1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!
உபயம் "வால்பையன்"
2) சின்ன புள்ளைக வெள்ளாமை வீடு வந்து சேராது
சின்ன புள்ளைகள வெள்ளாமை பண்ண விட்டுட்டு பெரியவங்க நீங்க எந்த ஆமை கூட சுத்திகிட்டு இருந்தீங்க
உபயம் நெப்போலியன் படம் எஜமான்
3) பாத்திரம் அறிந்து பிச்சையிடு
அந்த பவன்ல எவர்சில்வர் தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திரம் அறிந்து பில் போடு??????????)
உபயம் அண்ணாச்சி
4) நல்லதே நினை நல்லதே நடக்கும்
டில்லி ஒன்டே மேட்ச்ல இந்தியா ஜெயிக்கனும்னு நான் நினைச்சேன்
இலங்கை ஜெயிக்கனும்னு என் நண்பன் நினைச்சான்
கடைசில மேட்ச்சே நடக்கலை
உபயம் டெல்லி கிரிக்கெட் சங்கம்
5)நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும்
இவன் யார்யா இவன் நாட்டு நடப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால 85 வயசு நிறைஞ்ச குடம் தான் இப்ப கூத்தாடுது
உபயம் ஆந்திர டிவி சேனல்
***********************************************
விஐபி மொழிகள்
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்டவர்
விமர்சனம் எழுதினா ஓட்டு போடனும்
படத்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க கூடாது
-அண்னண் கேபிள் சங்கர்
கவிதை எழுதினா ரசிக்கனும்
விளக்கம் கேக்க கூடாது
-கவிஞர் ஆதியார்
அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் பண்னணும்
தூக்கத்துல எழுதற வியாதி இருக்கானு கேக்க கூடாது
-கார்க்கி சகா
**************************************************
நாட்டு நடப்பு மொழிகள்
எலி வளையானலும் தனி வளை வேண்டும்
-சந்திரசேகர் ராவ்
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர கவர்னர்)
****************************************************
ஒரு வருட பயணம்
வியாழன் இரவு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு
அபுதாபிலருந்து விமானம் 2009 டிசம்பர் 31ந் தேதி இரவு 7.55 க்கு புறப்பட்டு 2010 ஜனவரி 1ந் தேதி காலை 3.30 மணிக்கு சென்னை வந்து சேருது.
ங்கொய்யால ஊருக்கு வர்ரதுக்கு ஒரு வருஷம் பயணம் செய்ய வேண்டியது இருக்கு
என்ன கொடுமை குசும்பா இது
எப்படியோ இந்த புது வருஷம் வானத்துல கத்தார் ஏர்வேஸ் தேவதைகளோட.
எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
(சரக்குக்கு மட்டும் எவ்வளவு வேண்டுமானலும் செலவு செய்யும் நண்பர்களை உடையோர் "லெதர்" பாரிலோ அல்லது "நம்பர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்டத்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்கள்)
******************************************************
புதன், 30 டிசம்பர், 2009
திங்கள், 28 டிசம்பர், 2009
காதல் வளர்த்தோம்
ஊர் பார்க்க தாலி கட்டவில்லை
உறவு நோக்க மெட்டி போடவில்லை
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை
ஆயினும்
உன் குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நாள் போய் வர
என்னிடம் அனுமதி கேட்டுக் கொண்டு நிற்கிறாயே
இதுக்கு பேர் தான் காதலா?
என் டிரெஸ் நல்லா இருக்கா, உனக்கு பிடிக்கும்னு தான் நீல கலர் அப்பாகிட்ட சொல்லி எடுக்க சொன்னேன் , நிமிர்ந்து பார்த்தேன்.ஆகாய நீல கலர் தாவணி,ஒற்றைச் செயின்,நுனியில் சின்ன முடிச்சிட்ட கூந்தல்,தலை நிறைய மல்லி என எனக்கு பிடித்த மாதிரி இருந்தாய்
ம் நல்லாருக்கு என்றேன்
என் சுரத்தில்லாத பதிலுக்கு முகம் சுண்டிப் போனவளாய் என்ன ஆச்சு என்றாய்?
என்னால் உன்னை கோபிக்க முடியாதென நீ அறிந்திருந்தாலும் வருத்தத்துடன், உன்ன விட்டுட்டு போறேன்னு கோபமா ,ஒரு நாள் தானே நாளைக்கு காலையில உன் முன்னாடி இருப்பேன் என்றாய்.
அதெல்லாம் ஒன்னுமில்லே என்றேன்
வேறன்ன என்றாய் தலையை கோதியபடி
சரி போய்ட்டு வா ஆனா............மருந்து வேணும் என்றேன் கன்னத்தைக் காட்டி சின்ன சிரிப்புடன்
உன்னை எனக்கு தெரியாதடா கள்ளா எனும்படியாக ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒஹோ அதுக்குத்தான் மூஞ்சிய தூக்கி வச்சிருந்தயா? ஆள விடு சாமி வீட்ல எல்லாரும் என்னைத் தேடுவாங்க நான் போகணும்,கணக்குல வச்சுக்கோ கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா தர்றேன்னு சொல்லிட்டு நாக்கை நீட்டி பழிப்பு காட்டியபடி வேகமாக நடந்தாய் நீ, நான் கள்ள கணக்கு எழுதுவேன்னு சொன்னதை காதில் வாங்காமல்.
நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஒரு மாலைப் பொழுதில் வந்தவள், வேலை செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து பார்த்து நல்லா வேலை செய்யுங்க, இப்படி மெதுவா வேலை செஞ்சு எப்ப வீடு கட்டி நான் எப்ப இங்க வந்து விளக்கேத்தறது என்று அதட்டினாய் என் அப்பா உள் பக்கம் இருப்பதை அறியாமல்.
அது யாருப்பா இந்த வீட்டுக்கு வரப் போற மகாலஷ்மி என்ற படி வெளியே வந்த அப்பாவைப் பார்த்ததும்,ஒரு கணம் பயந்த நீ அச்சச்சோ என்று கைகளை உதறியபடி என்னைப் பார்த்தாய், நான் சிரித்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும்
"இரு உன்னை" என்று என்னை கண்களாலேயே மிரட்டி விட்டு ஓட்டம் பிடித்தாய் கொலுசுகள் சிணுங்க.
அதன் பிறகு உன் வீட்டில் அப்பா வந்து பேசியதும், நம் திருமணம் முடிந்து என் கள்ள கணக்குகளை நீ தீர்த்து வைத்ததையும் அசை போட்டு கொண்டிருக்கிறேன், நீ ஒரு நல்ல கணக்கை துவக்க உன் பிறந்த வீட்டிற்கு சென்றிருப்பதால்.
சனி, 26 டிசம்பர், 2009
ச்சும்மா
ஸ்பெக்ட்ரம் போயி லிபரான் வந்தது டும் டும் டும்
லிபரான் போயி தெலுங்கானா வந்தது டும் டும் டும்
தெலுங்கானா போயி கவர்னர் சிடி வந்தது டும் டும் டும்
தீவிர ஆலோசனை -பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
நடந்தது...........
நடக்கிறது........
நடக்கும்..............
ஒரு வேளை நிஜத்திலும் இது தான் நடக்குதோ என்னவோ????
**********************************

ஏசியா நெட் (மலையாளம்) டிவியில் சென்டர் ஃஃப்ரெஷ் மிட்டாய்க்கு ஒரு விளம்பரம் வரும்.அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ஒரு மீட்டிங்கில் தலைவர் சொல்வார் இப்ப எதுக்கு எல்லாரும் கூச்சல் போடறிங்க சமோசா குடுத்தாச்சு,போண்டா குடுத்தாச்சு வேற என்ன வேணும் பாயாசம் வேணுமா கொடுத்திரலாம் அப்படின்னு.
ஒரு வேளை நிஜத்திலும் இது தான் நடக்குதோ என்னவோ????
**********************************
மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.காங்கிரசின் விடிவெள்ளி என கொண்டாடப் படும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.
**********************************கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ரஜினி.
**********************************'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?
தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
**********************************பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பணம் படைத்தவர்கள், படைபலம் கொண்டவர்கள் நமது ஜனநாயகத்தை கடத்திக் கொண்டு போகின்றனர். அரசியலையும், தேர்தலில் போட்டியிடுவதையும் வணிகமயமாக்கி வருகின்றனர். இத்தகைய அவலங்கள் நீங்கி, நமது ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் உரிமையையும், பலத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்
நீங்க நல்லவரா கெட்டவரா?????
**********************************
வியாழன், 24 டிசம்பர், 2009
'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி!
தமிழ்நாடே ஆச்சர்யமாகப் பார்க்க வேண்டிய ஓர் அறிவுஜீவி கிராமம்... திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகிலிருக்கும் ஆயக்குடி! காரணம்... இந்தக் கிராமத்து இளைஞர்கள், ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வுகளில் படைக்கும் சாதனைதான்!
'காசு கொடுத்தாலும் கிராம மக்களுக்கு நல்ல கல்வி பயிற்சிகள் கிடைக்காத இந்தக் காலத்தில், இது எப்படி சாத்தியம்?' என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு பதில்... இங்குள்ள 'மக்கள் மன்றம்'! இந்த மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் பயிற்சிதான் வெற்றிகளுக்கான ஒற்றைத் திரி! இங்கு பயிற்சி பெற்றவர்களில் இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, இன்று பல்வேறு அரசுப் பணிகளில் உள்ளனர்.
கிராமத்திலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளிதான் கோச்சிங் சென்டர். விடுமுறை நாளான ஞாயிறுதோறும் பயிற்சி வகுப்புகள் களைகட்டுகின்றன. பள்ளியின் வராண்டா ஒன்றில் 'மக்கள் மன்ற'த்தின் தலைவர் கமலக்கண்ணன் பாடம் நடத்திக் கொண்டிருக்க... வாழ்த்துக்களுடனும், வியப்புடனும் நாம் நெருங்க... கையில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி புத்தகத்துடன் வந்தவர், சாதனை ஹிஸ்டரியை சுருக்கமாக விளக்கினார்.
"ஆயக்குடி பகுதி, பழனி தொகுதியில இருந்துச்சு. அதை ஒட்டன்சத்திரம் தொகுதியில சேர்க்க அரசு முயற்சி செஞ்சுது. அதை எதிர்த்து கடுமையா போராட்டம் செய்தோம். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த 'மக்கள் மன்றம்'. எங்களோட எதிர்ப்பால தன்னோட முயற்சியை அரசு கைவிட்டுச்சு. அதுக்குப் பிறகுதான் எங்க பலம் எங்களுக்கு முழுசா தெரிஞ்சுது. அடுத்ததா, மன்றத்தோட அக்கறையை வேலை இல்லாத இளைஞர்கள் பக்கம் திருப்பினோம். சரியான வழிகாட்டல் இல்லாம, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாம தேங்கிடற இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து, அரசு பயிற்சித் தேர்வுக்கு தயாரானோம். அதுல நானும் ஒருத்தன்.
ஆரம்பத்துல படிக்கறதுக்கான இடம்கூட இல்லாம அவதிப்பட்டோம். பேராசிரியர் ராஜாசின்னகருப்பன் (முன்னாள் எம்.பி-யான பாலகிருஷ்ணனின் மகன்) நூலகமும், படிக்க ஒரு இடமும் ஏற்படுத்தித் தந்ததோட, பாடங்களையும் சொல்லிக் கொடுத்தார். 2005-ல எல்.ஐ.சி. டெவலப்மென்ட் ஆபீஸர் போட்டித் தேர்வுல ஜெயிச்சு, எங்களுக்கான முதல் வெற்றியை ஆரம்பிச்சவர்... ரபீக்.
அடுத்தடுத்து எங்களோட வெற்றி தொடரவே, 'நமக்கு நாமே திட்டம்' போல... தேர்வுல வெற்றி பெற்றவங்கள்லாம், அடுத்து பயிற்சி எடுத்திட்டிருக்கவங்களுக்கு ஆசிரியரா மாறி, வேலையில இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வந்து சேவை மனப்பான்மையோட கிளாஸ் எடுக்கறாங்க. ஸ்டடி மெட்டீரியல்களையும் சொந்தப் பணத்துல ரெடி பண்ணி கொடுக்கறாங்க'' என்ற கமலக்கண்ணன், இப்போது எல்.ஐ.சி. டெவலப்மென்ட் ஆபீஸர்.
மக்கள் மன்ற செயலாளர் குணசேகரன், "சமீபத்துல நடந்த வி.ஏ.ஓ. எக்ஸாம்ல 22 பேர், குரூப்-டூ எக்ஸாம்ல 112 பேர், போலீஸ் தேர்வுல 60-க்கும் மேற்பட்டோர்னு 'மக்கள் மன்றம்' மூலமா பயிற்சி பெற்றவங்க தேர்வாகியிருக்காங்க. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிட்டு இருக்கு. இந்த வருஷம்கூட குரூப் - ஒன் தேர்வுல மெயின் எக்ஸாம் வரை ரெண்டு பேர் போயிருக்காங்க. மக்களோட ஒற்றுமை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம வகுப்பெடுக்கற ஆசிரியர்கள், அந்த நல்லெண்ணத்தை பயன்படுத்திக்கிட்டு ஜெயிக்கணும்கிற குறிக்கோளோட படிக்கற மாணவர்கள் இதெல்லாம்தான் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணம்!'' என்று நெகிழ்ந்தார்.
இந்த மன்றத்தின் வெற்றிகளைக் கவனித்து... திருச்செந்தூர், நெய்வேலி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் என்று தமிழ்நாட்டின் 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் செல்கிறார்கள் இளைஞர், இளைஞிகள். ஆயக்குடி ஸ்டடி மெட்டீரியலுக்கு தமிழ்நாடு முழுக்க 'வான்டட்' இருக்கிறது!
ஒவ்வொரு பணியாளர் தேர்வுக்கும் மொத்த மாணவர்களையும் பேட்ச், பேட்ச்சாக பிரித்து வகுப்பு எடுக்கிறார்கள். இருபது வயது முதல் முப்பத்தைந்து வயது வரையுள்ள ஆண்களும், பெண்களுமாக எல்லா வகுப்பறைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உட்கார, நிற்க இடம் இல்லாமல்... ஜன்னல், வகுப்பறை வராண்டா, படிக்கட்டு என்று கிடைத்த இடங்களில் எல்லாம் நின்று கொண்டு பாடம் படிக்கிறார்கள். வகுப்பு எடுப்பவரின் முகம் தெரியாவிட்டாலும், குரலைக் கேட்டே குறிப்பெடுக்கிறார்கள்.
"எங்களுக்காக இவங்க பண்ணிட்டு இருக்கற இந்தச் சேவையை 'கல்வி புரட்சி'னுதான் சொல்லணும். ஜெயிப்போம்கிற நம்பிக்கை இப்போ எங்களுக்கு வந்துடுச்சு!'' என்கிறார்கள் இங்கு பயிற்சி பெறும் இளைஞர், இளைஞிகள் ஒருமித்த குரலில்!
'லஞ்சம் வாங்க மாட்டேன். பொறுப்பான அதிகாரியாக பணியாற்றுவேன்...' என்பது 'மக்கள் மன்ற'த்தின் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் மறக்காமல் எடுக்கும் உறுதிமொழி.
"கூடுதல் வகுப்பறைகள் ஒதுக்கப்படும்!"
இங்கே பயிற்சி பெற்று... இன்று வி.ஏ.ஓ., டெபுடி தாசில்தார், கல்லூரிப் பேராசிரியர் என்று பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் வகுப்பு எடுக்கின்றனர். ஆனால், போதுமான வகுப்பறைகளும், அதற்கான சூழலும் குறைவாகவே இருப்பதுதான் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறது.
விஷயத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆர்வமாகக் கேட்டுக் கொண்டவர், "ஆர்.டி.ஓ&வை அனுப்பி வகுப்புகளை பார்வையிடச் சொல்வதுடன், விரைவில் சி.இ.ஓ. மூலமாக அந்த அரசுப் பள்ளியில் அவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கவும் பரிந்துரை செய்கிறேன்!" என்று உறுதிகொடுத்தார் வள்ளலார்.
செவ்வாய், 22 டிசம்பர், 2009
கரிசல் தேவதைகள்
என் பதின்மங்களில் எங்க ஊர் தேவதைகளால் நிரம்பியிருந்தது, ஊர் முழுக்க சிறிதும் பெரிதுமாக அமைந்திருந்த தீப்பெட்டி கம்பெனிகளின் காரணமாக.மொத்தமாக நூத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள்,தெருவுக்கு அஞ்சு ஆறு என ஏக போகமாக வளர்ந்திருந்தது.
தீப்பெட்டி தொழிலை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பணி வாய்ப்புகள் அதிகம்.தீபாவளியின் போது கிடைக்கும் போனஸ் மற்றும் அடுத்தாண்டு பணிக்கு வருவதற்காக கொடுக்கப்படும் முன்பணம் போன்றவைதான் வேலை செய்யுமிடத்தை தீர்மானிப்பவை.இதன் காரணமாக வீடு இருக்கும் தெருவிலேயே கம்பெனி இருந்தாலும் வேறு தெருவில் உள்ள கம்பெனியில் வேலை செய்பவர்களும் உண்டு நிறைய.
இங்கு வேலை செய்பவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் சகோதரனின் படிப்புக்காக,தன்னுடைய திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டி அல்லது பொம்பள புள்ள படிச்சு என்ன ஆகப் போகுது என்ற சாமன்யர்களின் பொது மனப்பான்மை காரணமாக.
காலையில் கோகுல் சாண்டல் பவுடரும்,ராணி ஸ்டிக்கர் பொட்டுமாய் அவர்கள் வேலைக்கு போவதே அழகு தான்.மதியம் உணவுக்கு வீடு சென்று திரும்புவார்கள்.பின்பு இரவு ஏழு, எட்டு மணிக்கு வீடு திரும்பி டிவி நாடகங்களில் மூழ்குவார்கள். சில தேவதைகள் ஒரு நாளைக்கு அஞ்சு முறை வீட்டுக்கும் கம்பெனிக்குமாய் அலைந்து கொண்டே இருப்பார்கள்,காரணம் அவர்கள் காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்கப் படுபவர்கள்.
"பொன் மான தேடி நானும் பூவோடு வந்தேன்" இல்லனா "வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு" இவை போன்ற பாடல்கள் கம்பெனி ஸ்பீக்கரில் கரைந்து வந்தால் தேவதை(களு)க்கு காதல் சோகம் என அர்த்தம் கொள்ளலாம்.
வார இறுதிகளில் சம்பளம், பெரும்பாலும் சனி இரவு அல்லது ஞாயிறு காலை. ஞாயிறுகளில் தவணை முறையில் பொருள் விற்பவர்கள் ஊரில் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் வார வசூல் செய்வதற்காக. துணி, மிக்ஸி, கிரைண்டர், டிவி, அயர்ன் பாக்ஸ், கட்டில்,பீரோ என எல்லாமே கிடைக்கும் அவர்களிடம்.பெரும்பாலான வீடுகளில் உள்ள இந்த மாதிரியான பொருட்கள் தேவதைகளின் உழைப்பால் வாங்கியவை.
கிராமங்களின் வைகாசி மாதம் அழகானது,கோயில் திருவிழாக்களால் ஊரே களை கட்டியிருக்கும்.அந்த நாட்களில் உள்ளூர் தேவதைகளோடு விருந்தாளிகளாக வந்த வெளியூர் தேவதைகளும் சேர்ந்து கொள்வர்.
மொளப்பாரி தூக்க, மாவிளக்கு எடுக்க,சாமியாட்டம் பார்க்க,இரவில் திரை கட்டி போடும் ராமராஜன் படங்கள் பார்க்க என எங்கு காணினும் தேவதைக் கூட்டங்களே.
இப்போது நெறய தீப்பெட்டி கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டார்கள் மூலப் பொருட்கள் (சல்பர்,குளோரெட் மற்றும் கேரளாவில் இருந்து வரும் குச்சி)விலையேற்றம்,தேவதைகள் பற்றாக்குறை,இயந்திர தீப்பெட்டிகள் வருகை போன்றவற்றால்.
அந்த தலைமுறை தேவதைகளை எல்லாம் திருமணம் செய்து ராட்சஸன்கள் கொத்திக் கொண்டு போய் விட்டார்கள் அவங்க ஊர்களுக்கு. அடுத்த தலைமுறை தேவதைகளை நகரத்திலுள்ள பள்ளிகள் வேன் மூலம் அழைத்து செல்ல ஆரம்பித்து விட்டது.
ஆம் இப்போதெல்லாம் தேவதைக்கூட்டங்களை தரிசிக்க வைகாசி வரை காத்திருக்க வேண்டும்
டிஸ்கி:நமக்கு அந்த கொடுப்பினையும் இல்ல.ங்கொய்யாலா எப்ப அந்த பாழாப் போன சவுதி ஏர்லைன்ஸ்ல இடது கால எடுத்து வச்சு பாலைவனத்துல போய் இறங்குனோமோ நம்ம வாழ்க்கையும் அது மாதிரி ஆயிருச்சு.
திங்கள், 21 டிசம்பர், 2009
இரை காணா புலி
உங்களில் ஒருவன் என்று வந்தவனுக்கு வர்ணம் பூசி
ரசித்தீர்கள்
யோகியாக உருவெடுத்தவனை நோக்கி தூர தேசத்தின்
போலி என்றீர்கள்
வேட்டையாட வந்தவனோடு பரமபதம் விளையாடி
மகிழ்ந்தீர்கள்
இதோ
காத்திருக்கிறீர்கள் அடுத்ததை நோக்கி
இரை காணா புலி போல தீராப்
பசியோடு
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
எங்க முதலாளி
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வேலை எதுவும் செய்ததில்லை
செய்ய விட்டதில்லை நீ
இனியும் அப்படியே
பிளாக் எழுதலாம்,படிக்கலாம்
பின்னூட்டம் போடலாம்
மைனஸ் ஓட்டு போடலாம் என பல "லாம்"கள்
அலுவலகத்தில் செய்யலாம்
மாதங்கள் முடியும் முன்பே ஊதியம்
ஆண்டுகள் ஆரம்பிக்கும் முன்பே உயர்வு
வாரி வழங்குவதில் கலியுக கர்ணன் நீ
காலை முதல் மாலை வரை ஓப்பி
பின் பின்னிரவு வரை ஹேப்பி
என்ற உன் கொள்கையை மீறியதில்லை
நாங்கள் எந்நாளும்
தங்க,திங்க,தூங்க எந்த குறையும் வைத்ததில்லை நீ
எனினும் உன் மீது ஒரு பெருங்குறை உண்டு
எங்களுக்கெல்லாம்
அது நீ இன்னும் "தேவதைகளை" வேலைக்கு சேர்க்காமலிருப்பது!
சனி, 19 டிசம்பர், 2009
பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு கடிதம்
உச்சகட்ட போர் நடக்கும் நேரத்தில் களத்தை விட்டு விலக நினைக்கும் கார்க்கீ அவர்களுக்கு
நீங்கள் தானே நம்ம தளபதியின் "கீ" தளபதி
வெற்றியும் தோல்வியும் வீரனக்கழகு என்று நம் ராஜகுரு எஸ் ஏ சி கூறுவதை மறந்து விட்டீர்களா
களம் பல கண்டு படை பல வென்று இந்த இடத்திற்கு வந்தவர்கள்தானே நாம்
களத்தில் நாம் சாய்த்த "தல"கள் ஒன்றா இரண்டா.. ஒராயிரம் இருக்கும்
எத்தனை 250 நாள் போர் நடத்தியவர்கள் நாம், நாமே போரைக் கண்டு பயப்படுவதா
ஆட்சிக்கு வர முயற்சி செய்யக் கூடாது என்று மிரட்டுபவர்கள் ஒருபுறம்
கட்சிக்கே வர வேண்டாம் என்று சொல்லுபவர்கள் இன்னொரு புறம்
இந்த இக்கட்டான நேரத்தில் நம் தலைவருக்கு தோளோடு தோள் நின்று போரட வேண்டியவர்கள் நாம் என்பதை மறந்து விட்டு களம் விட முயற்சிக்க வேண்டாம்
தள்ளாத வயதிலும் உளியை ஓசையோடு எடுத்துக் கொண்டு அவர் நடத்தும் போரைக் காணவே ஆயிரம் பிறப்புகள் கூடும் போது நமக்கென்ன குறை?
இது உணர்ச்சி வசப்பட்ட முடிவு என்பதை நாங்கள் அறிவோம்
தயக்கங்களை உதறி தள்ளி விட்டு புயலென கிளம்பி "வாருங்கள்" சகாவே
புரவியும்,வாளும்,நாங்களும் காத்திருக்கிறோம் உங்கள் மீள் வருகையை எதிர் நோக்கி
/தலைவரின் உத்தரவுப் படி/
சின்ன தளபதி மாறவர்மன்
45 வது படைப் பிரிவு
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
வேட்டைக்காரன் விமர்சனங்கள்
கேபிள் சங்கர் - எலி வேட்டை
நடோடி இலக்கியன் - விஜயின் ரஜினிகள் ஆசை.
பரிசல்காரன் - பார்டரில் பாஸ்
பட்டர்ஃபிளை சூர்யா-சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை
இரும்புத்திரை அரவிந்த்- இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி
ஜெட்லி-வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....
தண்டோரா-படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.
ஒன்று : இடைவேளை
இரண்டு:முடிவு
தினகரன் நாளிதழ்
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.

வியாழன், 17 டிசம்பர், 2009
பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்கர்-சப்பாத்தி மேக்கர்
"எழுதனும்னா நெறய படிக்கனும்" என்ற அந்த (இலக்கிய)உலகப் புகழ் பெற்ற வாக்கியத்தை சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.5 வது ரவுண்டு முடித்து விட்டிருந்தோம்.என் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பாரில் இருந்தோம்.இந்த இலக்கிய பார்ட்டி என் நண்பனுக்கு நண்பன், இன்று சரக்கடிக்க நண்பன் அழைத்து வந்திருந்தான்"நண்பனின் நண்பன் எங்களுக்கும் நண்பனே" என்ற உயரிய தத்துவப்படி அவனை உக்கார வைத்து ஊத்தி கொடுத்து கொண்டிருந்தோம்.ஆர்வக் கோளாறு பார்ட்டி ஒருவன் அவனிடம் டேய் நம்ம மச்சி பிளாக் எழுதறண்டா என்று என்னைக் காட்டி உளறி விட்டான்.அதனால் வந்த வினைதான் இது.
ஆமா நானும் நெறய படிக்கிறேன் என்றேன்
என்ன படிக்கிறிங்க என்றான் விடாமல்
நான் கடுப்பாக கோர்த்து விட்டவனை பார்த்தேன் அவன் வேலையில் மும்முரமாக இருந்தான்.இலக்கியவாதி ஏதோ ஐ லவ் யு சொல்லி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருப்பவனைப் போல என் முகத்தயே பாத்துக் கொண்டிருந்தான்,விடாது கடுப்புன்னு நெனைச்சுக்கிட்டு எல்லாமே படிப்பேங்க என்றேன்.
எல்லாமேன்னா பூக்கோ தெரியுமா என்றான் இலக்கியவாதி
எனக்கு எக்கோ தான் தெரியும் நம்ம ஊர் மலை மேல போய் கத்துனா சூப்பரா எக்கோ வரும் என்றேன்.
சரி கேத்தி ஆக்கர் ஆவது தெரியுமா என்றான் கொஞ்சம் கோபமாக
சப்பாத்தி மேக்கர் தான் தெரியும் போன மாசம் தான் எங்க வீட்ல வாங்குனோம் என்றேன்.
ராவாக ஒரு ரவுண்டு ஊத்தி ஒரே கல்ப்பில் அடித்து விட்டு கேட்டான் வேற என்ன தான் தெரியும்?
புரியற மாதிரி எழுதுனா படிக்கத் தெரியும் என்றேன் நான்.
சரி இவ்ளோ கேள்வி கேக்குறல்லா நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் என்றபடி சங்கர் யார்னு தெரியுமா என்றேன்.
சங்கரா யார் அது ? என்றான் இலக்கியவாதி
ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற சரக்கு,கடிச்சுட்டு இருக்கிற சிக்கன்,பிடிச்சுட்டு இருக்கிற சிகரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்சர் அவன் தாண்டா ங்கொய்யாலா ஒன்னைய ஒரு மனுசனா மதிச்சு இவ்ள செலவு பண்ணி வாங்கி குடுத்துருக்கான் அவனை தெரியாது எங்கேயோ இருக்குறவன தெரியும் உன்னையெல்லாம் என்ன பண்ணலாம் என்றபடி செவுளில் ஓங்கி ஒன்னு விட்டான் நண்பனொருவன்.
பார்த்தியா நம் நாட்டில இப்படிதான் இதுவே பிரான்ஸ் ஆ இருந்தா எனக்கு என்ன மரியாதை கிடைக்கும் தெரியுமா என்றான் கன்னத்தை தடவியபடி.
சரி விடுங்க பாஸ் அவன் ஏதோ போதையில அடிச்சுட்டான் டேய் அண்னணுக்கு ஒரு ஆஃப் சொல்லுடா என்றேன்
சரக்கு வந்தவுடன் ஊத்திக் கொடுத்து விட்டு பாஸ் இவ்வளவு போதையிலயும் ரொம்ப தெளிவா பேசுறிங்கல்லா இங்க மதிப்பு,மரியாதை எதுவும் கிடைக்காது ப்ரான்ஸ்ல தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்பன்னா அங்க போய் இலக்கிய சேவை செய்ய வேண்டியது தானே இங்க என்னத்த புடுங்கி கிட்டு இருக்கீங்க என்றேன் அமைதியாக.
அது...... அது...... என்றவன் அடுத்த ரவுண்டை அடித்தான்.
யேய் மச்சி ஏற்கெனவே அடிச்சவனை கூப்பிட்டேன்,அப்போ எந்த பக்கம் அடிச்ச?என்றேன்,லெப்ட் கன்னத்துலடா என்றான்.சரி அப்படின்னா இப்ப ரைட்ல ஒன்னு விடு சொல்லி முடிக்கும் முன் விட்டான் ஒன்று.
சுருண்டு விழுந்த இலக்கியவியாதியை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம்.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
இளையராஜா பற்றி பா இயக்குனர் பால்கி
ZEE டிவியில் நேற்று PAA இயக்குனர் பால்கி அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது.படம்,அமிதாப்,வித்யா பாலன்,இளையராஜா பற்றி சுருக்கமாக பேசினார்.
பா வேறு படங்களைப் போலிருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் Progeria என்ற வார்த்தைய கேட்டவுடனே அவர்களாக ஏற்கனெவே அது பற்றி வெளிவந்த படங்களுடன் ஓப்பிட்டு கருத்து சொல்கிறார்கள்.எதையும் எதனுடனும் ஒப்பிடாதீர்கள்.அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான்.இந்த படத்தின் கதையும்,திரைக்கதையும் எழுதியது நான்.ஆனா அந்த நோயை நான் உருவாக்கவில்லை.அது கடவுள் உண்டாக்கியது.அதை வைத்து கதையை மட்டும் தான் நான் உருவாக்கினேன் என்றார்.
அமிதாப்புக்கு அறிமுகம் என்று ஏன் டைட்டில் போட்டீர்கள்?
சிரித்துக்கொண்டே ஆம் இந்த படத்தில் அமிதாப் அறிமுகம் தான்.மொத்தமாக அவரின் உருவத்தை மாற்றி அமைத்திருக்கிறோம் அல்லவா, ஆகவே தான் என்றார்.
வித்யா பாலன் பற்றி?
முதலில் அமிதாப்புக்கு அம்மா கேரக்டர் என்றதும் அதிர்ந்து விட்டார்.பின் கதையை விளக்கினேன்,அம்மா கேரக்டர் என்றாலும் வயதான அம்மா இல்லை.நீங்கள் இப்படியே தான் இருப்பீர்கள்,அமிதாப் வயதைத்தான் குறைக்கப் போகிறோம்,என்றவுடன் ஒத்துக் கொண்டார்.
ஆனால் ஒன்று அமிதாப்,அபிஷேக்,வித்யா மூவரில் யார் நடித்திருக்க விட்டாலும் இந்த படத்தை நான் எடுத்திருக்க மாட்டேன் என்றார் உறுதியாக.
அமிதாப்பின் திரையுல வாழ்வில் இந்த கேரக்டர் மிகவும் முக்கியமானது இல்லையா ?
சினிமாவில் இந்த கேரக்டர் முக்கியமானது,அந்த கேரக்டர் சிறப்பானது என்று எதுவுமில்லை.அது அந்தந்த படத்தின் தேவைகளைப் பொறுத்தது.எனக்கு அமிதாப்பின் நஸிம் படத்தின் காமெடி ரோல் தான் ரொம்ப பிடிக்கும்.அதனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
உங்களின் சீனிகம் படத்திலும் பா படத்திலும் ஒரே இசையமைப்பாளர் தான்......
கேள்வியை முடிக்கும் முன்பே குறுக்கிட்ட பால்கி இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமல்ல,ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரிராமும் சீனிகம்மில் பணியாற்றியவர்தான்.
இளையராஜாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்,ஒரு படத்துக்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாடல்கள்,அதில் 3000 பாடல்கள் மெலோடி ரகத்தை சேர்ந்தவை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷனுக்கும் அவர் பாடல் போட்டு விட்டார்,எந்த இயக்குனர்க்கு, எந்த சிச்சுவேஷனுக்கு பாடல் தேவை என்றாலும் அவரிடம் காபி ரைட் வாங்கி விட்டு தாரளாமாக உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ரஹ்மான் வந்த பிறகு தான் தென்னிந்திய இசை பற்றி எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது.ராஜாவைப் பற்றி அதிகம் தெரியாமல் போனதற்கு காரணம்,அவர் உச்சத்தில் இருந்த போது இந்த அளவு தொழில்நுட்பம் வளரவில்லை.மீடியாவும் இப்போது இருப்பது போலில்லை.அதனால் தான் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு அவரைப் பற்றி அறியவில்லை.அவர் இந்தியாவின் சிறந்த இசை மேதை என்றார்.
பா வுக்கு அடுத்து என்ன?
பெரிதாக சிரித்துக்கொண்டே இப்போதைக்கு எந்த ஐடியாவுமில்லை.சொல்லப் போனால் படம் பார்க்கிற எண்ணம் கூட இல்லை.கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட் பார்க்க வேண்டும்.அது மட்டும் தான் என்றார்.
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
பதிவர்னா சும்மா இல்ல !!!!!!!!!!!!!!!!!!!
யோவ் மாம்ஸ் என்னய்யா எப்ப பாத்தலும் பதிவெழுதிரேன்னு பதிவெழுதிரேன்னு இதையே தட்டிக்கிட்டே இருக்கீரு வேற பொழப்பே இல்லையா?மாசம் பொறந்தா சுளையா ஏடிம் ல கத்தையா எடுக்கீரா இல்லையா அதுக்கு கொஞ்சமாவது வேல செய்யனும்னு வேண்டாமா?
மாப்ள இது லேசுப்பட்ட காரியமில்லடா யானைய கட்டி தீனி போடுற மாதிரி என்ன தான் பாடு சோலியா இருந்தாலும் இதுல ஓரு கண்ணு வச்சுருக்கணும்
அதுக்காக நீர் பண்றது ரொம்ப ஓவாரயிருக்கய்யா ஆபிசில அடிக்கிற கூத்து பத்தாதுன்னு வீட்ல நடு ராத்திரில எந்திச்சு கம்ப்யூட்டர் முன்னாடி என்னய்யா பண்றீர்? காலயில அக்கா சொல்லுச்சு அது பயந்து போய் கெடக்கு நாந்தான் நான் புத்தி சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.
யாரவது பின்னூட்டம் போட்ருப்பாங்களனா ஒரு நப்பாசதான் மாப்ள!
யோவ் மாம்ஸ் உமக்கெல்லாம் யார்யா பின்னூட்டம் போடப் போறாங்க அதும் நடு ராத்திரியில, நான் போட்டா தான் உண்டு பதிவ எழுதி முடிச்ச உடனே எம் பேர்ல நீரே ஓட்டும் பின்னூட்டமும் போட்டிகிடுதீரு அப்புறம் என்ன
மாப்ள நீ நெனைக்கற மாதிரி கிடையாதுடா நம்பள நம்பி எத்தன பேரு இருக்காங்க தெரியுமாடா? 1012 பாலோயர்ஸ்,திரட்டிகள்ல இருந்து வர்ரவங்க,கூகுள் ல இருந்து வர்ரவங்க,மத்த பதிவர் பிளாக்ஸ்ல இருந்து வர்ரவங்க அது மட்டும் இல்லடா எதையோ தேடி எங்கேயோ சுத்தி இங்க வர்ரவங்க இவ்ள பேருக்கும் நாமா ஏதாவது பண்ன்ணுமில்லடா
என்னமோ நீரு எழுதலன்னா இவங்க வீட்லெல்லாம் அடுப்பே எரியாதுங்கற மாதிரில்ல பேசுறிர்ரு அப்படி என்னதாம்யா எழுவீரு?
சினிமா விமர்சனம்,அரசியல்,கொஞ்சமா கவித அப்படியே கலந்து கட்டி அடிக்க வேண்டியது தான் மாப்ள
ஊர்ல ரீலிஸ் ஆற எல்லாப் படத்துக்கும் காசு இல்லாட்டலும் கந்து வட்டிக்கு வாங்கிட்டாவது நீரு போகும் போதே நெனச்சன்யா
இலக்கியம் கூட எழுதுவோம்ல மாப்ள
உம்ம இலக்கிய வெறில தீயை வைக்க உமக்கு தெரிஞ்ச இலக்கியமெல்லாம் சரோஜா தேவி புக்கு தான்யா? கொல வெறிய கிளப்பாதீரும் மாம்ஸ் சொல்லிட்டேன் ஆமா
விடுறா மாப்ள தானா பொங்கி வருதுடா நான் என்ன பண்றது சொல்லு
வரும்யா வரும் உமக்கெல்லாம் வேலயும் போட்டு கொடுத்து நெட் கனக்செனோட கம்ப்யூட்டரும் குடுத்து இன்னி தேதி வரைக்கும் நீரு வேல செய்யீறிர்னு நம்பிக்கிட்டு இருக்கார் பாத்தீரா உங்க ஓனர் அவர சொல்லனும்யா. உமரெல்லாம் அரபு நாட்டுக்கு அனுப்பனும்யா அப்பதான் சரிப்பட்டு வருவீரு
மாப்ள அங்க மட்டும் என்ன வாழுதாம் ஒரு பெரிய கூட்டமே இருக்காங்கடா தெரியுமா?
அடப்பாவிகளா அங்கேயுமா!! மாம்ஸ்
ஏதோ தமிழுக்கு எங்களால முடிஞ்ச சேவை.வேணும்னா நீயும் ஒன்னு எழுதண்டே மாப்ள நான் ஆரம்பிச்சு தாரேன்
எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறு ஆத்தாங்கிற கதையா உமக்கு புத்தி சொல்ல வந்தா எனக்கே ஆப்பு வைக்க பாக்குறிரு ஆள விடும்யா சாமி.
வியாழன், 10 டிசம்பர், 2009
'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
'யாரு... என்.டி.ஆர். காருவா... ஓய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டிகாருவா...?' என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்... இவர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன்!
அந்த இரண்டு மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்தர் காட்டனுடைய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ‘கங்கை கொண்ட பகீரதன்’ என்று பெயர் சூட்டி, மக்கள் அவரை மனதார பூஜிக்கிறார்கள்!
அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்க இவர் செய்தது... அணைகள் கட்டி, விவசாயத்துக்கான நீராதாரத்தைப் பெருக்கிக் கொடுத்ததுதான்
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கண்ணாவரம் என்ற இடத்திலும், கோதாவரியின் குறுக்கே தௌலெஸ்வரம் என்ற இடத்திலும் இவர் கட்டிய அணைகள்தான், இன்று சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தந்து, பல லட்சம் விவசாயிகளுக்கு வாழ்க்கை கொடுத்து கொண்டுள்ளது.
தமிழகத்திலும்கூட... இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்-கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லையில் இவர் ஏற்படுத்திய அணை (அணைக்கரை), பல லட்சம் விவசாயிகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், இவருடைய பெயர்கூட தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா... என்பதே சந்தேகம்தான். இத்தகைய அணைகளை உருவாக்குவதற்காக ஆர்தர் காட்டன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அடகு வைத்தார் என்பது எத்தனை பெரிய தியாகம். இத்தனைக்கும் நம்மை அடக்கி ஆள்வதற்காக இங்கே வந்து சேர்ந்த ஆங்கிலேயப் பட்டாளத்தில் இவரும் ஒருவர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
ஆர்தர் காட்டன், 15 வயதிலே இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து, கட்டுமானப் பொறியாளராகத் தேர்ச்சி பெற்றவர். 18 வயதில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, அப்போதைய தலைமைப் பொறியாளரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார்.
'வந்தோமா, அனுபவிச்சோமா...' என்றில்லாமல், 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கடமை உணர்வோடு பணியாற்றிய ஆங்கிலேயே அதிகாரிகளும் அப்போது இருக்கத்தான் செய்தார்கள். அவர்களில் ஒருவராக சுற்றிச் சுழன்றார் ஆர்தர் காட்டன்.
''இந்திய நாட்டின் வறுமையைப் போக்க ஒரே மருந்து... இந்த தேசத்தின் நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதுதான்'' என்று சொன்னவர், வெய்யில், மழை என்று பாராமல் தென் இந்திய நதிகளின் மூலம் முதல் சங்கமம் வரை குதிரையில் தனித்துப் பயணம் செய்து, அளவை மற்றும் வரைபடம் தயார் செய்தார். காடு, மேடுகளில் திரிந்ததில் பல தடவை விஷக் காய்ச்சலில் சிக்கி, உயிர் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பணியின் மீதான... மக்களின் மீதான ஆர்வத்தால், தன் சொந்தக் குடும்பத்தைக் கூட கவனிக்காமல், வேலை... வேலை என்று அழைந்ததில் மனைவி கோபித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார். இதற்கு நடுவே, காடுகளில் குடியிருந்ததால் பாம்பு கடிக்கு தன் செல்ல மகளை வேறு பறிகொடுத்தார். அப்படியும் கூட தன்னுடைய முயற்சிகளில் இருந்து ஆர்தர் காட்டன் பின்வாங்கவே இல்லை.
''ஏய்யா... காட்டன், இந்திய நாட்டு மக்களுக்காக நீ ஏன் உன் சொந்தக் குடும்பத்தை, சுகத்தையெல்லாம் தியாகம் செய்யணும்?" என்று மூத்த அதிகாரிகள் கேட்டபோது, ஆர்தர் சொன்ன பதில், ''நான் இந்திய மக்களை காதலிக்கிறேன்" என்பதுதான். அதில் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளாதவராக வலம் வந்தார் ஆர்தர் காட்டன். அதன் பலனாக நமக்குக் கிடைத்த நீர்ப் பாசனத் திட்டங்கள்... இன்றைக்கும் தென்இந்தியாவில் நிலைத்து நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
அப்படியிருக்கும்போது... ஒவ்வொரு வீட்டிலும், ஆர்தர் காட்டனுக்கு சிலை வைத்தாலும் கூட பொருத்தமானதாகத்தான் இருக்கும்!
நன்றி-பசுமை விகடன்.
எங்கேயோ பிறந்து இந்த மண்ணின் மீது காதல் கொண்டு தன் சுக துக்கங்களை தவிர்த்து தொலை நோக்கோடு திட்டங்கள் பல தீட்டி செயல்படுத்திய இவரைப் போன்றோர் ஒருபுறம்.
இங்கேயே பிறந்து வளர்ந்து மண்ணுக்காக இல்லாமல் "சொந்த மக்களுக்காக" தொலை நோக்கோடு திட்டங்கள் தீட்டுபவர்கள் இன்னொரு புறம்.பாலங்கள் கட்டியதையும், சாலைகள் அமைத்ததையும் கூட தம் ஆட்சிகளின் சாதனையாக சொல்லிக் கொள்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதன்பது ஒரு அரசாங்கத்தின் கடமை தானே, இதில் சாதனை என்று சொல்ல என்ன இருக்கிறது.போகிற போக்கில் மழை பெய்வதையும்,வெயில் அடிப்பதையும் கூட தங்களின் சாதனையாக் கூறிக் கொள்வார்கள் போல!!!!!!!!!!
திட்டங்கள் தீட்ட முதல்வர்,செயல்படுத்த அமைச்சர்கள்,அவற்றை கண்காணிக்க துணை முதல்வர்,இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த முறை தமிழகத்தில் மட்டுமே உள்ளது என நம் நிதியமைச்சர் சொல்கிறார்.அதில் அநேகமான திட்டங்கள் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குபவை.
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ஒரு தொடரின் பாடல் வரிகள்,
"பசியென்று வருபவர்க்கு மீன் தரமாட்டோம்,சொந்தத்தில் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்போம்"
ஒரு பாடலசிரியருக்கு தெரிந்த இந்த விசயம் நாட்டை ஆள்பவருக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியமே.
அம்மா
பித்தளைச் சட்டிகளுக்குப்
புளிச்சக்கை
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர்
வெள்ளிப் பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்
பளபளவென
விளக்கிவைக்கும்
அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை!
---------ஜீவி
புளிச்சக்கை
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர்
வெள்ளிப் பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்
பளபளவென
விளக்கிவைக்கும்
அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை!
---------ஜீவி
நான் வேலைக்காக சென்னை செல்லப் போகிறேன் என்று சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்க அவள் முகத்தில் சந்தோஷம் கண்களில் கண்ணீர்,அதற்கான காரணம் நானறிவேன் இருந்தாலும் போயாக வேண்டுமே...அப்பா தன் நண்பரொருவர் மூலம் ஏற்பாடு செய்த வேலையில் சேர.அப்பாவைப் பொறுத்தவரை இது ஒரு அடுத்த கட்டம் பள்ளிப் படிப்பு,கல்லூரி படிப்பு போல அவ்வளவே
உடன் பிறந்தவர்கள் யாருமில்லாத வீட்டில் அம்மாவுக்கு நானே எல்லாமுமாகியிருந்தேன்,கடைக்கு உடன் செல்லும் நண்பனாக,தன் மனக் குமுறல்களை கொட்டும் தோழியாக,வீட்டு வேலைகளில் உதவும் உதவியாளாக.
அம்மா கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய சான்றிதழ்களைப் பார்த்திருக்கிறேன்.படிப்பு முடிந்தவுடன் திருமணம் ஆனது, திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போக கூடாது என்ற நிபந்தனையுடன்.சான்றிதழ்கெல்லாம் தூங்கி கொண்டிருக்கிறது பரணில்.வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் போது மட்டும் எடுத்து பார்த்து விட்டு வைத்து விடுவாள்.
அம்மாவுக்கு நன்றாக ஓவியம் வரைய தெரியும் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.எங்கே காட்டும்மா என கேட்ட போது,பெரு மூச்சுடன் எல்லாம் எரிந்து விட்டதென்றாள்.ஒருமுறை அப்பா அலுவலக கோபத்துடன் வீட்டிற்கு வந்த போது அம்மா தான் தீட்டிய ஓவியம் ஒன்றுக்கு வண்ணம் அடித்து கொண்டிருந்திருக்கிறாள்.அலுவகத்தில் தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியாமல் கோபத்திலிருந்த அப்பா அம்மாவிடம் காட்டிய கோபத்தில் அவள் அதுவரை வரைந்த படங்களெல்லாம் தீக்கிரையானது.அது மட்டுமில்லாமல் புருஷன் வெளிய போய்ட்டு வந்தா ஒரு வாய் தண்ணி கூட குடுக்காம என்ன பண்ணிக்குட்டு இருக்கே நீ ஒன்ன தாலி கட்டி கூட்டிட்டு வந்தது குடும்பம் நடத்த தான் படம் வரையரதுக்கு இல்ல என தெருவுக்கே கேட்கும் படியான் அவர் கத்திய கத்தலால் அரண்டு போனவள் அன்றிலிருந்து ஒவியம் வரைவதை நிறுத்தி விட்டாள்.தானுன்டு தன் வேலையுண்டு என்றாகி விட்டாள்.அநாவசியமாக வெளியில் கூட செல்வதில்லை.கோயிலுக்கோ,கடைக்கோ போக வேண்டுமென்றால் என்னைக் கூட்டிக் கொள்வாள்.
எனக்கு ஒவியம் வரையும் திறமை எங்கிருந்து வந்தது,அம்மா எதற்காக ஒவியத்திற்காக பணம் கேட்கும் போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறாள் என்ற ரகசியங்கள் அன்று தான் தெரிந்தது.
அம்மாவை அப்பா வெளியில் அழைத்து சென்றதாக நினைவில்லை.சொந்தகாரர்களின் நிகழ்வுகளுக்கு கூட தனியாகத் தான் சென்று வருவார் சில சமயங்கள் நான் கூட செல்வேன்.வந்தவுடன் யார் யார் வந்திருந்தார்கள்,உங்க பெரியத்தை பொண்ணு எப்படியிருக்கா,சித்தி பையன் வளந்துட்டானா என ஆர்வமாக விசாரிப்பாள்.22 வருட குடித்தனத்திற்கு பிறகும் அப்பா அம்மாவை புரிந்து கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றும்.அது பற்றி அம்மாவிடம் கேட்கும் போதெல்லாம் புன்னைகைத்து கொண்டே நகர்ந்து விடுவாள்.
தம்பி நீ கல்யாணம் பண்ணினால் வரப் போகும் பெண்ணை அவள் விருப்ப படி இருக்க அனுமதிக்க வேண்டும் என என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
நான் சென்னை செல்லும் நாளில் முதல் முறையாக அப்பா அம்மாவை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார் என்னை வழி அனுப்ப.
அம்மாவின் கண்களில் என்னை தனியே அனுப்புகிறோம் என்ற வலியையும் மீறி ஒரு சந்தோசமே எனக்கு தெரிந்தது.
வண்டி ஏறினேன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கையசைத்தபடி.
எச்சரிக்கை புதிய வரிகள்
அடுத்த பட்ஜெட்டில் அமலாகப் போகும் புதிய வரிகள் ஒரு பார்வை
1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!
2) Qus. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!
3) Qus. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!
4) Qus. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!
5) Qus. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax
6) Qus. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!
7) Qus.. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!
8) Qus. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!
9) Qus. : Doing business in Millions?
Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!
Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax
10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!
11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!
12) Qus.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!
13) Qus.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!
14) Qus.: How come you got such a Big Amount?
Ans.. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!
15) Qus.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!
16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!
17) Qus.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !
18) Qus.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!
19) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!
20) Qus.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!
Last but not ..........
21) INDIAN :: can I die now??
Ans :: wait we are about to launch the funeral tax!!!

புதன், 9 டிசம்பர், 2009
PAA - அமிதாப் to ஆரோ மேக்கப் படங்கள்
67 வயது அமிதாப் படத்தில் பிரஜோரியா நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது ஆரோ வாக எப்படி மாறினார் சில படங்கள்
தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போட எடுத்துக் கொண்ட நேரம்
அமிதாப் மேக்கப்புக்கு மட்டும் படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம் செலவாகியுள்ளது
ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் Christien Tinsley (THE PASSION OF THE CHRIST, CATWOMAN) and Dominie Till (THE LORD OF THE RINGS TRILOGY) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்
போட்ட மேக்கப்பை கலைப்பதற்கு ஏறத்தாழ 2 மணி நேரம் செலவாகுமாம்
மொத்தம் 8 வித விதமான CLAY லேயர்கள் அடங்கியுள்ளது
மேக்கப் போடும் 4 மணி நேரத்திற்கு திட உணவோ திரவ உணவோ எதுவும் கிடையாதாம்
அமிதாப் ஸ்பெஷலாக டிசைன் பண்ணப்பட்ட dentures பயன் படுத்தியுள்ளார்13 வயது சிறுவனின் குரலுக்காக
ஸ்பிச் Pattern கொண்டு வருவதற்காக எக்ஸ்ட்ரா Teeth பயன்படுத்தியுள்ளனர்
அமிதாப் ஷீட்டிங் முழுவதும் மட்டுமில்லாது,டப்பிங்கிலும் dentures பயன் படுத்தியுள்ளார்
சிறுவனின் குரலில் ஒரு பாடலும் பாடியுள்ளார் அமிதாப்
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
யோகி விமர்சனங்கள் - சரியா????
நம்மில் சிலருக்கு விமர்சனம் எழுதாவிட்டால் தூக்கமே வராது. தமிழ்,தெலுகு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம் என எந்த மொழிப் படங்களையும் விட்டு வைப்பதில்லை.விட்டால் போஜ்புரி படத்துக்கும் சுட சுட விமர்சனம் எழுதுவார்கள்.
வேட்டைக்காரனை குறி வைத்து தாக்குகிறார்கள்.படமே இன்னும் வெளி வரவில்லை அதற்குள்ளாகவே ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகள். பாடல்களுக்கும்,ட்ரெய்லர்களுக்கும் ஏற்கனெவே விமர்சனங்கள் எழுதி தீர்த்தாயிற்று.படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளரை விட,விஜயை விட இவர்கள் தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விமர்சிக்க!
இன்னும் சிலர் நுணுக்கமாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உன்னைப் போல் ஒருவனில் கமல் போட்டுருந்த செருப்பு காமன் மேன் போடும் செருப்பு போலில்லை என புலம்புகிறார்கள்.
நடோடிகளைப் பற்றி எல்லாரும் ஆஹோ ஓஹோ என்கிறார்களே என்று படம் பார்க்க போனேன் ஆனால் படம் சாதாரணமாகத்தான் இருக்கிறது,படத்தில் கொண்டாடும் அளவிற்கு எதுவுமில்லை - இது நடோடிகள் படம் பற்றி ஒரு பதிவர் உதிர்த்த முத்து.
யோகியை பொறுத்தவரை இயக்குனர் சிவா, யோகி ட்ஸோட்சியின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட படம், படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படத்தின் பாதிப்பு என்று நானே சொல்லியிருக்கிறேன் என்று கூறிய பின்பும்,யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ட்ஸோட்சி படத்தை தமிழ் மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அல்லது பார்க்க போகிறார்கள்? மொழி புரியாமல் படம் பார்த்து ரசிக்க எல்லாராலும் முடியுமா?
நீங்களே ஒத்துகொண்ட படி அருமையான படமான ட்ஸோட்சியை அவர்கள் யோகி மூலமாக பார்க்கட்டுமே.சினிமா என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கூறுவீர்களானால் ஆகச் சிறந்த உலக சினிமாவாக கருதும் ஒரு படத்தை உங்கள் நண்பர்களுக்கும்,சுற்றத்தவர்களுக்கும் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்??
எல்லாப் படங்களுக்கும் மார்க் போட்ட விகடன் எடுத்த சிவா மனசுல சக்தி படம் எப்படியிருந்தது? அநேகப் படங்களுக்கு 40க்கு கீழே மார்க் போட்ட அவர்களுக்கு 100 மார்க் போட/எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.அவர்களால் ஏன் அப்படி ஒரு படத்தை தயாரிக்க முடியவில்லை?
பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நல்ல சினிமா எடுப்பது எப்படி என விதிமுறைகள் உண்டாக்கி கொடுத்து விட்டீர்களென்றால் இயக்குனர்களுக்கு வேலை எளிதாகிப் போகும்.

சனி, 5 டிசம்பர், 2009
எங்கே எம்.பி.-க்கள்?
பல்வேறு கேள்விகளைக் கேட்க வாய்ப்புக் கேட்டிருந்த 34 எம்.பி-க்களில் 2 பேர் மட்டுமே அந்த கேள்வி நேரத்தின் போது அவைக்கு வந்திருந்தனர்! சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருந்தும், எம்.பி-க்கள் இல்லாததால் ஏறத்தாழ 20 கேள்விகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சபாநாயகர் மீராகுமார், “நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வு நடந்ததே இல்லை!” என்றார் வேதனையோடு.
எங்கே போயிருப்பார்கள்???? இந்த லகுட பாண்டிகள்
பிரியாணி,சரக்கு,மோதிரம்,கம்மல்,மூக்குத்தி,பணம் போன்றவற்றை தேர்தல் கமிசனுக்கு தெரியாமல் மக்களிடம் சேர்ப்பது எப்படி என இடைத் தேர்தலுக்காக நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கலாம்
"கெட்டப்ப" மாத்திட்டு செட்டப்போடு ஊர் சுத்த போயிருக்கலாம்
கிரிக்கெட் பாக்க போய் சேவாக் 300 அடிக்க மிஸ் பண்ணியதால் நொந்து போய் தானே 600 "அடித்து" விட்டு பிளாட் ஆயிருக்கலாம்
ரோடே போடாமல் பில் போட்டு சுருட்டிய கலெக்சனை கவுண்ட் பண்ண அடிப்பொடிகளோடு ரூம் போட்ருக்கலாம்
"நான் நடிச்சா தாங்க மாட்ட" ஒரு பாடாவதி படத்துக்காக பன்ச் டயலாக் பேசி கலைச்சேவை செய்து கொண்டு இருந்திருக்கலாம்
மாவட்ட செயலாலருக்கும் ஒன்றிய செயலாலருக்கும் இடையே நடக்கும் மகளிர் அணித் தலைவிய யார் வச்சுக்குவது என்ற அதி முக்கிய பிரச்சனைய பஞ்சாயத்து பண்ண போயிருக்கலாம்
எது சிறந்தது கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா? பட்டிமன்றம் பாக்க தன் மனைவி மற்றும் துணைவியோடு சேர்ந்து போயிருக்கலாம்
தொகுதி மக்களுக்காக சுழன்று சுழன்று பணியாற்றியதால் ஏற்பட்ட களைப்ப போக்க "அந்த" நடிகையோடு தன் பண்ணை வீட்டில் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம்
கூட்டமே இல்லாத பொதுக்கூட்டத்தில் வரலாறு தெரியுமா உனக்கு? புவியியல் தெரியுமா உனக்கு?என்று அங்கு இல்லாத எதிர்க்கட்சி ஆளிடம் வீராவேசமாக கேள்வி கேட்டு கொண்டிருந்திக்கலாம்
ஆளுங்கட்சி அமைச்சர் இவரை அழைக்காமலேயே திறப்பு விழா நடத்தி திறந்து வைத்த,கக்காவெல்லாம் போன "கக்கூசை" வீம்புக்காக மறுதிறப்பு செய்ய போயிருக்கலாம்.

வியாழன், 3 டிசம்பர், 2009
நாலடி நமீதா
முருகு பார்ப்பதற்கு நமீதாவை நாலடியாக "கம்ப்ரஸ்" பண்ணின மாதிரி இருப்பான்.30 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை/ஆகவிடவில்லை.பார்க்கிற பெண்ணையெல்லாம் எதாவது காரணம் சொல்லி தட்டி கழிச்சு கொண்டிருந்தான்,அவன் சொல்ற காரணம், பொண்ணு பார்க்க போனப்ப அவங்க வீட்ல கொடுத்த மிச்சர்ல கடலையே இல்லை ,பஜ்ஜிக்கு கொடுத்த சட்னில நெறைய காரம் போட்ருந்தாங்க இப்படி போகும்.டேய் பொண்ணு பார்க்க போனாமா கிடைச்ச கேப்ல பொண்ணு கூட கடலைய போட்டோமா ஓகே பண்ணிணோமா அடுத்த முகூர்த்ததலில்யே கல்யாணம் முடிச்சமோனு இல்லாமா ஏண்டா இப்படி படுத்தறேனு கேட்டா "நமக்கு லட்சங்கள் முக்கியமில்லை லட்சியம் தான் முக்கியம்" ன்னு முடியலத்துவம் பேசுவான்
நாங்க வேலை செய்றது ஒரு தேர்ட் பார்டி இன்ஸ்பெக்சன் கம்பெனி, தங்குற இடம்,சாப்பாடு எல்லாமே கிளையன்ட் டோட பொறுப்பு. கிளையன்ட் ஒரு கவர்மென்ட் (அபுதாபி)கம்பெனிங்கிறாதலே சாப்பாடு சூப்பரா இருக்கும்.நம்ம பசங்களெல்லாம் டின்னருக்கு மூணு டீமா சாப்பிட போவோம்.7 மணிக்கு ஒரு டீம்,7.30 க்கு ஒரு டீம்,8 மணிக்கு ஒரு டீம், இவன் முதல் டீமோட சாப்பிட போய்ட்டு கடைசி டீமோட தான் திரும்ப வருவான்.
சூப்ல ஆரம்பிச்சு ஸ்வீட் வரை எந்த ஐட்டத்தையும் மிஸ் பண்ண மாட்டான்.நவரத்னா குருமாவையும் சிக்கன் குருமாவையும் கலந்து கட்டி பரோட்டாவை வச்சிகிட்டு புகுந்து வெளடுவான்.என்னடா பண்றேனு கேட்டால் சாப்பிடற விஷயத்தில் கூச்சப்பட கூடாதுனு எங்க ஆயா சொல்லியிருக்கு என்று அவங்க ஆயாவையும் துணைக்கழைத்துக் கொள்வான்.அங்க கொஞ்ச தூரத்துல இவன் சாப்பிடற அழக பாத்து செஃப் ஆன்ந்த கண்ணிரோட நின்னுக்கிட்ருப்பார்.
சரக்கடிக்க பார்க்கு போனால் 3 சைடிஷ் வாங்குவான்.ஃபிஷ்,சிக்கன்,பீஃப் எல்லாத்திலேயும் ஒன்ணொன்னு.சரக்கடிச்சதுக்கு பிறகு அராப் உடுப்பிக்கு போனா மைசூர் மசாலா தோசை,பொடி தோசை,ஆனியன் ஊத்தப்பம் என சிம்பிளாக முடிச்சுக்குவான்.இவனுக்கு பொண்டாடியா வரப்போற பொண்ணோட நெலமைய நெனைச்சு நாங்க கவலைப் படாத நாளே இல்லை.
இப்படி நாளொரு கிலோவும் பொழுதொரு இன்ச்சுமாக வளர்ந்தவன்
ஊருக்கு லீவுக்கு போய்ட்டு வந்து ஆளே மாறிப் போனான்.
சென்னைல மாமா வீட்ல தங்கி டான்ஸ் ஸ்கூல்ல பணி எடுக்கிற கேரளத்து சேச்சி இவன் அழகுல மயங்கி "ஞான் நிங்கள பிரேமிக்குது"ன்னு பறஞ்சுருச்சாம்.எண்டே அம்மே,இந்த கொடுமைய கேட்டவுடனே நேரா பார்க்கு போயி ஒரு லிட்டர் ரெட் லேபிள முடிச்சதுக்கப்புறம் தான் எங்க வயிறெல்லாம் அணைஞ்சது.
அதுக்கப்றம் நடந்தெல்லாம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை.உடம்ப குறைக்கனும்னு காபிக்கு கூட கலோரி கணக்கு பாக்க ஆரம்பிச்சுட்டான்.பிளாக் காபி,ஓட்ஸ் கஞ்சி அது மட்டுமில்லாமல் கேரட்,வெள்ளரி,பீட்ருட் என ஆடு,மாடு சாப்பிடும் எலை தலை எல்லாம் பச்சையாக சாப்பிடுவான்.4 மணிக்கு ஜிம்க்கு போய் ட்ரெட் மில் அதிர அதிர நடப்பான்.மறந்து கூட சோறு சாப்பிட மாட்டான்.இப்படியாக 94 கிலோ இருந்தவன் ஆறு மாசத்தில் 78 கிலோ ஆனான்.பர் துபாயில் பெல்லி டான்ஸ் ட்ரெஸ்ல்லாம் எடுத்துட்டு ஊருக்கு போனான்.
அந்த சேச்சி வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும் அவன் ஹதையில் வேறு பணிக்கு சேந்துட்டான் என அறிந்து அவனை தொடர்பு கொண்டேன்.
"சாப்பாட்ட குறச்சவ ஒருத்தி அவளே ஹோட்டல்ல நிறுத்தி தனியா எங்க போனாளோ" ரிங் டோன் ஒலித்தது.
பவார்ச்சியில் சாப்பிட்டுட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடு என கட் பண்ணினான்.

செவ்வாய், 1 டிசம்பர், 2009
ஒன் பை 2
ஒன் பை டூ ன்னு சொன்னாலே ஏரியால எல்லாருக்கும் அவனைத் தெரியும்.
டீ குடிக்க போனாலும் சரி சரக்கடிக்க போனாலும் சரி நம்ம ஆளு ஒன் பை டூ தான் கேப்பான் சமயத்தில் ஒன் பை த்ரீ யா மாறும்.
கடையில் இவன் தலை தெரிந்தாலே ஒன் பை டூ வோ அல்லது ஒன் பை த்ரீ யோ போடுவது என்பது அந்த ஏரியா டீ மாஸ்டர்களுக்கு அன்னிச்சையான செயலாகிப் போனது.எப்போதிருந்து இவன் இப்படி என்பது யாரும் அறியாத ஒன்று.
ஒரு முறை இவன் ஒரு டீக்கடையில் ஒன் பை ஃபோர் ஆர்டர் பண்ண கடுப்பான மாஸ்டர் இதுவரை அப்படி போட்டதில்லை எனவும் அது யாராலும் முடியாது எனவும் சொல்ல வெகுண்டு எழுந்தவன் மாஸ்டர் கொடுத்த ஒரு டீக்குரிய ஐட்டங்களை வைத்து அஞ்சு டீ போட்டு நாலு டீயை எடுத்துக் கொண்டு ஒரு டீயை மாஸ்டர்க்கும் கொடுத்ததை ஒரு பெரிய சாதனையாக சொல்லித் திரிகிறான் இன்று வரை.
டாஸ்மாக் க்கு தனியாகப் போனால் இவன மாதிரி ஒரு ஒன் பை டூ பார்ட்டி மாட்டும் வரை காத்திருந்து பார்ட்னர்ஷிப் பேசி ஒரு ஒன் பை டூ குவார்ட்டர் அடிக்காமல் வீடு திரும்பியதில்லை இதுவரை.
பசங்கெலல்லாம் இவனை ஒன் பை டூ என்றே கிண்டல் பண்ணினாலும் அதைப் பற்றி கவலையே பட மாட்டான்
டீக்கடையில் நண்பர்கள் யாராவது இவனிடம் ஏண்டா இப்படி பண்றே உனக்கென்னடா குறைச்சல் வசதியாத்தானடா இருக்க,எல்லாரும் ஓட்டுரானுகடா மாப்ளே என அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி முடித்ததும்
அமைதியாக பின்னால் திரும்பி சொல்வான் "மாஸ்டர் ஒரு ஒன் பை டூ"

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)