skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

ப‌திவுல‌க‌ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப‌திவுல‌க‌ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஜூலை, 2010

ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்

ப‌திவ‌ர்க‌ளுக்குள் ந‌டைபெறும் புனைவு,எதிர் புனைவு,ச‌வால்,எதிர் சவால்க‌ள்,ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளைக் கேள்விப்ப‌ட்டு ந‌ம் த‌லைவ‌ர்க‌ள் வெளியிட்ட‌ அறிக்கைக‌ள்.

க‌லைஞ‌ர்
த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் திராவிட‌ நாக‌ரிக‌ம‌ல்ல‌(குல்லுக‌ ப‌ட்ட‌ர்,அண்ட‌ங்காக்கை எல்லாம் ஞாப‌க‌ம் வ‌ந்தால் க‌ழ‌க‌ம் பொறுப்பல்ல‌).பிண‌க்குக‌ளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்ப‌திவாள‌ர்க‌ள் அடிக்க‌டி த‌ங்க‌ளுக்குள் பாராட்டு விழாக்க‌ள் ந‌ட‌த்திக் கொள்ள‌ வேண்டும்,இத‌ன் மூல‌ம் பிர‌ச்சினைக‌ளை வ‌ள‌ர‌ விடாம‌ல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய‌ உத‌விக‌ளை ஜெக‌த்திட‌ம் செய்ய‌ச் சொல்லியிருக்கிறேன். வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளையும் ஒரு குடும்ப‌மாக‌க் க‌ருதி நானும் க‌ல‌ந்து கொள்வேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌ன் பிற‌கும் ச‌ண்டை,ச‌ச்ச‌ர‌வுக‌ள் தொட‌ர்ந்தால் நானும் ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பிக்க‌ நேரிடும் என்ப‌தை எச்ச‌ரிக்கையாக‌ச் சொல்லிக் கொள்கிறேன்.

ஜெய‌ல‌லிதா
அடுத்து த‌மிழ‌க‌த்தில் அமைய‌ப் போவ‌து க‌ழ‌க‌ ஆட்சிதான்.த‌ற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வ‌ந்ததும் உங்க‌ளை நேரில் ச‌ந்தித்து பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காணுவேன் என‌ உறுதிய‌ளிக்கிறேன்.இத‌னை மீறி யாரேனும் ச‌ண்டையில் ஈடுப‌ட்டால் ந‌ம‌து எம்ஜிஆரில் உங்க‌ள் வ‌லைப்ப‌திவு பெய‌ர் வெளியிட‌ப் ப‌டும்.

வைகோ
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்குள் ஏற்ப‌ட்டுள்ள‌ இந்த‌ ச‌ச்ச‌ர‌வுக‌ளை தீர்க்கும் பொருட்டு என‌து த‌லைமையில், க‌ன்யாகும‌ரியில் இருந்து காஷ்மீர் வ‌ரை சுமார் ஆறு மாத‌ கால‌ "ம‌றும‌ல‌ர்ச்சி" ந‌டைப‌ய‌ண‌ம் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது. வ‌லைப்ப‌திவாள‌ர் அனைவ‌ரும் ந‌டைப‌ய‌ண‌த்தில் க‌ல‌ந்து கொண்டால்,ஆறு மாத‌ கால‌த்திற்கு ப‌திவு எழுத‌ யாருமேயில்லாம‌ல் ச‌ண்டை தானாக‌வே நின்று விடும் என்ப‌தை க‌ருத்தில் கொண்டே இந்த‌ ப‌ய‌ண‌ம் என‌ தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ்க்குடிதாங்கி
வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அணியில் நின்று, தொட‌ர்ந்து வாதாடுவாதலேயே ச‌ண்டை தொட‌ர்கிற‌து என‌க் க‌ருதுகிறேன்.மாறாக‌ ப‌திவ‌ர்க‌ள் வார‌மொருமுறை அணி மாறி வாதாடினால் ச‌ண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொட‌ர்ந்தால் காடுவெட்டி குரு க‌ள‌ம் இற‌க்கி விட‌ப்ப‌டுவார் என‌ நினைவு ப‌டுத்த‌ விரும்புகிறேன்.

இம்சை அர‌ச‌ன்
ம‌த‌ம்,சாதி,அர‌சிய‌ல்,புனைவு என‌ த‌னித்த‌னியாக‌ வ‌லைப‌திவுக‌ள் தொட‌ங்க‌ப்ப‌டும். ச‌ண்டை போட‌ விரும்புவ‌ர்க‌ள் அத‌ற்கென‌ ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ வ‌லைப‌திவுக‌ளில் சென்று ச‌ண்டையிட்டுக் கொல்ல‌(ள்ள‌)லாம்.சிற‌ந்த‌ ம‌த‌ச்ச‌ண்டை ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ அர‌சிய‌ல் ச்ண்டைப் ப‌திவ‌ர்,சிற‌ந்த‌ புனைவுப் ப‌திவ‌ர் போன்ற‌ விருதுக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு, விருது பெறுப‌வ‌ர்க‌ளுக்குப் ப‌ரிசாக‌ அக்காமாலா ம‌ற்றும் க‌ப்சியில் ஊற‌ப்போட்ட‌ பாம்புச்ச‌ட்டை,முய‌ல் போன்ற‌வை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

பொறுப்பி :  முன் ஜாமீன் மாதிரி,முன் ம‌ன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் ச‌ண்டைக்கு வ‌ந்துராதீங்க‌ சாமிக‌ளா!!!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:11 PM 11 comments
Labels: அர‌சிய‌ல், ப‌திவுல‌க‌ம், மொக்கை

வியாழன், 22 ஏப்ரல், 2010

ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??

தீபிகா படுகோன் மேட்ச் பார்க்க‌ வ‌ந்தால் ராய‌ல் சேல‌ஞ்ச‌ர்ஸ் க‌ண்டிப்பாக‌ ஜெயித்து விடும் என்று ம‌ல்லையா ம‌க‌ன் ந‌ம்புவ‌தாக ஒரு கிசுகிசு ப‌டித்தேன்.ஆனால் செமி ஃபைன‌லில் அந்த‌ சென்டிமென்ட் வேலைக்காக‌வில்லை.என்ன‌ தான் சென்டிமென்ட் அழ‌கா இருந்தாலும் ந‌ல்லா விளையாடினா தான் ஜெயிக்க‌ முடியும்.

8888888888888888888

ல‌ட்ச‌க்க‌ண‌க்கான ம‌க்க‌ளை கூட்டிட்டு வ‌ர‌ணும்,திருநெல்வேலியே அல‌ற‌ணும்,ப‌ஸ் கார் ஓண்ணும் போக‌ வ‌ழி இருக்க‌ கூடாது,ஊர் முழுக்க‌ டிராபிக் ஜாம் ஆக்க‌ணும்,திருநெல்வேலியை ஸ்த‌ம்பிக்க‌ வைக்க‌ணும்.

நான் சென்னையில் த‌லைவ‌ரை ச‌ந்தித்த‌ போது அவ‌ர் கேட்டார் "நீ ஒரு திமுக‌ கார‌ன் அதுவும் க‌வுன்சில‌ர் நீ எப்ப‌டிய்யா ந‌ம்ம‌ மாநாட்டுக்கு முன்னாடி நின்னு வேலை செய்ற‌" என்று

நான் சொன்னேன் அவ‌ரிட‌ம் "என‌க்கு சாதி தான் முக்கியம் அதுக்க‌ப்புற‌ம் தான் க‌ட்சி,க‌வுன்சில‌ர் எல்லாம்" என்று.

திருநெல்வேலியில் அடுத்த‌ மாத‌ம் ந‌ட‌க்க‌ப் போகும் சாதி அமைப்பின் மாநாட்டுக்காக‌ ந‌ட‌ந்த‌ ஆலோச‌னைக் கூட்ட‌த்தில் பேசிய‌ பேச்சு தான் மேலே உள்ளது,அதுவும் டிவியில்.பேசிய இருவ‌ருமே 50 வய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

ந‌ல்லாருங்க‌ப்பு உங்க‌ ம‌ன‌சு போல‌ ந‌ல்லாருங்க‌.

888888888888888888888888888888888888888

மின்வெட்டு பிர‌ச்சினை - க‌ட‌ந்த‌ ஆட்சியில் தொலை நோக்கு திட்ட‌ங்க‌ள் செய‌ல்ப‌டுத்த ப‌டாத‌தால் தான் இப்போது மின்சார‌ம் ப‌ற்றாக் குறையாக‌ உள்ள‌து.

ஏழைக‌ளுக்கு நில‌ம் வ‌ழ‌ங்குத‌ல் - க‌ட‌ந்த‌ ஆட்சியில் எடுக்க‌ப் ப‌ட்ட‌ த‌ரிசு நில‌ங்க‌ள் க‌ண‌க்கை ந‌ம்பி தான் நாங்க‌ள் உறுதி அளித்தோம்.ஆனால் அந்த‌ க‌ணக்கு த‌வ‌றான‌து என‌ இப்போது தெரிய‌ வ‌ந்துள்ள‌து.ஆக‌வே தான் தொட‌ர்ந்து நில‌ம் வ‌ழ‌ங்க‌ இய‌ல‌வில்லை.

முன்னாள் முத‌ல்வ‌ர் போட்ட‌ "நோட்" கார‌ண‌மாக‌த் தான் பார்வ‌தி அம்மாளை த‌மிழ‌க‌த்திற்குள் அனும‌திக்க‌ ம‌றுத்திருக்கிறார்க‌ள்.

என்னாங்க‌டா ந‌ட‌க்குது இங்க‌?????

ஆட்சிக்கு வ‌ந்து நாலு வ‌ருச‌த்துக்கு மேல‌ ஆயும் இன்னும் கீற‌ல் விழுந்த‌ ரெக்கார்ட் மாதிரி அவ‌ங்க‌ மேல‌யே ப‌ழி சொல்லிகிட்டே‌ இருங்க‌....வெள‌ங்கிரும்.

888888888888888888888888888888888888888888888888888888888888

வாயால் சிரிக்க‌ கூடாத‌ ஜோக் ஒண்ணு...

க‌லைஞ‌ர் ஐந்தாவ‌து முறையாக‌ முத‌ல்வ‌ராக‌ இருப்ப‌வ‌ர்.86 வ‌ய‌து ஆன‌வ‌ர்.அவ‌ர் ச‌ட்ட‌ச‌பையில் பொய் சொல்ல‌ மாட்டார்.

-சொன்ன‌து த‌மிழ்நாடு காங்கிர‌ஸ் பொதுச் செய‌லாள‌ர்க‌ளில் ஒருவ‌ர்.

8888888888888888888888888888888888888888888888888
சிங்கையிலோ, சவுதியிலோ இருந்து எழுதுவதில் வீரம் இல்லை. சென்னைக்கு வாருங்கள். உங்கள் வீரத்தை அதிகாரத்திடம் காண்பியுங்களேன்.

அண்ன‌ண் ம‌ணிஜீ அறை கூவ‌ல் விடுத்துள்ளார்.

சென்னைக்கு வ‌ந்தால் ம‌ட்டும் என்ன‌ செய்து விட‌ முடியும் அல்ல‌து சென்னையில் இருப்ப‌வ‌ர்க‌ளால் ம‌ட்டும் என்ன‌ செய்து விட‌ முடியும்?? ப‌திவு எழுதுத‌வ‌தை த‌விர‌?

ஒரு லோக்க‌ல் க‌வுன்சில‌ரை கூட‌ எதிர்த்து ஒண்ணும் ப‌ண்ண‌ முடியாது என்ப‌து தானே நித‌ர்ச‌ன‌ம்.முன்னாள் அமைச்ச‌ர‌யே போற‌ போக்குல‌ போட்டுத் த‌ள்ளிட‌றாங்க‌? இதுல‌ நாமெல்ல‌ம் எம்மாத்திர‌ம்????????

ம‌ற்ற‌ப‌டி த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ப‌ற்றி எழுத‌ சென்னைக்கு வ‌ர‌ணும்னா, அப்ப‌ அமெரிக்கா ப‌ற்றி எழுத‌ற‌துக்கு அமெரிக்கா போக‌னுமா???????

போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளை ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
8888888888888888888888888888888888888888888888888888888888




Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:25 AM 18 comments
Labels: அர‌சிய‌ல், ப‌திவுல‌க‌ம்

சனி, 17 ஏப்ரல், 2010

ப‌திவுல‌க‌ம் வாழ்க‌


க‌ட்டுமான‌த்துறையில் (Oil & Gas) ப‌ணி புரிவ‌து ரொம்ப‌ கொடுமையானது,சில‌ நேர‌ங்க‌ளில் 18 ம‌ணி நேர‌ம் கூட‌ வேலை செய்ய‌ வேண்டியிருக்கும்,ம‌ற்ற‌ சில‌ நேர‌ங்க‌ளில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்க‌ வேண்டியிருக்கும்.அதுவும் நான் குவாலிட்டி க‌ண்ட்ரோல் ஆய்வாள‌ராக‌ இருப்ப‌தால் இன்ஸ்பெக்ஷ‌ன் இருந்தால் ம‌ட்டும் சைட்டிற்கு போனால் போதுமான‌து,ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் அலுவ‌ல‌க‌ம் தான்.

த‌ற்போது ப‌ணி புரியும் புராஜெக்ட் முடியும் த‌றுவாயில் உள்ள‌தால் க‌ட‌ந்த‌ 3 மாத‌மாக‌ சுத்த‌மாக‌ வேலை இல்லை,காலை 7 ம‌ணியிலிருந்து மாலை 6 ம‌ணி வ‌ரை நேர‌த்தை க‌ட‌த்துவ‌த‌ற்குள் போதும் போதும் என்றாகி விடுகிற‌து.முடிந்த‌வ‌ரை எல்லாப் ப‌திவுக‌ளையும் ப‌டித்து விடுவேன் சில‌ நேர‌ங்க‌ளில் ப‌ழைய‌ ப‌திவுக‌ளையும்.

க‌ட‌ந்த‌ மாத‌ம் ஒரு நாள் ஐடி டிபார்ட்மென்டிலிருந்து எங்க‌ டீம் லீட‌ர்க்கு ஒரு ஓலை வ‌ந்த‌து.புராஜெக்ட்டில் இணைய‌த்தை அதிக‌ம் உப‌யோகிக்கும் டாப் 10 ந‌ப‌ர்க‌ளுள் எங்க‌ள் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த‌ 4 பேர் இட‌ம் பெற்றுள்ள‌ன‌ர் என‌வும்,இணைய‌ உப‌யோக‌த்தை குறைத்துக் கொள்ளுமாறும் அல்ல‌து இணைப்பு துண்டிக்க‌ப் ப‌டும் எனவும் அறிவுறுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து.

அந்த‌ நாலு ம‌க்க‌ளும் என்னை கொடுமையாக‌ப் பார்த்தார்க‌ள்,எப்ப‌ பார்த்தாலும் நீ தான் நெட்ல‌ இருக்க‌,உன் பேர் வ‌ர‌ல எங்க‌ பேர் ம‌ட்டும் எப்ப‌டி வ‌ந்தது என்ற‌ன‌ர்.

அதுல‌ ஒரு சேட்ட‌ன் நான் பேப்ப‌ர் ம‌ட்டும் தான் ப‌டிப்பேன்,அப்புற‌ம் கொஞ்ச‌ நேர‌ம் வீட்டுக்கு பேசுவேன் என் பேரும் வ‌ந்திருச்சே என்றார்.(கொஞ்ச‌ நேர‌ம்னா சேட்ட‌னோட‌ அக‌ராதில‌ காலையில‌ 2 ம‌ணி நேர‌ம்,மாலையில் 2 ம‌ணி நேர‌ம் ஜிடாக்ல அதுவும் வெப் கேமோட‌னு அர்த்த‌ம்)

த‌மிழ் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் அலுவ‌க‌ மெயில் 10 வ‌ரிக்கு மேல‌ வ‌ந்தாலே ப‌டிக்க‌ மாட்டாரு.அது என்ன‌ மேட்ட‌ர்னு ப‌டிச்சு சொல்லுங்க‌ன்னு ந‌ம‌க்கு அனுப்புவாரு,அவ்ளோ பெரிய‌ ப‌டிப்பாளி.வ‌ண்ண‌த்திரைல‌ ப‌ட‌ம் பாக்குற‌து (ப‌ட‌ம் ம‌ட்டும்) த‌ம‌ன்னா,ந‌மீதா ப‌ட‌ம் டவுன்லோட் ப‌ண்ற‌துனு த‌ன் நேர‌த்தை உப‌யோக‌மா செல‌விடுவார்.

நான் அவ‌ரைக் கூப்பிட்டு அண்ன‌ண் உண்மைத்த‌மிழ‌ன் அவ‌ர்க‌ளின் மானிட்ட‌ர் ப‌திவைக் காமிச்சேன்.

யோவ் என்ன‌ இவ்ளோ பெரிசா இருக்கு என்ன‌ மேட்ட‌ரு?

அது ஒன்னுமில்ல‌ அவ‌ரோட‌ மானிட்ட‌ர் ரிப்பேர் ஆயிருச்சாம் அத‌த்தான் அண்ன‌ண் சுருக்க‌மா எழுதியிருக்காரு என்றேன்.

மானிட்ட‌ர் ரிப்பேர் ஆன‌துக்கு இவ்ளோ பெரிசா மிர‌ண்டு விட்டார் ந‌ண்ப‌ர்.

இப்ப‌ தெரியுதா என் பேர் ஏன் வ‌ர‌லைனு இவ‌ரோட‌ ப‌திவுக‌ளைப் ப‌டிச்சாலே போதும் இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் ஓட்டிடுவேன்.உங்க‌ள‌ மாதிரி நான் எந்த‌ ட‌வுன்லோடும் ப‌ண்ற‌தில்லேனு சொன்னேன்.

ந‌ண்ப‌ர்க‌ள் இப்ப‌ மெயில் பார்க்க‌வும்,பேப்ப‌ர் ப‌டிக்க‌வும் ம‌ட்டும் இணைய‌த்தை உப‌யோக‌ப்ப‌டுத்துகிறார்க‌ள்,ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளில் ப‌ட‌ம் பார்க்கிறார்க‌ள்.எந்த‌ ப‌ட‌த்தையும் விட்டு வைப்ப‌தில்லை ஹர்ட் லாக்க‌ரில் தொட‌ங்கி ந‌ம்ம‌ பையா வ‌ரை.

நான் ம‌ட்டும் வ‌ழ‌க்க‌ம் போல‌.

ஒரு த‌மிழ‌னை இழிச் சொல்லில் இருந்து காப்பாற்றிய‌ ப‌திவுல‌க‌ம் வாழ்க‌.குறிப்பாக‌ அண்ன‌ண் உண்மைத் த‌மிழ‌ன்.அவ‌ர் தின‌மும் இர‌ண்டு ப‌திவுக‌ள் எழுத‌ வேண்டும் என்று அப்ப‌ன் முருக‌னை வேண்டிக் கொள்கிறேன்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:35 AM 6 comments
Labels: அனுப‌வ‌ம், ப‌திவுல‌க‌ம்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!



யோவ் மாம்ஸ் என்ன‌ய்யா எப்ப‌ பாத்தலும் ப‌திவெழுதிரேன்னு ப‌திவெழுதிரேன்னு இதையே த‌ட்டிக்கிட்டே இருக்கீரு வேற பொழ‌ப்பே இல்லையா?மாச‌ம் பொற‌ந்தா சுளையா ஏடிம் ல‌ க‌த்தையா எடுக்கீரா இல்லையா அதுக்கு கொஞ்சமாவது வேல‌ செய்ய‌னும்னு வேண்டாமா?


மாப்ள‌ இது லேசுப்ப‌ட்ட‌ காரிய‌மில்லடா யானைய‌ க‌ட்டி தீனி போடுற‌ மாதிரி என்ன‌ தான் பாடு சோலியா இருந்தாலும் இதுல‌ ஓரு க‌ண்ணு வ‌ச்சுருக்க‌ணும்

அதுக்காக‌ நீர் ப‌ண்ற‌து ரொம்ப‌ ஓவார‌யிருக்க‌ய்யா ஆபிசில அடிக்கிற‌ கூத்து ப‌த்தாதுன்னு வீட்ல‌ நடு ராத்திரில‌ எந்திச்சு க‌ம்ப்யூட்ட‌ர் முன்னாடி என்ன‌ய்யா ப‌ண்றீர்? காலயில‌ அக்கா சொல்லுச்சு அது ப‌யந்து போய் கெட‌க்கு நாந்தான் நான் புத்தி சொல்றேன்னு சொல்லிட்டு வ‌ந்தேன்.

யார‌வ‌து பின்னூட்ட‌ம் போட்ருப்பாங்க‌ள‌னா ஒரு ந‌ப்பாச‌தான் மாப்ள‌!

யோவ் மாம்ஸ் உம‌க்கெல்லாம் யார்யா பின்னூட்ட‌ம் போட‌ப் போறாங்க‌ அதும் நடு ராத்திரியில‌, நான் போட்டா தான் உண்டு ப‌திவ‌ எழுதி முடிச்ச‌ உட‌னே எம் பேர்ல‌ நீரே ஓட்டும் பின்னூட்ட‌மும் போட்டிகிடுதீரு அப்புற‌ம் என்ன‌

மாப்ள‌ நீ நெனைக்க‌ற‌ மாதிரி கிடையாதுடா ந‌ம்ப‌ள ந‌ம்பி எத்த‌ன‌ பேரு இருக்காங்க‌ தெரியுமாடா? 1012 பாலோய‌ர்ஸ்,திர‌ட்டிக‌ள்ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌,கூகுள் ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌,ம‌த்த ப‌திவ‌ர் பிளாக்ஸ்ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌ அது ம‌ட்டும் இல்ல‌டா எதையோ தேடி எங்கேயோ சுத்தி இங்க‌ வ‌ர்ர‌வ‌ங்க‌ இவ்ள‌ பேருக்கும் நாமா ஏதாவ‌து ப‌ண்ன்ணுமில்ல‌டா

என்ன‌மோ நீரு எழுத‌ல‌ன்னா இவ‌ங்க‌ வீட்லெல்லாம் அடுப்பே எரியாதுங்க‌ற‌ மாதிரில்ல‌ பேசுறிர்ரு அப்ப‌டி என்ன‌தாம்யா எழுவீரு?

சினிமா விம‌ர்ச‌ன‌ம்,அர‌சிய‌ல்,கொஞ்ச‌மா க‌வித‌ அப்ப‌டியே க‌ல‌ந்து க‌ட்டி அடிக்க‌ வேண்டிய‌து தான் மாப்ள‌

ஊர்ல‌ ரீலிஸ் ஆற‌ எல்லாப் ப‌ட‌த்துக்கும் காசு இல்லாட்ட‌லும் க‌ந்து வ‌ட்டிக்கு வாங்கிட்டாவ‌து நீரு போகும் போதே நென‌ச்ச‌ன்யா

இல‌க்கிய‌ம் கூட‌ எழுதுவோம்ல‌ மாப்ள‌

உம்ம‌ இல‌க்கிய வெறில‌ தீயை வைக்க‌ உம‌க்கு தெரிஞ்ச‌ இல‌க்கிய‌மெல்லாம் ச‌ரோஜா தேவி புக்கு தான்யா? கொல‌ வெறிய‌ கிள‌ப்பாதீரும் மாம்ஸ் சொல்லிட்டேன் ஆமா

விடுறா மாப்ள‌ தானா பொங்கி வ‌ருதுடா நான் என்ன‌ ப‌ண்றது சொல்லு

வரும்யா வ‌ரும் உம‌க்கெல்லாம் வேல‌யும் போட்டு கொடுத்து நெட் க‌ன‌க்செனோட‌ க‌ம்ப்யூட்ட‌ரும் குடுத்து இன்னி தேதி வ‌ரைக்கும் நீரு வேல‌ செய்யீறிர்னு ந‌ம்பிக்கிட்டு இருக்கார் பாத்தீரா உங்க‌ ஓன‌ர் அவ‌ர‌ சொல்ல‌னும்யா. உம‌ரெல்லாம் அர‌பு நாட்டுக்கு அனுப்பனும்யா அப்ப‌தான் ச‌ரிப்ப‌ட்டு வ‌ருவீரு

மாப்ள‌ அங்க‌ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம் ஒரு பெரிய‌ கூட்ட‌மே இருக்காங்க‌டா தெரியுமா?

அட‌ப்பாவிக‌ளா அங்கேயுமா!! மாம்ஸ்

ஏதோ த‌மிழுக்கு எங்க‌ளால‌ முடிஞ்ச‌ சேவை.வேணும்னா நீயும் ஒன்னு எழுதண்டே மாப்ள‌ நான் ஆர‌ம்பிச்சு தாரேன்

எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல‌ வந்து ஏறு ஆத்தாங்கிற‌ க‌தையா உம‌க்கு புத்தி சொல்ல‌ வ‌ந்தா என‌க்கே ஆப்பு வைக்க‌ பாக்குறிரு ஆள‌ விடும்யா சாமி.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:20 PM 26 comments
Labels: அனுப‌வ‌ம், ப‌திவுல‌க‌ம்
« பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • மு.க‌ & ஜெ.ஜெ
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio