skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜூலை, 2010

"அம்மா"ச்சி






ராச்சாப்பாடு முடித்த‌வுட‌ன்
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்த‌லையை நீவிக் கொண்டே
மெல்ல‌ ஆர‌ம்பிக்கும் ஆச்சி
"உங்க‌ம்மாவை நெனைச்சுப்பியா ராசா"

என் மொற‌ப்ப‌ க‌ண்ட‌தும்
அதுக்கில்ல‌ப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்த‌வ‌தான் ஆனா
ஒரு புள்ளய‌க் கூட‌
அவ‌ வ‌ள‌த்த மாதிரி
வ‌ள‌க்க‌ல‌ப்பா

தரையில‌ விட‌ ச‌ம்ம‌திக்க‌
மாட்ட‌ப்பா ஒன்னைய
‌தூக்கி சொம‌ந்திருப்பாளே
கொஞ்ச‌மா ந‌ஞ்ச‌மா

ஒரு நாளலெல்லாம் ஒன‌க்கு
மேலுக்குச் சரியில்லை
நொச்சு நொச்சுனு ஒரே அழுகை
அன்னிக்கி ஒரு பொட்டுத்
தூக்க‌மில்லை புள்ளைக்கு

ராத்திரி பூரா தோள்ல‌ போட்டு
ந‌ட‌ந்துகிட்டே இருந்தாப்பா
பெரியாச்சி வீட்ட‌ப் பாத்து
கைய‌க் காட்டி அழுவ‌
தூக்கிட்டு ஒடுவா அந்த‌
ராத்திரில‌

அங்க‌ போய் செத்த‌ நேர‌ம்
ஆன‌தும் இங்க‌ பாத்து
கைய‌க் காட்டுவ‌
ம‌றுக்கா இங்க‌ தூக்கிட்டு
வ‌ருவா

ஏலேன்னு கூப்பிட‌
மாட்டாப்பா ஒன்னைய‌
த‌ம்பி த‌ம்பின்னுதான்
உருகுவா

ஒரு த‌ர‌ம் ஒன் மாம‌ன்கார‌ன்
"ஏலேன்னு" கூப்பிட்ட‌துக்கு
என்ன‌ ச‌ண்டை போட்டா
தெரியுமா?

என் வெத்த‌லைப் பைய‌
நீ ஒளிச்சு வ‌க்கிற‌த‌ப் பாத்து
வாய் கொள்ளாம சிரிப்பா

அவ‌ சாகும் போது
ஒன‌க்கு அஞ்சு வ‌ய‌சு
இந்த‌ திண்ணையில‌ தாம்பா
வ‌ச்சிருந்தோம்

ம்ம்...இன்னிக்கு இருந்தாளா
ம‌க‌ராசி ஒன்னைய‌ப் பாக்க‌
ம‌குந்து போயிருப்பா ம‌குந்து....

என்ன‌ செய்ய‌ற‌து
அவ‌ த‌லையெழுத்து அப்ப‌டி.....

த‌ன் ம‌க‌ளைப் ப‌ற்றி எத்த‌னை
முறை சொன்னாலும்
அலுத்த‌தில்லை ஆச்சிக்கு
எங்க‌ம்மாவைப் ப‌ற்றி கேட்க‌
என‌க்கும்......

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:29 PM 13 comments
Labels: புனைவு

புதன், 23 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010

கோவையில் இன்று 23-06-2010 முத‌ல் 27-06-2010 வ‌ரை ந‌ட‌க்க‌ப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்ப‌டும் ப‌ய‌ன் என்ன‌?ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் தான் வீணாகிற‌து என்று சில‌ ப‌திவ‌ர்க‌ள் இடுகை போட்டுள்ளார்க‌ள். 27ந் தேதி மாநாடு முடிவ‌டைகிற‌து,28 ந் தேதி ந‌ட‌க்கப் போகும் அதிச‌ய‌ங்க‌ள் குறித்து அர‌சு வெளியிட‌ப் போகும் அறிக்கை இதோ......

செம்மொழி மாநாட்டால் விளைந்த‌ ந‌ன்மைக‌ள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் ம‌ட்ட‌த்தை 149 அடியாக‌ உய‌ர்த்திக் கொள்ள‌ கேர‌ள‌ அர‌சு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்துள்ள‌து.அத‌ற்கான‌ க‌டிதத்தை கேர‌ள‌ நீர்ப்பாச‌ன‌ துறை அமைச்ச‌ர் பிரேம‌ச‌ந்திர‌ன் நேற்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து வ‌ழ‌ங்கினார்.

வ‌ருடா வ‌ருட‌ம் த‌மிழ‌க‌த்திற்கு சேர‌ வேண்டிய‌ த‌ண்ணீர் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌டும்,இனி எந்த‌ சூழ்நிலையிலும்,ம‌ழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற‌ மாட்டோம் என‌
க‌ர்நாட‌க‌ அர‌சு அறிவித்துள்ளது.

த‌மிழ‌க‌த்தின் அனைத்து ந‌திக‌ளும் இணைக்க‌ப்ப‌ட்டு விட்டதால் இனி விவ‌சாயிக‌ள் முப்போக‌ம் விளைவிக்க‌லாம்.அத‌ற்கு தேவையான‌ உர‌ங்க‌ளை அழ‌கிரி வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ உர‌க்கிட‌ங்கிலிருந்து பெற்றுக் கொள்ள‌லாம்,மேலும் அத‌ற்காகும் போக்குவ‌ர‌தது செல‌வை அர‌சே ஏற்றுக் கொள்ளும்.

க‌ட‌லில் மீன் பிடிக்க‌ச் செல்லும் மீன‌வ‌ர்க‌ள்,இனி இல‌ங்கை க‌ட‌ல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ள‌லாம்,அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் பிடித்த‌ மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே ச‌மைத்து சாப்பிட்டு வ‌ர‌லாம்.அத‌ற்கு தேவையான‌ அரிசி,எண்ணெய்,ம‌சாலா சாம‌ன்க‌ளை த‌ந்து உத‌வ‌ இல‌ங்கை அர‌சுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்டுள்ளது.

த‌மிழ்நாட்டில் ந‌டை பெற்று வ‌ந்த‌ மின் திட்ட‌ப் ப‌ணிக‌ள் அனைத்தும் நேற்றுட‌ன் முடிந்து விட்ட‌து,ஆக‌வே இனி த‌மிழ‌க‌த்தில் மின் வெட்டு என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் த‌னியார் க‌ல்லூரிக‌ள் கூட்ட‌மைப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இன்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து இனிமேல் அனைத்து த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் எல்லாருக்கும் இல்வ‌ச‌க் க‌ல்வி அளிக்க‌ப் போவ‌தாக‌ "துண்டைப் போட்டு தாண்டி" உறுதிய‌ளித்துள்ள‌ன‌ர்.இனி அமைச்ச‌ரின் பிள்ளைக‌ளும்,ஆண்டியின் பிள்ளைக‌ளும் அருக‌ருகே அம‌ர்ந்து க‌ல்வி ப‌யிலலாம்.

பொது விநியோக‌ க‌டைக‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ 1 ரூபாய் அரிசி,இன்று முத‌ல் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்டு "பாசும‌தி" அரிசி  வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.மேலும் ப‌ருப்பு,காய்க‌றிக‌ள்,என்ணெய்,ம‌சாலாப் பொருட்க‌ள் முத‌ல் தாளிக்க‌ தேவையான‌ க‌டுகு,க‌றிவேப்பிலை வ‌ரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர் ப‌ற்றாக்குறை அற‌வே நீக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து,அதோடு ஒரு ஆசிரிய‌ருக்கு ஒரு மாற்று ஆசிரிய‌ர் (ச‌ப்ஸ்டியூட்)ஒருவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.முத‌ன்மை ஆசிரிய‌ர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவ‌ர் ப‌ணியை மேற்கொள்வார்.இத‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளில் த‌ங்கு த‌டையில்லாம‌ல் வ‌குப்புக‌ள் ந‌டைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌ அனைவ‌ருக்கும் அர‌சு வேலை கிடைத்தாகி விட்ட‌து.இனி பள்ளிக‌ளில் ஒன்றாம் வ‌குப்பு சேரும் மாண‌வ‌ர்க‌ள்,பிற்கால‌த்தில் எந்த‌ அர‌சு அலுவ‌கல‌த்தில் வேலை செய்ய‌ விருப்ப‌மோ,அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் க‌டித‌ம் பெற்றுக் கொள்ள‌லாம்.

முத‌ல்வ‌ர்,துணை முத‌ல்வ‌ர் ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ சாலைக‌ளில் போக்குவ‌ர‌த்து ஒரு போதும் நிறுத்த‌ப்ப‌டாது.அவ‌ர்க‌ள் இனி இர‌வு ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல்,அதிகாலை ஆறு ம‌ணிக்குள் ம‌ட்டும் சாலையில் செல்வார்க‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளுக்கும் குடி த‌ண்ணீர் வ‌ழ‌ங்க‌ "அக்வாஃபீனா" நிறுவ‌ன‌த்துட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.குழாய்க‌ள் ப‌திக்கும் வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இந்த‌ மாத‌ இறுதிக்குள் அனைவ‌ருக்கும் "அக்வாஃபீனா" த‌ண்ணீர் உறுதி.

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கும் சிற‌ப்பான ம‌ருத்துவ‌ சேவை வ‌ழ‌ங்கும் நோக்கில்,அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுட‌னும் அர‌சு ஒப்பந்த‌ம் போட்டுள்ள‌து.இனி அனைவ‌ரும் அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் இல‌வ‌ச‌ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இருண்டு கிட‌க்கும் ப‌னை விவ‌சாயிக‌ளின் வாழ்வில் ஒளியேற்ற‌, க‌ள் இற‌க்க‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ க‌ல‌ய‌ம்,அரிவாள் போன்ற‌வ‌ற்றை அருகிலுள்ள காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் பெற்றுக் கொள்ள‌லாம்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துச் சாலைக‌ளும் ந‌மீதாவின் க‌ன்ன‌ம் போல் வ‌ழ‌வ‌ழ‌ப்பாக‌ மாற்ற‌ப்ப‌டும், அத‌ற்கான‌ ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இவ்வாறு அந்த‌ செய்திக்குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
********************************************************************

இனி செம்மொழி மாநாடு ந‌ட‌த்திய‌தால் விளைந்த‌ "முக்கிய‌மான‌" ந‌ன்மைக‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் தீர்க்க‌ப்ப‌ட்டு விட்டதாலும்,அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ வேறு வ‌ழியில்லாத‌தாலும், தோன்றிய‌திலிருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை ம‌ட்டுமே செய்து வ‌ரும் திமுக‌,காங்கிர‌ஸ் த‌விர்த்த‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் க‌லைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.இதைக் கேள்விப்ப‌ட்ட‌ முத‌ல்வ‌ர்,"ம‌றப்போம் ம‌ன்னிப்போம்" என்ற‌ த‌மிழ‌ர் ப‌ண்பாட்டின் ப‌டி ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளை நேற்று அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்தார்.இந்த‌ உண‌ர்ச்சிம‌யமான‌ ச‌ந்திப்பில் உட‌னிருந்த‌ அமைச்ச‌ர்க‌ள் துரைமுருக‌ன்,பொன்முடி,த‌யாநிதி மாற‌ன் ம‌ற்றும் ச‌சிக‌லா,வைகோ,ராம‌தாஸ், திருமா, விஜ‌ய‌காந்த்,பாண்டிய‌ன் ஆகியோர் சிந்திய‌ ஆன‌ந்த‌க் க‌ண்ணீரில் அந்த‌ ப‌குதியே வெள்ள‌க் காடான‌து.

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:35 PM 18 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா, புனைவு, மொக்கை

வியாழன், 10 டிசம்பர், 2009

அம்மா

பித்த‌ளைச் ச‌ட்டிக‌ளுக்குப்
புளிச்ச‌க்கை

சில்வ‌ர் த‌ட்டுக‌ளுக்கு
விம் ப‌வுட‌ர்

வெள்ளிப் பாத்திர‌ங்க‌ளுக்கு
விபூதி ம‌ட்டும்

ப‌ள‌ப‌ள‌வென‌
விள‌க்கிவைக்கும்

அம்மாவால்
க‌டைசிவ‌ரை
விள‌க்க‌வே முடிய‌வில்லை
அப்பாவிட‌ம் த‌ன் ம‌ன‌சை!

---------ஜீவி



நான் வேலைக்காக சென்னை செல்லப் போகிறேன் என்று சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்க‌ அவ‌ள் முக‌த்தில் ச‌ந்தோஷ‌ம் க‌ண்க‌ளில் க‌ண்ணீர்,அத‌ற்கான கார‌ணம் நான‌றிவேன் இருந்தாலும் போயாக‌ வேண்டுமே...அப்பா த‌ன் ந‌ண்ப‌ரொருவ‌ர் மூல‌ம் ஏற்பாடு செய்த‌ வேலையில் சேர‌.அப்பாவைப் பொறுத்த‌வ‌ரை இது ஒரு அடுத்த‌ க‌ட்ட‌ம் ப‌ள்ளிப் ப‌டிப்பு,க‌ல்லூரி ப‌டிப்பு போல‌ அவ்வ‌ள‌வே

உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் யாருமில்லாத‌ வீட்டில் அம்மாவுக்கு நானே எல்லாமுமாகியிருந்தேன்,க‌டைக்கு உட‌ன் செல்லும் ந‌ண்ப‌னாக‌,த‌ன் ம‌ன‌க் குமுற‌ல்க‌ளை கொட்டும் தோழியாக‌,வீட்டு வேலைக‌ளில் உத‌வும் உத‌வியாளாக‌.

அம்மா க‌ல்லூரியில் ப‌டிக்கும் போது வாங்கிய‌ சான்றித‌ழ்க‌ளைப் பார்த்திருக்கிறேன்.ப‌டிப்பு முடிந்த‌வுட‌ன் திரும‌ண‌ம் ஆன‌து, திரும‌ண‌த்திற்கு பிற‌கு வேலைக்கு போக‌ கூடாது என்ற‌ நிப‌ந்த‌னையுட‌ன்.சான்றித‌ழ்கெல்லாம் தூங்கி கொண்டிருக்கிற‌து ப‌ர‌ணில்.வ‌ருட‌ம் ஒரு முறை பொங்க‌லுக்கு வெள்ளை அடிக்கும் போது ம‌ட்டும் எடுத்து பார்த்து விட்டு வைத்து விடுவாள்.
 
அம்மாவுக்கு ந‌ன்றாக ஓவிய‌ம் வ‌ரைய‌ தெரியும் என்று அம்மா சொல்ல‌க் கேட்டிருக்கிறேன்.எங்கே காட்டும்மா என‌ கேட்ட‌ போது,பெரு மூச்சுட‌ன் எல்லாம் எரிந்து விட்ட‌தென்றாள்.ஒருமுறை அப்பா அலுவ‌ல‌க‌ கோப‌த்துட‌ன் வீட்டிற்கு வ‌ந்த‌ போது அம்மா தான் தீட்டிய ஓவியம் ஒன்றுக்கு வ‌ண்ண‌ம் அடித்து கொண்டிருந்திருக்கிறாள்.அலுவ‌க‌த்தில் த‌ன் கௌர‌வ‌த்தை நிலை நாட்ட‌ முடியாம‌ல் கோப‌த்திலிருந்த‌ அப்பா அம்மாவிட‌ம் காட்டிய‌ கோப‌த்தில் அவ‌ள் அதுவ‌ரை வ‌ரைந்த‌ ப‌ட‌ங்க‌ளெல்லாம் தீக்கிரையான‌து.அது மட்டுமில்லாம‌ல் புருஷ‌ன் வெளிய‌ போய்ட்டு வ‌ந்தா ஒரு வாய் த‌ண்ணி கூட‌ குடுக்காம‌ என்ன‌ ப‌ண்ணிக்குட்டு இருக்கே நீ ஒன்ன‌ தாலி க‌ட்டி கூட்டிட்டு வ‌ந்த‌து குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ தான் ப‌ட‌ம் வ‌ரைய‌ர‌துக்கு இல்ல‌ என‌ தெருவுக்கே கேட்கும் ப‌டியான் அவ‌ர் க‌த்திய‌ க‌த்தலால் அர‌ண்டு போன‌வ‌ள் அன்றிலிருந்து ஒவிய‌ம் வ‌ரைவ‌தை நிறுத்தி விட்டாள்.தானுன்டு த‌ன் வேலையுண்டு என்றாகி விட்டாள்.அநாவ‌சிய‌மாக‌ வெளியில் கூட‌ செல்வ‌தில்லை.கோயிலுக்கோ,க‌டைக்கோ போக‌ வேண்டுமென்றால் என்னைக் கூட்டிக் கொள்வாள்.

என‌க்கு ஒவிய‌ம் வ‌ரையும் திற‌மை எங்கிருந்து வ‌ந்த‌து,அம்மா எத‌ற்காக‌ ஒவியத்திற்காக‌ ப‌ண‌ம் கேட்கும் போதெல்லாம் இல்லை என்று சொல்லாம‌ல் கொடுக்கிறாள் என்ற‌ ர‌க‌சிய‌ங்க‌ள் அன்று தான் தெரிந்த‌து.

அம்மாவை அப்பா வெளியில் அழைத்து சென்றதாக‌ நினைவில்லை.சொந்த‌கார‌ர்க‌ளின் நிக‌ழ்வுக‌ளுக்கு கூட‌ த‌னியாக‌த் தான் சென்று வ‌ருவார் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ள் நான் கூட‌ செல்வேன்.வ‌ந்த‌வுட‌ன் யார் யார் வ‌ந்திருந்தார்க‌ள்,உங்க‌ பெரிய‌த்தை பொண்ணு எப்ப‌டியிருக்கா,சித்தி பைய‌ன் வ‌ள‌ந்துட்டானா என‌ ஆர்வமாக‌ விசாரிப்பாள்.22 வ‌ருட‌ குடித்த‌ன‌த்திற்கு பிற‌கும் அப்பா அம்மாவை புரிந்து கொள்ள‌வில்லை என்றே என‌க்கு தோன்றும்.அது ப‌ற்றி அம்மாவிட‌ம் கேட்கும் போதெல்லாம் புன்னைகைத்து கொண்டே ந‌க‌ர்ந்து விடுவாள்.

த‌ம்பி நீ க‌ல்யாணம் ப‌ண்ணினால் வ‌ர‌ப் போகும் பெண்ணை அவ‌ள் விருப்ப‌ ப‌டி இருக்க‌ அனும‌திக்க வேண்டும் என‌ என்னிட‌ம் அடிக்க‌டி சொல்லிக் கொண்டிருப்பாள்.

நான் சென்னை செல்லும் நாளில் முத‌ல் முறையாக‌ அப்பா அம்மாவை ர‌யில் நிலைய‌த்திற்கு அழைத்து வ‌ந்திருந்தார் என்னை வ‌ழி அனுப்ப‌.
அம்மாவின் க‌ண்க‌ளில் என்னை தனியே அனுப்புகிறோம் என்ற‌ வ‌லியையும் மீறி ஒரு ச‌ந்தோச‌மே என‌க்கு தெரிந்த‌து.
 
 வ‌ண்டி ஏறினேன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கைய‌சைத்த‌ப‌டி.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:29 AM 8 comments
Labels: அனுப‌வ‌ம், புனைவு
« பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • மு.க‌ & ஜெ.ஜெ
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio