மாலதிக்கு அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை
வெளியே இடி,மின்னலுடன் மழை பெய்து கொண்டு இருந்தது.
கடிகாரத்தை நோக்கினாள் இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது அலுவலகம் முடிய
நேரமானதும் முதல் ஆளாக வெளியேறினாள் மழைய எதிர் கொள்ள தயாராய்
ரெயின் கோட்டுடன்
மின்னலும் இடியுமாய் நல்ல மழை அதோடு காற்று வேறு மாலதிக்கே பயமாயிருந்து
பார்க்கிங்கை அடைந்து ஹரிணி எப்படி வீட்டுக்கு எப்படி போனாளோ,குழந்தை பயந்து கொள்வாளோ என்று நினைத்துக் கொண்டே தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வீட்டுக்கு அருகிலேயே பள்ளி இருப்பதால் அவளது மகள் ஹரிணி நடந்தே
சென்று வருவது வழக்கம்
மழைக்காக கடவுளையும் ரோடுக்காக அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டே வீடு இருக்கும் தெருவில் திரும்பினாள்
அங்கு தூரத்தில் ஹரிணி மின்னல் அடிக்கும் போது நிற்பதும் பின்பு நடப்பதுமாய் மழையில் நனைந்து கொண்டே சென்று கொண்டிருந்தாள்,ரெயின் கோட்டை வேறு தலையில் இருந்து நீக்கியிருந்தாள்
நனையாதே என்று சொன்னாள் கேட்பதே இல்லை என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவளை நெருங்கி என்ன பண்றே ஹரிணி எதுக்கு நின்னு நின்னு போறே என்று அதட்டினாள்
இல்லம்மா வானத்துல இருந்து யாரோ போட்டோ எடுக்கிறாங்க அதான்மா என்றாள் முகம் கொள்ளாப் புன்னகையுடன்.
சனி, 28 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 comments:
நன்றாக உள்ளது நண்பரே...
சிறியதாயினும் அருமை.
கவிதை மாதிரியான காட்சி.
நல்லாருக்கு கரிசல்.. இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள்
நன்றி அகல்விளக்கு
நன்றி ஆதி
நன்றி கேபிளார்
வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விட்டேன்
அட.....குட்டீஸ்களின் மூளையே மூளை!
மழையும் மின்னலும் நானும்தான் பார்த்திருக்கேன், ஆனா, நீங்க பார்த்த விதம் இருக்கே, சூப்பர்!
கருத்துரையிடுக