skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி


ZEE டிவியில் நேற்று PAA இயக்குன‌ர் பால்கி அவ‌ர்க‌ளின் பேட்டி ஒளிப‌ர‌ப்பானது.பட‌ம்,அமிதாப்,வித்யா பால‌ன்,இளைய‌ராஜா ப‌ற்றி சுருக்க‌மாக‌ பேசினார்.


பா வேறு ப‌ட‌ங்க‌ளைப் போலிருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ளே என்ற‌ கேள்விக்கு ப‌தில‌ளிக்கையில் Progeria என்ற வார்த்தைய‌ கேட்ட‌வுட‌னே அவ‌ர்க‌ளாக‌ ஏற்க‌னெவே அது ப‌ற்றி வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளுட‌ன் ஓப்பிட்டு க‌ருத்து சொல்கிறார்க‌ள்.எதையும் எத‌னுட‌னும் ஒப்பிடாதீர்க‌ள்.அவர்க‌ளுக்கெல்லாம் நான் சொல்வ‌து ஒன்றுதான்.இந்த‌ ப‌ட‌த்தின் க‌தையும்,திரைக்க‌தையும் எழுதிய‌து நான்.ஆனா அந்த‌ நோயை நான் உருவாக்க‌வில்லை.அது க‌ட‌வுள் உண்டாக்கியது.அதை வைத்து க‌தையை ம‌ட்டும் தான் நான் உருவாக்கினேன் என்றார்.

அமிதாப்புக்கு அறிமுக‌ம் என்று ஏன் டைட்டில் போட்டீர்க‌ள்?

சிரித்துக்கொண்டே ஆம் இந்த‌ ப‌ட‌த்தில் அமிதாப் அறிமுக‌ம் தான்.மொத்த‌மாக‌ அவ‌ரின் உருவ‌த்தை மாற்றி அமைத்திருக்கிறோம் அல்ல‌வா, ஆக‌வே தான் என்றார்.

வித்யா பால‌ன் ப‌ற்றி?

முத‌லில் அமிதாப்புக்கு அம்மா கேர‌க்ட‌ர் என்ற‌தும் அதிர்ந்து விட்டார்.பின் க‌தையை விள‌க்கினேன்,அம்மா கேர‌க்ட‌ர் என்றாலும் வ‌யதான அம்மா இல்லை.நீங்க‌ள் இப்ப‌டியே தான் இருப்பீர்க‌ள்,அமிதாப் வ‌ய‌தைத்தான் குறைக்கப் போகிறோம்,என்ற‌வுட‌ன் ஒத்துக் கொண்டார்.

ஆனால் ஒன்று அமிதாப்,அபிஷேக்,வித்யா மூவ‌ரில் யார் ந‌டித்திருக்க‌‌ விட்டாலும் இந்த‌ ப‌ட‌த்தை நான் எடுத்திருக்க‌ மாட்டேன் என்றார் உறுதியாக.

அமிதாப்பின் திரையுல‌ வாழ்வில் இந்த‌ கேர‌க்ட‌ர் மிக‌வும் முக்கிய‌மான‌து இல்லையா ?

சினிமாவில் இந்த கேர‌க்ட‌ர் முக்கிய‌மான‌து,அந்த‌ கேர‌க்ட‌ர் சிற‌ப்பான‌து என்று எதுவுமில்லை.அது அந்த‌ந்த‌ ப‌ட‌த்தின் தேவைக‌ளைப் பொறுத்த‌து.எனக்கு அமிதாப்பின் ந‌ஸிம் ப‌ட‌த்தின் காமெடி ரோல் தான் ரொம்ப‌ பிடிக்கும்.அத‌னால் அப்ப‌டியெல்லாம் ஒன்றுமில்லை

உங்க‌ளின் சீனிக‌ம் ப‌ட‌த்திலும் பா ப‌ட‌த்திலும் ஒரே இசைய‌மைப்பாள‌ர் தான்......

கேள்வியை முடிக்கும் முன்பே குறுக்கிட்ட‌ பால்கி இசைய‌மைப்பாள‌ர் இளைய‌ராஜா ம‌ட்டும‌ல்ல,ஒளிப்ப‌திவாள‌ர் பி சி ஸ்ரிராமும் சீனிக‌ம்மில் ப‌ணியாற்றிய‌வ‌ர்தான்.
இளைய‌ராஜாவைப் பொறுத்த‌வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ 900 ப‌ட‌ங்க‌ளுக்கு மேல் ப‌ணியாற்றியுள்ளார்,ஒரு ப‌ட‌த்துக்கு 5 பாட‌ல்க‌ள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாட‌ல்க‌ள்,அதில் 3000 பாட‌ல்க‌ள் மெலோடி ர‌க‌த்தை சேர்ந்த‌வை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷ‌னுக்கும் அவ‌ர் பாட‌ல் போட்டு விட்டார்,எந்த‌ இய‌க்குன‌ர்க்கு, எந்த‌ சிச்சுவேஷ‌னுக்கு பாட‌ல் தேவை என்றாலும் அவ‌ரிட‌ம் காபி ரைட் வாங்கி விட்டு தார‌ளாமாக உப‌யோக‌ப்படுத்தி கொள்ள‌லாம்.

ர‌ஹ்மான் வ‌ந்த‌ பிற‌கு தான் தென்னிந்திய‌ இசை ப‌ற்றி எல்லாருக்கும் தெரிய ஆர‌ம்பித்தது.ரா‌ஜாவைப் பற்றி அதிக‌ம் தெரியாம‌ல் போன‌த‌ற்கு கார‌ண‌ம்,அவ‌ர் உச்ச‌த்தில் இருந்த‌ போது இந்த‌ அள‌வு தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ர‌வில்லை.மீடியாவும் இப்போது இருப்ப‌து போலில்லை.அத‌னால் தான் நாட்டின் ஒரு ப‌குதி ம‌க்க‌ளுக்கு அவ‌ரைப் ப‌ற்றி அறிய‌வில்லை.அவ‌ர் இந்தியாவின் சிற‌ந்த‌ இசை மேதை என்றார்.

பா வுக்கு அடுத்து என்ன‌?
பெரிதாக‌ சிரித்துக்கொண்டே இப்போதைக்கு எந்த‌ ஐடியாவுமில்லை.சொல்ல‌ப் போனால் ப‌ட‌ம் பார்க்கிற‌ எண்ண‌ம் கூட‌ இல்லை.கொஞ்ச‌ நாளைக்கு கிரிக்கெட் பார்க்க‌ வேண்டும்.அது ம‌ட்டும் தான் என்றார்.



Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:26 AM
Labels: அனுப‌வ‌ம், சினிமா

16 comments:

மீன்துள்ளியான் சொன்னது…

//ர‌ஹ்மான் வ‌ந்த‌ பிற‌கு தான் தென்னிந்திய‌ இசை ப‌ற்றி எல்லாருக்கும் தெரிய ஆர‌ம்பித்தது.ரா‌ஜாவைப் பற்றி அதிக‌ம் தெரியாம‌ல் போன‌த‌ற்கு கார‌ண‌ம்,அவ‌ர் உச்ச‌த்தில் இருந்த‌ போது இந்த‌ அள‌வு தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ர‌வில்லை.மீடியாவும் இப்போது இருப்ப‌து போலில்லை.அத‌னால் தான் நாட்டின் ஒரு ப‌குதி ம‌க்க‌ளுக்கு அவ‌ரைப் ப‌ற்றி அறிய‌வில்லை.அவ‌ர் இந்தியாவின் சிற‌ந்த‌ இசை மேதை என்றார்.//

100% truth ..

15 டிசம்பர், 2009 அன்று 8:45 AM
கண்ணா.. சொன்னது…

//இளைய‌ராஜாவைப் பொறுத்த‌வ‌ரை கிட்ட‌த்த‌ட்ட‌ 900 ப‌ட‌ங்க‌ளுக்கு மேல் ப‌ணியாற்றியுள்ளார்,ஒரு ப‌ட‌த்துக்கு 5 பாட‌ல்க‌ள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாட‌ல்க‌ள்,அதில் 3000 பாட‌ல்க‌ள் மெலோடி ர‌க‌த்தை சேர்ந்த‌வை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷ‌னுக்கும் அவ‌ர் பாட‌ல் போட்டு விட்டார்,எந்த‌ இய‌க்குன‌ர்க்கு, எந்த‌ சிச்சுவேஷ‌னுக்கு பாட‌ல் தேவை என்றாலும் அவ‌ரிட‌ம் காபி ரைட் வாங்கி விட்டு தார‌ளாமாக உப‌யோக‌ப்படுத்தி கொள்ள‌லாம்//

ராஜா .. ராஜாதான்..

இந்த விஷயத்தில் யாரும் அவர்கிட்ட நெருங்க முடியாது..

15 டிசம்பர், 2009 அன்று 9:07 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

வாங்க‌ கானா பிரபா
ந‌ன்றி

15 டிசம்பர், 2009 அன்று 10:44 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@மீன்துள்ளியான்
வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ச‌கா

15 டிசம்பர், 2009 அன்று 10:45 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கண்ணா

ராஜா .. ராஜாதான்..எல்லாருக்கும் (சில‌ பேர்க‌ளைத் த‌விர்த்து)

15 டிசம்பர், 2009 அன்று 10:47 AM
கார்க்கிபவா சொன்னது…

ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா..

15 டிசம்பர், 2009 அன்று 12:06 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கார்க்கி
வ‌ருகைக்கு ந‌ன்றி ச‌கா

15 டிசம்பர், 2009 அன்று 1:05 PM
பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு

15 டிசம்பர், 2009 அன்று 1:30 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கடையம் ஆனந்த்
ந‌ன்றி ச‌கா

15 டிசம்பர், 2009 அன்று 1:44 PM
செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே.

15 டிசம்பர், 2009 அன்று 2:32 PM
அண்ணாமலையான் சொன்னது…

ஏங்க டெக்னாலஜியும் இல்லாமல் மண்டைக்குள்ளேயே எல்லா ட்யூனும் போட்டு ஹிட் கொடுத்தாரே அத விட பெரிய சாதனை எதாவது இருக்கா என்ன?

15 டிசம்பர், 2009 அன்று 7:23 PM
பெயரில்லா சொன்னது…

நல்லாருக்கு.. எங்க உங்க வலைதளத்தில் follower காணோம் ??

15 டிசம்பர், 2009 அன்று 9:27 PM
Toto சொன்னது…

ந‌ல்ல‌ ப‌திவு க‌ரிச‌ல் ஸார்.. 'பா'வை விட‌ 'சீனி க‌ம்'‍மில் இவ‌ங்க‌ கெமிஸ்ட்ரி ந‌ல்லா இருந்துச்சுங்க‌.. சாக்ஸ‌போன்ல‌ ஒரு தீம் வ‌ரும்.. அம‌ர்க்க‌ள‌மா இருக்கும்.

-Toto
www.pixmonk.com

15 டிசம்பர், 2009 அன்று 10:11 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@செ.சரவணக்குமார் கூறியது...
ந‌ன்றி ச‌கா

@அண்ணாமலையான்
சில‌ பேருக்கு அது புரிய‌ மாட்ட‌க்கு ச‌கா

@mayil
ந‌ன்றி ச‌கா சீக்கிர‌ம் செட் ப‌ண்ணி விடுகிறேன்

@Toto
வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ச‌கா

16 டிசம்பர், 2009 அன்று 7:11 AM
பூங்குன்றன்.வே சொன்னது…

நல்ல இடுகை நம்ம ராஜா சாரை பற்றி..அவரோட பாடல்களை இரவில் கேட்கும்போது சுகமோ சுகம். செயற்கையான இசைக்கருவிகளை பயன்படுத்திருக்கமாட்டார்,இரைச்சல் இருக்காது..இன்னும் இப்படி நிறைய சொல்லலாம்நண்பா.

16 டிசம்பர், 2009 அன்று 9:28 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//பூங்குன்றன்.வே
அவரோட பாடல்களை இரவில் கேட்கும்போது சுகமோ சுகம்.//
என‌க்கும் அப்ப‌டியே ச‌கா....

16 டிசம்பர், 2009 அன்று 3:10 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio