skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 3 டிசம்பர், 2009

நால‌டி ந‌மீதா

முருகு பார்ப்ப‌த‌ற்கு ந‌மீதாவை நாலடியாக‌ "க‌ம்ப்ர‌ஸ்" ப‌ண்ணின‌ மாதிரி இருப்பான்.30 வ‌ய‌தாகியும் க‌ல்யாண‌ம் ஆக‌‌வில்லை/ஆக‌விட‌வில்லை.பார்க்கிற‌ பெண்ணையெல்லாம் எதாவ‌து கார‌ண‌ம் சொல்லி த‌ட்டி க‌ழிச்சு கொண்டிருந்தான்,அவ‌ன் சொல்ற கார‌ண‌ம், பொண்ணு பார்க்க‌ போன‌ப்ப‌ அவ‌ங்க‌ வீட்ல‌ கொடுத்த‌ மிச்ச‌ர்ல‌ க‌ட‌லையே இல்லை ,பஜ்ஜிக்கு கொடுத்த‌ ச‌ட்னில‌ நெறைய‌ கார‌ம் போட்ருந்தாங்க‌ இப்ப‌டி போகும்.டேய் பொண்ணு பார்க்க‌ போனாமா கிடைச்ச‌ கேப்ல‌ பொண்ணு கூட‌ க‌ட‌லைய‌ போட்டோமா ஓகே ப‌ண்ணிணோமா அடுத்த‌ முகூர்த்தத‌லில்யே க‌ல்யாண‌ம் முடிச்ச‌மோனு இல்லாமா ஏண்டா இப்ப‌டி படுத்த‌றேனு கேட்டா "ந‌ம‌க்கு ல‌ட்ச‌ங்க‌ள் முக்கிய‌மில்லை லட்சிய‌ம் தான் முக்கிய‌ம்" ன்னு முடிய‌ல‌த்துவ‌ம் பேசுவான்

நாங்க‌ வேலை செய்ற‌து ஒரு தேர்ட் பார்டி இன்ஸ்பெக்ச‌ன் க‌ம்பெனி, த‌ங்குற‌ இட‌ம்,சாப்பாடு எல்லாமே கிளைய‌ன்ட் டோட‌ பொறுப்பு. கிளைய‌ன்ட் ஒரு க‌வ‌ர்மென்ட் (அபுதாபி)கம்பெனிங்கிறாத‌லே சாப்பாடு சூப்ப‌ரா இருக்கும்.ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளெல்லாம் டின்ன‌ருக்கு மூணு டீமா சாப்பிட‌ போவோம்.7 மணிக்கு ஒரு டீம்,7.30 க்கு ஒரு டீம்,8 மணிக்கு ஒரு டீம், இவ‌ன் முத‌ல் டீமோட‌ சாப்பிட‌ போய்ட்டு க‌டைசி டீமோட‌ தான் திரும்ப‌ வருவான்.

சூப்ல‌ ஆர‌ம்பிச்சு ஸ்வீட் வ‌ரை எந்த‌ ஐட்ட‌த்தையும் மிஸ் ப‌ண்ண‌ மாட்டான்.ந‌வ‌ர‌த்னா குருமாவையும் சிக்க‌ன் குருமாவையும் க‌லந்து க‌ட்டி ப‌ரோட்டாவை வச்சிகிட்டு புகுந்து வெள‌டுவான்‌.என்னடா ப‌ண்றேனு கேட்டால் சாப்பிட‌ற விஷ‌ய‌த்தில் கூச்ச‌ப்ப‌ட‌ கூடாதுனு எங்க‌ ஆயா சொல்லியிருக்கு என்று அவ‌ங்க‌ ஆயாவையும் துணைக்க‌ழைத்துக் கொள்வான்.அங்க‌ கொஞ்ச‌ தூர‌த்துல‌ இவ‌ன் சாப்பிட‌ற‌ அழ‌க‌ பாத்து செஃப் ஆன்ந்த‌ க‌ண்ணிரோட‌ நின்னுக்கிட்ருப்பார்.

ச‌ர‌க்க‌டிக்க‌ பார்க்கு போனால் 3 சைடிஷ் வாங்குவான்.ஃபிஷ்,சிக்க‌ன்,பீஃப் எல்லாத்திலேயும் ஒன்ணொன்னு.ச‌ர‌க்க‌டிச்ச‌துக்கு பிற‌கு அராப் உடுப்பிக்கு போனா மைசூர் மசாலா தோசை,பொடி தோசை,ஆனிய‌ன் ஊத்த‌ப்ப‌ம் என‌ சிம்பிளாக‌ முடிச்சுக்குவான்.இவ‌னுக்கு பொண்டாடியா வ‌ர‌ப்போற‌ பொண்ணோட‌ நெல‌மைய‌ நெனைச்சு நாங்க‌ க‌வ‌லைப் படாத‌ நாளே இல்லை.

இப்ப‌டி நாளொரு கிலோவும் பொழுதொரு இன்ச்சுமாக‌ வ‌ள‌ர்ந்த‌வ‌ன்
ஊருக்கு லீவுக்கு போய்ட்டு வ‌ந்து ஆளே மாறிப் போனான்.

சென்னைல‌ மாமா வீட்ல‌ த‌ங்கி டான்ஸ் ஸ்கூல்ல‌ ப‌ணி எடுக்கிற‌ கேர‌ள‌த்து சேச்சி இவ‌ன் அழ‌குல‌ ம‌ய‌ங்கி "ஞான் நிங்க‌ள‌ பிரேமிக்குது"ன்னு ப‌ற‌ஞ்சுருச்சாம்.எண்டே அம்மே,இந்த‌ கொடுமைய‌ கேட்ட‌வுட‌னே நேரா பார்க்கு போயி ஒரு லிட்டர் ரெட் லேபிள‌ முடிச்ச‌துக்க‌ப்புற‌ம் தான் எங்க‌ வ‌யிறெல்லாம் அணைஞ்ச‌து.

அதுக்க‌ப்றம் ந‌ட‌ந்தெல்லாம் வ‌ர‌லாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌வை.உட‌ம்ப‌ குறைக்க‌னும்னு காபிக்கு கூட‌ க‌லோரி கண‌க்கு பாக்க‌ ஆர‌ம்பிச்சுட்டான்.பிளாக் காபி,ஓட்ஸ் க‌ஞ்சி அது ம‌ட்டுமில்லாம‌ல் கேர‌ட்,வெள்ள‌ரி,பீட்ருட் என‌ ஆடு,மாடு சாப்பிடும் எலை த‌லை எல்லாம் ப‌ச்சையாக‌ சாப்பிடுவான்.4 ம‌ணிக்கு ஜிம்க்கு போய் ட்ரெட் மில் அதிர‌ அதிர‌ ந‌ட‌ப்பான்.ம‌ற‌ந்து கூட‌ சோறு சாப்பிட‌ மாட்டான்.இப்ப‌டியாக‌ 94 கிலோ இருந்த‌வ‌ன் ஆறு மாச‌த்தில் 78 கிலோ ஆனான்.ப‌ர் துபாயில் பெல்லி டான்ஸ் ட்ரெஸ்ல்லாம் எடுத்துட்டு ஊருக்கு போனான்.

அந்த‌ சேச்சி வீட்டில் க‌ல்யாண‌த்துக்கு ச‌ம்ம‌திக்க‌வில்லை என்றும் அவ‌ன் ஹ‌தையில் வேறு ப‌ணிக்கு சேந்துட்டான் என‌ அறிந்து அவ‌னை தொட‌ர்பு கொண்டேன்.

"சாப்பாட்ட‌ குற‌ச்ச‌வ‌ ஒருத்தி அவ‌ளே ஹோட்ட‌ல்ல‌ நிறுத்தி த‌னியா எங்க‌ போனாளோ" ரிங் டோன் ஒலித்த‌து.

ப‌வார்ச்சியில் சாப்பிட்டுட்டு இருக்கேன் கொஞ்ச‌ நேர‌ம் கழிச்சு கூப்பிடு என‌ க‌ட் ப‌ண்ணினான்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:05 PM
Labels: அனுப‌வ‌ம், ந‌மீதா

3 comments:

angel சொன்னது…

comedyah iruku

26 டிசம்பர், 2009 அன்று 7:45 PM
நாடோடி இலக்கியன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
27 டிசம்பர், 2009 அன்று 2:38 PM
நாடோடி இலக்கியன் சொன்னது…

ஹா ஹா, நகைச்சுவை நடை உங்களுக்கு இயல்பாக கைவருகிறது.

கலக்குங்க.

27 டிசம்பர், 2009 அன்று 2:39 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio