skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

சனி, 19 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை

வேட்டைக்கார‌ன் விம‌ர்ச‌ன‌ங்க‌ள்



கேபிள் ச‌ங்க‌ர் - எலி வேட்டை


நடோடி இல‌க்கிய‌ன் - விஜயின் ரஜினிகள் ஆசை.

ப‌ரிச‌ல்கார‌ன் - பார்ட‌ரில் பாஸ்

ப‌ட்ட‌ர்ஃபிளை சூர்யா-சத்தியமா படம் பார்க்கவில்லை. அவ்வளவு தைரியமும் இல்லை

இரும்புத்திரை அரவிந்த்- இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி

ஜெட்லி-வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை....

த‌ண்டோரா-படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.

ஒன்று : இடைவேளை

இரண்டு:முடிவு
 
 
   
தின‌க‌ர‌ன் நாளித‌ழ்


வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை

சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.

இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.

விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:14 AM
Labels: சினிமா, வேட்டைக்கார‌ன்

17 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் சொன்னது…

உஸ்...!! இன்னுமா நம்புவாங்க..!! எப்படியோ.. நாங்களும் சினிமா எடுக்குறோம்னு இவிங்களும் சொல்ல - அத நாமளும் பாக்க.!! ஒரே காமேடிதான் போங்க..

19 டிசம்பர், 2009 அன்று 10:48 AM
அனாதி சொன்னது…

உலகமெங்கும் வேட்டைக்காரன் ரிலீஸாகி 60,000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என்ற செய்தியையும் இணைத்துக் கொள்ளுங்கள்

19 டிசம்பர், 2009 அன்று 10:50 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

விஜய் நடித்துள்ள வேட்டைக்காரன் படத்தின் கேரள மற்றும் கர்நாடக உரிமைகளை மிகப் பெரிய தொகைக்கு விற்று சாதனைப் படைத்துள்ளனர் அதன் உரிமையாளர்களான சன் பிக்ஸர்ஸ்.

இந்தப் படத்துக்கு தரப்பட்ட விலை எவ்வளவு என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஜினி படத்துக்குப் பிறகு இந்த மாநிலங்களில் இத்தனை பெரிய தொகை விற்கப்பட்ட ஒரே படம் வேட்டைக்காரன்தான் என்பது மட்டும் உறுதி என்றனர் வேட்டைக்காரன் யூனிட்டார்.

கேரளாவில் மட்டும் 75 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதற்கு முன் அதிக திரையரங்குகளில் வெளியான படம் சிவாஜி மட்டுமே. 120 திரையரங்குகளில் சிவாஜி வெளியானது!

அதற்கு அடுத்து வேட்டைக்காரன்தானாம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரளாவில் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் படங்கள் வெளியாகும் நிலையில், அந்தப் படங்களுடன் போட்டிபோட்டு 75 திரையரங்குகளில் விஜய்யின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

-ThatsTamil

19 டிசம்பர், 2009 அன்று 11:03 AM
ஸ்ரீநி சொன்னது…

yega kazhappama irukku

http://sangadhi.blogspot.com/2009/12/avatar.html

19 டிசம்பர், 2009 அன்று 11:26 AM
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இந்திய தொலைக்காட்சியிலே , முதன்முறையாக திரைக்குவந்து சிலமணி நேரங்களே ஆன
புத்தம் புதிய படம் "வேட்டைக்காரன் " உங்கள் சன் டீவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்...����

19 டிசம்பர், 2009 அன்று 11:38 AM
shortfilmindia.com சொன்னது…

தலைவரே இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ப்ரிண்ட் போடுவது எலலம் ஒரு வேலையே இல்லை.. பிலிமில் போட்டாலாவது 65 ஆயிரம் ரூபாய் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட்.. 20தான்.

கேபிள் சங்கர்

19 டிசம்பர், 2009 அன்று 12:13 PM
கண்ணா.. சொன்னது…

பாஸ் விளம்பரத்துல அந்த வில்லன் வாடான்னு கொலைவெறில கத்தும்போதே நினைச்சேன்..நம்பளத்தாண்டா சொல்லுறான்...ஓடிருன்னு..

மத்தபடி. விஜய் படம் + சன் விளம்பரத்திற்கு இந்த ஓபனிங் கிடைக்கலேன்னாதான் ஆச்சர்யம்.

19 டிசம்பர், 2009 அன்று 12:21 PM
பூங்குன்றன்.வே சொன்னது…

வேட்டைக்காரன் பற்றி ஒரு விமர்சனம் கூட நல்லதா இல்ல..இதுல நீங்க தொகுத்து போட்டுயிருக்கீங்க..இப்பெல்லாம் அந்த படத்தை பற்றி நினைத்தாலே பயமாஇருக்கு பாஸ்.

19 டிசம்பர், 2009 அன்று 12:57 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
இப்ப‌டியே சொல்லிகிட்டு நாம‌ளும் பார்த்துகிட்டே தான் இருக்கோம் பாஸ்

@வெளிச்சத்தில்
//உலகமெங்கும் வேட்டைக்காரன் ரிலீஸாகி 60,000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது//

இது வேற‌யா

19 டிசம்பர், 2009 அன்று 1:06 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ஸ்ரீநி
குழ‌ப்ப‌மே இல்ல
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி ச‌ன் டிவி சொல்லுது

@Patta Patti
த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ச‌கா

19 டிசம்பர், 2009 அன்று 1:09 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//shortfilmindia.com கூறியது...
தலைவரே இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ப்ரிண்ட் போடுவது எலலம் ஒரு வேலையே இல்லை.. பிலிமில் போட்டாலாவது 65 ஆயிரம் ரூபாய் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட்.. 20தான்.

கேபிள் சங்கர்//

த‌லைவ‌ரே
இந்த‌ கொடுமையிலும் அவ‌ங்க‌ ப‌ண்ற‌ அலும்ப‌ சொல்ல‌த்தான் அது, ம‌ற்ற‌ப‌டி ஒண்ணுமில்ல‌

19 டிசம்பர், 2009 அன்று 1:10 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//கண்ணா.. கூறியது...
பாஸ் விளம்பரத்துல அந்த வில்லன் வாடான்னு கொலைவெறில கத்தும்போதே நினைச்சேன்..நம்பளத்தாண்டா சொல்லுறான்...ஓடிருன்னு..//

எங்க‌ தியேட்ட‌ருக்கா இல்ல‌ தியேட்ட‌ர‌ விட்டா!!!!

19 டிசம்பர், 2009 அன்று 1:12 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//பூங்குன்றன்.வே கூறியது...
வேட்டைக்காரன் பற்றி ஒரு விமர்சனம் கூட நல்லதா இல்ல..இதுல நீங்க தொகுத்து போட்டுயிருக்கீங்க..இப்பெல்லாம் அந்த படத்தை பற்றி நினைத்தாலே பயமாஇருக்கு பாஸ்.//

பாஸ் விம‌ர்ச‌ன‌ங்க‌ளெல்லாம் ப‌டிச்சுட்டு அப்ப‌டி என்ன‌ தான் மோச‌ம்னு பார்க்க‌ற‌துக்கு கூட்ட‌ம் கூட‌ போகுதுன்னு நினைக்கிறேன்.

19 டிசம்பர், 2009 அன்று 1:14 PM
பெயரில்லா சொன்னது…

!!!!

19 டிசம்பர், 2009 அன்று 1:36 PM
Unknown சொன்னது…

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை .

ATM,வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

ஆனா நாங்க (நாம) மாறிட்டோம்.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

19 டிசம்பர், 2009 அன்று 3:58 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@க‌டையம் ஆன‌ந்த்

ந‌ன்றி

@senthils
வேட்டைகார‌ன் பேர‌ பார்த்தாலே ஓடி ஓடி பின்னூட்ட‌ம் போட‌றிங்க‌ளே உங்க‌ நேரத்துக்கு விலை மதிப்பு இல்லையா?

19 டிசம்பர், 2009 அன்று 5:27 PM
கார்க்கிபவா சொன்னது…

@senthils,

சகா, கிட்டத்தட்ட நான் பார்த்த எல்லா பதிவுகளிலும் உங்களின் இதே பின்னூட்டத்தை பார்க்க்கிறேன். இதுக்கே உங்களுக்கு மூணு மணி நேரத்தை விட அதிகமாக ஆகியிருக்கும். உங்கள் தொடர் முயறசி வெற்றி பெற வாழ்த்துகிறேன். முஇட்ந்தால் ஒவ்வொரு தியேட்டரிலும் போய் இப்படி செய்யலாம் அல்லது நாளிதழ்களில் இதே பின்னூட்டத்தை விலம்பரமாக கொடுக்கலாம். வாழ்க உங்க ச்மூக அக்கறை

20 டிசம்பர், 2009 அன்று 9:03 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio