக‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ 1 ரூபாய் அரிசி,இன்று முத‌ல் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்டு "பாசும‌தி" அரிசி  வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.மேலும் ப‌ருப்பு,காய்க‌றிக‌ள்,என்ணெய்,ம‌சாலாப் பொருட்க‌ள் முத‌ல் தாளிக்க‌ தேவையான‌ க‌டுகு,க‌றிவேப்பிலை வ‌ரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர் ப‌ற்றாக்குறை அற‌வே நீக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து,அதோடு ஒரு ஆசிரிய‌ருக்கு ஒரு மாற்று ஆசிரிய‌ர் (ச‌ப்ஸ்டியூட்)ஒருவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.முத‌ன்மை ஆசிரிய‌ர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவ‌ர் ப‌ணியை மேற்கொள்வார்.இத‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளில் த‌ங்கு த‌டையில்லாம‌ல் வ‌குப்புக‌ள் ந‌டைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌ அனைவ‌ருக்கும் அர‌சு வேலை கிடைத்தாகி விட்ட‌து.இனி பள்ளிக‌ளில் ஒன்றாம் வ‌குப்பு சேரும் மாண‌வ‌ர்க‌ள்,பிற்கால‌த்தில் எந்த‌ அர‌சு அலுவ‌கல‌த்தில் வேலை செய்ய‌ விருப்ப‌மோ,அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் க‌டித‌ம் பெற்றுக் கொள்ள‌லாம்.

முத‌ல்வ‌ர்,துணை முத‌ல்வ‌ர் ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ சாலைக‌ளில் போக்குவ‌ர‌த்து ஒரு போதும் நிறுத்த‌ப்ப‌டாது.அவ‌ர்க‌ள் இனி இர‌வு ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல்,அதிகாலை ஆறு ம‌ணிக்குள் ம‌ட்டும் சாலையில் செல்வார்க‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளுக்கும் குடி த‌ண்ணீர் வ‌ழ‌ங்க‌ "அக்வாஃபீனா" நிறுவ‌ன‌த்துட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.குழாய்க‌ள் ப‌திக்கும் வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இந்த‌ மாத‌ இறுதிக்குள் அனைவ‌ருக்கும் "அக்வாஃபீனா" த‌ண்ணீர் உறுதி.

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கும் சிற‌ப்பான ம‌ருத்துவ‌ சேவை வ‌ழ‌ங்கும் நோக்கில்,அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுட‌னும் அர‌சு ஒப்பந்த‌ம் போட்டுள்ள‌து.இனி அனைவ‌ரும் அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் இல‌வ‌ச‌ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இருண்டு கிட‌க்கும் ப‌னை விவ‌சாயிக‌ளின் வாழ்வில் ஒளியேற்ற‌, க‌ள் இற‌க்க‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ க‌ல‌ய‌ம்,அரிவாள் போன்ற‌வ‌ற்றை அருகிலுள்ள காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் பெற்றுக் கொள்ள‌லாம்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துச் சாலைக‌ளும் ந‌மீதாவின் க‌ன்ன‌ம் போல் வ‌ழ‌வ‌ழ‌ப்பாக‌ மாற்ற‌ப்ப‌டும், அத‌ற்கான‌ ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இவ்வாறு அந்த‌ செய்திக்குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
********************************************************************

இனி செம்மொழி மாநாடு ந‌ட‌த்திய‌தால் விளைந்த‌ "முக்கிய‌மான‌" ந‌ன்மைக‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் தீர்க்க‌ப்ப‌ட்டு விட்டதாலும்,அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ வேறு வ‌ழியில்லாத‌தாலும், தோன்றிய‌திலிருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை ம‌ட்டுமே செய்து வ‌ரும் திமுக‌,காங்கிர‌ஸ் த‌விர்த்த‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் க‌லைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.இதைக் கேள்விப்ப‌ட்ட‌ முத‌ல்வ‌ர்,"ம‌றப்போம் ம‌ன்னிப்போம்" என்ற‌ த‌மிழ‌ர் ப‌ண்பாட்டின் ப‌டி ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளை நேற்று அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்தார்.இந்த‌ உண‌ர்ச்சிம‌யமான‌ ச‌ந்திப்பில் உட‌னிருந்த‌ அமைச்ச‌ர்க‌ள் துரைமுருக‌ன்,பொன்முடி,த‌யாநிதி மாற‌ன் ம‌ற்றும் ச‌சிக‌லா,வைகோ,ராம‌தாஸ், திருமா, விஜ‌ய‌காந்த்,பாண்டிய‌ன் ஆகியோர் சிந்திய‌ ஆன‌ந்த‌க் க‌ண்ணீரில் அந்த‌ ப‌குதியே வெள்ள‌க் காடான‌து.

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:35 PM 18 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா, புனைவு, மொக்கை

வியாழன், 20 மே, 2010

ந‌ன்றி ந‌வில‌ல்

இப்போதெல்லாம் தின‌மும் ஏதாவ‌து ஒரு சூனா பானா ச‌ங்க‌ம் ஒண்ணுமில்லாத‌ ஒரு காரிய‌த்துக்கு ந‌ம்ம‌ முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிற‌து‌.அவ‌ரும் அறிவால‌ய‌த்துக்கு வ‌ர‌வ‌ழைத்து,த‌ன் அமைச்ச‌ர‌வை ச‌காக்க‌ள் புடை சூழ சால்வையை ஏற்றுக் கொள்கிற‌ மாதிரி புகைப்ப‌ட‌ங்க‌ளை மீடியாக்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி ம‌கிழ்ந்து கொண்டிருக்கிறார்.,

இதே ரேஞ்சில் போனால் இன்னும் யார் யாரெல்லாம் முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல வேண்டியிருக்கும்............

சீச‌ன் நேர‌ங்க‌ளில் த‌மிழ‌க‌ அர‌சு வ‌ழ‌ங்கும் இலவச‌ வேட்டி,சேலையை க‌ட‌த்தி வ‌ந்து விற்ப‌னை செய்து பிழைத்து கொண்டிருந்த‌ எங்க‌ளுக்கு,இல‌வ‌ச டிவி வ‌ழ‌ங்குவ‌த‌ன் மூல‌ம், ஆண்டு முழுவ‌தும் தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்ப‌டுத்தி, எங்க‌ள் வாழ்வில் "ஒளி" ஏற்றி வைத்த‌ "த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி.

த‌மிழ‌க‌ இல‌வ‌ச‌ டிவி ச‌காய‌ விலைக்கு விற்ப‌னை செய்யும் சேட்ட‌ன்க‌ள் ச‌ங்க‌ம் கேர‌ளா.
**********************************
பைசா ந‌க‌ர‌ சாய்ந்த‌ கோபுர‌த்துக்கு இணையாக‌,கோவையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்குக்காக‌ வீட்டு வ‌ச‌தித் துறை மூல‌ம் சாய்ந்த‌ வீடுக‌ள் க‌ட்டித் த‌ந்த‌ "ஏழைப் ப‌ங்காள‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

கோவை அம்ம‌ன்புர‌த்துக்கு குடிபுக‌ ப‌ய‌ப்ப‌டுவோர் ச‌ங்க‌ம்
**********************************
கோவை ந‌க‌ரில் போக்குவ‌ர‌த்துக்கு த‌டையாக‌ இருந்த‌ ம‌ர‌ங்க‌ளை, போர்க்கால‌ அடிப்படையில் வெட்டி,கோவையை துபாயாக‌ மாற்றிய‌ "சுற்று சூழ‌ல் காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

செம்மொழி பேசுவோர் ச‌ங்க‌ம் கோவை
************************************
இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும் இல்லாத‌ முறையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வ‌ழ‌ங்கி,நொடித்துப் போன எங்க‌ள் தொழிலை ஏற்ற‌ம் காண‌ வைத்த‌ "தொழிற் துறையின் ந‌ண்ப‌ன்"  டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

இல‌வ‌ச‌ அரிசி ப‌ய‌ன்ப‌டுத்தும் ஹோட்ட‌ல் முத‌லாளிக‌ள் ச‌ங்க‌ம்
**************************************
எல்கேஜி ப‌டிக்கும் பைய‌ன் கூட‌ இ மெயில் மூல‌ம் லீவு லெட்ட‌ர் அனுப்பும் இந்த‌ கால‌த்தில், முக்கியமான‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு மத்திய‌ அர‌சை க‌டித‌ம் மூல‌ம் தொட‌ர்பு கொள்ளும் "த‌க‌வ‌ல் தொழில் நுட்ப புர‌ட்சி நாய‌க‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

தபால் துறை ஊழிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம்
***************************************
+2 தேர்வில், 25 ஆண்டுக‌ளாக‌ தொட‌ர்ந்து மாநில‌ அள‌வில் முத‌ல் இட‌ம் பிடித்தும்,இது வ‌ரை மாவ‌ட்ட‌த்தில் எந்த‌ ஒரு அர‌சு க‌ல்லூரிக்கும் அனும‌தி வழ‌ங்காத‌ "க‌ல்விப் புர‌ட்சி வேந்த‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

விருதுந‌க‌ர் மாவ‌ட்ட‌ த‌னியார் க‌ல்லூரிக‌ள் ச‌ங்க‌ம்
*****************************************
எங்க‌ள் ப‌ல‌த்தை நாங்க‌ளே அறியாம‌ல் ஓட்டுக்கு அம்ப‌தும்,நூறும் வாங்கி கொண்டிருந்த‌தை மாற்றி ஒரு ஓட்டுக்கு ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ளை அள்ளி வ‌ழ‌ங்கி,எப்ப‌டா ந‌ம்ம‌ எம் எல் ஏ ப‌ர‌லோக‌ம் போவார்,இடைத் தேர்த‌ல் வ‌ரும் என‌ ஏங்க‌ வைத்த‌ ‌ "ஜ‌ன‌நாய‌க‌ காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

அனைத்துல‌க‌ அப்பாவி வாக்காளர்க‌ள் ச‌ங்க‌ம்.
******************************************
குறிப்பு: ஆட்டோ அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி ‍ அபுதாபியிலிருந்து வ‌ட‌மேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவ‌ன‌த்தில் த‌னியே த‌ன்ன‌ந்த‌னியே அமைந்துள்ள‌ மாமன்னார் & க‌ம்பெனி

பின்குறிப்பு:ஆட்டோக்கார‌ரிட‌ம் ஜிபிஎஸ் குடுத்து அனுப்ப‌ ம‌ற‌க்க‌ வேண்டாம்‌.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:14 PM 15 comments
Labels: அர‌சிய‌ல், மொக்கை

செவ்வாய், 11 மே, 2010

அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்

அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் பெய‌ருக்கு முன்னால் ஏக‌ப்ப‌ட்ட‌ ப‌ட்ட‌ பெய‌ர்க‌ளை சேர்த்துக் கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் கொண்டிருந்த‌வ‌ர்க‌ள்.அது பெரும்பாலும் அவ‌ர்க‌ள் த‌லைமையேற்று ந‌ட‌த்திய‌,போர்க‌ளில் பெற்ற‌ வெற்றியை ப‌றை சாற்றுவ‌தாக‌ இருக்கும்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் நிறைய‌ ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ஆனால் அதுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது.ஏதாவ‌து அல்ல‌க்கை கொடுத்த‌ "தானே உக்காந்த‌ தானைத் த‌லைவ‌ன்" ப‌ட்ட‌த்தை கூட‌ வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ரில் போட்டுக் கொள்வார்க‌ள்.
************************
அர‌ச‌ர்க‌ள் -  ப‌ல‌தார ம‌ணம் முடிக்கும் வ‌ழ‌க்க‌ம் உடைய‌வ‌ர்க‌ள் எனினும் ப‌ட்ட‌த்து அர‌சிக்கே அதிக‌ அதிகார‌ம்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் அப்ப‌டியே,ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ம் செய்து கொள்ப‌வ‌ர்க‌ள்.ஆனால் இங்கு எல்லாருக்கும் அதிகார‌ம் உண்டு.ம‌னைவிக‌ளும்,துணைவிக‌ளும் கிச்ச‌னில் இருந்த‌ ப‌டியே அர‌சில் த‌லையிடும் அதிகார‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்.
**********************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் வாரிசுக‌ளிலிருந்து ஒருவ‌ருக்கு ப‌ட்ட‌த்து இள‌வ‌ர‌சாக‌ முடி சூட்டி,அவ‌ருக்கு எல்லா வித‌ ப‌யிற்சிக‌ளையும் அளித்து,அர‌ச‌ர் ஆக்கிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ப‌தவிக்கு வ‌ர‌ த‌குதி,திற‌மை எல்லாம் தேவையில்லை. அர‌சிய‌ல்வாதிக்கு வாரிசாக‌ இருப்ப‌தே பெரிய‌ த‌குதி தான்.ஏழாவ‌து பொண்டாட்டியின் எட்டாவது வாரிசுக்கும் ஏதாவ‌து ஒரு ப‌த‌வி நிச்ச‌ய‌ம்.
***************************************
அர‌ச‌ர்க‌ள் -  அர‌ண்ம‌னைக‌ளில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் பாதுகாப்புக்கென‌ த‌னியே ப‌டை வைத்திருந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ஆர‌ம்ப‌த்தில் குடிசையில் வாழ்ந்தாலும்,ப‌த‌வி வந்த‌ பின் அர‌ண்ம‌னை போன்ற‌ பெரிய‌ வீடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ள்.அர‌சின் இச‌ட் பிரிவு பாதுகாப்பில் இருந்தாலும்,த‌னியே குண்ட‌ர் ப‌டை வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************
அர‌ச‌ர்க‌ள் -  வெளியிலிருந்து வ‌ரும் எதிரியை வெற்றி கொள்ள‌, கூட்டு சேர்ந்து போராடிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் எதிரியை,தேர்த‌லில் வெற்றி கொள்ள‌ கூட்ட‌ணி வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள். ஆனால் எதிரியையும்,கூட்டாளியையும் சுழ‌ற்சி முறையில் மாற்றிக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
***************************************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் முன்னோர்க‌ளை ம‌தித்த‌வ‌ர்க‌ள்.முன்னோர்க‌ள் காட்டிய‌ வ‌ழியில் சென்று,அவ‌ர்க‌ளை விட‌ பெரிய‌ வெற்றியை அடைந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ம‌ட்டும் முன்னோர்க‌ளை ம‌திப்ப‌வ‌ர்க‌ள்.அவர்க‌ளை காட்டிலும் அதிக‌ சொத்துக்க‌ளை குவித்துக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************************
அர‌ச‌ர்க‌ள் -  "ம‌யிர் நீப்பின் உயிர் வாழா க‌வ‌ரி மான்" போல‌ வாழ்ந்த‌வ‌ர்க‌ள்.
அர‌சிய‌ல்வாதிக‌ள் -  வெட்க‌ம்,மான‌ம்,சூடு,சொர‌ணை என்ப‌த‌ற்கும் த‌ங்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என்ப‌தாக‌ வாழ்ப‌வ‌ர்க‌ள்.
************************************************************
அர‌ச‌ர்க‌ள் -    அர‌சாட்சி என்ற‌ பெய‌ரில் ம‌க்களாட்சி செய்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ம‌க்களாட்சி என்ற‌ பெய‌ரில் அர‌சாட்சி செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
 ************************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:21 AM 11 comments
Labels: அர‌சிய‌ல், மொக்கை

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எஸ் யுவ‌ர் ஹான‌ர்


பெரிய‌ கிழி




தேங்க்ஸ்க்கா



வாவ்



தேங்க்ஸ்க்கா



எக்செல‌ண்ட்



தேங்க்ஸ்க்கா



ராக்கிங் ஃபெர்பார்மென்ஸ்



தேங்க்ஸ்க்கா



சான்ஸே இல்லை



தேங்க்ஸ்க்கா



காஸ்ட்யும் செல‌க்ச‌ன் சூப்ப‌ர்



தேங்க்ஸ்க்கா



எக்ஸ்பிர‌ஷ‌ன் ந‌ல்லாருந்த‌து டான்ஸ்ல‌ அது தான் முக்கிய‌ம்



தேங்க்ஸ்க்கா



ர‌வி ஒரு இட‌த்துல‌ லேசா த‌டுமாறினேயே ஏன் ஸ்டெப் ம‌ற‌ந்துட்டியா?



இல்ல‌க்கா மாரிய‌ தூக்கினேன்லே கால்ல‌ சுளுக்கிருச்சு அதான்க்கா



எங்க‌ கால‌ காட்டு



ப‌ர‌வாயில்லை கால் சுளுக்கியும் கூட‌ ந‌ல்லா ப‌ண்ணியிருக்கே வெரி குட்‌



******************************************************************************************************************



மோளே



அடிபொலி பெர்மான்ஸ் கேட்டோ



வ‌ள‌ர‌ ந‌ன்னாயிருந்தது



ப‌ச்ச‌ ச‌ர‌ண‌ம் பாடும் போது அல்ப‌ம் ச‌ங்க‌தி பிச‌கி மோளே



ச‌ங்க‌தி க‌லையாம் ப‌ட்டில்லோ



அது வ‌லிய‌ தெட்டில்ல கேட்டோ



ந‌மக்கு அடுத்த‌ பிரவாச‌ம் நோக்காம்



ஓகே ஆல் த‌ பெஸ்ட் மோளே

********************************************************************************************************************



நாட்ல‌ ஆறு ம‌ணிக்கு மேல‌ ஜ‌ட்ஜ்ங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌லை சாமியோவ்.......
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 5:12 PM 9 comments
Labels: சினிமா, மொக்கை

புதன், 30 டிசம்பர், 2009

"ப‌ல‌" மொழிக‌ள்

1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

 கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!

உப‌ய‌ம் "வால்பைய‌ன்"

2) சின்ன‌ புள்ளைக‌ வெள்ளாமை வீடு வ‌ந்து சேராது

சின்ன‌ புள்ளைக‌ள‌ வெள்ளாமை ப‌ண்ண‌ விட்டுட்டு பெரிய‌வ‌ங்க‌ நீங்க‌ எந்த ஆமை கூட‌ சுத்திகிட்டு இருந்தீங்க‌

உப‌ய‌ம் நெப்போலிய‌ன் ப‌ட‌ம் எஜ‌மான்

3) பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு

அந்த‌ ப‌வ‌ன்ல‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திர‌ம் அறிந்து பில் போடு??????????)

உப‌ய‌ம் அண்ணாச்சி‌

4) ந‌ல்ல‌தே நினை ந‌ல்ல‌தே நட‌க்கும்

டில்லி ஒன்டே மேட்ச்ல‌ இந்தியா ஜெயிக்க‌னும்னு நான் நினைச்சேன்
இல‌ங்கை ஜெயிக்க‌னும்னு என் ந‌ண்ப‌ன் நினைச்சான்
க‌டைசில‌ மேட்ச்சே ந‌ட‌க்க‌லை

உப‌ய‌ம் டெல்லி கிரிக்கெட் ச‌ங்க‌ம்

5)நிறை குட‌ம் த‌ளும்பாது குறை குட‌ம் கூத்தாடும்

இவ‌ன் யார்யா இவ‌ன் நாட்டு ந‌ட‌ப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால‌ 85 வ‌ய‌சு நிறைஞ்ச‌ குட‌ம் தான் இப்ப‌ கூத்தாடுது

உப‌ய‌ம் ஆந்திர‌ டிவி சேன‌ல்

***********************************************
விஐபி மொழிக‌ள்

ப‌ழ‌மொழி சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்ட‌வ‌ர்

விம‌ர்ச‌ன‌ம் எழுதினா ஓட்டு போட‌னும்
ப‌ட‌த்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க‌ கூடாது
-அண்னண் கேபிள் ச‌ங்க‌ர்

க‌விதை எழுதினா ர‌சிக்க‌னும்
விள‌க்க‌ம் கேக்க‌ கூடாது
-க‌விஞ‌ர் ஆதியார்

அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் ப‌ண்ன‌ணும்
தூக்கத்துல‌ எழுத‌ற‌ வியாதி இருக்கானு கேக்க‌ கூடாது
-கார்க்கி ச‌கா

**************************************************
நாட்டு ந‌ட‌ப்பு மொழிக‌ள்

எலி வ‌ளையான‌லும் த‌னி வ‌ளை வேண்டும்
-ச‌ந்திர‌சேக‌ர் ராவ்

க‌ண்ணால் காண்ப‌தும் பொய்,காதால் கேட்ப‌தும் பொய்,தீர‌ விசாரித்து அறிவ‌தே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர க‌வ‌ர்ன‌ர்)

****************************************************
ஒரு வ‌ருட‌ ப‌ய‌ண‌ம்

வியாழ‌ன் இர‌வு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு

அபுதாபில‌ருந்து விமான‌ம் 2009 டிச‌ம்ப‌ர் 31ந் தேதி இர‌வு 7.55 க்கு புற‌ப்ப‌ட்டு 2010 ஜ‌னவ‌ரி 1ந் தேதி காலை 3.30 ம‌ணிக்கு சென்னை வ‌ந்து சேருது.

ங்கொய்யால‌ ஊருக்கு வ‌ர்ர‌துக்கு ஒரு வ‌ருஷ‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டிய‌து இருக்கு

என்ன‌ கொடுமை குசும்பா இது

எப்ப‌டியோ இந்த‌ புது வ‌ருஷ‌ம் வான‌த்துல‌ க‌த்தார் ஏர்வேஸ் தேவ‌தைக‌ளோட‌.

எல்லாருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

(ச‌ர‌க்குக்கு ம‌ட்டும் எவ்வ‌ள‌வு வேண்டுமான‌லும் செல‌வு செய்யும் ந‌ண்ப‌ர்க‌ளை உடையோர் "லெத‌ர்" பாரிலோ அல்ல‌து "ந‌ம்ப‌ர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்ட‌த்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்க‌ள்)
******************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:17 AM 21 comments
Labels: அனுப‌வ‌ம், மொக்கை

வியாழன், 17 டிசம்பர், 2009

பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்



"எழுத‌னும்னா நெற‌ய‌ ப‌டிக்க‌னும்" என்ற‌ அந்த‌ (இல‌க்கிய‌)உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ வாக்கிய‌த்தை சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.5 வ‌து ர‌வுண்டு முடித்து விட்டிருந்தோம்.என் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் சேர்ந்து பாரில் இருந்தோம்.இந்த‌ இல‌க்கிய‌ பார்ட்டி என் நண்ப‌னுக்கு ந‌ண்ப‌ன், இன்று ச‌ர‌க்க‌டிக்க‌ ந‌ண்ப‌ன் அழைத்து வ‌ந்திருந்தான்"ந‌ண்பனின் ந‌ண்ப‌ன் எங்க‌ளுக்கும் ந‌ண்ப‌னே" என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌ப்படி அவ‌னை உக்கார‌ வைத்து ஊத்தி கொடுத்து கொண்டிருந்தோம்.ஆர்வ‌க் கோளாறு பார்ட்டி ஒருவ‌ன் அவ‌னிட‌ம் டேய் ந‌ம்ம‌ ம‌ச்சி பிளாக் எழுத‌ற‌ண்டா என்று என்னைக் காட்டி உள‌றி விட்டான்.அத‌னால் வ‌ந்த‌ வினைதான் இது.

ஆமா நானும் நெற‌ய‌ ப‌டிக்கிறேன் என்றேன்

என்ன‌ ப‌டிக்கிறிங்க‌ என்றான் விடாம‌ல்

நான் கடுப்பாக‌ கோர்த்து விட்ட‌வ‌னை பார்த்தேன் அவ‌ன் வேலையில் மும்முர‌மாக‌ இருந்தான்.இல‌க்கிய‌வாதி ஏதோ ஐ ல‌வ் யு சொல்லி விட்டு ரிச‌ல்ட்டுக்காக‌ காத்திருப்ப‌வ‌னைப் போல‌ என் முக‌த்த‌யே பாத்துக் கொண்டிருந்தான்,விடாது க‌டுப்புன்னு நெனைச்சுக்கிட்டு எல்லாமே ப‌டிப்பேங்க‌ என்றேன்.

எல்லாமேன்னா பூக்கோ தெரியுமா என்றான் இல‌க்கிய‌வாதி

என‌க்கு எக்கோ தான் தெரியும் ந‌ம்ம‌ ஊர் ம‌லை மேல‌ போய் க‌த்துனா சூப்ப‌ரா எக்கோ வ‌ரும் என்றேன்.

ச‌ரி கேத்தி ஆக்க‌ர் ஆவ‌து தெரியுமா என்றான் கொஞ்ச‌ம் கோப‌மாக‌

ச‌ப்பாத்தி மேக்க‌ர் தான் தெரியும் போன‌ மாச‌ம் தான் எங்க‌ வீட்ல‌ வாங்குனோம் என்றேன்.

ராவாக‌ ஒரு ர‌வுண்டு ஊத்தி ஒரே க‌ல்ப்பில் அடித்து விட்டு கேட்டான் வேற‌ என்ன‌ தான் தெரியும்?

புரிய‌ற‌ மாதிரி எழுதுனா ப‌டிக்க‌த் தெரியும் என்றேன் நான்.

ச‌ரி இவ்ளோ கேள்வி கேக்குற‌ல்லா நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் என்ற‌ப‌டி ச‌ங்க‌ர் யார்னு தெரியுமா என்றேன்.

ச‌ங்க‌ரா யார் அது ? என்றான் இல‌க்கிய‌வாதி

ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற‌ ச‌ர‌க்கு,க‌டிச்சுட்டு இருக்கிற‌ சிக்க‌ன்,பிடிச்சுட்டு இருக்கிற‌ சிக‌ரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்ச‌ர் அவ‌ன் தாண்டா ங்கொய்யாலா ஒன்னைய‌ ஒரு ம‌னுச‌னா ம‌திச்சு இவ்ள‌ செல‌வு ப‌ண்ணி வாங்கி குடுத்துருக்கான் அவ‌னை தெரியாது எங்கேயோ இருக்குற‌வ‌ன‌ தெரியும் உன்னையெல்லாம் என்ன‌ ப‌ண்ண‌லாம் என்ற‌ப‌டி செவுளில் ஓங்கி ஒன்னு விட்டான் ந‌ண்ப‌னொருவ‌ன்.

பார்த்தியா ந‌ம் நாட்டில‌ இப்ப‌டிதான் இதுவே பிரான்ஸ் ஆ இருந்தா என‌க்கு என்ன‌ ம‌ரியாதை கிடைக்கும் தெரியுமா என்றான் க‌ன்ன‌த்தை த‌ட‌விய‌ப‌டி.

ச‌ரி விடுங்க‌ பாஸ் அவ‌ன் ஏதோ போதையில‌ அடிச்சுட்டான் டேய் அண்ன‌ணுக்கு ஒரு ஆஃப் சொல்லுடா என்றேன்

ச‌ர‌க்கு வ‌ந்த‌வுட‌ன் ஊத்திக் கொடுத்து விட்டு பாஸ் இவ்வ‌ள‌வு போதையில‌யும் ரொம்ப‌ தெளிவா பேசுறிங்க‌ல்லா இங்க‌ ம‌திப்பு,ம‌ரியாதை எதுவும் கிடைக்காது ப்ரான்ஸ்ல‌ தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்ப‌ன்னா அங்க‌ போய் இல‌க்கிய சேவை செய்ய‌ வேண்டிய‌து தானே இங்க‌ என்ன‌த்த‌ புடுங்கி கிட்டு இருக்கீங்க‌ என்றேன் அமைதியாக‌.

அது...... அது...... என்ற‌வ‌ன் அடுத்த‌ ர‌வுண்டை அடித்தான்.

யேய் ம‌ச்சி ஏற்கென‌வே அடிச்ச‌வ‌னை கூப்பிட்டேன்,அப்போ எந்த‌ ப‌க்க‌ம் அடிச்ச?என்றேன்,லெப்ட் க‌ன்ன‌த்துல‌டா என்றான்.ச‌ரி அப்ப‌டின்னா இப்ப‌ ரைட்ல‌ ஒன்னு விடு சொல்லி முடிக்கும் முன் விட்டான் ஒன்று.

சுருண்டு விழுந்த‌ இல‌க்கிய‌வியாதியை அள்ளிப் போட்டுக் கொண்டு கிள‌ம்பினோம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:05 AM 13 comments
Labels: அனுப‌வ‌ம், பாரில‌க்கிய‌ம், மொக்கை

வியாழன், 10 டிசம்பர், 2009

எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்

அடுத்த‌ ப‌ட்ஜெட்டில் அம‌லாக‌ப் போகும் புதிய‌ வ‌ரிக‌ள் ‍ ஒரு பார்வை


1) Qus. : What are you doing?

Ans. : Business.

Tax : PAY PROFESSIONAL TAX!

2) Qus. : What are you doing in Business?

Ans. : Selling the Goods.

Tax : PAY SALES TAX!!

3) Qus. : From where are you getting Goods?

Ans. : From other State/Abroad

Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!

4) Qus. : What are you getting in Selling Goods?

Ans. : Profit.

Tax : PAY INCOME TAX!

5) Qus. : How do you distribute profit ?

Ans : By way of dividend

Tax : Pay dividend distribution Tax

6) Qus. : Where you Manufacturing the Goods?

Ans. : Factory.

Tax : PAY EXCISE DUTY!

7) Qus.. : Do you have Office / Warehouse/ Factory?

Ans. : Yes

Tax : PAY MUNICIPAL & FIRE TAX!

8) Qus. : Do you have Staff?

Ans. : Yes

Tax : PAY STAFF PROFESSIONAL TAX!

9) Qus. : Doing business in Millions?

Ans. : Yes

Tax : PAY TURNOVER TAX!

Ans : No

Tax : Then pay Minimum Alternate Tax

10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?

Ans. : Yes, for Salary.

Tax : PAY CASH HANDLING TAX!

11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?

Ans. : Hotel

Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!

12) Qus.: Are you going Out of Station for Business?

Ans. : Yes

Tax : PAY FRINGE BENEFIT TAX!

13) Qus.: Have you taken or given any Service/s?

Ans. : Yes

Tax : PAY SERVICE TAX!

14) Qus.: How come you got such a Big Amount?

Ans.. : Gift on birthday.

Tax : PAY GIFT TAX!

15) Qus.: Do you have any Wealth?

Ans. : Yes

Tax : PAY WEALTH TAX!

16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?

Ans. : Cinema or Resort.

Tax : PAY ENTERTAINMENT TAX!

17) Qus.: Have you purchased House?

Ans. : Yes

Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !

18) Qus.: How you Travel?

Ans. : Bus

Tax : PAY SURCHARGE!

19) Qus.: Any Additional Tax?

Ans. : Yes

Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!

20) Qus.: Delayed any time Paying Any Tax?

Ans. : Yes

Tax : PAY INTEREST & PENALTY!

Last but not ..........

21) INDIAN :: can I die now??

Ans :: wait we are about to launch the funeral tax!!!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:54 AM 1 comments
Labels: ந‌கைச்சுவை, மொக்கை

சனி, 5 டிசம்பர், 2009

எங்கே எம்.பி.-க்கள்?

பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.


எங்கே போயிருப்பார்கள்???? இந்த‌ ல‌குட‌ பாண்டிக‌ள்

பிரியாணி,ச‌ர‌க்கு,மோதிர‌ம்,க‌ம்ம‌ல்,மூக்குத்தி,ப‌ண‌ம் போன்ற‌வ‌ற்றை தேர்த‌ல் க‌மிசனுக்கு தெரியாம‌ல் ம‌க்க‌ளிட‌ம் சேர்ப்ப‌து எப்ப‌டி என‌ இடைத் தேர்த‌லுக்காக‌ ந‌ட‌க்கும் செய‌ல் வீர‌ர்க‌ள் கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ போயிருக்க‌லாம்

"கெட்ட‌ப்ப‌" மாத்திட்டு செட்ட‌ப்போடு ஊர் சுத்த‌ போயிருக்க‌லாம்

கிரிக்கெட் பாக்க‌ போய் சேவாக் 300 அடிக்க‌ மிஸ் பண்ணியதால் நொந்து போய் தானே 600 "அடித்து" விட்டு பிளாட் ஆயிருக்கலாம்

ரோடே போடாம‌ல் பில் போட்டு சுருட்டிய‌  க‌லெக்ச‌னை க‌வுண்ட் ப‌ண்ண‌ அடிப்பொடிக‌ளோடு ரூம் போட்ருக்கலாம்

"நான் ந‌டிச்சா தாங்க‌ மாட்ட‌" ஒரு பாடாவ‌தி ப‌ட‌த்துக்காக‌ ப‌ன்ச் ட‌யலாக் பேசி க‌லைச்சேவை  செய்து கொண்டு இருந்திருக்க‌லாம்

மாவ‌ட்ட‌ செய‌லால‌ருக்கும் ஒன்றிய‌ செய‌லால‌ருக்கும் இடையே ந‌ட‌க்கும் ம‌க‌ளிர் அணித் த‌லைவிய யார் வ‌ச்சுக்குவ‌து என்ற‌ அதி முக்கிய‌ பிர‌ச்ச‌னைய‌ ப‌ஞ்சாய‌த்து ப‌ண்ண‌ போயிருக்க‌லாம்

எது சிற‌ந்தது கூட்டுக் குடும்ப‌மா? த‌னிக் குடும்ப‌மா? ப‌ட்டிம‌ன்ற‌ம் பாக்க‌ த‌ன் ம‌னைவி ம‌ற்றும் துணைவியோடு சேர்ந்து போயிருக்க‌லாம்

 தொகுதி ம‌க்க‌ளுக்காக சுழ‌ன்று சுழ‌ன்று ப‌ணியாற்றியதால் ஏற்ப‌ட்ட‌ க‌ளைப்ப‌ போக்க‌ "அந்த‌" ந‌டிகையோடு த‌ன் ப‌ண்ணை வீட்டில் ரிலாக்ஸ் ப‌ண்ணிக் கொண்டு இருந்திருக்க‌லாம்

கூட்ட‌மே இல்லாத‌ பொதுக்கூட்ட‌த்தில் வ‌ர‌லாறு தெரியுமா உன‌க்கு? புவியிய‌ல் தெரியுமா உன‌க்கு?என்று அங்கு இல்லாத‌ எதிர்க்கட்சி ஆளிட‌ம் வீராவேச‌மாக‌ கேள்வி கேட்டு கொண்டிருந்திக்க‌லாம்
 
ஆளுங்க‌ட்சி அமைச்ச‌ர் இவ‌ரை அழைக்காம‌லேயே திற‌ப்பு விழா ந‌ட‌த்தி திற‌ந்து வைத்த‌,க‌க்காவெல்லாம் போன‌ "கக்கூசை" வீம்புக்காக‌ ம‌றுதிற‌ப்பு செய்ய‌ போயிருக்க‌லாம்.
 
 
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:56 AM 1 comments
Labels: அர‌சிய‌ல், சமூக‌ம், ந‌கைச்சுவை, மொக்கை
« பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • மு.க‌ & ஜெ.ஜெ
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio