skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 30 டிசம்பர், 2009

"ப‌ல‌" மொழிக‌ள்

1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

 கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!

உப‌ய‌ம் "வால்பைய‌ன்"

2) சின்ன‌ புள்ளைக‌ வெள்ளாமை வீடு வ‌ந்து சேராது

சின்ன‌ புள்ளைக‌ள‌ வெள்ளாமை ப‌ண்ண‌ விட்டுட்டு பெரிய‌வ‌ங்க‌ நீங்க‌ எந்த ஆமை கூட‌ சுத்திகிட்டு இருந்தீங்க‌

உப‌ய‌ம் நெப்போலிய‌ன் ப‌ட‌ம் எஜ‌மான்

3) பாத்திர‌ம் அறிந்து பிச்சையிடு

அந்த‌ ப‌வ‌ன்ல‌ எவ‌ர்சில்வ‌ர் த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி த‌ட்டுல‌ மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திர‌ம் அறிந்து பில் போடு??????????)

உப‌ய‌ம் அண்ணாச்சி‌

4) ந‌ல்ல‌தே நினை ந‌ல்ல‌தே நட‌க்கும்

டில்லி ஒன்டே மேட்ச்ல‌ இந்தியா ஜெயிக்க‌னும்னு நான் நினைச்சேன்
இல‌ங்கை ஜெயிக்க‌னும்னு என் ந‌ண்ப‌ன் நினைச்சான்
க‌டைசில‌ மேட்ச்சே ந‌ட‌க்க‌லை

உப‌ய‌ம் டெல்லி கிரிக்கெட் ச‌ங்க‌ம்

5)நிறை குட‌ம் த‌ளும்பாது குறை குட‌ம் கூத்தாடும்

இவ‌ன் யார்யா இவ‌ன் நாட்டு ந‌ட‌ப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால‌ 85 வ‌ய‌சு நிறைஞ்ச‌ குட‌ம் தான் இப்ப‌ கூத்தாடுது

உப‌ய‌ம் ஆந்திர‌ டிவி சேன‌ல்

***********************************************
விஐபி மொழிக‌ள்

ப‌ழ‌மொழி சொன்னா அனுப‌விக்க‌னும் ஆராய‌க் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்ட‌வ‌ர்

விம‌ர்ச‌ன‌ம் எழுதினா ஓட்டு போட‌னும்
ப‌ட‌த்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க‌ கூடாது
-அண்னண் கேபிள் ச‌ங்க‌ர்

க‌விதை எழுதினா ர‌சிக்க‌னும்
விள‌க்க‌ம் கேக்க‌ கூடாது
-க‌விஞ‌ர் ஆதியார்

அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் ப‌ண்ன‌ணும்
தூக்கத்துல‌ எழுத‌ற‌ வியாதி இருக்கானு கேக்க‌ கூடாது
-கார்க்கி ச‌கா

**************************************************
நாட்டு ந‌ட‌ப்பு மொழிக‌ள்

எலி வ‌ளையான‌லும் த‌னி வ‌ளை வேண்டும்
-ச‌ந்திர‌சேக‌ர் ராவ்

க‌ண்ணால் காண்ப‌தும் பொய்,காதால் கேட்ப‌தும் பொய்,தீர‌ விசாரித்து அறிவ‌தே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர க‌வ‌ர்ன‌ர்)

****************************************************
ஒரு வ‌ருட‌ ப‌ய‌ண‌ம்

வியாழ‌ன் இர‌வு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு

அபுதாபில‌ருந்து விமான‌ம் 2009 டிச‌ம்ப‌ர் 31ந் தேதி இர‌வு 7.55 க்கு புற‌ப்ப‌ட்டு 2010 ஜ‌னவ‌ரி 1ந் தேதி காலை 3.30 ம‌ணிக்கு சென்னை வ‌ந்து சேருது.

ங்கொய்யால‌ ஊருக்கு வ‌ர்ர‌துக்கு ஒரு வ‌ருஷ‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டிய‌து இருக்கு

என்ன‌ கொடுமை குசும்பா இது

எப்ப‌டியோ இந்த‌ புது வ‌ருஷ‌ம் வான‌த்துல‌ க‌த்தார் ஏர்வேஸ் தேவ‌தைக‌ளோட‌.

எல்லாருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்

(ச‌ர‌க்குக்கு ம‌ட்டும் எவ்வ‌ள‌வு வேண்டுமான‌லும் செல‌வு செய்யும் ந‌ண்ப‌ர்க‌ளை உடையோர் "லெத‌ர்" பாரிலோ அல்ல‌து "ந‌ம்ப‌ர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்ட‌த்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்க‌ள்)
******************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:17 AM
Labels: அனுப‌வ‌ம், மொக்கை

21 comments:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகான விளக்கம் நண்பா.....

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........

30 டிசம்பர், 2009 அன்று 8:42 AM
கண்ணா.. சொன்னது…

ங்கொய்யால..

2010 ஆரம்பத்துலயே.. இந்தியாவுக்கு சனியன் காலடி எடுத்து வைக்கே.........


தாய்மண்ணை யாராவது காப்பாத்துங்க..............

30 டிசம்பர், 2009 அன்று 9:27 AM
கண்ணா.. சொன்னது…

just kidding

happy vacation da machaan

HAPPY NEW YEAR

30 டிசம்பர், 2009 அன்று 9:28 AM
vasu balaji சொன்னது…

ஏப்பு. இங்க விட்டு அங்கன போகவும் ங்கொய்யால ஊருக்கு திரும்பறதுக்கும் ங்கொய்யாலவா..:)) வாங்க வாங்க.

30 டிசம்பர், 2009 அன்று 9:47 AM
கலையரசன் சொன்னது…

கண்ணா மாதிரி போயிட்டு வர வாழ்த்துக்கள்...
(அப்பதான, ஒரு 5 மாசம் கழிச்சு வருவ...!!)

க‌த்தார் ஏர்வேஸ்ல உன்னோட அண்ணிங்க வருவாங்க.. அண்ணன் நான் விசாரிச்சதா சொல்லு!!

30 டிசம்பர், 2009 அன்று 11:15 AM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

சிரிச்சி முடியலை.

கத்தார் ஏர்வேஸில் சாப்பாடு சுமார்தான்.(அதானே நாம சாப்பாட்டுக்காகவா போறோம்)

புத்தாண்டு வாழ்த்துகள்.

30 டிசம்பர், 2009 அன்று 11:23 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி Sangkavi

ந‌ன்றி கண்ணா..

ந‌ன்றி வானம்பாடிகள் சார்

ந‌ன்றி கலை
சொல்லிப்புடுறேன்

ந‌ன்றி அக்பர்
அதே

30 டிசம்பர், 2009 அன்று 1:03 PM
அன்புடன் அருணா சொன்னது…

நல்ல மொழிகள்!

30 டிசம்பர், 2009 அன்று 4:58 PM
தர்ஷன் சொன்னது…

வாவ் சூப்பர்

வால் பையனை வீணே பழமொழி சொல்லி சீண்டியவர்களுக்கு அவர் கொடுத்த மேற்படி பதிலை ரொம்பவே ரசித்தேன். இன்னமும் அவர் கேட்ட குறள் விளக்கம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.

30 டிசம்பர், 2009 அன்று 5:10 PM
sriram சொன்னது…

பல மொழி பழ மொழிகள் ஜூப்பர் கரிசல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் Bon Voyage
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

30 டிசம்பர், 2009 அன்று 6:35 PM
செ.சரவணக்குமார் சொன்னது…

//எப்ப‌டியோ இந்த‌ புது வ‌ருஷ‌ம் வான‌த்துல‌ க‌த்தார் ஏர்வேஸ் தேவ‌தைக‌ளோட‌.//

ரைட்டு கலக்குங்க நண்பா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

30 டிசம்பர், 2009 அன்று 7:23 PM
துபாய் ராஜா சொன்னது…

பல மொழிகள் அருமை.

ஹாப்பி ஊர் டேஸ்.

(ஏன் நண்பா, நமக்கு திருவனந்தபுரம் தானே பக்கம். ஏன் சென்னை போய் ஒரு நாள் வேஸ்ட் பண்றீங்க..)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

30 டிசம்பர், 2009 அன்று 9:00 PM
புலவன் புலிகேசி சொன்னது…

பல மொழி நகைச்சுவை விளக்க தொகுப்பு...இந்தியா வாறியளா..வங்க வாங்க

31 டிசம்பர், 2009 அன்று 3:03 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@அன்புடன் அருணா ந‌ன்றி டீச்ச‌ர்

ந‌ன்றி தர்ஷன் நானும் ர‌சித்தேன் ந‌ண்பா

ந‌ன்றி பாஸ்டன் ஸ்ரீராம்

ந‌ன்றி செ.சரவணக்குமார் (ஸாரி ந‌ண்பா)

ந‌ன்றி துபாய் ராஜா
ந‌ம‌க்கு சென்னை தான் எப்ப‌வும்.(அண்ணே நானும் ச‌ங்க‌ர்ல‌ தான் ப‌டிச்சேன்)

ந‌ன்றி புலவன் புலிகேசி

31 டிசம்பர், 2009 அன்று 7:24 AM
அத்திரி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

31 டிசம்பர், 2009 அன்று 6:42 PM
ஷங்கி சொன்னது…

”பலே”மொழிகள்.
புத்தாண்டு வாழ்த்துகள். விடுமுறை உற்சாகமாகக் கழிய வாழ்த்துகள்.

31 டிசம்பர், 2009 அன்று 8:27 PM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

31 டிசம்பர், 2009 அன்று 11:31 PM
பெயரில்லா சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

1 ஜனவரி, 2010 அன்று 9:18 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி அத்திரி

ந‌ன்றி ஷங்கி

ந‌ன்றி அக்பர்

ந‌ன்றி சரவணகுமரன்

ந‌ன்றி கடையம் ஆனந்த்

1 ஜனவரி, 2010 அன்று 1:56 PM
கார்க்கிபவா சொன்னது…

கலக்கல் சகா

உபயம்: நர்சிம்

2 ஜனவரி, 2010 அன்று 8:38 PM
Prathap Kumar S. சொன்னது…

//(அதானே நாம சாப்பாட்டுக்காகவா போறோம்)//
அதானே...

//ஏன் நண்பா, நமக்கு திருவனந்தபுரம் தானே பக்கம். ஏன் சென்னை போய் ஒரு நாள் வேஸ்ட் பண்றீங்க..)//

அது வேறஒணணும் இல்ல ராசா...திருவனந்தபுரத்துலருந்து போகும்போது எங்கூரை கிராஸ்பண்ணித்தான் போகனும்... அதான் புள்ளபயந்துருச்சு... கரிசலு உமக்கிருக்குடி...

6 ஜனவரி, 2010 அன்று 2:03 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio