என்ன தான் நம்மூரு "பவன்" வகையறா ஹோட்டல்கள் இங்க இருந்தாலும்,அவை முனியாண்டி விலாசுகளுக்கு ஈடாகா!குறிப்பாக சரக்கடித்து விட்டுச் செல்லும் சமயங்களில்.......எங்கூட பணி எடுக்கும் சேட்டன் ஒருவர் சிக்கனவாதி (எப்படின்னா ஆயிரம் திராம்ஸ் சரக்குக்கு செலவளிக்கலாம் ஆனா ஒரு திராம்ஸ் கூட சாப்பாட்டுக்கு எக்ஸ்ட்ரா செலவளிக்க கூடாது) அவருக்கு சரக்கடித்தால் கண்டிப்பாக மசாலா தோசை தான் வேணும் அதுவும் ரைட் சைடுல சிக்கன் சுக்கா,லெப்ட் சைடுல ஃபுல் பாயிலோட.ஒரு தடவை போதைல செட்டிநாடுக்கு கூட்டிட்டுப் போய்,மறு நாள் தியான நிலை தெளிஞ்சதும்,பில்ல பார்த்து தமிழ்லேயே அசிங்கமா திட்டிட்டாரு.அதுல இருந்து எப்பவும் இந்த கடைதான்.
அபுதாபி - மிஸ்பா
அபுதாபி டூரிஸ்ட் கிளப் ஏரியால எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பக்கத்துல இருக்கு,எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பார்ல குடி(ளி)ச்சுட்டு வெளியே வந்தவுடன் வலது பக்கம் திரும்புனா மிஸ்பா தெரியும்.ஹோட்டல் முதலாளி சேட்டனா இருந்தாலும் தமிழ்ப்பற்றோட!! "ஹோட்டல் மிஸ்பா தென்னிந்திய உணவுகள் கிடைக்கும்"னு தெளிவா எழுதி வச்சிருப்பாரு.
இட்லி,தோசை,சப்பாத்தி,பரோட்டா,சிக்கன்,மட்டன்,கேரளா ஸ்டைல் பீஃப் ஃபிரை என எல்லாம் கெடைக்கும் சகாய விலையில்.அதெல்லாம் விட பெரிய விசயம் என்ன அலும்பு பண்ணினாலும் கண்டுக்க மாட்டாங்க.நம்மாளு எண்ணெய் இல்லாம ஒரு ஆனியன் ரவா,நெய் இல்லாம ஒரு நெய் ரோஸ்ட்டுன்னு ஆர்டர் குடுத்தாலும் ஒகே சார்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பாங்க! அனுபவம்.நம்மாளு இருக்குற நெலைமைக்கு தோச கல்லையே கொண்டு வந்து வச்சாலும் ஒண்ணும் தெரியாது,ஏன்னா எல்லாரும் கொஞ்சமா தான் குடிப்பாங்க!
கத்தார் - பெயரில்லா கடை
அல்கோரிலிருந்து ராஸ்லபான்(RASLAFFAN) செல்லும் வழியில் லேபர் கேம்ப் ஏரியாவில் உள்ளது.இந்த சேட்டனுக்கு எந்த மொழிப் பற்றுமே கிடையாது.ஆமாங்க கடைக்கே பேரே கிடையாது!பேர் இல்லாவிட்டாலும் எல்லாரும் அழைப்பது கறிமீன் ஹோட்டல்.இங்க கறிமீன் பிரை தான் ஸ்பெசல்,வியாழன் மற்றும் வெள்ளி இரவுகளில் இதுக்காக ஒரு கூட்டமே காத்துக் கெடக்கும்.மசாலால ஊறப்போட்டு ரெடியா வச்சுருப்பாங்க,ஆர்டர் குடுத்ததுக்கப்புறம் பிரை பண்ணி தருவாங்க.சாதாரணமான நாளில் 15 நிமிஷம் ஆகும்.வியாழன் அல்லது வெள்ளின்னா நம்ம அதிர்ஷ்டத்த பொறுத்தது.ஒரு பிரை,ரெண்டு பரோட்டா சாப்பிட்டா சும்மா கும்முன்னு இருக்கும்.
ஒரு பிரையோட விலை 8 கத்தார் ரியால்.நம்மூர் காசுக்கு குத்து மதிப்பா 96 ரூபா வரும்.(சென்னை மடிப்பாக்கத்திலுள்ள ஓரியன் ரெஸ்ட்டாரெண்டில் ஒரு கறிமீன் பிரை 250 ரூபாய்........ ம் நல்லாருங்கடே மக்கா)
சவுதி - லெபனான்
என்னடா இவன் சவுதின்னு சொல்லிட்டு லெபனான்னும் சொல்றான்னு குழம்புறிங்களா?? இந்த கடை சவுதிலதான் இருக்கு,கடை பேர் லெபனான்
இங்க சரக்கடிச்சுட்டு (சரக்கே கெடைக்காது) போக முடியாது, ஒரு வேளை சதிக்கி (நம்மூரு பட்டை தராளாமா கிடைக்கும்)அடிச்சாலும் போக முடியாது.இப்படிப்பட்ட குடிமகன்களுக்காக ஹோம் டெலிவரி வசதி உண்டு.
சவுதி முழுக்க கிளைகள் இருக்குன்னு சொல்றாங்க.நான் தமாம் மற்றும் ரஹிமா கிளைகளில் சாப்பிட்டுருக்கேன்.இது ஒரு அரபு ஹோட்டல், ரோஸ்டடு சிக்கன் சாப்பிட மட்டும் இங்கு போவோம்.ரோஸ்டடு சிக்கன் கேஎஃப்சி மாதிரி தான் இருக்கும், ஆனா கேஎப்சிய விட நல்லாருக்கும். பன்னுக்குப் பதிலா சுடச்சுட ரொட்டி மூங்கில் கூடைல வச்சு குடுத்துட்டே இருப்பாங்க.பூண்டு சட்னி கெட்டியா, சூப்பரா இருக்கும். கேஎஃப்சி மாதிரி சுண்ணாம்பு டப்பால வச்சு குடுக்காம எவ்ளோ கேட்டாலும் குடுப்பாங்க.விலையும் கேஎஃப்சியோட ஒப்பிடுகையில் குறைவுதான்.
10 comments:
yummy........... yum! :-)
இன்று ஒரு தகவல்...சவுதி...
தத்துவம் என்னதான் கோழி, ஆடு, மீனுன்னு செஞ்சாலும் அலங்காரத்துக்கு கொத்துமல்லி, வெங்காயம், தக்காளி, கொட மொளகான்னு மரக்கறியாலதான் முடியுது பார்த்தியளா?:))
ஹாய், கரிசல் அபுதாபி - மிஸ்பா ஹோட்டல் முதலாளி தமிழ் நாடு-பெரம்பலூர். நான் மற்றும் ப்லாகர் ரியாஸ் அங்கே தான் சாப்பிடுகிறோம், நன் உங்களை மிஸ்ப மற்றும் எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பார்த்ததே இல்லை. நானும் டுரிஸ்ட் கிளப் ஏரியா தான்.
//Chitra கூறியது...
yummy........... yum! :-)//
நன்றி வலைச்சர ஆசிரியரே
//ராசராசசோழன் கூறியது...
இன்று ஒரு தகவல்...சவுதி...//
நன்றி சோழன்
//வானம்பாடிகள் கூறியது...
தத்துவம் என்னதான் கோழி, ஆடு, மீனுன்னு செஞ்சாலும் அலங்காரத்துக்கு கொத்துமல்லி, வெங்காயம், தக்காளி, கொட மொளகான்னு மரக்கறியாலதான் முடியுது பார்த்தியளா?:))//
நன்றி சார்
கலக்குறீங்க
// yasar கூறியது...
ஹாய், கரிசல் அபுதாபி - மிஸ்பா ஹோட்டல் முதலாளி தமிழ் நாடு-பெரம்பலூர். நான் மற்றும் ப்லாகர் ரியாஸ் அங்கே தான் சாப்பிடுகிறோம், நன் உங்களை மிஸ்ப மற்றும் எமிரேட்ஸ் பிளேசா ஹோட்டல் பார்த்ததே இல்லை. நானும் டுரிஸ்ட் கிளப் ஏரியா தான்.//
தகவலுக்கு நன்றி தலைவா
நான் ரூவெய்ஸ்ல இருக்கேன்,வெள்ளிக்கிழமை சரக்கடிக்க மட்டும் தான் அந்த பக்கம் வருவோம்
//பூண்டு சட்னி கெட்டியா, சூப்பரா இருக்கும். கேஎஃப்சி மாதிரி சுண்ணாம்பு டப்பால வச்சு குடுக்காம எவ்ளோ கேட்டாலும் குடுப்பாங்க//
ரசித்தேன். எனக்கும் அந்த பெரிய குப்பூஸ்தான் பிடிக்கும்.
ரசிச்சு, ரசிச்சு சாப்பிட்டு இருக்கிங்களே பாஸ்.
யம்மி பதிவு
கருத்துரையிடுக