ஒன் பை டூ ன்னு சொன்னாலே ஏரியால எல்லாருக்கும் அவனைத் தெரியும்.
டீ குடிக்க போனாலும் சரி சரக்கடிக்க போனாலும் சரி நம்ம ஆளு ஒன் பை டூ தான் கேப்பான் சமயத்தில் ஒன் பை த்ரீ யா மாறும்.
கடையில் இவன் தலை தெரிந்தாலே ஒன் பை டூ வோ அல்லது ஒன் பை த்ரீ யோ போடுவது என்பது அந்த ஏரியா டீ மாஸ்டர்களுக்கு அன்னிச்சையான செயலாகிப் போனது.எப்போதிருந்து இவன் இப்படி என்பது யாரும் அறியாத ஒன்று.
ஒரு முறை இவன் ஒரு டீக்கடையில் ஒன் பை ஃபோர் ஆர்டர் பண்ண கடுப்பான மாஸ்டர் இதுவரை அப்படி போட்டதில்லை எனவும் அது யாராலும் முடியாது எனவும் சொல்ல வெகுண்டு எழுந்தவன் மாஸ்டர் கொடுத்த ஒரு டீக்குரிய ஐட்டங்களை வைத்து அஞ்சு டீ போட்டு நாலு டீயை எடுத்துக் கொண்டு ஒரு டீயை மாஸ்டர்க்கும் கொடுத்ததை ஒரு பெரிய சாதனையாக சொல்லித் திரிகிறான் இன்று வரை.
டாஸ்மாக் க்கு தனியாகப் போனால் இவன மாதிரி ஒரு ஒன் பை டூ பார்ட்டி மாட்டும் வரை காத்திருந்து பார்ட்னர்ஷிப் பேசி ஒரு ஒன் பை டூ குவார்ட்டர் அடிக்காமல் வீடு திரும்பியதில்லை இதுவரை.
பசங்கெலல்லாம் இவனை ஒன் பை டூ என்றே கிண்டல் பண்ணினாலும் அதைப் பற்றி கவலையே பட மாட்டான்
டீக்கடையில் நண்பர்கள் யாராவது இவனிடம் ஏண்டா இப்படி பண்றே உனக்கென்னடா குறைச்சல் வசதியாத்தானடா இருக்க,எல்லாரும் ஓட்டுரானுகடா மாப்ளே என அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி முடித்ததும்
அமைதியாக பின்னால் திரும்பி சொல்வான் "மாஸ்டர் ஒரு ஒன் பை டூ"
ஒரு பக்க கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு பக்க கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 1 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)