skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 28 டிசம்பர், 2009

காத‌ல் வ‌ளர்த்தோம்




ஊர் பார்க்க‌ தாலி க‌ட்டவில்லை

உற‌வு நோக்க‌ மெட்டி போட‌வில்லை

அம்மி மிதித்து அருந்ததி பார்க்க‌வில்லை

ஆயினும்

உன் குல‌ தெய்வ‌ம் கோயிலுக்கு ஒரு நாள் போய் வ‌ர‌

என்னிட‌ம் அனும‌தி கேட்டுக் கொண்டு நிற்கிறாயே

இதுக்கு பேர் தான் காதலா?


என் டிரெஸ் ந‌ல்லா இருக்கா, உன‌க்கு பிடிக்கும்னு தான் நீல‌ க‌ல‌ர் அப்பாகிட்ட‌ சொல்லி எடுக்க‌ சொன்னேன் , நிமிர்ந்து பார்த்தேன்.ஆகாய‌ நீல‌ க‌ல‌ர் தாவ‌ணி,ஒற்றைச் செயின்,நுனியில் சின்ன‌ முடிச்சிட்ட‌ கூந்த‌ல்,த‌லை நிறைய‌ ம‌ல்லி என‌ என‌க்கு பிடித்த‌ மாதிரி இருந்தாய்

ம் ந‌ல்லாருக்கு என்றேன்

என் சுர‌த்தில்லாத‌ ப‌திலுக்கு முக‌ம் சுண்டிப் போன‌வ‌ளாய் என்ன ஆச்சு என்றாய்?

என்னால் உன்னை கோபிக்க‌ முடியாதென‌ நீ அறிந்திருந்தாலும் வ‌ருத்த‌த்துட‌ன், உன்ன‌ விட்டுட்டு போறேன்னு கோப‌மா ,ஒரு நாள் தானே நாளைக்கு காலையில உன் முன்னாடி இருப்பேன் என்றாய்.

அதெல்லாம் ஒன்னுமில்லே என்றேன்

வேற‌ன்ன‌ என்றாய் தலையை கோதிய‌ப‌டி

ச‌ரி போய்ட்டு வா ஆனா............ம‌ருந்து வேணும் என்றேன் க‌ன்ன‌த்தைக் காட்டி சின்ன‌ சிரிப்புட‌ன்

உன்னை என‌க்கு தெரியாத‌டா க‌ள்ளா எனும்ப‌டியாக‌ ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒஹோ அதுக்குத்தான் மூஞ்சிய தூக்கி வ‌ச்சிருந்தயா? ஆள‌ விடு சாமி வீட்ல‌ எல்லாரும் என்னைத் தேடுவாங்க‌ நான் போக‌ணும்,க‌ண‌க்குல‌ வ‌ச்சுக்கோ க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் மொத்த‌மா த‌ர்றேன்னு சொல்லிட்டு நாக்கை நீட்டி ப‌ழிப்பு காட்டிய‌ப‌டி வேக‌மாக‌ ந‌ட‌ந்தாய் நீ, நான் க‌ள்ள‌ க‌ண‌க்கு எழுதுவேன்னு சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்.

நாங்க‌ள் புதிதாக‌ க‌ட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஒரு மாலைப் பொழுதில் வ‌ந்த‌வ‌ள், வேலை செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து பார்த்து ந‌ல்லா வேலை செய்யுங்க‌, இப்ப‌டி மெதுவா வேலை செஞ்சு எப்ப‌ வீடு க‌ட்டி நான் எப்ப‌ இங்க‌ வ‌ந்து விள‌க்கேத்த‌ற‌து என்று அத‌ட்டினாய் என் அப்பா உள் ப‌க்க‌ம் இருப்ப‌தை அறியாம‌ல்.

அது யாருப்பா இந்த‌ வீட்டுக்கு வ‌ர‌ப் போற‌ ம‌கால‌ஷ்மி என்ற ப‌டி வெளியே வ‌ந்த‌ அப்பாவைப் பார்த்த‌தும்,ஒரு க‌ண‌ம் ப‌ய‌ந்த‌ நீ அச்ச‌ச்சோ என்று கைக‌ளை உத‌றிய‌ப‌டி என்னைப் பார்த்தாய், நான் சிரித்த‌ப‌டி நின்று கொண்டிருப்ப‌தைப் பார்த்த‌தும்

"இரு உன்னை" என்று என்னை க‌ண்க‌ளாலேயே மிர‌ட்டி விட்டு ஓட்ட‌ம் பிடித்தாய் கொலுசுக‌ள் சிணுங்க‌.

அத‌ன் பிற‌கு உன் வீட்டில் அப்பா வந்து பேசிய‌தும், ந‌ம் திரும‌ண‌ம் முடிந்து என் க‌ள்ள‌ க‌ண‌க்குக‌ளை நீ தீர்த்து வைத்த‌தையும் அசை போட்டு கொண்டிருக்கிறேன், நீ ஒரு ந‌ல்ல‌ க‌ண‌க்கை துவ‌க்க‌ உன் பிற‌ந்த‌ வீட்டிற்கு சென்றிருப்பதால்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:33 AM
Labels: அனுப‌வ‌ம், காத‌ல்

15 comments:

புலவன் புலிகேசி சொன்னது…

என்ன தல உண்மைக் கதை மாதிரி தெரியுது....உண்மையாயிருந்தால் சந்தோசம்தான்..நன்றாய் வளர்த்தீர் காதலை...

28 டிசம்பர், 2009 அன்று 8:53 AM
திருவாரூர் சரவணா சொன்னது…

மறுபடியும் கல்லூரிக் காலத்துக்கே கொண்டு போய்டுச்சு தல.

அது சரி. இது கவிதையா, கதையா

கிண்டல் பண்றதா நினைக்க வேணாம். சீரியசாத்தான் கேட்குறேன். இந்த கதையோட எழுத்து நடை அப்படி இருக்கு,

28 டிசம்பர், 2009 அன்று 9:14 AM
vasu balaji சொன்னது…

அருமையான நடை. :)

28 டிசம்பர், 2009 அன்று 9:16 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி புலவன் புலிகேசி
உண்மைக் கதை மாதிரி தான்

ந‌ன்றி சரண்

ந‌ன்றி வானம்பாடிகள் சார்

28 டிசம்பர், 2009 அன்று 1:20 PM
கண்ணா.. சொன்னது…

நல்லா வளங்க..


நல்லாருடே மக்கா...........

28 டிசம்பர், 2009 அன்று 2:08 PM
ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அருமையா எழுதிருக்கீங்க சகா அந்த காதல் காட்சிகள் ம்ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்ன்னு தோணுச்சு...

தொடரட்டும் நல்ல படைப்புகள் வாழ்த்துக்கள்...!

29 டிசம்பர், 2009 அன்று 12:42 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி க‌ண்ணா
உங்க‌ ஆசிர்வாத‌ம்!!

பிரியமுடன் ந‌ன்றி ...வசந்த்

29 டிசம்பர், 2009 அன்று 7:09 AM
செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.

29 டிசம்பர், 2009 அன்று 11:34 AM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

முடியலை. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா.

ம்ம்ம். கலக்குங்க.

29 டிசம்பர், 2009 அன்று 12:04 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி செ.சரவணக்குமார்

ந‌ன்றி அக்பர்

29 டிசம்பர், 2009 அன்று 1:11 PM
பெயரில்லா சொன்னது…

அதுசரி, இப்படியெல்லாம் நடந்துதா... :))

29 டிசம்பர், 2009 அன்று 2:41 PM
கலையரசன் சொன்னது…

இம்மாம் கணக்கா சொல்றியே?? நீயும் சென்ஷி போல
கணக்குபுள்ளையாதான் இருக்கனும்...

இதே பழக்கத்துல ஆப்பீசுலேயும் கள்ள கணக்கு எழுதி, கவட்டையில வாங்காம இருந்தா சரி கணககு கரிசலு!!

29 டிசம்பர், 2009 அன்று 6:56 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி ம‌யிலக்கா

ந‌ன்றி க‌லை

கணக்குபுள்ளை இல்ல‌ க‌லை
இன்ஸ்பெக்ட‌ர்
எல‌க்ட்ரிக‌ல் இன்ஸ்பெக்ட‌ர்

30 டிசம்பர், 2009 அன்று 7:10 AM
sathishsangkavi.blogspot.com சொன்னது…

சகா உங்க கதையா? அழகா இருக்கு..................

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........

30 டிசம்பர், 2009 அன்று 8:40 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி Sangkavi

30 டிசம்பர், 2009 அன்று 10:45 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio