ஒரு அழகான கிராமம்.அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்.அவளைப் போல்ஒருஅழகிய பெண்னை யாரும்பார்த்ததும் இல்லை கேட்டதும்இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச்சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்.இது தெரிந்ததும் மொத்தகிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது.இதனால்வேறு வழிதெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒட தீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.
உடனேஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால்கண்டு பிடிக்கவேமுடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக் கொள்ள முடிவுசெய்து செய்தித்தாளில்விளம்பரமும்கொடுத்தனர்.அதைப் பார்த்தகாதல் ஜோடி உடனே ஊர்திரும்பியது. சந்தோஷப் பட்டஊர் மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமானமுறையில் திருமணம் செய்யமுடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையானபொருட்களை வாங்கநகரத்திற்குச்சென்றிருந்தனர்.அப்போதுஎதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண்எதிரிலேயே உயிர் துறந்தான்.உடனே அந்தப் பெண்னும் மனநிலைபாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகுநினைவு திரும்பிய அந்தப் பெண்குடும்பத்தினருடன் வசித்துவந்தாள்.
திடீரென்று ஒரு நாள்அப்பெண்னின் தாய் ஒரு கனவுகண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள்மகள் அவளுடைய காதலன் நினைவாகவைத்திருக்கும் உடையில்இருக்கும் இரத்த்க் கறையைஉடனே துவைக்க வேண்டும்என்றது,இல்லா விட்டால் மோசமானவிளைவுகள்ஏற்படும் என்றும் எச்சரிக்கைசெய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதேதேவதை அந்தப் பெண்னின்தந்தையிடமும் கனவில்எச்சரித்தது.ஆனால் அவரும்அதைக் கண்டுகொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின்கனவிலேயே தோன்றிஎச்சரித்தது.அவள் உடனேதாயிடம் கனவைப் பற்றிக்கூறினாள். அதன் பிறகே அதன்முக்கியத்துவம்உணரப்பட்டது.அவள் தாய் அதைதுவைக்கக் கூறினாள்.உடனே அந்தப் பெண்னும் அதைத்துவைத்தாள். இருந்தும் தேவதைமறுபடியும் அடுத்த நாள்கனவில்வந்து கறை சரியாகப் போகவில்லைஎன்று எச்சரித்தது.மறுபடியும் அப்பெண்அத்துணியைத்துவைத்தாள்.இருந்தும் கறைபோகவில்லை. அடுத்த நாள் காலையில்அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத்திறந்தாள்.
அப்போது
கனவில்வரும் அதே பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகம்கனவில் வருவதைப் போல் கனிவாகஇல்லாமல்வெளிறிப் போய் இருந்தது.உடனேஇவள் பயத்தினால் அலறினாள்.
அந்தத் தேவதை கோபத்துடன்கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்எக்ஸல் போடு கறை போயிடும்"என்றது.
இதைப் படித்ததும் உடனே என்னைஉதைக்கத் தோணுமே உங்களுக்கு!நானே இதை எனக்குஅனுப்பியவரைத்தேடிக்கிட்டு இருக்கேன்
3 comments:
//இதைப் படித்ததும் உடனே என்னைஉதைக்கத் தோணுமே உங்களுக்கு!நானே இதை எனக்குஅனுப்பியவரைத்தேடிக்கிட்டு இருக்கேன்/
enga erukeenga
நன்றி ஜெய்சங்கர்
அபுதாபில இருக்கேன்
naan dubai makane eppothaavathu neril parththen?appa irukku.kolai very.
கருத்துரையிடுக