எப்ப பாத்தாலும் கப்பா,மத்திக்கறி,பரோட்டா,பீஃப் ஃபிரைனு வழக்கமான அயிட்டங்களா சாப்பிட்டு போரடிக்குது.வேற எதாவது ஸ்பெஷல் அயிட்டங்கள் கெடைக்கிற கடைக்கு கூட்டிட்டு போங்கன்னு நான் சொன்னத கேட்டு, சேட்டன் (என் கூட வேலை செய்பவர்) கொண்டு போனது தான் இந்தக் கடை.கேரளால "தட்டுக்கட"ன்னா நம்மூரு கையேந்தி பவன் மாதிரி.கையேந்தி பவனா ஆரம்பிச்சு இப்ப அமீரகத்துல பல இடங்களில் ரெஸ்ட்டாரெண்ட் வச்சிருக்காங்க.பேரக் கேட்டதும் "எங்க நின்னுக்கிட்ட சாப்பிட விட்ருவாங்களோன்னு பயந்துகிட்டே போனேன்.நான் நினைச்ச மாதிரியில்லை,செட்டப் எல்லாம் நல்லாத்தான் இருந்தது.
புட்டுப் பிரியாணி
புட்டு செஞ்சு..அத உதிர்த்து விட்டு,அதுல சிக்கன் கொழம்பு சேர்த்து தோசைக் கல்லில் போட்டு கொத்தி எடுத்தா அது தான் புட்டுப் பிரியாணி.நம்ம கொத்துப் பரோட்டா மாதிரி தான். பாக்குறதுக்கு சிக்கன் உப்புமா மாதிரி இருந்தாலும் பயங்கர டேஸ்ட்.தொட்டுக்கிறதுக்கு ஊறுகாய், தயிர் வெங்காயம் குடுக்குறாங்க.சிக்கன் இல்லாம.. பீஃப் அல்லது மட்டன் சேர்த்தும் கிடைக்கிறது
சிக்கன் 5000
பேரே டெர்ரரா இருக்குல்ல.உண்மையில் இதுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இந்த அயிட்டம் ஆர்டர் பண்ணினால் கொண்டு வரும் போதே கையோட ஒரு கூப்பனும் கொண்டு வர்றாங்க.சாப்பிட்டு பார்த்துட்டு நாம தான் இதுக்கு பேர் வைக்கணும்..நம்ம முகவரி எழுதி கூப்பன அங்க இருக்குற பெட்டியில போட்டுட்டு வந்துரணும்.குலுக்கலில் நம்ம வச்ச பேரு தேர்ந்தெடுக்கப்பட்டால் 5000 திராம்ஸ் பரிசு.(ஸ்ஸ்.. அப்பா எப்படியெல்லாம் விளம்பரம் பண்றானுக..)
ஆர்வக் கோளாறுல வாங்கிப் பார்த்தா வழக்கமான சிக்கன் ஃபிரை மேல கொஞ்சம் தேங்காய் துருவல் தூவி விட்டுருக்கானுக,அவ்ள தான்.
மற்றபடி புட்டு,கடலைக்கறி,கப்பா,மத்திக்கறி,மத்தி ஃபிரை,ஆப்பம்,ஃபீப் ஃபிரை போன்ற வழக்கமான கேரள அயிட்டங்கள் கிடைக்கின்றன.
இங்க சாப்பிடும் போது சேட்டன் சகாவு இந்த மேட்டர சொன்னார்.கேரளாவில் சுவையான உணவுகள் கிடைப்பது கள்ளு ஷாப்புகளில் தானாம்.
இதுக்காகவாது அடுத்த விடுமுறையில் கேரளா செல்ல வேண்டும்!

7 comments:
புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு கரிசல்... இது கேரளாவில் கிடைக்கிறதா?..
கள்ளு குடிக்கவா இல்லை அங்க சாப்புடவா?
புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு...
நல்ல டேஸ்டா இருக்கும் போல...
அடுத்த முறை கள்ளு கடைக்கு போய் சாப்பிட்டு வாங்க.
நன்றி நாடோடி
நன்றி முகிலன்
நன்றி சௌந்தர்
நன்றி அக்பர்
உண்மை தான். இந்தியா போனப்ப, கொச்சி நண்பர் சாப்பிட அழைச்சிக்கிட்டுப் போனது கள்ளுக்கடைக்குத் தான். நகரங்களுக்கு வெளியே அந்தப் பரம்பில் இந்தப் பரமில் என்று உள்ளே தள்ளி நிறைய அழகான பரம்பில்கள். அங்கெல்லாம் சாப்பாட்டுக் கடையும் கள்ளுக்கடையும் டூ இன் ஒன். சில இடங்கள்ள கள்ளுக்கடையிலிருந்து மறைவா தடுப்புச் சுவர் போட்டு வச்சிருக்காங்க. தக்காளி, வெங்காயம் கலந்த செம்மீன் பொறியல், முட்டை தோசை, சிவப்பு மிளகாய் தேங்காய் அரைத்துப் பூசி வறுத்த சிக்கன், பூண்டு ரசம் (வேறு ஏதோ கலந்திருந்தார்கள் - சோம்பு?), மட்டன் சாப்ஸ், என்று நானும் நண்பரும் அவர் மனைவியும் வெட்டு வெட்டு என்று வெட்டினோம். கள்ளுக்கடையென்றாலும் சாப்பாட்டுக் கூடத்துக்குப் பெண்களும் சாதாரணமாக வந்து போனதை நம்ப முடியவில்லை. (கள்ளுக்கடையிலும் பெண்கள் வந்து போனதை ஆவென்று பார்த்தேன்)
கருத்துரையிடுக