சென்ற பதிவின் தொடர்ச்சி நண்பர் முகிலனின் பின்னூட்டங்களுக்கான பதில்கள்
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
அவற்றில் சில
இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(நன்றி ஜூவி)
இப்படித்தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டமிடல்களும்,செயல் பாடுகளும்.
இவர்களை நம்பி???
//No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi. Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).//
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
நமக்கு கீழே வேலை செய்ற அம்பது பேரை அவங்க மொழி தெரியாமல் வேலை வாங்குவதென்பது கஷ்டம்.ஹிந்தி கற்றுக் கொள்வது ஒண்ணும் பெரிய விஷயமில்லை என்பவர்களுக்கு,உண்மைதான், இந்த ஆரம்ப நிலை தடுமாற்றங்களை தாக்குப்பிடித்து நின்றால் மட்டுமே அது சாத்தியம்..
*******************************************
முகிலன் சொன்னது…
//தமிழ் வழியில் கல்வி கற்றால் வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வேலை பார்க்க முடியாது என்று சொன்னால் அது அறிவின்மை.
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//

//And Dr.Mannar Jawahar also says, they will teach English to these Tamil Medium students for the first three years. I assume they would teach spoken english and communication skills in these years. (I don't think we need to know anything other than these).//
மற்ற துறைகளில் எப்படியோ நான் வேலை செய்யும் பெட்ரோலியத்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி மட்டும் போததாது.மற்ற சில சர்வதேச தரமுள்ள சான்றிதழ் படிப்புகளும் தேவை

*API
*NACE
*BGAS
EDUCATION:
► BE mechanical engineering (1983)
► CSWIP 3.2 by TWI, UK
► CSWIP Painting B Gas Gr3
► Certified Welding Inspector by AWS(1993-2002)
► ISO9001-Lead Assessor course
► ISO9001-Lead Assessor course
► Internal Auditor course
► ASNT Level II in RT,UT,MT,PT
► RT Film interpretation course
இது எல்லாம் படிக்காவிடில் இந்த துறையில் வேலையே கிடைக்காதா என்ன?

கிடைக்கலாம்,பெரும்பாலான நல்ல கம்பெனிகளில் பணிபுரிய இவை அவசியம் தேவை.சாப்ட்வேர் எஞ்சினியராக, காமா சோமா இன்போடெக் என்ற வெளியே தெரியாத கம்பெனியில் வேலை செய்வதற்கும்,அதே சாப்ட்வேர் எஞ்சினியராக இன்போசிஸ்,டிசிஸ்,விப்ரோ போன்ற கம்பெனிகளில்வேலை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா???
மேலும் அந்த காமா சோமா கம்பெனிகளில் கூட ,ஒரு எஞ்சினியர் அடுத்த நிலைக்கு உயர வேண்டுமென்றால் இவை அவசியம்.ஏனெனில் இவை எல்லாமே கிளையண்ட்டோட தேவைகள்.
மேல சொன்ன சான்றிதழ் படிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.அதுவும் கிளாஸ் ரூம் கோச்சிங் எல்லாம் கிடையாது, வெறும் ஐந்து நாள் செமினார் ஸ்டார் ஹோட்டலில் (சென்னையில் சவேராவில் நடக்கும்)வைத்து நடத்தி விட்டு ஆறாவது நாள் தேர்வு வைப்பார்கள்.
இது இல்லாமல் தினசரி வேலையில் உபயோகப் படும் Method Statement,Quality Control Procedures,Inspection & Test Plan,Specifications,Factory Acceptance Test Documents (FAT),Site Acceptance Test Documents (SAT),Mechanical Completion Dossier,Pre – Commissioning Dossier,Commissioning Dossier,Provisional Acceptance Certificate Book (PAC) போன்ற எல்லா டாகுமெண்ட்களும் ஆங்கிலத்தில் தான்.
வேலைக்குப் போனால் இப்படியென்றால் மேற்படிப்பும் ஆங்கிலம் தான்.
தமிழ் வழி பொறியியல் கல்வியில்,துறை சார்ந்த பாடங்களை தமிழ் வழியிலும்,ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும் படிக்கும் ஒருவன், வெளியில் வந்து இத்தனை விஷயங்களை ஆங்கிலத்திலேயே எதிர் கொண்டு வெற்றி பெற முடியும் எனில்
பனிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்து விட்டு வரும் ஒருவனால், நான்கு வருட பொறியியல் பாடங்களை ஆங்கிலத்தில் எதிர் கொள்ள முடியாதா என்ன????
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பதில்லை.சில குறிப்பிட்ட கல்லூரிகளில் வருடந்தோறும் நடக்கிறது,சில குறிப்பிட்ட கல்லூரிகளில் நடப்பதே இல்லை.இதே நிலை தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்??
இவ்வளவு அவசரமாக இதை கொண்டு வருவதற்கான காரணம் என்ன???
முடியாத வேலைக்கு கோலகாலமாக திறப்பு விழா நடத்தி விட்டு,மீண்டும் வேலையைத் தொடர இது ஒன்றும் கட்டிடமில்லை.
ஒரு அதிகாரி

சில மாதங்கள் முன்பு நீயா நானாவில் நடிகர் சூர்யா,எழுத்தாளர் பாமரன் ஆகியோர் கலந்து கொண்ட கல்வி சம்பந்த பட்ட ஒரு நிகழ்ச்சி.ஒரு கல்வித்துறை அதிகாரி (பெயர் ஞாபகமில்லை)எல்லாரும் தங்கள் பிள்ளகளை, அரசு பள்ளிகளில் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்.சட்டென்று கோபி "அய்யா உங்க பேரன் எங்கு படிக்கிறார்???" என்று கேட்டதும் அவருக்கு பயங்கர கோபம்.என் பையன் அரசு பள்ளியில் தான் படித்தான்,என் பேரன் என் கண்ட்ரோலில் இல்லை, அவன் என் பையனின் கண்ட்ரோலில் என்றார்.
ஒரு அமைச்சர்
ஒரு அமைச்சர்
ஒன்றல்ல இரண்டல்ல... தொடர்ந்து 25-வது ஆண்டாக 'ப்ளஸ் டூ' தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழ கத்திலேயே முதலிடத்தைப் பிடித்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்! இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 871 மாணவர்களில் 17 ஆயிரத்து 145 பேர் அதாவது 95.93 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்! 10 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் 94 சதவிகிதம் என்பதும் இன்னும் இனிப்பான செய்தி. 157 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் சதம் அடித்திருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 1,000 மதிப்பெண்ணை கடந்து சாதித்திருக் கிறார்கள், மாநில அளவிலும் பலர் ரேங்க் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை.