skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

மு.க‌ & ஜெ.ஜெ

மெயிலில் வ‌ந்த‌து..........

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at பிற்பகல் 3:43 5 comments
Labels: அர‌சிய‌ல், நகைச்சுவை

சனி, 4 செப்டம்பர், 2010

எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே!

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.
அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!
உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

ஜுனிய‌ர் விக‌ட‌னில் வெளியான‌ க‌ட்டுரை
Thanks - Vikatan.com

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 8:25 8 comments
Labels: அர‌சிய‌ல், சினிமா

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தேவாசுர‌ம்

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 9:07 1 comments
Labels: சினிமா

வியாழன், 29 ஜூலை, 2010

ப‌ட்டப்பெய‌ர்

பொட்ட‌ப்புள்ளையா ல‌ட்ச‌ண‌மா ஒரு
எட‌த்துல‌ இருக்கிறியா க‌ழுத‌ன்னு
வ‌ஞ்சுகிட்டே மீச‌ தாத்தா என‌க்கிட்ட‌
பெயர் "ஆடுகாலி"

கள்ளனை தொட‌ரும் காப்பான்
போல‌ அது என்னைத் தொட‌ர்ந்த‌து
நான் விரும்பாவிட்டாலும்

யாரும‌றியா ஒரு ந‌ள்ளிர‌வில்
என்னை விரும்பிய‌வ‌னோடு
ஊர் விட்ட‌ பொழுதில்
தொட‌ர்த‌லை நிறுத்தி விட்ட‌து

ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
சொந்த‌ ம‌ண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொட‌ர‌ ஆர‌ம்பித்த‌து

விசாரிக்கையில் தான் தெரிந்த‌து
அது ஆடுகாலி அல்ல‌
"ஓடுகாலி" என்று
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 9:17 5 comments
Labels: க‌விதை

புதன், 21 ஜூலை, 2010

ஊர்க்காசு

சிறு வ‌ய‌தில்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெள‌ம்பும்
போதெல்லாம்

தாத்தாவுக்கு தெரியாம‌ல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாம‌ல்
மாமாவும்
ச‌ட்டைப் பையில் திணிப்பார்க‌ள்

சில‌தில் க‌ந்த‌க‌ வாசனை
சில‌தில் வெத்த‌லை வாச‌னை

இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
என் பைய‌னுக்கும் கிடைக்கிற‌து
பை நெறைய ஊர்க்காசு
அதே வாச‌னைக‌ளோடு

இங்கு வ‌ருமுன்பு

இந்த‌ ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செல‌வு
ப‌ண்ணி அத‌யும் இத‌யும்
வாங்குறீங்க‌ன்னு கேட்ட‌
என் ம‌னைவிக்கு இப்போவாது
புரியுமென‌ நெனைக்கிறேன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 8:51 23 comments
Labels: கவிதை

செவ்வாய், 20 ஜூலை, 2010

க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌

எப்ப‌ பாத்தாலும் க‌ப்பா,ம‌த்திக்க‌றி,ப‌ரோட்டா,பீஃப் ஃபிரைனு வ‌ழ‌க்க‌மான‌ அயிட்ட‌ங்க‌ளா சாப்பிட்டு போர‌டிக்குது.வேற‌ எதாவ‌து ஸ்பெஷ‌ல் அயிட்ட‌ங்க‌ள் கெடைக்கிற‌ க‌டைக்கு கூட்டிட்டு போங்க‌ன்னு நான் சொன்ன‌த‌ கேட்டு, சேட்ட‌ன் (என் கூட‌ வேலை செய்ப‌வ‌ர்) கொண்டு போன‌து தான் இந்த‌க் க‌டை.கேர‌ளால‌ "த‌ட்டுக்க‌ட‌"ன்னா ந‌ம்மூரு கையேந்தி ப‌வ‌ன் மாதிரி.கையேந்தி ப‌வ‌னா ஆர‌ம்பிச்சு இப்ப‌ அமீர‌க‌த்துல‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் ரெஸ்ட்டாரெண்ட் வ‌ச்சிருக்காங்க‌.பேர‌க் கேட்ட‌தும் "எங்க‌ நின்னுக்கிட்ட‌ சாப்பிட‌ விட்ருவாங்க‌ளோன்னு ப‌ய‌ந்துகிட்டே போனேன்.நான் நினைச்ச‌ மாதிரியில்லை,செட்டப் எல்லாம் ந‌ல்லாத்தான் இருந்த‌து.

புட்டுப் பிரியாணி

புட்டு செஞ்சு..அத‌ உதிர்த்து விட்டு,அதுல‌ சிக்க‌ன் கொழ‌ம்பு சேர்த்து தோசைக் க‌ல்லில் போட்டு கொத்தி எடுத்தா அது தான் புட்டுப் பிரியாணி.ந‌ம்ம‌ கொத்துப் ப‌ரோட்டா மாதிரி தான். பாக்குற‌துக்கு சிக்க‌ன் உப்புமா மாதிரி இருந்தாலும் ப‌ய‌ங்க‌ர‌ டேஸ்ட்.தொட்டுக்கிற‌துக்கு ஊறுகாய், தயிர் வெங்காய‌ம் குடுக்குறாங்க‌.சிக்க‌ன் இல்லாம‌.. பீஃப் அல்ல‌து ம‌ட்ட‌ன் சேர்த்தும் கிடைக்கிற‌து

சிக்க‌ன் 5000

பேரே டெர்ர‌ரா இருக்குல்ல.உண்மையில் இதுக்கு இன்னும் பெயர் சூட்ட‌ப்ப‌ட‌வில்லை.இந்த‌ அயிட்ட‌ம் ஆர்ட‌ர் ப‌ண்ணினால் கொண்டு வ‌ரும் போதே கையோட‌ ஒரு கூப்ப‌னும் கொண்டு வர்றாங்க‌.சாப்பிட்டு பார்த்துட்டு நாம தான் இதுக்கு பேர் வைக்க‌ணும்..ந‌ம்ம‌ முக‌வ‌ரி எழுதி கூப்ப‌ன‌ அங்க‌ இருக்குற‌ பெட்டியில‌ போட்டுட்டு வ‌ந்துர‌ணும்.குலுக்க‌லில் ந‌ம்ம‌ வ‌ச்ச‌ பேரு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டால் 5000 திராம்ஸ் ப‌ரிசு.(ஸ்ஸ்.. அப்பா எப்ப‌டியெல்லாம் விள‌ம்ப‌ர‌ம் ப‌ண்றானுக‌..)

ஆர்வ‌க் கோளாறுல‌ வாங்கிப் பார்த்தா வ‌ழ‌க்க‌மான‌ சிக்க‌ன் ஃபிரை மேல‌ கொஞ்ச‌ம் தேங்காய் துருவ‌ல் தூவி விட்டுருக்கானுக‌,அவ்ள‌ தான்.

ம‌ற்ற‌ப‌டி புட்டு,க‌ட‌லைக்க‌றி,க‌ப்பா,ம‌த்திக்க‌றி,ம‌த்தி ஃபிரை,ஆப்ப‌ம்,ஃபீப் ஃபிரை போன்ற‌ வ‌ழ‌க்க‌மான‌ கேர‌ள‌ அயிட்ட‌ங்க‌ள் கிடைக்கின்றன‌.

இங்க‌ சாப்பிடும் போது சேட்ட‌ன் ச‌காவு இந்த‌ மேட்ட‌ர‌ சொன்னார்.கேர‌ளாவில் சுவையான உண‌வுக‌ள் கிடைப்ப‌து க‌ள்ளு ஷாப்புக‌ளில் தானாம்.



இதுக்காக‌வாது அடுத்த‌ விடுமுறையில் கேர‌ளா செல்ல‌ வேண்டும்!
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 7:11 7 comments
Labels: அனுப‌வ‌ம், உண‌வு

சனி, 17 ஜூலை, 2010

சின்ன‌ சைக்கிள்




சனிக்கெழ‌ம‌ காலங்காத்தாலே
எந்திச்சு கோட்டு வாய‌க் கூட‌
க‌ழுவாம‌ ம‌ணி சைக்கிள் க‌டைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட‌
கெஞ்சி வாங்குன‌ ஒத்த‌ ரூபாயோட‌
அங்க‌ன‌ போய் பாத்தா
என‌க்கு முன்னாடியே
ஊளமூக்க‌ன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
ஒரு ம‌ணி நேர‌ம் காத்துக்
கெட‌ந்து சைக்கிள் கைக்கு
வ‌ந்த‌தும் ச‌ந்தோச‌ம்
பிளேனே கெட‌ச்ச‌ மாதிரி
வ‌ண்டிப்பாத‌,க‌ம்மாக்க‌ரை
க‌ள‌த்து மேடு,க‌ரிச‌க் காடுன்னு
சுத்தினாலும் அப்ப‌ப்போ
ம‌ணி அண்ண‌ன் க‌டையில‌ போய்
ம‌ணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன‌ காட்டுக்கு போய்ட்ட‌
தாத்தாவுக்கு க‌ஞ்சி கொண்டு
போற‌து,ரேஷ‌ன் க‌டையில‌ போய்
ச‌க்க‌ர‌ வாங்குற‌து எல்லாம்
இந்த‌ சைக்கிள்ள‌ தான்
த‌ண்ணி குடிக்காம‌ நீச்ச‌ல்
ப‌ழ‌க‌ முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல‌
சொல்வாங்க‌
முட்டில‌ அடிபட்டா ர‌த்த‌ம்
நிக்கிற‌துக்கு க‌ர‌ம்ப‌ ம‌ண்ணுதான்
ம‌ருந்து அப்ப‌வும் சைக்கிள்
நிக்காது
ம‌க்காடு,பெல்லு,பிரேக்
கேரிய‌ல் எதுவுமே இல்லாத‌
ஒரு வாட‌கை சைக்கிள் தான்
என‌க்கு கெட‌ச்ச‌து ப‌ழ‌க‌ற‌துக்கு
இப்ப‌ எங்க‌க்கா ம‌க‌னுக்கு வாங்குன‌
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் ப‌ழ‌க‌த்தான் இட‌மில்ல‌
கிச்ச‌னுக்கும் ஹாலுக்கும்
இடைப்ப‌ட்ட‌ தூர‌த்தை த‌விர்த்து.

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 8:17 15 comments
Labels: அனுப‌வ‌ம்
« பழைய இடுகைகள்
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ▼  2011 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • மு.க‌ & ஜெ.ஜெ
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio