சிறு வயதில்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெளம்பும்
போதெல்லாம்
தாத்தாவுக்கு தெரியாமல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாமல்
மாமாவும்
சட்டைப் பையில் திணிப்பார்கள்
சிலதில் கந்தக வாசனை
சிலதில் வெத்தலை வாசனை
இத்தனை வருடங்கள் கழித்து
என் பையனுக்கும் கிடைக்கிறது
பை நெறைய ஊர்க்காசு
அதே வாசனைகளோடு
இங்கு வருமுன்பு
இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செலவு
பண்ணி அதயும் இதயும்
வாங்குறீங்கன்னு கேட்ட
என் மனைவிக்கு இப்போவாது
புரியுமென நெனைக்கிறேன்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெளம்பும்
போதெல்லாம்
தாத்தாவுக்கு தெரியாமல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாமல்
மாமாவும்
சட்டைப் பையில் திணிப்பார்கள்
சிலதில் கந்தக வாசனை
சிலதில் வெத்தலை வாசனை
இத்தனை வருடங்கள் கழித்து
என் பையனுக்கும் கிடைக்கிறது
பை நெறைய ஊர்க்காசு
அதே வாசனைகளோடு
இங்கு வருமுன்பு
இந்த ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செலவு
பண்ணி அதயும் இதயும்
வாங்குறீங்கன்னு கேட்ட
என் மனைவிக்கு இப்போவாது
புரியுமென நெனைக்கிறேன்
23 comments:
உங்களுடைய எழுத்து நடை super
http://ujiladevi.blogspot.com
ஊர்காசு பழக்கம் இன்னும் இருக்குன்னு கேக்கவே சந்தோஷம். ம்ம்.
ஊர்க் காச மறக்க முடியுமாங்க... ம்ம்... அதெல்லாம் ஒரு காலமுங்க... இப்ப இருக்கா?
நன்றி உஜிலாதேவி
பேர் வித்தியாசமா இருக்கு
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி க.பாலாசி
//ஊர்க் காச மறக்க முடியுமாங்க... ம்ம்... அதெல்லாம் ஒரு காலமுங்க... இப்ப இருக்கா?//
இன்னும் இருக்கு மக்கா சில இடங்களில்...
சொல்வதற்கு இன்னும் இருக்கு இல்லையா!
அது ஒரு கனாக்காலம் என்று தான் சொல்ல வேண்டும்... இப்ப எங்க பக்கம் எல்லாம் மறந்து போச்சி கரிசல்?..
நன்றி அக்பர்
//சொல்வதற்கு இன்னும் இருக்கு இல்லையா!//
அதே மக்கா
நன்றி நாடோடி
//அது ஒரு கனாக்காலம் என்று தான் சொல்ல வேண்டும்... இப்ப எங்க பக்கம் எல்லாம் மறந்து போச்சி கரிசல்?..//
எங்க ஊர் பக்கம் இன்னுமிருக்கு நண்பா
நன்றாக உள்ளது.
கடைசி அருமை.
அது என்னங்க ஊர்க்காசு.
நல்லாயிருக்கு...
அருமை நண்பரே. உங்கள் எழுத்தும் சிந்தனையும் தனி அழகு. வாழ்த்துக்கள்!
நன்னா இருக்கு ராசா.......வாழ்த்துகள் ராசா..
நன்றி அமைதி அப்பா
நன்றி ஜீவன்பென்னி
நன்றி Riyas
நன்றி வில்சன்
நன்றி rk guru
அருமை.
சிலதில் கந்தக வாசனை
சிலதில் வெத்தலை வாசனை
..... ம்ம்ம்...... மண் வாசனையுடன் கூடிய பாசம்தான். நல்லா எழுதி இருக்கீங்க.
பெருமூச்ச்ச்ச்ச்..
ஒரு அருமையான கிராமிய மனத்தை நுகர்ந்த திருப்தி
ஒரு அருமையான கிராமிய மனத்தை நுகர்ந்த திருப்தி
பிரமாதம் நண்பரே!
அன்பின் கரிசல்காரன் - நல்ல பழக்கம் - ஊர்ர்க்காசு - தொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கருத்துரையிடுக