skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

சனி, 26 டிசம்பர், 2009

ச்சும்மா

ஸ்பெக்ட்ர‌ம் போயி லிபரான் வ‌ந்தது டும் டும் டும்
லிபரான் போயி தெலுங்கானா வ‌ந்த‌து டும் டும் டும்
தெலுங்கானா போயி க‌வ‌ர்ன‌ர் சிடி வ‌ந்த‌து டும் டும் டும்

தீவிர‌ ஆலோச‌னை -பிர‌த‌ம‌ர் த‌லைமையில் அமைச்ச‌ர‌வை கூட்ட‌ம் ‍

ந‌ட‌ந்தது...........

ந‌ட‌க்கிற‌து........

ந‌ட‌க்கும்..............

ஏசியா நெட் (ம‌லையாளம்) டிவியில் சென்ட‌ர் ஃஃப்ரெஷ் மிட்டாய்க்கு ஒரு விள‌ம்ப‌ர‌ம் வ‌ரும்.அர‌சிய‌ல்வாதிக‌ள் க‌ல‌ந்து கொள்ளும் ஒரு மீட்டிங்கில் த‌லைவ‌ர் சொல்வார் இப்ப‌ எதுக்கு எல்லாரும் கூச்ச‌ல் போட‌றிங்க‌ ச‌மோசா குடுத்தாச்சு,போண்டா குடுத்தாச்சு வேற‌ என்ன‌ வேணும் பாயாச‌ம் வேணுமா கொடுத்திர‌லாம் அப்ப‌டின்னு.

ஒரு வேளை நிஜ‌த்திலும் இது தான் ந‌ட‌க்குதோ என்ன‌வோ????
**********************************
மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.காங்கிரசின் விடிவெள்ளி என கொண்டாட‌ப் ப‌டும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.
**********************************
கோவா படத்தின் ஆடியோ இம்மாதம் வெளியிடப்படும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி போயிருக்கிறது.இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ரஜினி.
**********************************
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் க‌ம‌ல் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?

தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
**********************************
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பணம் படைத்தவர்கள், படைபலம் கொண்டவர்கள் நமது ஜனநாயகத்தை கடத்திக் கொண்டு போகின்றனர். அரசியலையும், தேர்தலில் போட்டியிடுவதையும் வணிகமயமாக்கி வருகின்றனர். இத்தகைய அவலங்கள் நீங்கி, நமது ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் உரிமையையும், பலத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்

நீங்க‌ ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா?????
**********************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 4:58 PM
Labels: அர‌சிய‌ல், சினிமா

10 comments:

vasu balaji சொன்னது…

/அரசியலையும், தேர்தலில் போட்டியிடுவதையும் வணிகமயமாக்கி வருகின்றனர். இத்தகைய அவலங்கள் நீங்கி, நமது ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் தங்கள் உரிமையையும், பலத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்/

முடியலன்னா வேறெப்படி பேசுறது:))

நல்லாருக்கு ச்சும்மா.

26 டிசம்பர், 2009 அன்று 6:31 PM
துபாய் ராஜா சொன்னது…

ச்சும்மா... சூப்பர்ம்மா.... :))

26 டிசம்பர், 2009 அன்று 7:31 PM
angel சொன்னது…

visu padathil oru dialogue varum
"avan 12th eluthran eluthran elluthran eluthinan eluthuvan" apdinu athu mathri than ipo nadakra meetingla.

நீங்க‌ ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா?????
nan nalavar than ana ketavaru

apdinu nan solala avara pathi nan soldren

26 டிசம்பர், 2009 அன்று 7:41 PM
புலவன் புலிகேசி சொன்னது…

நான் நல்லவன்னு சொல்லல..நல்லவனா இருந்தா நல்லாருக்கும்னுதான் சொன்னேன்..இந்த அரசியல்வியாதிகள் இப்புடித்தான் தல..

27 டிசம்பர், 2009 அன்று 3:35 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வானம்பாடிகள்
//முடியலன்னா வேறெப்படி பேசுறது:))//
அதுவும் ச‌ரிதான்

ந‌ன்றி துபாய் ராஜா

ந‌ன்றி angel
நீங்க‌ ந‌ல்ல‌வ‌ர் தான்

ந‌ன்றி புலவன் புலிகேசி
அதே ச‌கா

27 டிசம்பர், 2009 அன்று 7:10 AM
கண்ணா.. சொன்னது…

ச்சும்மா...கலக்கல் :)

இருந்தாலும் ராமதாஸை பார்த்து நீ எப்டி அப்பிடி கேக்கலாம்?

27 டிசம்பர், 2009 அன்று 8:06 AM
நாடோடி இலக்கியன் சொன்னது…

சும்மா நச்சுன்னு இருக்கு.

27 டிசம்பர், 2009 அன்று 2:32 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ஏன் இந்த‌ கொல‌ வெறி க‌ண்ணா

ந‌ன்றி நாடோடி இல‌க்கிய‌ன்

27 டிசம்பர், 2009 அன்று 3:45 PM
RK Anburaja சொன்னது…

நன்றி... நண்பா

27 டிசம்பர், 2009 அன்று 4:03 PM
RK Anburaja சொன்னது…

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற கேள்விகள்

http://anburajabe.blogspot.com/2009/12/blog-post_27.html

27 டிசம்பர், 2009 அன்று 4:04 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio