வருசம் பூரா நம்மளே தான் பாத்துக்கணுமா ஏன் உங்க தம்பி வீட்ல கொஞ்ச நாள் போய் இருந்தா என்னவாம்?
மெட்ராஸ் அம்மாவுக்கு சரிப்பட்டு வராது அவன் தான் பணம் அனுப்பறான் இல்ல அப்புறம் என்ன?
பணம் அனுப்புனா மட்டும் போதுமா? போன தடவை கூட்டிட்டு போய்ட்டு ஒரு மாசத்துல கொண்டு வந்து விட்டுட்டாக.ஒரு மாசம் வச்சிக்கிருதே கஷ்டமா இருக்கன்னா காலம் பூரா பாக்குற எனக்கு எப்படி இருக்கும்?
பெத்த அம்மாவை யார் வீட்டில் வைத்துக் கொள்வது என்ற பிரச்சினை.
இன்னும் சில வீட்டில் அப்பா சென்னையில் பெரிய மகன் வீட்டில் இருக்கும் போது,அம்மா மதுரையில் சின்ன மகன் வீட்டில் இருப்பாங்க.அந்திமக் காலத்தில் மனம் விட்டு பேச,தங்களின் கடந்த காலத்தை அசை போட, துணை தேவைப் படும் நேரத்தில், தனித் தனியே காலனை எதிர்பார்த்து காலம் தள்ள வேண்டியிருக்கும்.
இந்த அவசர உலகத்தில் பெத்தவங்களை கவனிக்கக்கூட பிள்ளைகளுக்கு நேரம் இல்லை. வயதான காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளைப் பற்றி பேசுவது தான் இந்த மூன்று மலையாளப் படங்களும்.
கேரளா கஃபே மொத்தம் பத்து கதைகளை உள்ளடக்கியது,அதிலொன்று ப்ரிட்ஜ்.
வயதான,கண் பார்வையற்ற தாயை பார்த்துக் கொள்ள முடியாமல் திண்டாடும் ஒருவன்,அந்த தாயின் கடல் காணும் (கடைசி)ஆசையை தீர்ப்பதாகக் கூறி அழைத்து செல்வான்.கடற்கரைக்கு சென்று அலையில் கால் நனையச் செய்து,சாலையோர உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து,தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து கொண்டு போவான்.இடைவேளையில் குடிப்பதற்கு ஏதாவது வாங்கி வருகிறேன் என்று சொல்லிட்டு,தன் அம்மாவை தியேட்டரிலேயே விட்டுட்டு அழுது கொண்டே வெளியேறி விடுவான்.
மற்றொரு பக்கம் தாயில்லாத சிறுவன் வளர்க்கும் பூனை,அவனது தந்தைக்கு பிடிக்காததால் பூனையை வலுக்கட்டாயமாக சிறுவனிடம் இருந்து பறித்துக் கொண்டு போய் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் விட்டு வருவார்.பூனையை பிரிந்து தவிக்கும் சிறுவன் காய்ச்சலில் வழுவான்.சிறுவனின் தவிப்பைக் கண்டு அவனது தந்தை மீண்டும் பூனையை எடுத்து வரும் நோக்கில்,பூனையை விட்ட இடத்தில் போய் தேடி,பூனை கிடைக்காததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பும் போது,தாயை தியேட்டரில் விட்டுட்டு போகிறவன் பஸ்ஸில் அந்த பக்கமாக செல்வான்.
கடைசியில் அந்த கண்பார்வையற்ற தாய் கடற்கரையில் உட்கார்ந்திருக்க, பூனை அருகில் விளையாடிக் கொண்டிருப்பதாக படம் முடியும்.
மனசினக்கரே
சதயன் அந்திக்காடு இயக்கிய "மனசினக்கரே" என்ற படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.ஒன்று பணக்கார வீட்டைப் பற்றியது,இன்னொன்று சாதாரண ஏழைக் குடும்பத்தைப் பற்றியது.
கொச்சு திரேசா (ஷீலா) கணவனை இழந்த,அறுபது வயதைக் கடந்த பெரிய பணக்காரி. பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,வேலைக்காரி என பெரிய பங்களாவில் வசதியாக வாழும் திரேசா,பாசத்துக்கும்,எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும் ஏங்குபவர்.வயசான காலத்தில் கிழவி வீட்டில் வேளா வேளைக்குச் சாப்பிட்டு,பேசாமல் இருக்க வேண்டும் என பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள்.தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.
இன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் (இன்னொசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.மாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.
ஒரு காட்சியில் கே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம்,சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையாக தோழியிடம் சொல்லிட்டு,பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று கண் கலங்குவார்.
இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் பிரச்சினைகள் முற்றி,கடைசியில் திரேசா தன் வசதியான வாழ்க்கை,தன் அன்பை புரிந்து கொள்ளாத பிள்ளைகளை உதறி விட்டு உண்மையான பாசத்தை நேடி ரெஜியின் அம்மாவாக சென்று விடுவார்.
ராப்பகல்
கமல் இயக்கிய "ராப்பகல்" என்றொரு அருமையான படம்.பிள்ளைகள் எல்லாம் வெவ்வேறு ஊர்களில் செட்டிலாகி விட,அரண்மனை போன்ற வீட்டில் தனித்து வாழும் சரஸ்வதி அம்மாள் (சாரதா),அவருக்கு துணையாக கிருஷ்ணன் (மம்முட்டி) என்ற வேலைக்காரன்.சிறு வயதிலிருந்தே அந்த வீட்டில் வேலை செய்யும் கிருஷ்ணனை தன் சொந்த மகன் போல பாவிக்கிறார் சரஸ்வதி அம்மாள்,தன் சொந்த பிள்ளைகளிடம் கிடைக்காத அன்பும்,பாசமும் அவருக்கு கிருஷ்ணனிடம் இருந்து கிடைக்கிறது.இந்த சூழ்நிலையில் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் ஒன்று கூடி அந்த வீட்டை விற்று விட்டு,சரஸ்வதி அம்மாளை ஒரு மகனின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல முடிவெடுத்து,செயல் படுத்துகிறார்கள்.
கிருஷ்ணனிடம் அழுது கொண்டே விடை பெறும் சரஸ்வதி அம்மாள்,மகனின் நகரத்து வீட்டிலிருந்து ஒரே இரவில் காணாமல் போய் விடுவார்.இத்தனை வருஷம் அம்மாவை பொன்னு போல பார்த்துக் கொண்டேன், உன்னால ஒரு நாள் பார்த்துக்க முடியலையா?ன்னு சண்டை போட்டு விட்டு தன் வீட்டுக்கு திரும்பும் கிருஷ்ணனை எதிர்பார்த்து,தன் மீதி வாழ்நாளை அவருடன் அவனின் அம்மாவாக கழிக்க விரும்பி காத்திருப்பார் சரஸ்வதி அம்மாள்.
பெத்து,வளர்த்து,படிக்க வைத்து,வேலை வாங்கி கொடுத்து,ஆளாக்கிய பெற்றோர்களை கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் போட வேண்டியிருக்கிறது.
பெற்றோரை கவனிக்காமல்விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க, 'பெற்றோர் மற்றும் முதியோர் வாழ்க்கைப் பொருளுதவிச் சட்டம்' ஒன்றை 2007-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்துக்கான முழு விதிமுறைகளையும் 2009-ம் ஆண்டு இறுதியில்தான் மத்திய அரசு வெளியிட்டது. அந்தச் சட்ட விதிமுறை, 'வயதான பெற்றோரைக் கவனிக்காமல்விடும் பிள்ளைகளைப்பற்றி பெற்றோர் புகார் செய்தால், பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யலாம்!' என்கிறது. இந்தச் சட்டத்தைப்பற்றி மக்கள் மத்தியில் பொதுவான விழிப்பு உணர்வு இன்னும் ஏற்படாத நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக நாமக்கல் மாவட்டத்தில் அப்பாவைத் தவிக்கவிட்ட மகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, கைதுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர் சகாயம்!
ஒரு விசயம்' 'நாளைக்கு இதே முதுமை நமக்கும் வரும்" என்பதை மறக்க வேண்டாம்.
திங்கள், 3 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
நல்ல கருத்துள்ள படங்கள். இறுதியில் சொல்லி இருப்பது, பொன் மொழி.
விமர்சனம் நல்லா இருக்குங்க....
என்றைக்கு கூட்டு குடும்பத்தை நாம் களைத்தோமோ அன்றே இதற்க்கான விதை விதைக்கப்பட்டது
மிக நல்ல கருத்தும், படங்களும். வாழ்த்துகள் கரிசல்!!
கேரளா கஃபே பார்க்க வேண்டும்.. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..
சேட்டா நல்ல விமர்சனம். ஈபடமெல்லாம் எவட நோக்கறது?
//நல்ல கருத்துள்ள படங்கள். இறுதியில் சொல்லி இருப்பது, பொன் மொழி.//
நன்றி சித்ராக்கா
//விமர்சனம் நல்லா இருக்குங்க....//
நன்றி நாடோடி
//என்றைக்கு கூட்டு குடும்பத்தை நாம் களைத்தோமோ அன்றே இதற்க்கான விதை விதைக்கப்பட்டது//
அதே LK
//மிக நல்ல கருத்தும், படங்களும். வாழ்த்துகள் கரிசல்!!//
நன்றி ஹுஸைனம்மா
நன்றி பிரசன்னா
//கேரளா கஃபே பார்க்க வேண்டும்.. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..//
நிச்சயம் பார்க்க வேண்டிய படம்
நன்றி அதிஷா
//சேட்டா நல்ல விமர்சனம். ஈபடமெல்லாம் எவட நோக்கறது?//
குறய ஏசியா நெட்ல நோக்கும் மற்றது டிவிடி சேட்டா
நல்ல கட்டுரை
நல்ல கருத்து நாலு பேரை போய் சேரவேண்டும்.... ஓட்டளியுங்கள்....
விமர்சனம் அருமை.
கருத்துரையிடுக