பொட்டப்புள்ளையா லட்சணமா ஒரு
எடத்துல இருக்கிறியா கழுதன்னு
வஞ்சுகிட்டே மீச தாத்தா எனக்கிட்ட
பெயர் "ஆடுகாலி"
கள்ளனை தொடரும் காப்பான்
போல அது என்னைத் தொடர்ந்தது
நான் விரும்பாவிட்டாலும்
யாருமறியா ஒரு நள்ளிரவில்
என்னை விரும்பியவனோடு
ஊர் விட்ட பொழுதில்
தொடர்தலை நிறுத்தி விட்டது
பத்து வருடங்கள் கழித்து
சொந்த மண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொடர ஆரம்பித்தது
விசாரிக்கையில் தான் தெரிந்தது
அது ஆடுகாலி அல்ல
"ஓடுகாலி" என்று
எடத்துல இருக்கிறியா கழுதன்னு
வஞ்சுகிட்டே மீச தாத்தா எனக்கிட்ட
பெயர் "ஆடுகாலி"
கள்ளனை தொடரும் காப்பான்
போல அது என்னைத் தொடர்ந்தது
நான் விரும்பாவிட்டாலும்
யாருமறியா ஒரு நள்ளிரவில்
என்னை விரும்பியவனோடு
ஊர் விட்ட பொழுதில்
தொடர்தலை நிறுத்தி விட்டது
பத்து வருடங்கள் கழித்து
சொந்த மண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொடர ஆரம்பித்தது
விசாரிக்கையில் தான் தெரிந்தது
அது ஆடுகாலி அல்ல
"ஓடுகாலி" என்று