புதன், 30 டிசம்பர், 2009
"பல" மொழிகள்
கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!
உபயம் "வால்பையன்"
2) சின்ன புள்ளைக வெள்ளாமை வீடு வந்து சேராது
சின்ன புள்ளைகள வெள்ளாமை பண்ண விட்டுட்டு பெரியவங்க நீங்க எந்த ஆமை கூட சுத்திகிட்டு இருந்தீங்க
உபயம் நெப்போலியன் படம் எஜமான்
3) பாத்திரம் அறிந்து பிச்சையிடு
அந்த பவன்ல எவர்சில்வர் தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திரம் அறிந்து பில் போடு??????????)
உபயம் அண்ணாச்சி
4) நல்லதே நினை நல்லதே நடக்கும்
டில்லி ஒன்டே மேட்ச்ல இந்தியா ஜெயிக்கனும்னு நான் நினைச்சேன்
இலங்கை ஜெயிக்கனும்னு என் நண்பன் நினைச்சான்
கடைசில மேட்ச்சே நடக்கலை
உபயம் டெல்லி கிரிக்கெட் சங்கம்
5)நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும்
இவன் யார்யா இவன் நாட்டு நடப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால 85 வயசு நிறைஞ்ச குடம் தான் இப்ப கூத்தாடுது
உபயம் ஆந்திர டிவி சேனல்
***********************************************
விஐபி மொழிகள்
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்டவர்
விமர்சனம் எழுதினா ஓட்டு போடனும்
படத்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க கூடாது
-அண்னண் கேபிள் சங்கர்
கவிதை எழுதினா ரசிக்கனும்
விளக்கம் கேக்க கூடாது
-கவிஞர் ஆதியார்
அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் பண்னணும்
தூக்கத்துல எழுதற வியாதி இருக்கானு கேக்க கூடாது
-கார்க்கி சகா
**************************************************
நாட்டு நடப்பு மொழிகள்
எலி வளையானலும் தனி வளை வேண்டும்
-சந்திரசேகர் ராவ்
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர கவர்னர்)
****************************************************
ஒரு வருட பயணம்
வியாழன் இரவு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு
அபுதாபிலருந்து விமானம் 2009 டிசம்பர் 31ந் தேதி இரவு 7.55 க்கு புறப்பட்டு 2010 ஜனவரி 1ந் தேதி காலை 3.30 மணிக்கு சென்னை வந்து சேருது.
ங்கொய்யால ஊருக்கு வர்ரதுக்கு ஒரு வருஷம் பயணம் செய்ய வேண்டியது இருக்கு
என்ன கொடுமை குசும்பா இது
எப்படியோ இந்த புது வருஷம் வானத்துல கத்தார் ஏர்வேஸ் தேவதைகளோட.
எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
(சரக்குக்கு மட்டும் எவ்வளவு வேண்டுமானலும் செலவு செய்யும் நண்பர்களை உடையோர் "லெதர்" பாரிலோ அல்லது "நம்பர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்டத்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்கள்)
******************************************************
திங்கள், 28 டிசம்பர், 2009
காதல் வளர்த்தோம்
ஊர் பார்க்க தாலி கட்டவில்லை
உறவு நோக்க மெட்டி போடவில்லை
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை
ஆயினும்
உன் குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நாள் போய் வர
என்னிடம் அனுமதி கேட்டுக் கொண்டு நிற்கிறாயே
இதுக்கு பேர் தான் காதலா?
சனி, 26 டிசம்பர், 2009
ச்சும்மா
லிபரான் போயி தெலுங்கானா வந்தது டும் டும் டும்
தெலுங்கானா போயி கவர்னர் சிடி வந்தது டும் டும் டும்
தீவிர ஆலோசனை -பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
நடந்தது...........
நடக்கிறது........
நடக்கும்..............
ஒரு வேளை நிஜத்திலும் இது தான் நடக்குதோ என்னவோ????
**********************************
வியாழன், 24 டிசம்பர், 2009
'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
செவ்வாய், 22 டிசம்பர், 2009
கரிசல் தேவதைகள்
திங்கள், 21 டிசம்பர், 2009
இரை காணா புலி
உங்களில் ஒருவன் என்று வந்தவனுக்கு வர்ணம் பூசி
ரசித்தீர்கள்
யோகியாக உருவெடுத்தவனை நோக்கி தூர தேசத்தின்
போலி என்றீர்கள்
வேட்டையாட வந்தவனோடு பரமபதம் விளையாடி
மகிழ்ந்தீர்கள்
இதோ
காத்திருக்கிறீர்கள் அடுத்ததை நோக்கி
இரை காணா புலி போல தீராப்
பசியோடு
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
எங்க முதலாளி
வேலை எதுவும் செய்ததில்லை
செய்ய விட்டதில்லை நீ
இனியும் அப்படியே
பிளாக் எழுதலாம்,படிக்கலாம்
பின்னூட்டம் போடலாம்
மைனஸ் ஓட்டு போடலாம் என பல "லாம்"கள்
அலுவலகத்தில் செய்யலாம்
மாதங்கள் முடியும் முன்பே ஊதியம்
ஆண்டுகள் ஆரம்பிக்கும் முன்பே உயர்வு
வாரி வழங்குவதில் கலியுக கர்ணன் நீ
காலை முதல் மாலை வரை ஓப்பி
பின் பின்னிரவு வரை ஹேப்பி
என்ற உன் கொள்கையை மீறியதில்லை
நாங்கள் எந்நாளும்
தங்க,திங்க,தூங்க எந்த குறையும் வைத்ததில்லை நீ
எனினும் உன் மீது ஒரு பெருங்குறை உண்டு
எங்களுக்கெல்லாம்
அது நீ இன்னும் "தேவதைகளை" வேலைக்கு சேர்க்காமலிருப்பது!
சனி, 19 டிசம்பர், 2009
பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு கடிதம்
உச்சகட்ட போர் நடக்கும் நேரத்தில் களத்தை விட்டு விலக நினைக்கும் கார்க்கீ அவர்களுக்கு
நீங்கள் தானே நம்ம தளபதியின் "கீ" தளபதி
வெற்றியும் தோல்வியும் வீரனக்கழகு என்று நம் ராஜகுரு எஸ் ஏ சி கூறுவதை மறந்து விட்டீர்களா
களம் பல கண்டு படை பல வென்று இந்த இடத்திற்கு வந்தவர்கள்தானே நாம்
களத்தில் நாம் சாய்த்த "தல"கள் ஒன்றா இரண்டா.. ஒராயிரம் இருக்கும்
எத்தனை 250 நாள் போர் நடத்தியவர்கள் நாம், நாமே போரைக் கண்டு பயப்படுவதா
ஆட்சிக்கு வர முயற்சி செய்யக் கூடாது என்று மிரட்டுபவர்கள் ஒருபுறம்
கட்சிக்கே வர வேண்டாம் என்று சொல்லுபவர்கள் இன்னொரு புறம்
இந்த இக்கட்டான நேரத்தில் நம் தலைவருக்கு தோளோடு தோள் நின்று போரட வேண்டியவர்கள் நாம் என்பதை மறந்து விட்டு களம் விட முயற்சிக்க வேண்டாம்
தள்ளாத வயதிலும் உளியை ஓசையோடு எடுத்துக் கொண்டு அவர் நடத்தும் போரைக் காணவே ஆயிரம் பிறப்புகள் கூடும் போது நமக்கென்ன குறை?
இது உணர்ச்சி வசப்பட்ட முடிவு என்பதை நாங்கள் அறிவோம்
தயக்கங்களை உதறி தள்ளி விட்டு புயலென கிளம்பி "வாருங்கள்" சகாவே
புரவியும்,வாளும்,நாங்களும் காத்திருக்கிறோம் உங்கள் மீள் வருகையை எதிர் நோக்கி
/தலைவரின் உத்தரவுப் படி/
சின்ன தளபதி மாறவர்மன்
45 வது படைப் பிரிவு
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
கேபிள் சங்கர் - எலி வேட்டை
நடோடி இலக்கியன் - விஜயின் ரஜினிகள் ஆசை.
பரிசல்காரன் - பார்டரில் பாஸ்
பட்டர்ஃபிளை சூர்யா-சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை
இரும்புத்திரை அரவிந்த்- இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி
ஜெட்லி-வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....
தண்டோரா-படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.
ஒன்று : இடைவேளை
இரண்டு:முடிவு
தினகரன் நாளிதழ்
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.
வியாழன், 17 டிசம்பர், 2009
பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்கர்-சப்பாத்தி மேக்கர்
எனக்கு எக்கோ தான் தெரியும் நம்ம ஊர் மலை மேல போய் கத்துனா சூப்பரா எக்கோ வரும் என்றேன்.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
இளையராஜா பற்றி பா இயக்குனர் பால்கி
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
பதிவர்னா சும்மா இல்ல !!!!!!!!!!!!!!!!!!!
யோவ் மாம்ஸ் உமக்கெல்லாம் யார்யா பின்னூட்டம் போடப் போறாங்க அதும் நடு ராத்திரியில, நான் போட்டா தான் உண்டு பதிவ எழுதி முடிச்ச உடனே எம் பேர்ல நீரே ஓட்டும் பின்னூட்டமும் போட்டிகிடுதீரு அப்புறம் என்ன
எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறு ஆத்தாங்கிற கதையா உமக்கு புத்தி சொல்ல வந்தா எனக்கே ஆப்பு வைக்க பாக்குறிரு ஆள விடும்யா சாமி.
வியாழன், 10 டிசம்பர், 2009
'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
தமிழகத்திலும்கூட... இவருடைய சேவைக் கரங்கள் நீளத்தான் செய்தன. கொள்ளிடம் நதியின் குறுக்கே தஞ்சாவூர்-கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லையில் இவர் ஏற்படுத்திய அணை (அணைக்கரை), பல லட்சம் விவசாயிகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி-பசுமை விகடன்.
அம்மா
புளிச்சக்கை
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர்
வெள்ளிப் பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்
பளபளவென
விளக்கிவைக்கும்
அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை!
---------ஜீவி
எச்சரிக்கை புதிய வரிகள்
1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!
2) Qus. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!
3) Qus. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!
4) Qus. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!
5) Qus. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax
6) Qus. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!
7) Qus.. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!
8) Qus. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!
9) Qus. : Doing business in Millions?
Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!
Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax
10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!
11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!
12) Qus.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!
13) Qus.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!
14) Qus.: How come you got such a Big Amount?
Ans.. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!
15) Qus.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!
16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!
17) Qus.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !
18) Qus.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!
19) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!
20) Qus.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!
Last but not ..........
21) INDIAN :: can I die now??
Ans :: wait we are about to launch the funeral tax!!!
புதன், 9 டிசம்பர், 2009
PAA - அமிதாப் to ஆரோ மேக்கப் படங்கள்
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
யோகி விமர்சனங்கள் - சரியா????
வேட்டைக்காரனை குறி வைத்து தாக்குகிறார்கள்.படமே இன்னும் வெளி வரவில்லை அதற்குள்ளாகவே ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகள். பாடல்களுக்கும்,ட்ரெய்லர்களுக்கும் ஏற்கனெவே விமர்சனங்கள் எழுதி தீர்த்தாயிற்று.படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளரை விட,விஜயை விட இவர்கள் தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விமர்சிக்க!
இன்னும் சிலர் நுணுக்கமாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உன்னைப் போல் ஒருவனில் கமல் போட்டுருந்த செருப்பு காமன் மேன் போடும் செருப்பு போலில்லை என புலம்புகிறார்கள்.
நடோடிகளைப் பற்றி எல்லாரும் ஆஹோ ஓஹோ என்கிறார்களே என்று படம் பார்க்க போனேன் ஆனால் படம் சாதாரணமாகத்தான் இருக்கிறது,படத்தில் கொண்டாடும் அளவிற்கு எதுவுமில்லை - இது நடோடிகள் படம் பற்றி ஒரு பதிவர் உதிர்த்த முத்து.
யோகியை பொறுத்தவரை இயக்குனர் சிவா, யோகி ட்ஸோட்சியின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட படம், படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படத்தின் பாதிப்பு என்று நானே சொல்லியிருக்கிறேன் என்று கூறிய பின்பும்,யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ட்ஸோட்சி படத்தை தமிழ் மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அல்லது பார்க்க போகிறார்கள்? மொழி புரியாமல் படம் பார்த்து ரசிக்க எல்லாராலும் முடியுமா?
நீங்களே ஒத்துகொண்ட படி அருமையான படமான ட்ஸோட்சியை அவர்கள் யோகி மூலமாக பார்க்கட்டுமே.சினிமா என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கூறுவீர்களானால் ஆகச் சிறந்த உலக சினிமாவாக கருதும் ஒரு படத்தை உங்கள் நண்பர்களுக்கும்,சுற்றத்தவர்களுக்கும் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்??
எல்லாப் படங்களுக்கும் மார்க் போட்ட விகடன் எடுத்த சிவா மனசுல சக்தி படம் எப்படியிருந்தது? அநேகப் படங்களுக்கு 40க்கு கீழே மார்க் போட்ட அவர்களுக்கு 100 மார்க் போட/எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.அவர்களால் ஏன் அப்படி ஒரு படத்தை தயாரிக்க முடியவில்லை?
பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நல்ல சினிமா எடுப்பது எப்படி என விதிமுறைகள் உண்டாக்கி கொடுத்து விட்டீர்களென்றால் இயக்குனர்களுக்கு வேலை எளிதாகிப் போகும்.
சனி, 5 டிசம்பர், 2009
எங்கே எம்.பி.-க்கள்?
பிரியாணி,சரக்கு,மோதிரம்,கம்மல்,மூக்குத்தி,பணம் போன்றவற்றை தேர்தல் கமிசனுக்கு தெரியாமல் மக்களிடம் சேர்ப்பது எப்படி என இடைத் தேர்தலுக்காக நடக்கும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கலாம்
"கெட்டப்ப" மாத்திட்டு செட்டப்போடு ஊர் சுத்த போயிருக்கலாம்
கிரிக்கெட் பாக்க போய் சேவாக் 300 அடிக்க மிஸ் பண்ணியதால் நொந்து போய் தானே 600 "அடித்து" விட்டு பிளாட் ஆயிருக்கலாம்
ரோடே போடாமல் பில் போட்டு சுருட்டிய கலெக்சனை கவுண்ட் பண்ண அடிப்பொடிகளோடு ரூம் போட்ருக்கலாம்
"நான் நடிச்சா தாங்க மாட்ட" ஒரு பாடாவதி படத்துக்காக பன்ச் டயலாக் பேசி கலைச்சேவை செய்து கொண்டு இருந்திருக்கலாம்
மாவட்ட செயலாலருக்கும் ஒன்றிய செயலாலருக்கும் இடையே நடக்கும் மகளிர் அணித் தலைவிய யார் வச்சுக்குவது என்ற அதி முக்கிய பிரச்சனைய பஞ்சாயத்து பண்ண போயிருக்கலாம்
எது சிறந்தது கூட்டுக் குடும்பமா? தனிக் குடும்பமா? பட்டிமன்றம் பாக்க தன் மனைவி மற்றும் துணைவியோடு சேர்ந்து போயிருக்கலாம்
தொகுதி மக்களுக்காக சுழன்று சுழன்று பணியாற்றியதால் ஏற்பட்ட களைப்ப போக்க "அந்த" நடிகையோடு தன் பண்ணை வீட்டில் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம்
கூட்டமே இல்லாத பொதுக்கூட்டத்தில் வரலாறு தெரியுமா உனக்கு? புவியியல் தெரியுமா உனக்கு?என்று அங்கு இல்லாத எதிர்க்கட்சி ஆளிடம் வீராவேசமாக கேள்வி கேட்டு கொண்டிருந்திக்கலாம்
ஆளுங்கட்சி அமைச்சர் இவரை அழைக்காமலேயே திறப்பு விழா நடத்தி திறந்து வைத்த,கக்காவெல்லாம் போன "கக்கூசை" வீம்புக்காக மறுதிறப்பு செய்ய போயிருக்கலாம்.
வியாழன், 3 டிசம்பர், 2009
நாலடி நமீதா
நாங்க வேலை செய்றது ஒரு தேர்ட் பார்டி இன்ஸ்பெக்சன் கம்பெனி, தங்குற இடம்,சாப்பாடு எல்லாமே கிளையன்ட் டோட பொறுப்பு. கிளையன்ட் ஒரு கவர்மென்ட் (அபுதாபி)கம்பெனிங்கிறாதலே சாப்பாடு சூப்பரா இருக்கும்.நம்ம பசங்களெல்லாம் டின்னருக்கு மூணு டீமா சாப்பிட போவோம்.7 மணிக்கு ஒரு டீம்,7.30 க்கு ஒரு டீம்,8 மணிக்கு ஒரு டீம், இவன் முதல் டீமோட சாப்பிட போய்ட்டு கடைசி டீமோட தான் திரும்ப வருவான்.
சூப்ல ஆரம்பிச்சு ஸ்வீட் வரை எந்த ஐட்டத்தையும் மிஸ் பண்ண மாட்டான்.நவரத்னா குருமாவையும் சிக்கன் குருமாவையும் கலந்து கட்டி பரோட்டாவை வச்சிகிட்டு புகுந்து வெளடுவான்.என்னடா பண்றேனு கேட்டால் சாப்பிடற விஷயத்தில் கூச்சப்பட கூடாதுனு எங்க ஆயா சொல்லியிருக்கு என்று அவங்க ஆயாவையும் துணைக்கழைத்துக் கொள்வான்.அங்க கொஞ்ச தூரத்துல இவன் சாப்பிடற அழக பாத்து செஃப் ஆன்ந்த கண்ணிரோட நின்னுக்கிட்ருப்பார்.
சரக்கடிக்க பார்க்கு போனால் 3 சைடிஷ் வாங்குவான்.ஃபிஷ்,சிக்கன்,பீஃப் எல்லாத்திலேயும் ஒன்ணொன்னு.சரக்கடிச்சதுக்கு பிறகு அராப் உடுப்பிக்கு போனா மைசூர் மசாலா தோசை,பொடி தோசை,ஆனியன் ஊத்தப்பம் என சிம்பிளாக முடிச்சுக்குவான்.இவனுக்கு பொண்டாடியா வரப்போற பொண்ணோட நெலமைய நெனைச்சு நாங்க கவலைப் படாத நாளே இல்லை.
இப்படி நாளொரு கிலோவும் பொழுதொரு இன்ச்சுமாக வளர்ந்தவன்
ஊருக்கு லீவுக்கு போய்ட்டு வந்து ஆளே மாறிப் போனான்.
சென்னைல மாமா வீட்ல தங்கி டான்ஸ் ஸ்கூல்ல பணி எடுக்கிற கேரளத்து சேச்சி இவன் அழகுல மயங்கி "ஞான் நிங்கள பிரேமிக்குது"ன்னு பறஞ்சுருச்சாம்.எண்டே அம்மே,இந்த கொடுமைய கேட்டவுடனே நேரா பார்க்கு போயி ஒரு லிட்டர் ரெட் லேபிள முடிச்சதுக்கப்புறம் தான் எங்க வயிறெல்லாம் அணைஞ்சது.
அதுக்கப்றம் நடந்தெல்லாம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை.உடம்ப குறைக்கனும்னு காபிக்கு கூட கலோரி கணக்கு பாக்க ஆரம்பிச்சுட்டான்.பிளாக் காபி,ஓட்ஸ் கஞ்சி அது மட்டுமில்லாமல் கேரட்,வெள்ளரி,பீட்ருட் என ஆடு,மாடு சாப்பிடும் எலை தலை எல்லாம் பச்சையாக சாப்பிடுவான்.4 மணிக்கு ஜிம்க்கு போய் ட்ரெட் மில் அதிர அதிர நடப்பான்.மறந்து கூட சோறு சாப்பிட மாட்டான்.இப்படியாக 94 கிலோ இருந்தவன் ஆறு மாசத்தில் 78 கிலோ ஆனான்.பர் துபாயில் பெல்லி டான்ஸ் ட்ரெஸ்ல்லாம் எடுத்துட்டு ஊருக்கு போனான்.
அந்த சேச்சி வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும் அவன் ஹதையில் வேறு பணிக்கு சேந்துட்டான் என அறிந்து அவனை தொடர்பு கொண்டேன்.
"சாப்பாட்ட குறச்சவ ஒருத்தி அவளே ஹோட்டல்ல நிறுத்தி தனியா எங்க போனாளோ" ரிங் டோன் ஒலித்தது.
பவார்ச்சியில் சாப்பிட்டுட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடு என கட் பண்ணினான்.
செவ்வாய், 1 டிசம்பர், 2009
ஒன் பை 2
டீ குடிக்க போனாலும் சரி சரக்கடிக்க போனாலும் சரி நம்ம ஆளு ஒன் பை டூ தான் கேப்பான் சமயத்தில் ஒன் பை த்ரீ யா மாறும்.
கடையில் இவன் தலை தெரிந்தாலே ஒன் பை டூ வோ அல்லது ஒன் பை த்ரீ யோ போடுவது என்பது அந்த ஏரியா டீ மாஸ்டர்களுக்கு அன்னிச்சையான செயலாகிப் போனது.எப்போதிருந்து இவன் இப்படி என்பது யாரும் அறியாத ஒன்று.
ஒரு முறை இவன் ஒரு டீக்கடையில் ஒன் பை ஃபோர் ஆர்டர் பண்ண கடுப்பான மாஸ்டர் இதுவரை அப்படி போட்டதில்லை எனவும் அது யாராலும் முடியாது எனவும் சொல்ல வெகுண்டு எழுந்தவன் மாஸ்டர் கொடுத்த ஒரு டீக்குரிய ஐட்டங்களை வைத்து அஞ்சு டீ போட்டு நாலு டீயை எடுத்துக் கொண்டு ஒரு டீயை மாஸ்டர்க்கும் கொடுத்ததை ஒரு பெரிய சாதனையாக சொல்லித் திரிகிறான் இன்று வரை.
டாஸ்மாக் க்கு தனியாகப் போனால் இவன மாதிரி ஒரு ஒன் பை டூ பார்ட்டி மாட்டும் வரை காத்திருந்து பார்ட்னர்ஷிப் பேசி ஒரு ஒன் பை டூ குவார்ட்டர் அடிக்காமல் வீடு திரும்பியதில்லை இதுவரை.
பசங்கெலல்லாம் இவனை ஒன் பை டூ என்றே கிண்டல் பண்ணினாலும் அதைப் பற்றி கவலையே பட மாட்டான்
டீக்கடையில் நண்பர்கள் யாராவது இவனிடம் ஏண்டா இப்படி பண்றே உனக்கென்னடா குறைச்சல் வசதியாத்தானடா இருக்க,எல்லாரும் ஓட்டுரானுகடா மாப்ளே என அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணி முடித்ததும்
அமைதியாக பின்னால் திரும்பி சொல்வான் "மாஸ்டர் ஒரு ஒன் பை டூ"
திங்கள், 30 நவம்பர், 2009
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது-2
கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளைநாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையைதவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். TableSalt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாகBragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்(gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமானஉணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,இது மிகவும் ஆபத்தானது..
4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழுதானியங்கள், விதைகள்,பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமானசெல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளைதவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.
ஞாயிறு, 29 நவம்பர், 2009
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!
தொடரும்....