skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 17 டிசம்பர், 2009

பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்



"எழுத‌னும்னா நெற‌ய‌ ப‌டிக்க‌னும்" என்ற‌ அந்த‌ (இல‌க்கிய‌)உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ வாக்கிய‌த்தை சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.5 வ‌து ர‌வுண்டு முடித்து விட்டிருந்தோம்.என் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் சேர்ந்து பாரில் இருந்தோம்.இந்த‌ இல‌க்கிய‌ பார்ட்டி என் நண்ப‌னுக்கு ந‌ண்ப‌ன், இன்று ச‌ர‌க்க‌டிக்க‌ ந‌ண்ப‌ன் அழைத்து வ‌ந்திருந்தான்"ந‌ண்பனின் ந‌ண்ப‌ன் எங்க‌ளுக்கும் ந‌ண்ப‌னே" என்ற‌ உய‌ரிய‌ த‌த்துவ‌ப்படி அவ‌னை உக்கார‌ வைத்து ஊத்தி கொடுத்து கொண்டிருந்தோம்.ஆர்வ‌க் கோளாறு பார்ட்டி ஒருவ‌ன் அவ‌னிட‌ம் டேய் ந‌ம்ம‌ ம‌ச்சி பிளாக் எழுத‌ற‌ண்டா என்று என்னைக் காட்டி உள‌றி விட்டான்.அத‌னால் வ‌ந்த‌ வினைதான் இது.

ஆமா நானும் நெற‌ய‌ ப‌டிக்கிறேன் என்றேன்

என்ன‌ ப‌டிக்கிறிங்க‌ என்றான் விடாம‌ல்

நான் கடுப்பாக‌ கோர்த்து விட்ட‌வ‌னை பார்த்தேன் அவ‌ன் வேலையில் மும்முர‌மாக‌ இருந்தான்.இல‌க்கிய‌வாதி ஏதோ ஐ ல‌வ் யு சொல்லி விட்டு ரிச‌ல்ட்டுக்காக‌ காத்திருப்ப‌வ‌னைப் போல‌ என் முக‌த்த‌யே பாத்துக் கொண்டிருந்தான்,விடாது க‌டுப்புன்னு நெனைச்சுக்கிட்டு எல்லாமே ப‌டிப்பேங்க‌ என்றேன்.

எல்லாமேன்னா பூக்கோ தெரியுமா என்றான் இல‌க்கிய‌வாதி

என‌க்கு எக்கோ தான் தெரியும் ந‌ம்ம‌ ஊர் ம‌லை மேல‌ போய் க‌த்துனா சூப்ப‌ரா எக்கோ வ‌ரும் என்றேன்.

ச‌ரி கேத்தி ஆக்க‌ர் ஆவ‌து தெரியுமா என்றான் கொஞ்ச‌ம் கோப‌மாக‌

ச‌ப்பாத்தி மேக்க‌ர் தான் தெரியும் போன‌ மாச‌ம் தான் எங்க‌ வீட்ல‌ வாங்குனோம் என்றேன்.

ராவாக‌ ஒரு ர‌வுண்டு ஊத்தி ஒரே க‌ல்ப்பில் அடித்து விட்டு கேட்டான் வேற‌ என்ன‌ தான் தெரியும்?

புரிய‌ற‌ மாதிரி எழுதுனா ப‌டிக்க‌த் தெரியும் என்றேன் நான்.

ச‌ரி இவ்ளோ கேள்வி கேக்குற‌ல்லா நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் என்ற‌ப‌டி ச‌ங்க‌ர் யார்னு தெரியுமா என்றேன்.

ச‌ங்க‌ரா யார் அது ? என்றான் இல‌க்கிய‌வாதி

ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற‌ ச‌ர‌க்கு,க‌டிச்சுட்டு இருக்கிற‌ சிக்க‌ன்,பிடிச்சுட்டு இருக்கிற‌ சிக‌ரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்ச‌ர் அவ‌ன் தாண்டா ங்கொய்யாலா ஒன்னைய‌ ஒரு ம‌னுச‌னா ம‌திச்சு இவ்ள‌ செல‌வு ப‌ண்ணி வாங்கி குடுத்துருக்கான் அவ‌னை தெரியாது எங்கேயோ இருக்குற‌வ‌ன‌ தெரியும் உன்னையெல்லாம் என்ன‌ ப‌ண்ண‌லாம் என்ற‌ப‌டி செவுளில் ஓங்கி ஒன்னு விட்டான் ந‌ண்ப‌னொருவ‌ன்.

பார்த்தியா ந‌ம் நாட்டில‌ இப்ப‌டிதான் இதுவே பிரான்ஸ் ஆ இருந்தா என‌க்கு என்ன‌ ம‌ரியாதை கிடைக்கும் தெரியுமா என்றான் க‌ன்ன‌த்தை த‌ட‌விய‌ப‌டி.

ச‌ரி விடுங்க‌ பாஸ் அவ‌ன் ஏதோ போதையில‌ அடிச்சுட்டான் டேய் அண்ன‌ணுக்கு ஒரு ஆஃப் சொல்லுடா என்றேன்

ச‌ர‌க்கு வ‌ந்த‌வுட‌ன் ஊத்திக் கொடுத்து விட்டு பாஸ் இவ்வ‌ள‌வு போதையில‌யும் ரொம்ப‌ தெளிவா பேசுறிங்க‌ல்லா இங்க‌ ம‌திப்பு,ம‌ரியாதை எதுவும் கிடைக்காது ப்ரான்ஸ்ல‌ தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்ப‌ன்னா அங்க‌ போய் இல‌க்கிய சேவை செய்ய‌ வேண்டிய‌து தானே இங்க‌ என்ன‌த்த‌ புடுங்கி கிட்டு இருக்கீங்க‌ என்றேன் அமைதியாக‌.

அது...... அது...... என்ற‌வ‌ன் அடுத்த‌ ர‌வுண்டை அடித்தான்.

யேய் ம‌ச்சி ஏற்கென‌வே அடிச்ச‌வ‌னை கூப்பிட்டேன்,அப்போ எந்த‌ ப‌க்க‌ம் அடிச்ச?என்றேன்,லெப்ட் க‌ன்ன‌த்துல‌டா என்றான்.ச‌ரி அப்ப‌டின்னா இப்ப‌ ரைட்ல‌ ஒன்னு விடு சொல்லி முடிக்கும் முன் விட்டான் ஒன்று.

சுருண்டு விழுந்த‌ இல‌க்கிய‌வியாதியை அள்ளிப் போட்டுக் கொண்டு கிள‌ம்பினோம்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:05 AM
Labels: அனுப‌வ‌ம், பாரில‌க்கிய‌ம், மொக்கை

13 comments:

ஷங்கி சொன்னது…

ஹி ஹி ஹி! கலக்கலுங்கோ!!!!!!

17 டிசம்பர், 2009 அன்று 10:13 AM
Raju சொன்னது…

காமெடியாத்தான் இருக்குது.

17 டிசம்பர், 2009 அன்று 10:32 AM
கார்க்கிபவா சொன்னது…

யப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ

17 டிசம்பர், 2009 அன்று 10:35 AM
மணிஜி சொன்னது…

ம்ம்ம்ம்ம்.நடத்துங்க..

17 டிசம்பர், 2009 அன்று 10:52 AM
கண்ணா.. சொன்னது…

// ப்ரான்ஸ்ல‌ தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்ப‌ன்னா அங்க‌ போய் இல‌க்கிய சேவை செய்ய‌ வேண்டிய‌து தானே இங்க‌ என்ன‌த்த‌ புடுங்கி கிட்டு இருக்கீங்க‌ என்றேன் //


நீங்க யாரை சொல்லுறீங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சுட்டு...


ரைட்டு நடத்துங்க

17 டிசம்பர், 2009 அன்று 10:54 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ ஷங்கி
ந‌ன்றி ச‌கா

@ராஜு
//காமெடியாத்தான் இருக்குது//
ஒரு இல‌க்கிய‌வாதி அடி வாங்குற‌து உங்க‌ளுக்கு காமெடியா இருக்கா

@கார்க்கி
என்ன‌ப்பாஆஆஆஆஆஆஅ

17 டிசம்பர், 2009 அன்று 11:30 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@தண்டோரா
உங்க‌ள‌ மாதிரியெல்லாம் முடியுமாண்ணே ஏதோ என் லெவ‌லுக்கு

@கண்ணா
உங்க‌ள் ஆத‌ர‌வுக்கு ந‌ன்றி க‌ண்ணா

17 டிசம்பர், 2009 அன்று 11:32 AM
பூங்குன்றன்.வே சொன்னது…

//டேய் ந‌ம்ம‌ ம‌ச்சி பிளாக் எழுத‌ற‌ண்டா //

அது !

//ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற‌ ச‌ர‌க்கு,க‌டிச்சுட்டு இருக்கிற‌ சிக்க‌ன்,பிடிச்சுட்டு இருக்கிற‌ சிக‌ரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்ச‌ர் அவ‌ன் தாண்டா//

சங்கர் ரொம்ப பாவம் :)

சூப்பர் காமடி போல...

17 டிசம்பர், 2009 அன்று 12:26 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@பூங்குன்றன்.வே
ந‌ன்றி ச‌கா வே

17 டிசம்பர், 2009 அன்று 1:38 PM
ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//அமைதியாக‌.

அது...... அது...... என்ற‌வ‌ன் அடுத்த‌ ர‌வுண்டை அடித்தான்.
//

அடப்பாவி...

இப்பிடி கேட்டதுக்கு கோவங்கூடயா வரல ...?

17 டிசம்பர், 2009 அன்று 3:55 PM
எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

ரைட்டு நடத்துங்க...!!!!!

17 டிசம்பர், 2009 அன்று 7:59 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ பிரியமுடன்...வசந்த்
வ‌ர‌வே மாட்ட‌க்கு ச‌கா

@நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
OK ச‌கா

19 டிசம்பர், 2009 அன்று 7:17 AM
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இலக்கியம் நிறைய பேருக்கு சரக்கு முடிந்து போன கிளாஸில்தான் இருக்கிறது..!!

19 டிசம்பர், 2009 அன்று 10:50 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio