சென்ற பதிவின் தொடர்ச்சி நண்பர் முகிலனின் பின்னூட்டங்களுக்கான பதில்கள்
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
அவற்றில் சில
இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(நன்றி ஜூவி)
இப்படித்தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டமிடல்களும்,செயல் பாடுகளும்.
இவர்களை நம்பி???
//No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi. Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).//
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
எங்களை யாரும் ஹிந்தி படிக்க கூடாதுன்னு தடுக்க வில்லை.நீங்க சொன்ன மாதிரி அருப்புக்கோட்டை மாதிரியான சின்ன ஊர்களிலும் ஹிந்தி சொல்லித் தர ஆள் இருந்தும் படிக்காமல் விட்டது எங்கள் குற்றமே.
நான் படிக்கும் போது, மாலையில் ஸ்கூல் முடிந்ததும் வீட்டுக்குப் போய் பையை வீசிட்டு,துணி மாத்தியவுடன் நேரே போகிற இடம் தீப்பெட்டி ஆபிஸ் தான்.காபி கூட அங்க போய் தான்.தீக்குச்சிகள் அடைக்கப்பட்ட தீப்பெட்டியில் ஒரு சின்ன ஸ்டிக்கர் (மைதா மாவில் காய்ச்சிய பசை தான் பயன்படுத்துவார்கள்) ஒட்டி காய வைத்து,10 தீப்பெட்டிகளை ஒரு தாளில் வைத்து பேக் செய்து (டசன்ன்னு சொல்வார்கள்)அதுக்கு மேல் ஒரு லேபிள் ஒட்டி மீண்டும் காய வைத்து,அந்த 10 டசன்களை ஒரு தாளில் வைத்து பேக் (குரோஸ்னு சொல்வாங்க) செய்து,அதுக்கு மேல் கம்பெனி லேபிள் ஒட்டி கொடுத்தால்,ஒரு குரோஸ்க்கு கிடைக்கும் சம்பளம் 40 பைசா.இது தான் எங்க அம்மாவுக்கு வேலை.
பகல் முழுவதும் தீப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டி,பெரிய கோணிப்பைகளை விரித்து, வெயிலில் காய வைத்திருக்கும் அம்மா, சாயந்திரம் நான் போனதும் தான் இந்த பேக்கிங் வேலைய தொடங்குவார்கள்.அம்மா முன் அமர்ந்து பத்து பத்து பெட்டியாக அடுக்கிக் கொடுக்கும் வேலை எனக்கு. எல்லாம் முடித்து வீட்டுக்கு போவதற்கே எட்டு,ஒன்பது மணி ஆகி விடும். அதன் பிறகு சாப்பிட்டு,வீட்டுப் பாடம் செய்து அல்லது படித்து விட்டு படுத்தால் விடிவதே தெரியாது.
என்னுடைய பக்கத்து வீட்டு நண்பன் செல்வத்தின் குடும்பம் விவசாயக் குடும்பம்.அவன் காலையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு தோட்டத்து போய், அங்கு அவங்க அம்மா,அப்பா,அக்கா ஏற்கெனவே பறித்து வைத்த காய்கறிகளை மார்க்கெட் கொண்டு செல்லும் வேலை அவனுக்கு. சைக்கிளில் பின்னாடி ஒரு வெண்டைக்காய் மூட்டை,முன்னாடி இரண்டு பைகளில் புடலங்காய்,இவற்றோடு ஸ்கூல் பையும்.மார்கெட்டில் கமிஷன் மண்டியில் குடுத்துட்டு,9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 8.55 க்கு வேர்க்க,விறுவிறுக்க வந்து சேர்வான்.
மீண்டும் ஸ்கூல் விட்டதும் கமிஷன் மண்டிக்குப் போய் கணக்கு முடித்து, காலையில் கொண்டு வந்த சாக்கு மற்றும் பைகளோடு வீடு திரும்புவான்.
படிக்கும் காலங்களில் இப்படித்தான் எங்க பொழுதுகள் போயின.எங்க ஊரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இது தான் நெலமை. ஒன்னு விவசாயம் சார்ந்ததாக அல்லது தீப்பெட்டித் தொழில் சார்ந்ததாக. இதுக்கிடையில் வெளியில் சென்று ஸ்போக்கன் ஹிந்தி படிப்பதற்கு ஏது நேரம், உண்டான பாடங்களை படித்து பாஸ் செய்வதே பெரிய விசயம். அதில் வேறொரு நெருக்கடி உண்டு, அது வெறுமனே பாஸ் மட்டும் செய்தால், பகுதி நேரமாக செய்து கொண்டிருந்த தீப்பெட்டி வேலையும், விவசாயமும் முழு நேரத் தொழிலாக மாறி விடும் அபாயம்.அப்படி நெறைய பேருக்கு ஆகியிருக்கிறது.
ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே முன்னோக்கிச் செல்ல முடியும்.இந்த நிலைமையில் ஹிந்தி படிக்க ஆர்வமிருந்தால் மட்டும் போததாது.வசதியும்,வாய்ப்பும் கூட இருக்க வேண்டும்.ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.
சரி ஹிந்தி தெரியாதது அவ்ளோ பெரிய விஷயமா என்ன???
சென்னையில் வேலை செய்யும் வரை அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.
உன்னைய எவன் வெளிநாட்டுக்குப் போக சொன்னான் ??
படிச்ச படிப்புக்கு சொந்த ஊர்ல வேலை இல்ல,சரி நேரா அப்பாவோட கம்பெனில போய் வேலைக்கு சேரலாமான்னா எங்க அப்பாவுக்கு விஜய் மல்லையா மாதிரியோ இல்ல அம்பானி மாதிரியோ எந்த கம்பெனியும் இல்லை.சென்னையிலிருந்த நாலு வருடங்களில் மிச்சமான காசை வைத்து நிஜ வீடு அல்ல ஒரு வீட்டோட மாடல கூட கட்ட முடியாதுன்னு தெரிஞ்சப்ப வேற என்ன பண்றது?
எப்படியும் பிறந்த ஊர்ல பிழைக்க முடியாது ,வெளியூர்க்குத் தான் போகணும்னு ஆனதுக்கப்புறம் சென்னையை விட சவுதி நல்லதா தெரிஞ்சது.அப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்லும் "நாங்க தான் இப்படி கருமாயப் பட்டுக்கிட்டு கெடக்கோம் நீயாவது ஒரு நல்ல நெலைக்கு வந்தாதான் நம்ம குடும்பம் நிமிர முடியும்,உன்னையத்தான் நாங்க நம்பிக்கிட்டு இருக்கோம்" என்ற வார்த்தையை நிஜமாக்க வேண்டுமென்றால் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மும்பைல சிக்கி சீரழிஞ்சு, ஒரு வழியா சவுதில ஒரு வேலை கிடைச்சு, ஆவோஜி,பாவ்பாஜி போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டு, தமாம்ல போய் இறங்குனா அங்க அடுத்த பிரச்சினை.நான் வேலைக்கு போன கம்பெனில "பிலிப்பைன்ஸ்" மக்கள் தான் மெஜாரிட்டி.தினம் காலையில அரைமணி நேரம் டூல் பாக்ஸ் மீட்டிங் ஒண்ணு நடக்கும், வேலையின் போது கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்,முன் தினம் நடந்த ஏதேனும் ஒரு அசம்பாவிதம்,இனி அது போல நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை பற்றிப் பேசுவார்கள்.
ஒரு பக்கம் "பிலிப்பைன்ஸ்" மக்களுக்காக அவங்க மொழிலயும் (தகலாக்),இன்னொரு பக்கம் இந்தியன்,பாகிஸ்தானி,நேபாளி,வங்காள தேச மக்களுக்காக ஹிந்தியிலேயும் நடக்கும்.நமக்குத் தான் ரெண்டுமே தெரியாதே "ஙே" தான் வெறென்ன.
நமக்கு கீழே வேலை செய்ற அம்பது பேரை அவங்க மொழி தெரியாமல் வேலை வாங்குவதென்பது கஷ்டம்.ஹிந்தி கற்றுக் கொள்வது ஒண்ணும் பெரிய விஷயமில்லை என்பவர்களுக்கு,உண்மைதான், இந்த ஆரம்ப நிலை தடுமாற்றங்களை தாக்குப்பிடித்து நின்றால் மட்டுமே அது சாத்தியம்..
*******************************************
முகிலன் சொன்னது…
//தமிழ் வழியில் கல்வி கற்றால் வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வேலை பார்க்க முடியாது என்று சொன்னால் அது அறிவின்மை.
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது//
//And Dr.Mannar Jawahar also says, they will teach English to these Tamil Medium students for the first three years. I assume they would teach spoken english and communication skills in these years. (I don't think we need to know anything other than these).//
மற்ற துறைகளில் எப்படியோ நான் வேலை செய்யும் பெட்ரோலியத்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி மட்டும் போததாது.மற்ற சில சர்வதேச தரமுள்ள சான்றிதழ் படிப்புகளும் தேவை
மற்ற துறைகளில் எப்படியோ நான் வேலை செய்யும் பெட்ரோலியத்துறையில் (Oil & Gas) வெறும் டிகிரி மட்டும் போததாது.மற்ற சில சர்வதேச தரமுள்ள சான்றிதழ் படிப்புகளும் தேவை
அவற்றில் சில
*API
*NACE
*BGAS
EDUCATION:
► BE mechanical engineering (1983)
► CSWIP 3.2 by TWI, UK
► CSWIP Painting B Gas Gr3
► Certified Welding Inspector by AWS(1993-2002)
► ISO9001-Lead Assessor course
► ISO9001-Lead Assessor course
► Internal Auditor course
► ASNT Level II in RT,UT,MT,PT
► RT Film interpretation course
இது எல்லாம் படிக்காவிடில் இந்த துறையில் வேலையே கிடைக்காதா என்ன?
இது எல்லாம் படிக்காவிடில் இந்த துறையில் வேலையே கிடைக்காதா என்ன?
கிடைக்கலாம்,பெரும்பாலான நல்ல கம்பெனிகளில் பணிபுரிய இவை அவசியம் தேவை.சாப்ட்வேர் எஞ்சினியராக, காமா சோமா இன்போடெக் என்ற வெளியே தெரியாத கம்பெனியில் வேலை செய்வதற்கும்,அதே சாப்ட்வேர் எஞ்சினியராக இன்போசிஸ்,டிசிஸ்,விப்ரோ போன்ற கம்பெனிகளில்வேலை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா???
மேலும் அந்த காமா சோமா கம்பெனிகளில் கூட ,ஒரு எஞ்சினியர் அடுத்த நிலைக்கு உயர வேண்டுமென்றால் இவை அவசியம்.ஏனெனில் இவை எல்லாமே கிளையண்ட்டோட தேவைகள்.
மேல சொன்ன சான்றிதழ் படிப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.அதுவும் கிளாஸ் ரூம் கோச்சிங் எல்லாம் கிடையாது, வெறும் ஐந்து நாள் செமினார் ஸ்டார் ஹோட்டலில் (சென்னையில் சவேராவில் நடக்கும்)வைத்து நடத்தி விட்டு ஆறாவது நாள் தேர்வு வைப்பார்கள்.
இது இல்லாமல் தினசரி வேலையில் உபயோகப் படும் Method Statement,Quality Control Procedures,Inspection & Test Plan,Specifications,Factory Acceptance Test Documents (FAT),Site Acceptance Test Documents (SAT),Mechanical Completion Dossier,Pre – Commissioning Dossier,Commissioning Dossier,Provisional Acceptance Certificate Book (PAC) போன்ற எல்லா டாகுமெண்ட்களும் ஆங்கிலத்தில் தான்.
வேலைக்குப் போனால் இப்படியென்றால் மேற்படிப்பும் ஆங்கிலம் தான்.
தமிழ் வழி பொறியியல் கல்வியில்,துறை சார்ந்த பாடங்களை தமிழ் வழியிலும்,ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும் படிக்கும் ஒருவன், வெளியில் வந்து இத்தனை விஷயங்களை ஆங்கிலத்திலேயே எதிர் கொண்டு வெற்றி பெற முடியும் எனில்
பனிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்து விட்டு வரும் ஒருவனால், நான்கு வருட பொறியியல் பாடங்களை ஆங்கிலத்தில் எதிர் கொள்ள முடியாதா என்ன????
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடப்பதில்லை.சில குறிப்பிட்ட கல்லூரிகளில் வருடந்தோறும் நடக்கிறது,சில குறிப்பிட்ட கல்லூரிகளில் நடப்பதே இல்லை.இதே நிலை தமிழ் வழி பொறியியல் கல்லூரிகளுக்கும் வராது என்பதற்கு என்ன நிச்சயம்??
இவ்வளவு அவசரமாக இதை கொண்டு வருவதற்கான காரணம் என்ன???
முடியாத வேலைக்கு கோலகாலமாக திறப்பு விழா நடத்தி விட்டு,மீண்டும் வேலையைத் தொடர இது ஒன்றும் கட்டிடமில்லை.
ஒரு அதிகாரி

சில மாதங்கள் முன்பு நீயா நானாவில் நடிகர் சூர்யா,எழுத்தாளர் பாமரன் ஆகியோர் கலந்து கொண்ட கல்வி சம்பந்த பட்ட ஒரு நிகழ்ச்சி.ஒரு கல்வித்துறை அதிகாரி (பெயர் ஞாபகமில்லை)எல்லாரும் தங்கள் பிள்ளகளை, அரசு பள்ளிகளில் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்.சட்டென்று கோபி "அய்யா உங்க பேரன் எங்கு படிக்கிறார்???" என்று கேட்டதும் அவருக்கு பயங்கர கோபம்.என் பையன் அரசு பள்ளியில் தான் படித்தான்,என் பேரன் என் கண்ட்ரோலில் இல்லை, அவன் என் பையனின் கண்ட்ரோலில் என்றார்.
ஒரு அமைச்சர்
ஒரு அமைச்சர்
ஒன்றல்ல இரண்டல்ல... தொடர்ந்து 25-வது ஆண்டாக 'ப்ளஸ் டூ' தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழ கத்திலேயே முதலிடத்தைப் பிடித்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்! இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 871 மாணவர்களில் 17 ஆயிரத்து 145 பேர் அதாவது 95.93 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்! 10 அரசு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றிருப்பதும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் 94 சதவிகிதம் என்பதும் இன்னும் இனிப்பான செய்தி. 157 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் சதம் அடித்திருக்கிறார்கள். மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 1,000 மதிப்பெண்ணை கடந்து சாதித்திருக் கிறார்கள், மாநில அளவிலும் பலர் ரேங்க் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை.
ஆனால், 20 கல்லூரிகளைக் கொண்ட இந்த மாவட் டத்தில் ஓர் அரசு கல்லூரிகூட கிடையாது. பக்கத்து மாவட்டங்களில்கூட நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், அரசு மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரி யும்... ஏன் ஒரு பாலிடெக்னிக்கூட உள்ள நிலையில், கல்வி வளர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் ஒன்றுகூட இல்லை.
இதுபற்றி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. 'விருதுநகர் மாவட்டம் பரப்பளவில் சிறிய, அதே நேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை முன் னேறிய மாவட்டம். அதனால் அங்கே அரசு கல்லூரிகள் அமைக்கும் தேவை இப்போது இல்லை. தேவை ஏற்படும்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.(நன்றி ஜூவி)
இப்படித்தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களின் திட்டமிடல்களும்,செயல் பாடுகளும்.
இவர்களை நம்பி???
40 comments:
நண்பா
1. உள்கட்டமைப்பு இல்லாமல், சரியன திட்டமிடுதல் இல்லாமல் தமிழ் வழி இஞ்சினியரிங்கைக் கொண்டு வருவது மிகப் பெறும் தவறு என்பதை நான் முழுக்க ஒத்துக் கொள்கிறேன்.
2. தமிழ்வழிக்கென்றே தனிக்கல்லூரி துவங்குவதும் தவறு என்பதை நான் 100% ஒத்துக்கொள்கிறேன் - அந்தக்கல்லூரிகள் நீங்கள் சொன்னது போல தவிர்க்கப்படலாம்.
ஆனால், இதற்காகத் தாய்மொழிக் கல்வியே தவறு என்று ஆரம்பித்த உங்கள் வாதம் தான் தவறான கண்ணோட்டம்.
நம் நாட்டின் பாடத்திட்டம் - மெக்காலே கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நெய்யப்பட்டது. அதில் நம்மை சர்வீஸஸ் இண்டஸ்ட்ரிக்கு தயார்ப்படுத்திகிறார்களேயன்றி, மேன்யுஃபேக்சரிங்குக்கோ இல்லை R&D க்கோ தயார் செய்வதில்லை.
நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். மிகக் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வந்த அளவுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ இருந்து வெளிவருவதில்லை. இதற்கு முக்கியக் காரணமாக தாய்மொழிக்கல்வி இல்லை என்பதையே நான் சொல்வேன்.
தாய்மொழியில் மேற்படிப்புப் படிக்க வசதி இருந்திருந்தால் இன்னும் பல விஞ்ஞானிகளை தமிழகமும் இந்தியாவும் உருவாக்கியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நீங்கள் சொல்வது போல சர்டிஃபிகேஷன் கோர்ஸ்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஃபிலிப்பைன்ஸ் காரர்கள் அதை எப்படிப் படித்து எழுதிகிறார்கள்?
அதோடு ஆங்கில வழியில் படித்தால் தான் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும் என்பதும் ஆங்கிலம் பேசும் இடத்தில் பிழைக்க முடியும் என்பதும் சரியான வாதமாக எனக்குப் படவில்லை.
இப்படி “ஆங்கில வழியில் படிக்காவிட்டால் நீ பிழைக்க முடியாது” என்பதை நம் மனதில் விதைத்தே வந்துவிட்டார்கள்.
அதே போல கம்யூனிக்கேசனுக்காக இன்னொரு மொழியைப் படிப்பது அவ்வளவு கடினம் ஒன்றும் இல்லை.
என் தாய் மொழி கன்னடம். வீட்டில் கன்னடம் தவிர வேறு மொழிகள் பேசுவதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த காரணத்தால் நான் தமிழிலேயே படித்தேன், தமிழிலேயே பேசினேன், தமிழிலேயே யோசிக்கிறேன். என்னால் எப்படி வேறு ஒரு மொழியை சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிந்தது? (நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் தமிழ் வழி. அதற்கு மேல் படித்ததெல்லாம் ஆங்கில வழியில், தமிழ் ஒரு பேப்பரைத்தவிர தமிழ் எனக்குப் பரிச்சயமில்லை).
நீங்கள் மும்பையில் வசித்திருந்த காலத்தில் முயற்சி எடுத்திருந்தால் முப்பதே நாட்களில் ஹிந்தியைக் கற்றிருந்திருக்கலாம்.
ஹிந்தி தெரிந்தால்தான் பிழைப்பு நடத்தமுடியும் என்று வந்த பின்பு அதை எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் என்ன இந்தியில் கவிதையும் கதையுமா எழுதப் போகிறீர்கள். பேசத்தானே?
கடைக்கோடி தமிழனைப் பாருங்கள், குஜராத்திலும், கொல்கத்தாவிலும் டெல்லியிலும் கூலி வேலை செய்கிறான். அவன் குஜராத்தியோ, பெங்காலியோ இல்லை ஹிந்தியோ எப்படிக் கற்றுக்கொண்டான். அவன் பள்ளிப்படிப்பையே தாண்டியிருக்க மாட்டான்.
மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கு ஹிந்தி தெரியாததற்கு மீண்டும் ஹிந்தியை பள்ளியில் கற்றுத்தராததே காரணம் என்று குற்றம் சொல்லாதீர்கள்.
தமிழ்வழியில் படித்தால் ஒரு பேப்பர் ஆங்கிலம் இருக்கும். அப்படி ஆங்கிலம் படித்தே தமிழ் வழியில் கற்றவர்களால் ஆங்கிலம் பேசி வேலை செய்ய முடியாமல் போய்விடும் என்று வருத்தப்படும் சிலர் இருக்கும்போது ஹிந்தி ஒரு பேப்பர் படித்தால் சரளமாக இந்தியில் பேசி விடலாம் என்று எப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் அந்த ஹிந்தி மந்திர்களில் ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா என்றெல்லாம் எழுதிப் பாஸ் செய்தவன் தான். ஆனால் இன்று வரை எனக்கு ஹிந்தி பேசத் தெரியாது. தமிழ்த்தாயின் புண்ணியத்தில் ஹிந்தி பேசியே ஆக வேண்டியகட்டாயம் எனக்கு நேரவில்லை. அப்படி நேர்ந்திருந்தால் நான் ஹிந்தி கற்றுக் கொண்டிருந்திருப்பேன் (வேலை செய்யும் ஊரில்)
//நீங்கள் மும்பையில் வசித்திருந்த காலத்தில் முயற்சி எடுத்திருந்தால் முப்பதே நாட்களில் ஹிந்தியைக் கற்றிருந்திருக்கலாம்.
ஹிந்தி தெரிந்தால்தான் பிழைப்பு நடத்தமுடியும் என்று வந்த பின்பு அதை எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் என்ன இந்தியில் கவிதையும் கதையுமா எழுதப் போகிறீர்கள். பேசத்தானே?//
நண்பா கஃல்ப் க்கு வந்ததக்குப்புறம் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டாகி விட்டது.
அடுத்த படியாக ஐரோப்பாவில் போய் வேலை செய்ய ஃப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி தெரிய வேண்டியதாயிருக்கிறது, தென்னமெரிக்காவில் சென்று வேலை செய்ய ஸ்பானிஷ், போர்சுகீஸ் தெரியவேண்டியதாயிருக்கிறது, மலேசியா, தைவானில் சென்று வேலை செய்ய மலாயா, சைனீஸ் தெரியவேண்டியிருக்கிறது என்பதால் இந்த மொழிகளையும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்க கட்டாயமாக்கலாம்.
//நண்பா கஃல்ப் க்கு வந்ததக்குப்புறம் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டாகி விட்டது//
இதைத்தான் சொல்கிறேன் நண்பா.. பேச்சுவழக்கிற்கு மட்டுமே தேவைப்படும் மொழியை பள்ளியில் சொல்லித்தரத் தேவையில்லை என்பது என் வாதம்.
//கடைக்கோடி தமிழனைப் பாருங்கள், குஜராத்திலும், கொல்கத்தாவிலும் டெல்லியிலும் கூலி வேலை செய்கிறான். அவன் குஜராத்தியோ, பெங்காலியோ இல்லை ஹிந்தியோ எப்படிக் கற்றுக்கொண்டான். அவன் பள்ளிப்படிப்பையே தாண்டியிருக்க மாட்டான்.//
ஹிந்தியே தெரியாமல் எங்க ஊரிலிருந்தும் நெறய பேர் மும்பைக்கு அண்ணாச்சிக்கு கடைகளுக்கு வேலைக்கு சென்று விட்டு 1 வருடம் கழித்து லீவுக்கு வரும் போது சரளமாகப் பேசுகிறார்கள்.ஒத்துக் கொள்கிறேன்.
நான் சொல்லுவது இது தான்.நாப்பது,அம்பது தொழிலாளர்களுக்கு அதிகாரியாக பணிக்குச் செல்லும் போது ஆரம்பத்தில் ரொம்ப கடினம்.
மத்திய கிழக்கில் பாகிஸ்தானி, நேபாளி,வங்காளதேசி,இந்தியர்கள் எல்லாருக்கும் பொது மொழி ஹிந்தி தான்.கட்டுமானத்துறையில் அதிகம் பணியிலிருப்பது இவர்கள் தான்.
//அடுத்த படியாக ஐரோப்பாவில் போய் வேலை செய்ய ஃப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி தெரிய வேண்டியதாயிருக்கிறது, தென்னமெரிக்காவில் சென்று வேலை செய்ய ஸ்பானிஷ், போர்சுகீஸ் தெரியவேண்டியதாயிருக்கிறது, மலேசியா, தைவானில் சென்று வேலை செய்ய மலாயா, சைனீஸ் தெரியவேண்டியிருக்கிறது என்பதால் இந்த மொழிகளையும் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்க கட்டாயமாக்கலாம்.//
ஹிந்தியும் நீங்கள் சொல்லும் மொழிகளும் ஒன்றா நண்பா??
PARUPPU, No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi.
Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).
/////////////////////////
Agreed Valid Point. If you are born and brought up in a city like chennai, you have some ideas about that. But people like me from a town, we don't know these things in that age. In our school life, our teachers and parents guide us. They ask us to join chemistry, maths tution, we'll join. That's it. We don't have hindi as a subject in school, then how do i know abt hindi and how can i love hindi / how we know about hindi is important for our future job??? WHo's mistake is this? Who s the culprit? ultimately education system and politicians. Because of their HINDI THINIPPU PORATTAM.
Now we know abtthe value of hindi and english, because we came out from our town and we face many problems because of our excellency in hindi and english. now i know the world. Tamil can help you upto chennai. (hmm, in chennai tamil is almost second language, ex. just enter any hotel in chennai in lunch time...u can feel...they will ask you "sir rice" soru/sappadu ellam seththu pochchu)
If they implement engineering in tamil, tell me who will join...again the POOR FAMILY or VILLAGE GUYS...
படிச்சவன் எவனும் தன புள்ளைய தமிழ்ல படிக்க வைக்க மாட்டான்...இது உண்மை!
//If they implement engineering in tamil, tell me who will join...again the POOR FAMILY or VILLAGE GUYS...
படிச்சவன் எவனும் தன புள்ளைய தமிழ்ல படிக்க வைக்க மாட்டான்...இது உண்மை!//
உண்மை நண்பா
COMMENT REPLY FROM MUKILAN:
//.இப்போ இங்கிலிஷும் தெரியாம பண்ணப் போறாங்க...//
And this is another senseless statement. So, you can speak English only if you can learn it in English Medium? They are going to teach English language for Tamil Medium students for 3 years. This is more than enough to "Speak" english.
//////////////////////////////
It's absolutely comedy. Take my experince, i studied tamil medium up to 5th. From 6th i'm also join english medium. There are around 500 english medium students from my town. To be very frank 10 to 15 only can understand english!!!! Even they don't know how to speak!!!!
பத்துப் பனிரண்டு வருஷம் ஸ்கூல் ல படிச்சே புரியாத, பேசத்தெரியாத இங்கிலீஷ் வெறும் மூணு வருசத்தில அதும் காலேஜ் சப்ஜெக்ட் படிச்ச தெரிஞ்சிடுமா? ஸ்போகேன் இங்கிலீஷ் படிச்சா வராது சார்!
இன்ஜினியரிங் நாலு வருஷம் படிச்சது இங்கிலிஷ்ல தான்...எவனுக்கு இங்கிலீஷ் பேச தெரியும். சென்னைக்கு இண்டர்வியு வந்த்தப்போ, இந்தக் கேள்விக்கு எப்படி இங்கிலிஷ்ல பதில் சொல்லனும்னு தெரியாது. நெறைய இண்டர்வியுல அவமானப்பட்டு எங்க சீனியர் கிட்ட பதில் எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சோம். வேலைக்கு சேர்ந்ததுக்கு பிறகு ஆபீஸ் ல போன் அடிச்சா நான் எடுக்கவே மாட்டேன். ஏன்ன இங்கிலீஷ் ல எவனாவது பேசுவான், நமக்கு ஒன்னும் புரியாது.
சென்னைல படிச்சவன் எங்கள பார்த்த சிரிப்பான். என்னடா இங்கிலீஷ் தெரியாதா உங்களுக்குன்னு கேவலமா பாப்பான்.
இதோ அடுத்த கொடுமை
தமிழ்நாட்டில் சுயநிதிப் பள்ளிகளுக்கு தனித்தனியே கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க... அதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றுள்ளன. முதலமைச்சரை தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் சந்தித்துப் பேசினர். அரசின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு... 'விரைவில் கல்விக் கட்டண நிர்ணயம்பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்' என்று சில விளக்கங்களை அளித்திருக்கிறார் முதல்வர்!
இதுபற்றி பிரபல கல்வியாளர் ராஜகோபாலனிடம் கேட்டோம். ''கட்டணக் கல்வி கடந்த 30 ஆண்டுகளாக
அனுமதிக்கப்பட்டுவிட்டது. கல்வியை வணிகமாக மாற்றுபவர்கள், மிகப் பெரிய சக்தியாக உருவாகிவிட்டார்கள். இதற்கு, அரசின் தவறான கல்விக் கொள்கையே காரணம். நர்சரி கல்வி முதல் மருத்துவக் கல்லூரி வரை எதையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. முதல் காரணம், கல்வி அளிப்பதைத் தங்கள் கடமை என்பதில் இருந்து அரசு விலகிப்போய்விட்டது. அடுத்தது, 'பணம் உள்ளவன் பணத்தைக் கொடுத்துப் படிக்கிறான்; இதில் என்ன தப்பு?' என்ற ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
கல்லூரியோ, பள்ளியோ... அரசுக் கல்விக்கூடம் என்றாலே ஏதோ தாழ்த்தப்பட்டஇனத்து மக்களுக்கு உரியதுபோல் ஆகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்றால், அரசிடம் அடிப்படை மாற்றம் உண்டாக வேண்டும். அந்தப் பொறுப்பு மக்களிடம்இருந்துதான் உருவாக்கப்பட வேண்டும். அரசியல்வாதி களிடம் இருந்து அல்ல!
தங்களுக்குத் தகுந்த அரசியல் வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. ஆனால், இலவச டி.வி-யும் ஒரு ரூபாய் அரிசியும் போதும் என்கிற எண்ணம் மக்களிடம் விதைக்கப் பட்டுவிட்டதே...'' என ஆதங்கப்பட்டார் ராஜகோபாலன்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடைப் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, 'முழுக் கல்வி கட்டணத்தை மாணவர்கள் சுமக்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. இன்றைய தேதியில் கல்வி என்பது அடிப்படை உரிமை. நாமெல்லாம் பள்ளிக் கல்விக்காக செஸ் கட்டணம் செலுத்துகிறோம். 'மாணவர்களை எங்கள் பள்ளியில் வந்து சேரும்படி நாங்கள் வற்புறுத்தவில்லை. அவர்களாகத்தான் தரம் அறிந்து வந்து சேர்கிறார்கள்' என்று கூறுகின்றன தனியார் பள்ளிகள். அப்படியானால், கல்விக் கட்டணம் கட்டுப்படியாகவில்லை என்று ஏன் புலம்ப வேண்டும்? எந்தப் பெற்றோரும் 'இங்கு வந்து பள்ளிக்கூடத்தை ஆரம்பியுங்கள்' என்று கேட்கவில்லையே. இவர்களாகத்தானே பள்ளிக்கூடத்தை திறந்தார்கள். அரசு சொல்லும் கட்டணத்தில் இவர்களால் நடத்த முடியவில்லை என்றால், பள்ளியை அரசிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுதான் சரியாக இருக்கும்.
கோவிந்தராஜன் குழுவிலும் நிர்வாகத்துக்குத்தான் மேல் முறையீடு செய்ய உரிமை அளித்துள்ளனரே தவிர, பெற்றோருக்கு அளிக்கவில்லை. நியாயமான அரசாக இருந்திருந்தால், நியாயமான குழுவாக இது செயல்பட்டி ருந்தால், நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக் கட்டணத்தைப் பள்ளிகளின் நோட்டீஸ் போர்டில் முன்கூட்டி வெளியிடச் செய்திருக்க வேண்டும். அதைப் பெற்றோர் பார்த்து... 'இந்தப் பள்ளிக்கு நிர்ணயித்த கட்டணம் அதிகம், குறைவு' என்ற கருத்தைத் தெரிவிக்க பெற்றோருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அரசாங்கமோ, பணத்தை வாங்குபவனின் கருத்தை மட்டுமே கேட்கிறதே தவிர, பாடுபட்டு உழைத்துப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பவர்களின் நலனில் அக்கறைகொள்ளவில்லை. கல்வியில் முக்கியமான புள்ளியே, மாணவர்கள்தான். அந்த மாணவர்களையோ... பெற்றோர்களையோ திரைக்கு முன்னால் கொண்டுவராமல் நிர்வாகத்திடம் மட்டும் கேட்டு முடிவு எடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பொதுப் பள்ளி முறைதான் உள்ளது. எல்லாரும் கட்டணம் இல்லாத, பொதுப் பள்ளியை நோக்கிச் செல்லும் வேளையில், கட்டணம் நிர்ணயித்திருப்பதே தவறு. கட்டணத்தை மறுபரிசீலனை செய்து கூட்டச் செய்தால்... அது அனைத்திலும் பெரிய தவறு!' என்றார்!
இன்றைய ஜீவி
In the Corporate world, especially in USA, no one is looking for some one who speaks Grammatically Correct English. If they understand what you speak, that is more than enough.
////////////////////////
Rubbish! can this one possible in interview? I don't think, nowadays GD is there boss...
என்னோட கம்மன்ட்டுக்கு தான் நண்பர் முகிலன் பதில் போட்டுள்ளார், இத்தனை நாள் பார்க்காமல் இருந்துவிட்டேன்...
//நீங்கள் சொல்வது போல சர்டிஃபிகேஷன் கோர்ஸ்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஃபிலிப்பைன்ஸ் காரர்கள் அதை எப்படிப் படித்து எழுதிகிறார்கள்?//
அதிகமா பல்பு வாங்குறது அவங்க தான்
sorry i forgot to add the interview question, which we don't know how to answer that?
i.e.
"TELL ME ABOUT YOURSELF"
This is the question, to be very frank we don't know how to answer this and from where to start!!!
இது தான் தமிழனின் நிலைமை...ஒன்னு ரெண்டு பேரு தப்பி இருக்கலாம்..மீதி 90 % பேர்
மாட்டிக்கிட்டோம் சார்
//நீங்கள் மும்பையில் வசித்திருந்த காலத்தில் முயற்சி எடுத்திருந்தால் முப்பதே நாட்களில் ஹிந்தியைக் கற்றிருந்திருக்கலாம்.
ஹிந்தி தெரிந்தால்தான் பிழைப்பு நடத்தமுடியும் என்று வந்த பின்பு அதை எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் என்ன இந்தியில் கவிதையும் கதையுமா எழுதப் போகிறீர்கள். பேசத்தானே?//
அஞ்சா நெஞ்சன் அமைச்சராகி ஒரு வருடம் ஆகி விட்டது.இந்த ஒரு வருடத்தில் மொத்தமாக பார்த்தால் ஒரு மாசத்துக்கு மேலேயே டெல்லியில் இருந்திருப்பார்.
அவருக்கு இன்னும் ஏன் ஹிந்தி வரவில்லை....
//Agreed Valid Point. If you are born and brought up in a city like chennai, you have some ideas about that. But people like me from a town, we don't know these things in that age. In our school life, our teachers and parents guide us. They ask us to join chemistry, maths tution, we'll join. That's it. We don't have hindi as a subject in school, then how do i know abt hindi and how can i love hindi / how we know about hindi is important for our future job??? WHo's mistake is this? Who s the culprit? ultimately education system and politicians. Because of their HINDI THINIPPU PORATTAM.//
நண்பா, இந்தி எதற்குத் தேவை? பணிபுரியும் இடத்தில் Communication க்குத் தானே? அதற்கு எதற்கு நீங்கள் ஹிந்தியை லவ் செய்ய வேண்டும்? பனிரெண்டு வருடங்கள் ஹிந்தியைப் படித்தால் மட்டும் உங்களால் ஹிந்தியைச் சரளமாக பேசிவிட முடியுமா?
அதே 12 வருடம் படிக்கும் ஆங்கிலத்தை பேச முடியவில்லை என்கிறீர்கள்? இந்தக் கதை தானே இந்திக்கும் நடக்கும்.
மற்றபடி நானும் அருப்புக்கோட்டை என்னும் சிறு நகரத்தில் வளர்ந்தவன் தான்.
//ஹிந்தியும் நீங்கள் சொல்லும் மொழிகளும் ஒன்றா நண்பா??//
என்னைப் பொறுத்த வரை ஒன்று தான் நண்பா.
//Now we know abtthe value of hindi and english, because we came out from our town and we face many problems because of our excellency in hindi and english. now i know the world. Tamil can help you upto chennai. (hmm, in chennai tamil is almost second language, ex. just enter any hotel in chennai in lunch time...u can feel...they will ask you "sir rice" soru/sappadu ellam seththu pochchu)
If they implement engineering in tamil, tell me who will join...again the POOR FAMILY or VILLAGE GUYS...
படிச்சவன் எவனும் தன புள்ளைய தமிழ்ல படிக்க வைக்க மாட்டான்...இது உண்மை!//
இப்பிடி ஒரு நிலைமைக்கு நம்மை தள்ளியிருக்கிறது தான் சார் அவங்க வெற்றி.
நான் என் மகனை தமிழ் படிக்க வைப்பேன். தமிழ் பேசவும், எழுதவும் கற்றுத் தருவேன். தொடர்புக்கான மொழியை அவனுக்கு உலகம் கற்றுக் கொடுக்கும்.
நான் என் மகனை தமிழ் படிக்க வைப்பேன். தமிழ் பேசவும், எழுதவும் கற்றுத் தருவேன். தொடர்புக்கான மொழியை அவனுக்கு உலகம் கற்றுக் கொடுக்கும்.
///////////////////////////////
Excellent! Cheers! Future generation must speak minimum five languages.
Otherwise it's our fault.
By the way, i'm from RAJAPALAYAM
//It's absolutely comedy. Take my experince, i studied tamil medium up to 5th. From 6th i'm also join english medium. There are around 500 english medium students from my town. To be very frank 10 to 15 only can understand english!!!! Even they don't know how to speak!!!!
பத்துப் பனிரண்டு வருஷம் ஸ்கூல் ல படிச்சே புரியாத, பேசத்தெரியாத இங்கிலீஷ் வெறும் மூணு வருசத்தில அதும் காலேஜ் சப்ஜெக்ட் படிச்ச தெரிஞ்சிடுமா? ஸ்போகேன் இங்கிலீஷ் படிச்சா வராது சார்!
இன்ஜினியரிங் நாலு வருஷம் படிச்சது இங்கிலிஷ்ல தான்...எவனுக்கு இங்கிலீஷ் பேச தெரியும். சென்னைக்கு இண்டர்வியு வந்த்தப்போ, இந்தக் கேள்விக்கு எப்படி இங்கிலிஷ்ல பதில் சொல்லனும்னு தெரியாது. நெறைய இண்டர்வியுல அவமானப்பட்டு எங்க சீனியர் கிட்ட பதில் எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சோம். வேலைக்கு சேர்ந்ததுக்கு பிறகு ஆபீஸ் ல போன் அடிச்சா நான் எடுக்கவே மாட்டேன். ஏன்ன இங்கிலீஷ் ல எவனாவது பேசுவான், நமக்கு ஒன்னும் புரியாது.
சென்னைல படிச்சவன் எங்கள பார்த்த சிரிப்பான். என்னடா இங்கிலீஷ் தெரியாதா உங்களுக்குன்னு கேவலமா பாப்பான்.//
முதல்ல உங்களுக்கு நன்றி சார். எனக்காக பேசினதுக்கு.
ஆறாவதுல இருந்து இங்க்லீஷ் மீடியத்துல படிச்சே உங்களால இங்க்லீஷ் பேச முடியலன்னா, பன்னெண்டு வருஷம் வெறும் லேங்குவாஜா ஹிந்தி படிச்ச ஹிந்தில பேசிருவீங்களா என்ன?
நான் சொல்றது என்னன்னா, அப்பிடி நாலு வருஷம் இங்கிலீஷ் மீடியத்துல இன்ஜினியரிங் படிச்சே இங்க்லீஷ் பேச வராதப்போ, அட்லீஸ்ட் தமிழ்லயே படிச்சா படிக்கிறதை நல்லாப் புரிஞ்சாவது படிக்கலாமே? கஷ்டப்படாம படிக்க உதவுமே?
இப்ப கிராமத்துல இருந்து வந்து இன்ஜினியரிங் படிச்சவங்க வேலைல சேந்ததும் கஷ்டப்படுறதை விட கொஞ்சம் கூடுதலா கஷ்டமா இருக்கும். பரவாயில்ல சார். வந்த உடனே அரியர் வச்சு அப்புறம் அதைக் கிளியர் பண்ணி கஷ்டப் படுறதுக்கு, ஈசியா மார்க் ஸ்கோர் பண்றதுக்கு தமிழ்ல படிக்கிறது உதவிட்டுப் போவுது.
இப்ப உடனே கட்டமைப்பு இல்லை, தமிழ் மீடியம் படிக்கிறவங்களுக்கு மார்க் நிறைய போட மாட்டாங்கன்னு ஆரம்பிக்காதீங்க. அதை நான் முதல்லையே சொல்லிட்டேன். நல்ல கட்டமைப்பும், திட்டமும் போட்டு படிப்படியா தாய்மொழிக் கல்வியைக் கொண்டு வரணும் அப்பிடின்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா, தாய் மொழியில படிக்கவே வேண்டாம்னு சொல்றீங்க.
//By the way, i'm from RAJAPALAYAM //
Great, கடைசியில இங்க ஒரே மாவட்டத்துல இருந்து வந்த எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்கோமா
ஆறாவதுல இருந்து இங்க்லீஷ் மீடியத்துல படிச்சே உங்களால இங்க்லீஷ் பேச முடியலன்னா, பன்னெண்டு வருஷம் வெறும் லேங்குவாஜா ஹிந்தி படிச்ச ஹிந்தில பேசிருவீங்களா என்ன?
//////////////
வெறும் பாடமா எந்த மொழி படிச்சாலும் உங்களால் சரளமாக அந்த மொழி பேச முடியாது. பேசி பழகினா மட்டும் தான் அது முடியும்
நான் சொல்றது என்னன்னா, அப்பிடி நாலு வருஷம் இங்கிலீஷ் மீடியத்துல இன்ஜினியரிங் படிச்சே இங்க்லீஷ் பேச வராதப்போ, அட்லீஸ்ட் தமிழ்லயே படிச்சா படிக்கிறதை நல்லாப் புரிஞ்சாவது படிக்கலாமே? கஷ்டப்படாம படிக்க உதவுமே?
/////////////////////////
நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா?
கரிசல்காரன் அதப்பத்தி தான் பதிவு போட்டுருக்கார். அவர் electrical பிரச்சனைய சொல்லிட்டார். இன்னும் mech , civil , எத்தனையோ இருக்கு.
bio tech எப்படி சார் தமிழ்ல படிப்பீங்க! software programming தமிழ் ல படிச்சு எழுத முடியுமா? அப்டியே நீங்க எல்லாத்தையும் பண்ணாலும் சீனா மாதிரி நம்மால இருக்கு முடியுமா? அங்க software கூட chinese ல இருக்கும். கஷ்டம் சார்.
இப்ப கிராமத்துல இருந்து வந்து இன்ஜினியரிங் படிச்சவங்க வேலைல சேந்ததும் கஷ்டப்படுறதை விட கொஞ்சம் கூடுதலா கஷ்டமா இருக்கும். பரவாயில்ல சார். வந்த உடனே அரியர் வச்சு அப்புறம் அதைக் கிளியர் பண்ணி கஷ்டப் படுறதுக்கு, ஈசியா மார்க் ஸ்கோர் பண்றதுக்கு தமிழ்ல படிக்கிறது உதவிட்டுப் போவுது.
/////////////////////////////
அதுக்குள்ளே எல்லாவனுக்கும் வேலை கிடைச்சிடும். இவன் வேலை தேடி ரோடு ரோடா அலைவான். வேலைக்கு என்ன சார் கியாரண்ட்டி
எவன் வேலை குடுப்பான்? நீங்க ஒரு software கம்பனி ஓனர் ன்னு வச்சிக்கிடுவோம், நீங்க குடுப்பீங்களா? இல்ல நீங்க வேலை பாக்குற கம்பனில refer பண்ண முடியுமா? உங்க கம்பனி அவன வேலைக்கு சேர்ப்பானா?
ஒரே மாவட்டத்துல இருந்து வந்த எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்கோமா
///////////////
கல்வி அமைச்சர் இருக்குற மாவட்டம் ஆச்சே! கல்விக்கு சண்ட போடலாம், கலவிக்கு தான் சண்ட போடா கூடாது :)
வரிக்கு வரி உங்களுடன் ஒத்து போகிறேன். எங்களது வாழ்வை பிரதிபலித்தது.
நீங்கள் கூறியது போல பல மொழிகள் கொண்ட நம் இந்தியாவில். தமிழில் மட்டும் படித்தால் வேலை கிடைப்பது குதிரைக்கொம்புதான். வாழ்றதுக்குத்தான் மொழி கண்டுபிடிச்சாங்கன்னு நினைக்கிறேன்.
//முதன் முதலில் பிரச்சினையானது வெளிநாட்டு வேலை தேடி மும்பை சென்ற போது தான்.//
கத்துக்கணுமுன்னு நினைச்சா எந்த மொழியையும் கத்துகலாம், ஆனா நீங்க மும்பை போகணும் என்பதற்காக நாங்க இந்தி படிக்க வேண்டிய அவசியம் என்ன?
//ஒரு வேளை எல்லா பள்ளிகளிலேயும் ஹிந்தியை ஒரு பாடமாக வைத்திருந்தால் எங்களைப் போன்றவர்களும் படித்திருப்போம்.//
நல்லாவே சொம்பு அடிக்குறீங்க இந்திக்கு, நீங்க சொல்லுறதைப் பார்த்தால் வடக்கூர் எல்லாம் பொருளாதாரத்திலே வானளாவிலே இருக்கிறார்கள், தமிழ் மக்கள் எல்லாம் இந்தி தெரியாம வழ வழி இல்லாம இருப்பதை போல இருக்கிறது.
//கத்துக்கணுமுன்னு நினைச்சா எந்த மொழியையும் கத்துகலாம், ஆனா நீங்க மும்பை போகணும் என்பதற்காக நாங்க இந்தி படிக்க வேண்டிய அவசியம் என்ன? //
Good Question.
சமீப காலமாக பதிவுகளில் பள்ளியில் இந்தி வழி கல்வி இல்லாததால் கடினம், திண்டாட்டம் என்ற அவர்களது அனுபவத்தை வைத்து எழுதுகிறhர்கள்.
உங்களுக்கு தேவை என்பதற்காக எங்களுக்கு தேவையில்லாததை எப்படி கற்றுக் கொள்ள முடியும். இந்தியை கொஞ்சம் உள்ளே விட்டால் முடிந்தது. ஏற்கனவே ஆங்கிலத்தால், தமிழின் பயன்பாடு குறைந்துள்ள நிலையில் இந்தியை விட்டால் அவ்வளவுதான்.
நண்பா தவறhக நினைக்க வேண்டாம், நீங்கள் வடநாட்டிலும், வெளிநாட்டிலும் பிழைப்பு நடத்த உங்கள் சுயநலத்திற்காக இந்தியை துhக்கிக் கொள்ளாதீர்கள்.
இங்கு பிழைக்க வரும் வடநாட்டவர்கள் தமிழை தெரிந்து கொண்டா வருகிறhர்கள்.
விஜய் & நசரேயன்
349 எஞ்சினியரிங் கல்லூரிகள் 317 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.ஆண்டு தோறும் இவற்றறில் படிப்பு முடித்து வெளி வரும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்குமா?????
தமிழனத்தலைவர் நிறுவிய ஒரு ஆங்கில பத்திரிகை தமிழ்நாட்ல இருந்து வெளிவருகிறது தெரியுமா???http://www.therisingsun.in/asp/home.asp
மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. தமிழுக்கு அவமானம்னு சொல்லி தமிழனத் தலைவர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டாரா என்ன???
குஷ்புவால் தமிழ் கலாச்சாரத்துக்கு அவமானம்னு எகிறிய திருமாவும்,தமிழ்குடிதாங்கியும் இப்ப ஏன் அமைதியானர்கள்??
குஷ்புவுக்கு கற்பு பற்றி என்ன தெரியும்னு காட்டமாக கேட்ட தமிழனத் தலைவர், இப்ப குஷ்பு ஒரு முற்போக்குவாதினு சொல்வது ஏன்??
எல்லாருக்குமே இது ஒரு பொழப்பு.பொழப்புக்கு ஒரு பிரச்சினைன்னா மொழி,இனம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுருவாங்க.
பொழப்பு வேற,ஜல்லி வேற என்பதில் அவங்க தெளிவா இருக்காங்க
நம்மள மாதிரி ஆளுங்க தான்........
Present sir....
கமென்ட்ஸ்லேயே நிறைய விஷயங்கள் இருக்கே...... சுவாரசியமாக போகுதுங்க.
//விஜய் & நசரேயன்
349 எஞ்சினியரிங் கல்லூரிகள் 317 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.ஆண்டு தோறும் இவற்றறில் படிப்பு முடித்து வெளி வரும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்குமா?????//
ஏங்க தமிழ் படிச்சா தமிழ்நாட்டுல மட்டும்தான் வேலை பாக்கணுமா? இது என்னங்க காமெடியா இருக்கு? வெளிமாநிலத்துல போய் வேலை செய்ய இந்தி தெரியணும்னு இந்தி படிக்கச் சொல்றீங்க. வெளி நாட்டுல போய் வேலை பாக்கணும்னு இங்க்லீஷ் மீடியம் வேணும்னு கேக்குறீங்க. அடுத்து ஜப்பான் போயி வேலை பாக்கணும்னு ஜப்பானீஸும் சொல்லித்தரச் சொல்லுங்க.
ஏங்க பொழப்பு வேற ஜல்லி வேறன்னு அவன் இருக்கட்டும். அவன் சொல்ற எல்லாத்தையும் தலைல தூக்கிக்கிட்டு நாங்க ஆடலை. ஆனா நீங்க சொல்ற வாதம் சரியா இல்லைங்கிறதுதான் என்னோட வருத்தம்.
நான் தமிழினத்தலைவர் சொன்னாருங்கிறதுக்காக தமிழைத்தூக்கி தலைல வச்சிக்கிட்டும் இந்தியைத் தூக்கிக் குப்பைல போட்டுட்டும் இருக்கலங்கிறத முதல்ல புரிஞ்சுக்குங்க.
//நான் தமிழினத்தலைவர் சொன்னாருங்கிறதுக்காக தமிழைத்தூக்கி தலைல வச்சிக்கிட்டும் இந்தியைத் தூக்கிக் குப்பைல போட்டுட்டும் இருக்கலங்கிறத முதல்ல புரிஞ்சுக்குங்க.//
//இப்படி “ஆங்கில வழியில் படிக்காவிட்டால் நீ பிழைக்க முடியாது” என்பதை நம் மனதில் விதைத்தே வந்துவிட்டார்கள். //
???? நீங்க சொன்னா அது உங்க சொந்த கருத்து, ஆனா நாங்க சொன்னால் யாரோ விதைத்ததை சொல்கிறோம் இல்ல??
//ஏங்க தமிழ் படிச்சா தமிழ்நாட்டுல மட்டும்தான் வேலை பாக்கணுமா? இது என்னங்க காமெடியா இருக்கு? வெளிமாநிலத்துல போய் வேலை செய்ய இந்தி தெரியணும்னு இந்தி படிக்கச் சொல்றீங்க. வெளி நாட்டுல போய் வேலை பாக்கணும்னு இங்க்லீஷ் மீடியம் வேணும்னு கேக்குறீங்க//
ஒரு உதாரணம்
Desired Candidate's Profile
Profile BS degree in Engineering plus a minimum of six (6) years of either electrical inspection experience in the construction of Petrochemical or hydrocarbon facilities. For Saudi Candidates the minimum number of years is three (3)
OR
2 years industrial/technical College Diploma plus a minimum of twelve (12) years electrical inspection Experience in the construction of Petrochemical or hydrocarbon facilities. For Saudi Candidates the minimum number of years is five (5)
OR
OR Secondary High School (Science major) a minimum of eighteen (18) years in electrical inspection Experience in the construction of Petrochemical or hydrocarbon facilities. For Saudi Candidates the minimum number of years is seven (7)
//////Fluent command of the English language (spoken and written).//////////
Must have good vision (20/20 normal or corrected) and be in good physical condition.
Has a valid KSA driver's license.
Good working knowledge of standard PC workstation usage and basic M.S Office software applications.
Pass Saudi Aramco written exam based on international codes or has valid National Certification Program Construction Code Inspector (NCPCCI) certificate.
Pass Saudi Aramco interview.
Experience 6 - 15 years
Education Basic - Bachelor of Technology/Engineering ( Electrical )
Nationality Any Nationality
Gender Any
Company Name: Gurram Software Solutions (Recruitment Division)
Location: Chennai
Key Skills: Gurram Software Solutions (Recruitment Division), Storage, Presales, RFP, RFQ, RFI
Job description:
Location : Chennai
Education : Any Computer graduate or a Masters Degree
Experience: 7-10 Years
Position: Technical Marketing Engineer (Business Continuity)
Expectations & Qualification
BSCS/BSEE or equivalent required
5+ years experience in storage industries required
Required to have hands on experience with SAN or NAS storage subsytems
Required to have hands on experience with disaster recovery, backup/restore, snapshot, volume management
/////Required to have proficient oral and written communication skills in English ///
//உள்கட்டமைப்பு இல்லாமல், சரியன திட்டமிடுதல் இல்லாமல் தமிழ் வழி இஞ்சினியரிங்கைக் கொண்டு வருவது மிகப் பெறும் தவறு என்பதை நான் முழுக்க ஒத்துக் கொள்கிறேன்.///
எனக்கு தெரிந்தது கரிசல் அவர்கள் போன பதிவில் இதை தான் சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் சில வார்த்தைகளை தவறாக யூஸ் பண்ணியதால் விவாத பொருளாக மாற்விட்டது என்பது என்னுடைய புரிதல்..
நானும் மேலே உள்ளதை மட்டும்தான் மனதில் கொண்டு பதிவில் பின்னூட்டம் இட்டேன்.. அதற்கு ஒருவர் கொடுத்த பின்னூட்டமே நன்றாக இருந்தது.. கருவை விட்டுவிட்டு சிதறல்கள் தான் விவாதிக்க படுகிறது என்று நினைக்கிறேன்..
பதிவுக்காகவோ அல்லது மேடைக்காகவோ தமிழ் தான் உயிர் மூச்சு என்று பேசும் தலைவரிலிருந்து தொண்டர்கள் வரை ஊருக்கு மட்டும் தான் உபதேசம்.தனக்குன்னு வரும் போது மாறி விடுவார்கள்.ஆங்கில வழியில் பாடம் நடத்தும்,ஹிந்தியை ஒரு பாடமாக கற்றுத் தரும் பள்ளிகளில் தான் வாரிசுகளை சேர்ப்பார்கள்/சேர்க்கிறார்கள்.
இல்லன்னு சொல்ல முடியுமா?? தமிழகத்தின் சிறு நகரங்களில் கூட மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளன.வேன்களும்,பஸ்களும் கிராமங்கள் வரை சென்று மாணவர்களை கொண்டு வருகின்றன.
அடுத்த கல்வியாண்டுக்கு ஆறு மாசம் முன்பே இடமில்லை, என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டு தானே இருக்கிறது.
அரசு பள்ளி என்றாலே வசதியற்ற மக்களுக்கு உரியதுபோல் ஆகிவிட்டது.
To Mukilan.
தலைவா, அது ஏற்க்கனவே நடை முறையில் இருக்கு. நீங்க japanese கம்பெனி ல செலக்ட் ஆனா, டெய்லி உங்களுக்கு japanese சொல்லிக் குடுப்பாங்க.. ஜெர்மனி ல வேல பார்க்கணும்னா ஜெர்மனி படிச்சு பாஸ் பண்ணனும். என் நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள், இதை தவிர்த்து வேறு பல நாடுகளில் வேலை செய்கிறார்கள்..நீங்க என்ன field ல இருக்கேன்களோ அதுக்கேத்த மாதிரி நீங்க வெளிய போய் தான் ஆகணும், for ex . mechanical க்கு பெஸ்ட் ஜெர்மனி, அங்க தான் நெறைய கார் பாக்டரி இருக்கு. நீங்க அங்க போகணும்னா german படிச்சு தான் ஆகனும். மத்தபடி உலகத்துக்கு பொதுவான மொழி இங்கிலீஷ், அது கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்..
கருத்துரையிடுக