எலக்ட்ரிகல் எஞ்சினியரீங் இல் அடிப்படை Ohms Law.ஒரு எலக்ட்ரிகல் எஞ்சினியரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் இதை சரியாக சொல்லணும்னு பாடம் நடத்தும் போது எங்க லெக்சரர் சொல்வார்.
Ohms Law:
மாறாத வெப்ப நிலையில் ஒரு மின் கடத்தியின் ஊடாக செல்லும் மின்னோட்டமானது,அதன் இரு முனைகளில் அளிக்கப்பட்ட மின்னழுத்தற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
தமிழிங்கிலிஷ்ல சொன்னா
ஓம்ஸ் லாவை பயன்படுத்தி அடிப்படை ஃபார்முலா
V = I*R
மி = மி*மி
மி = மி/மி
மி = மி/மி
Ohms Law:
At Constant Temperature the current through a conductor is directly proportional to the potential difference applied across its ends.
இதை அப்படியே தமிழ் படுத்தினாமாறாத வெப்ப நிலையில் ஒரு மின் கடத்தியின் ஊடாக செல்லும் மின்னோட்டமானது,அதன் இரு முனைகளில் அளிக்கப்பட்ட மின்னழுத்தற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
தமிழிங்கிலிஷ்ல சொன்னா
மாறாத வெப்ப நிலையில் ஒரு கன்டக்ரின் வழியாக செல்லும் கரண்ட்,அதன் இரு முனைகளில் அளிக்கப்பட்ட வோல்டேஜிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
என்ன இப்பவே கண்ணைக் கட்டுதா ??? இன்னும் இருக்கு பாருங்க
என்ன இப்பவே கண்ணைக் கட்டுதா ??? இன்னும் இருக்கு பாருங்க
ஓம்ஸ் லாவை பயன்படுத்தி அடிப்படை ஃபார்முலா
V = I*R
I = V/R
R = V/I
இங்கு
V = VOLTAGE
I = CURRENT
R = RESISTANCE
இத தமிழ்ல சொன்னா
மி = மி*மி
மி = மி/மி
மி = மி/மி
மி = மின்னழுத்தம் (Voltage)
மி = மின்னோட்டம் (Current)
மி = மின்தடை (Resistance)
நல்லாத் தானடா இருந்தா ஏன் இப்படியெல்லாம்னு தோணுதா??
நான் நல்லாத்தான் இருக்கேன் நாட்ல சில பேர் இப்படி ஆயிட்டாங்க
இங்க பாருங்க நம்ம மன்னர் சொல்றத
மி = மின்னோட்டம் (Current)
மி = மின்தடை (Resistance)
நல்லாத் தானடா இருந்தா ஏன் இப்படியெல்லாம்னு தோணுதா??
நான் நல்லாத்தான் இருக்கேன் நாட்ல சில பேர் இப்படி ஆயிட்டாங்க
இங்க பாருங்க நம்ம மன்னர் சொல்றத
//தமிழ் வழியில் பொறியியல் படிப்பு வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்படுகிறது. இதற் கென 1,800 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும். மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒருசில குறியீட்டு வார்த்தைகளை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் பொறியியல் படிப்பவர்களுக்கு முதல் மூன்று வருடங்களுக்கு கூடுதலாக ஆங்கில வகுப்புகளும் எடுக்கப்படும்.
சீனா,ஜப்பான்,தைவான் போன்ற நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்றுத் தரப்படுகிறது.இதனால் பொறியியல் படிப்பில் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றனர்.
சீனா,ஜப்பான்,தைவான் போன்ற நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்றுத் தரப்படுகிறது.இதனால் பொறியியல் படிப்பில் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றனர்.
மன்னர் ஜவஹர் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர்.//
யாருக்காக இந்த கரிசனம்? கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகன்னு சொன்னா அதுக்கு பதிலா மலையாள மந்திரவாதியைக் கூட்டிடு வந்து எல்லாருக்கும் மொத்தமா பில்லி சூனியம் வச்சிரலாம்!என்னைப் போன்ற கிராமப்புற மாண்வர்களுக்கு 12 வருஷம் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு கல்லூரியில் தீடிர்னு ஆங்கில மீடியத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனா ஒரு செமஸ்டர்க்கு கொஞ்சம் மெனக்கெட்டா,அப்புறம் எல்லாம் சகஜமாயிரும்.படிக்கும் போது அத விட வேற என்ன வேலை???
நான் பாலிடெக்னிக் படிக்கும் போது எங்க வகுப்புல இருந்த 32 பேர்ல 6 பேரத் தவிர எல்லாரும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு வந்தவங்கதான். பாலிடெக்னிக்ல எல்லாரும் ஆங்கில வழில தான் படிச்சோம், கடைசி பெஞ்ச் கோயிஞ்சாமிகளைத் (நன்றி பா ராகவன்) தவிர.அவங்களை நம்பியே "சுரா பப்ளிகேஷன்ஸ்" இருந்தது,எல்லா புத்தகங்களையும் அப்படியே தமிழிங்கிலிஷ்ல மாத்தி கொடுத்துடுவாங்க.நம்ம கோயிஞ்சாமிகள் எல்லாம் அதை படிச்சு,மனசுக்குள்ளேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தான் தேர்வு எழுதனும்.
எதுக்கு இப்படி தலைய சுத்தி மூக்க தொடணும்,ஏன்னா இந்த கடைசி பெஞ்ச் கோயிஞ்சாமிகளும், அய்யாச்சாமிகளும் எக்ஸாமுக்கு 10 நாள் முன்னாடி தான் படிக்கவே ஆரம்பிப்பாங்க.ஆரம்பத்துல இருந்தே கஷ்டப் படறதுக்கு அவங்களுக்கு கஷ்டம்.
//சீனா,ஜப்பான்,தைவான் போன்ற நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்றுத் தரப்படுகிறது.இதனால் பொறியியல் படிப்பில் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றனர்//
உண்மை தான்.ஏன்னா அங்கெல்லாம் நாடு முழுவதும் ஒரே மொழிதான் ஆகவே அவங்களுக்கு அது சாத்தியமாகிறது.ஆனா இங்க தமிழ் வழில படிச்சுட்டு மும்பைக்கு வேலை தேடிப் போனா என்னாகும்?? ஹிந்தி தெரியாது (வாழ்க கழகங்கள்),ஆங்கிலமும் அறைகுறைன்னா எப்படி வேலை கிடைக்கும்??
யாருக்காக இந்த கரிசனம்? கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகன்னு சொன்னா அதுக்கு பதிலா மலையாள மந்திரவாதியைக் கூட்டிடு வந்து எல்லாருக்கும் மொத்தமா பில்லி சூனியம் வச்சிரலாம்!என்னைப் போன்ற கிராமப்புற மாண்வர்களுக்கு 12 வருஷம் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு கல்லூரியில் தீடிர்னு ஆங்கில மீடியத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனா ஒரு செமஸ்டர்க்கு கொஞ்சம் மெனக்கெட்டா,அப்புறம் எல்லாம் சகஜமாயிரும்.படிக்கும் போது அத விட வேற என்ன வேலை???
நான் பாலிடெக்னிக் படிக்கும் போது எங்க வகுப்புல இருந்த 32 பேர்ல 6 பேரத் தவிர எல்லாரும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு வந்தவங்கதான். பாலிடெக்னிக்ல எல்லாரும் ஆங்கில வழில தான் படிச்சோம், கடைசி பெஞ்ச் கோயிஞ்சாமிகளைத் (நன்றி பா ராகவன்) தவிர.அவங்களை நம்பியே "சுரா பப்ளிகேஷன்ஸ்" இருந்தது,எல்லா புத்தகங்களையும் அப்படியே தமிழிங்கிலிஷ்ல மாத்தி கொடுத்துடுவாங்க.நம்ம கோயிஞ்சாமிகள் எல்லாம் அதை படிச்சு,மனசுக்குள்ளேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து தான் தேர்வு எழுதனும்.
எதுக்கு இப்படி தலைய சுத்தி மூக்க தொடணும்,ஏன்னா இந்த கடைசி பெஞ்ச் கோயிஞ்சாமிகளும், அய்யாச்சாமிகளும் எக்ஸாமுக்கு 10 நாள் முன்னாடி தான் படிக்கவே ஆரம்பிப்பாங்க.ஆரம்பத்துல இருந்தே கஷ்டப் படறதுக்கு அவங்களுக்கு கஷ்டம்.
//சீனா,ஜப்பான்,தைவான் போன்ற நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்றுத் தரப்படுகிறது.இதனால் பொறியியல் படிப்பில் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்கள் இத்துறையில் சிறந்து விளங்குகின்றனர்//
உண்மை தான்.ஏன்னா அங்கெல்லாம் நாடு முழுவதும் ஒரே மொழிதான் ஆகவே அவங்களுக்கு அது சாத்தியமாகிறது.ஆனா இங்க தமிழ் வழில படிச்சுட்டு மும்பைக்கு வேலை தேடிப் போனா என்னாகும்?? ஹிந்தி தெரியாது (வாழ்க கழகங்கள்),ஆங்கிலமும் அறைகுறைன்னா எப்படி வேலை கிடைக்கும்??
இல்ல தமிழ் வழில படிக்கிறவங்களுக்கு படிப்பு முடிஞ்சதும் தமிழ்நாட்லேயே வேலைன்னு உத்திரவாதம் குடுப்பாங்களா??? அதுவும் கிடையாது.
//தமிழ் வழிக் கல்வியை கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்கள் சேரலாம். சிவில் பிரிவில் 60 மாணவர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். 15 கல்லூரிகளிலும் சேர்ந்து மொத்தத்தில் கூடுதலாக 1800 மாணாக்கர்கள் தமிழ் வழியில் சேரலாம். அது மட்டுமல்ல ஆங்கில வழியில் பொறியியல் படித்தாலும் அந்த மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம்," - அமைச்சர் பொன்முடி. //
இயல்பாகவே, நமக்கு இரண்டு சாய்ஸ் குடுத்தா எது ஈஸியா இருக்கோ அதத் தான் தேர்ந்தெடுப்போம்.தமிழ் மீடியத்துல +2 முடிச்சுட்டு வர்றவங்க,தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர வாய்ப்புகள் அதிகம்,அந்த நேரத்துல பின்னாடி வரப் போகும் பிரச்சினைகளை யோசித்து முடிவெடுக்கிறது கஷ்டம்.அப்போதைக்கு எது ஈஸியா இருக்கோ அதத் தான் பார்ப்பாங்க.
ஆங்கில வழியில் படிக்கும் போது சிலபஸ் தாண்டியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏகப்பட்ட புத்தகங்கள் உண்டு,தமிழ்வழியில் படிக்கும் போது.........அரசே தரும் புத்தகம் தவிர சில மன்னார் பதிப்பகங்கள் தமிழிங்கிலிஷ் புத்தகங்களை வெளியிடும் வாய்ப்புண்டு ஆனா அவை எல்லாமே சிலபஸ் கவர் செய்வதாகவே இருக்கும்.அதில் சந்தேகங்கள் வரும் போது என்ன செய்ய??
அமைச்சரின் குடும்பத்தில் இருந்தோ அல்லது துணை வேந்தரின் குடும்பத்தில் இருந்தோ,யாரையாவது தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ப்பார்களா??
அரசு மருத்துவனையில் எல்லா வசதியும் உள்ளது என்று முழங்கி விட்டு,சாதாரண தலைவலிக்கு கூட அப்போல்லோ செல்பவர்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்க.
எப்படியோ ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி இரண்டு தலைமுறைய நாசமாக்கியவர்கள்,இப்ப தமிழர்களை குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வைக்க எடுத்துள்ள ஆயுதம் தான் இது....
ஹிந்தி,ஆங்கிலம் தெரியாத மத்திய அமைச்சர் படும் பாட்டை பார்த்தீர்கள் தானே??
பட்டும் திருந்தலேன்னா என்ன செய்வது??????????
//தமிழ் வழிக் கல்வியை கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் உள்ளவர்கள் சேரலாம். சிவில் பிரிவில் 60 மாணவர்களும், மெக்கானிக்கல் பிரிவில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். 15 கல்லூரிகளிலும் சேர்ந்து மொத்தத்தில் கூடுதலாக 1800 மாணாக்கர்கள் தமிழ் வழியில் சேரலாம். அது மட்டுமல்ல ஆங்கில வழியில் பொறியியல் படித்தாலும் அந்த மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதலாம்," - அமைச்சர் பொன்முடி. //
இயல்பாகவே, நமக்கு இரண்டு சாய்ஸ் குடுத்தா எது ஈஸியா இருக்கோ அதத் தான் தேர்ந்தெடுப்போம்.தமிழ் மீடியத்துல +2 முடிச்சுட்டு வர்றவங்க,தமிழ் வழி பொறியியல் படிப்பில் சேர வாய்ப்புகள் அதிகம்,அந்த நேரத்துல பின்னாடி வரப் போகும் பிரச்சினைகளை யோசித்து முடிவெடுக்கிறது கஷ்டம்.அப்போதைக்கு எது ஈஸியா இருக்கோ அதத் தான் பார்ப்பாங்க.
ஆங்கில வழியில் படிக்கும் போது சிலபஸ் தாண்டியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏகப்பட்ட புத்தகங்கள் உண்டு,தமிழ்வழியில் படிக்கும் போது.........அரசே தரும் புத்தகம் தவிர சில மன்னார் பதிப்பகங்கள் தமிழிங்கிலிஷ் புத்தகங்களை வெளியிடும் வாய்ப்புண்டு ஆனா அவை எல்லாமே சிலபஸ் கவர் செய்வதாகவே இருக்கும்.அதில் சந்தேகங்கள் வரும் போது என்ன செய்ய??
அமைச்சரின் குடும்பத்தில் இருந்தோ அல்லது துணை வேந்தரின் குடும்பத்தில் இருந்தோ,யாரையாவது தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ப்பார்களா??
அரசு மருத்துவனையில் எல்லா வசதியும் உள்ளது என்று முழங்கி விட்டு,சாதாரண தலைவலிக்கு கூட அப்போல்லோ செல்பவர்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்க.
எப்படியோ ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி இரண்டு தலைமுறைய நாசமாக்கியவர்கள்,இப்ப தமிழர்களை குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வைக்க எடுத்துள்ள ஆயுதம் தான் இது....
ஹிந்தி,ஆங்கிலம் தெரியாத மத்திய அமைச்சர் படும் பாட்டை பார்த்தீர்கள் தானே??
பட்டும் திருந்தலேன்னா என்ன செய்வது??????????
48 comments:
மகா மட்டமான ஒரு ஐடியா....சத்தியமா வேல கிடைக்காது..ஏன் அரசாங்கப் பணி கூட கிடைக்காது...நம்மள ஹிந்தி தெரியாம பண்ணாங்க..இப்போ இங்கிலிஷும் தெரியாம பண்ணப் போறாங்க...
என்ன பாவம் பண்னோமோ தமிழனா பொறக்க!!!
முதல்ல வேலை உத்திரவாதம் கொடுத்துட்டு படிக்க சொல்லலாம். செய்வாங்களா.
சரியாய் சொன்னேங்க கரிசல். நான் பத்தாவது வரை தமிழ் வழியில் பயின்றேன். +௨ சென்றபொழுது எங்கில வழியில் பயின்றதால் ஒரு வருடம் தடுமாறினேன். ஆனால் இன்று நான் ஒரு நல்ல வேலையில் இருப்பதற்கு காரணம் அன்று நான் எடுத்த முடிவே.
//இப்ப தமிழர்களை குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட வைக்க எடுத்துள்ள ஆயுதம் தான் இது....//
உண்மைதான்... தமிழை எப்படி வளர்ப்பது, எதில் வளர்ப்பது என்று அடிப்படை தெரியாத முட்டாள்கள் என்றுதான் சொல்ல தோண்றுகிறது..
சில மாதங்கள் முன்பு சில பதிவர்கள் இது குறித்து, ஆதரித்தும், எதிர்த்தும் பதிவுகள் எழுதியிருந்தனர். சுட்டிகள் கிட்டினால் தருகிறேன்.
நான் இதற்கு ஆதரவில்லை என்றாலும், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி பயின்ற மாணவர்களைக் கருத்தில்கொண்டு, ஆரம்ப காலங்களில் மட்டுமேனும், பாடங்கள் நடத்தும்போது தமிங்கிலீஷில் நடத்துவது பயன் தரும்.
நன்றி பருப்பு
//நம்மள ஹிந்தி தெரியாம பண்ணாங்க..இப்போ இங்கிலிஷும் தெரியாம பண்ணப் போறாங்க...
என்ன பாவம் பண்னோமோ தமிழனா பொறக்க!!!//
அதே.
ஹிந்தி எதிர்ப்பு - தந்தை விதைத்ததை இப்ப மகன் அறுவடை செய்கிறார்
நன்றி அக்பர்
//முதல்ல வேலை உத்திரவாதம் கொடுத்துட்டு படிக்க சொல்லலாம். செய்வாங்களா//
எங்க...சான்ஸே இல்லை
நன்றி LK
//ஆனால் இன்று நான் ஒரு நல்ல வேலையில் இருப்பதற்கு காரணம் அன்று நான் எடுத்த முடிவே.//
எல்லாரும் அது மாதிரி முடிவெடுக்க மாட்டங்களே நண்பா
நன்றி நடோடி
//தமிழை எப்படி வளர்ப்பது, எதில் வளர்ப்பது என்று அடிப்படை தெரியாத முட்டாள்கள் என்றுதான் சொல்ல தோண்றுகிறது..//
ஆம் நண்பா.
வாழ்நாள் முழுதும் தனித் தமிழைப் பயன்படித்திய தமிழறிஞர் தேவநாயப் பாவணார் வாரிசுகள் இருக்க இடமில்லாமல் இரவல் வீட்டில் வாழ்கிறார்கள்.
தமிழ் வளர்ப்பவர்களுக்கு இன்னும் கண் தெரியவில்லை.
நன்றி ஹுஸைனம்மா
//சில மாதங்கள் முன்பு சில பதிவர்கள் இது குறித்து, ஆதரித்தும், எதிர்த்தும் பதிவுகள் எழுதியிருந்தனர். சுட்டிகள் கிட்டினால் தருகிறேன்//
தாருங்கள்
உருப்படாம அடிக்க வழி. நல்ல இடுகை.
If they translate/transliterate like you did in your article, it would be foolish. But, if they do like what they do in the Tamil Medium books until +2, then there wouldn't be a problem.
Many students would definitely get benefited from this.
And Dr.Mannar Jawahar also says, they will teach English to these Tamil Medium students for the first three years. I assume they would teach spoken english and communication skills in these years. (I don't think we need to know anything other than these).
In Tamil Medium school syllabus, the Ohm's law is stated as 'மாறாத வெப்ப நிலையில் ஒரு மின் கடத்தியின் ஊடாக செல்லும் மின்னோட்டமானது,அதன் இரு முனைகளில் அளிக்கப்பட்ட மின்னழுத்தற்கு நேர்விகிதத்தில் இருக்கும்" and the formula would be
V=IR. Because, the letter V, representing Voltage, I representing Current and R representing Resistance are Global notations. Like H2O for water and He for helium. They would not and should not change these. Even the Chinese, japanese and taiwanese would be learning the formula as V=IR.
And you said, in China they speak the same language across the country. But thats not true. A person speaking mandarin cannot understand cantonese and vice versa.
Also, the current education system, teaching the students in English is only making the students to mug-up and vomit in the examination. Touch your heart and tell me, how many things that you learnt in your 4 years of BE, that you applied in your current job?
Most of the Tamil Medium students who get into BE, read, mug-up things and do not really understand what they learn. This Tamil mediumizing the Engineering courses, would definitely help such students to understand and enjoy what they are learning.
And, regarding this - ஹிந்தி,ஆங்கிலம் தெரியாத மத்திய அமைச்சர் படும் பாட்டை பார்த்தீர்கள் தானே?? - Though I am not supporting Alagiri,
It is a shame for India for not letting a Minister speak in one of the official languages of the Country. There is no LAW preventing it, only the CUSTOM is preventing this. And the Congress Govt is adamant on this CUSTOM just to frustrate and furiate Alagiri.
Note: Sorry for typing in English, there is no Tamil Font in my Office PC. Can't install too.
//ஆம் நண்பா.
வாழ்நாள் முழுதும் தனித் தமிழைப் பயன்படித்திய தமிழறிஞர் தேவநாயப் பாவணார் வாரிசுகள் இருக்க இடமில்லாமல் இரவல் வீட்டில் வாழ்கிறார்கள்//
Moottaip poochikku payanthu kondu veettaik kozuththuvathu pola irukkirathu ungkal karuthu.
If Thevaneyap Paavaanaar's children are living in rented house, that is not Tamil's fault. it is their fault.
I know a person who likes and wants to talk in "Thani Thamizh" is in USA, earning a good salary, owning a house in Charlotte, NC. He did not lose anything by talking in Tamil.
"Talking in Tamil" only is not going to bring you anything. And stop talking in Tamil, as you are not going to get anything from it, is another Big SIN. Like keeping your mother away, as she no more is feeding you.
// பருப்பு The Great கூறியது...
மகா மட்டமான ஒரு ஐடியா....சத்தியமா வேல கிடைக்காது..ஏன் அரசாங்கப் பணி கூட கிடைக்காது...நம்மள ஹிந்தி தெரியாம பண்ணாங்க.//
PARUPPU, No one stopped you from learning HINDI. There were so many Hindi Matir's in each town (even small towns like Aruppukottai) which were encouraging students to learn Hindi. If you were interested you could have learnt Hindi.
Only "Hindi Thinippu" was opposed. Who are they to ask me to learn one language and not the other. i have my own freedom and I should be able to learn whatever language I like. And only one's mother tongue should be forced in (Otherwise, that language would die).
//.இப்போ இங்கிலிஷும் தெரியாம பண்ணப் போறாங்க...//
And this is another senseless statement. So, you can speak English only if you can learn it in English Medium? They are going to teach English language for Tamil Medium students for 3 years. This is more than enough to "Speak" english.
In the Corporate world, especially in USA, no one is looking for some one who speaks Grammatically Correct English. If they understand what you speak, that is more than enough.
(Man, I am writing more that what is for a Comment. I should publish it in my blog)
யாருக்காக இந்த கரிசனம்? கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகன்னு சொன்னா அதுக்கு பதிலா மலையாள மந்திரவாதியைக் கூட்டிடு வந்து எல்லாருக்கும் மொத்தமா பில்லி சூனியம் வச்சிரலாம்!என்னைப் போன்ற கிராமப்புற மாண்வர்களுக்கு 12 வருஷம் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு கல்லூரியில் தீடிர்னு ஆங்கில மீடியத்துக்கு மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான்,ஆனா ஒரு செமஸ்டர்க்கு கொஞ்சம் மெனக்கெட்டா,அப்புறம் எல்லாம் சகஜமாயிரும்.படிக்கும் போது அத விட வேற என்ன வேலை???
...... interesting...... :-)
மிக நல்ல பதிவு
கனிமொழி ஹிந்தி பண்டிட் என செய்திகளில் படித்தேன் ?!!!!
”சுய வஞ்சகர்களின் பித்தலாட்டம் தான் இது. தனது பிள்ளைகள் மட்டும் அனைத்து வசதிகளும் பெற வேண்டும்” என்பது இது போண்ற கீழ்த்தரமானவர்களின் எண்ணம்.
சோறுக்கு வழியில்லாமல் மதிய உணவிற்காக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் நிலையிலுள்ள நம் நாட்டில் தனியே ஹிந்தி படிப்பதெல்லாம் மேல் தர வர்கத்தினருக்கு தான் சாத்தியம்.
தொடர்வதற்காக
//சோறுக்கு வழியில்லாமல் மதிய உணவிற்காக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் நிலையிலுள்ள நம் நாட்டில் தனியே ஹிந்தி படிப்பதெல்லாம் மேல் தர வர்கத்தினருக்கு தான் சாத்தியம்//
பாஸு, சோறுக்கு வழியில்லாமல் மதிய உணவிற்காக பள்ளிக்கு அனுப்பும் நிலையில இருக்கிற யாரும் பொழப்புக்காக வட மாநிலத்துக்குப் போக வேண்டிய தேவை இருக்காது. அப்பிடியே போனாக்கூட அவங்களால பொழச்சிக்க முடியும். நடுத்தர, மேல்தர வர்க்கம் தான் இப்பிடி பொழைக்க முடியலைன்னு காரணம் சொல்லிக்கிட்டு தாய்மொழியை படிக்காமக் கெடக்கோம்.
நன்றி வானம்பாடிகள்
//உருப்படாம அடிக்க வழி. நல்ல இடுகை.//
உண்மை
//If they translate/transliterate like you did in your article, it would be foolish. But, if they do like what they do in the Tamil Medium books until +2, then there wouldn't be a problem.//
நண்பா நான் சொன்னது அவங்க எப்படி ட்ராண்ஸ்லேட் பண்ணப் போறாங்கன்னுதான்
தனித் தமிழிலா அல்லது தமிழிங்கிலிஷ்லயான்னு தெரியவில்லை புத்தகம் வெளி வந்தால் தான் தெரியும்
படிக்கும் போது ஒரு தமிழிங்கிலிஷ் புக்க பாத்ததுண்டு சுத்த அபத்தமா இருக்கும்,அதே மாதிரி இருந்தா ரொம்ப கஷ்டம்
//Also, the current education system, teaching the students in English is only making the students to mug-up and vomit in the examination. Touch your heart and tell me, how many things that you learnt in your 4 years of BE, that you applied in your current job//
//நான் பாலிடெக்னிக் படிக்கும் போது எங்க வகுப்புல இருந்த 32 பேர்ல 6 பேரத் தவிர எல்லாரும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு வந்தவங்கதான். பாலிடெக்னிக்ல எல்லாரும் ஆங்கில வழில தான் படிச்சோம்//
நண்பா நான் வேலை செய்வது கட்டுமானப் பிரிவில் ஆகவே அப்போது படித்த Transformer,Swithgear,UPS,Relays,Motors ஆகியவற்றுடன் தான் இப்போதும் வேலை
படித்த எல்லா பாடங்களுமே பயன் படவில்லை என்றாலும் .....அப்போது படித்த அடிப்படை விஷயங்கள் இப்பவும் உபயோகமாகத் தான் இருக்கிறது.
//Most of the Tamil Medium students who get into BE, read, mug-up things and do not really understand what they learn. This Tamil mediumizing the Engineering courses, would definitely help such students to understand and enjoy what they are learning.//
பொறியியல் கல்லுரிகளில் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்னை, தகுதியான ஆசிரியர்கள் இல்லா ததுதான். இப்போது, ஒரே நிர்வாகத்தினர் பல பொறியியல் கல்லூரிகளை நடத்துகின்றனர்.அவர்கள் ஒரே ஆசிரியர்களைத் தாங்கள் நடத்தும்பல்வேறு கல்லூரிகளிலும் காட்டி, அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலையும், ஆய்வு செய்ய வருகிற அதிகாரிகளையும் ஏமாற்றுகிறார்கள். தற்போதுள்ள பொறியியல் கல்லூரி களில், பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருப்பது இல்லை. பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களில் திறமையானவர்கள் எல்லாம் பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள் என்பதால், எந்த வேலையும் கிடைக்காத மாணவர்கள்தான் பெரும்பாலும் ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள். அது மட்டுமின்றி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைப்போலவே ஐந்தாயிரம், ஆறாயிரம் என்றுதான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. அந்த சம்பளத்துக்கு நல்ல ஆசிரியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படியான ஆசிரியர்களிடம் பொறியியல் கல்வியைப் படிக்கும் மாணவர்களின் கதி எப்படி இருக்கும்? விதிகளில் சொல் லப்பட்டு இருப்பதுபோன்ற கட்டமைப்பு வசதிகளும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் இருப்பது இல்லை
(நன்றி ரவிக்குமார் எம் எல் ஏ)
ஏற்கெனவே இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது தமிழ் வழிக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப் போறாங்களா என்ன??
//ஆம் நண்பா.
வாழ்நாள் முழுதும் தனித் தமிழைப் பயன்படித்திய தமிழறிஞர் தேவநாயப் பாவணார் வாரிசுகள் இருக்க இடமில்லாமல் இரவல் வீட்டில் வாழ்கிறார்கள்//
Moottaip poochikku payanthu kondu veettaik kozuththuvathu pola irukkirathu ungkal karuthu.
If Thevaneyap Paavaanaar's children are living in rented house, that is not Tamil's fault. it is their fault.//
தெளிவா சொல்லாதது என் தப்பு தான்
நான் சொல்ல வந்தது என்னன்னா தமிழறிஞர் தேவநாயப் பாவணார் வாரிசுகள் இருக்க இடமில்லாமல் இரவல் வீட்டில் வாழ்கிறார்கள்,தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் யாரும் இவர்களை கண்டு கொள்ளவில்லை என்று தான்
நன்றி சித்ராக்கா
நன்றி
Sabarinathan Arthanari
(Man, I am writing more that what is for a Comment. I should publish it in my blog)
ok waiting........
இங்கு பதிவு இட்டவரில் இருந்து பின்னூட்டம் இட்ட எல்லா பெரியவர்களும் நலமாக ஒரு குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு நாட்டை பற்றி கவலை கொள்ளும் சிந்தனையாளர்கள் திரு முகிலன் அவர்களைத் தவிர!
இந்திய திரு நாட்டின் தேசியம் பிறந்த எந்த மனிதனையும் அவனாக வாழ விடாது. அவனுக்கு ஒரு சாயம் பூசி விட்டு தான் வேடிக்கை பார்க்கும்.
மொழி- அவன் தாய் மொழியில் கற்க விடாது. பெரும்பான்மை வாதிகளின் மொழியான ஹிந்தி தான் என குரல் கொடுக்கும். அடிப்படை உரிமையான தன தாய் மொழியில் எதையும் செய்ய இயலாமல் செய்து முடக்கிப் போடும். அதனை யாராவது எதிர்த்தால் அவனை இந்திய துரோகி என கொக்கரிக்கும். யாராவது சிலர் மக்கள் நலன் கருதி ' தாய் மொழி வழிக் கல்வி " என முயன்றால் இன வெறியன் என முத்திரை இடும். மகாராட்டிர மும்பை- international மாநகரில் எல்லா அறிவிப்புகளும் உள்ளூர் மொழியில் தான் இருக்கும் வாகனங்களின் எண்கள் உட்பட. ஆனால் இங்கு யாராவது இயல்பான தன் தாய் மொழியில் எதையும் செய்ய முயன்றால் கழகச் சாயம் பூசும். அறிவாளிகளே! ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தாய் மொழி வழிக் கல்வி கிடைத்ததால் தான் உங்களால் இப்போது குப்பை கொட்ட முடிகிறது.
நான் இப்போது பூனாவில் திரிகிறேன். மொழி புரியாமல். மொழி புரியாமலும் என்னால் இங்கு வாழ முடிகிறது காரணம், நான் கற்ற கல்வி. இந்த கல்வி தான் என்னை இங்கு கொண்டு வந்து உள்ளது. என் தேவை பொறுத்து இந்த மொழியை நான் பயில்வது என் முயற்சி. அதற்காக எல்லா மக்களையும் படிக்க சொல்வது?
திரு முகிலன் அவர்கள் சொன்னது போல் மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட ஒரு அமைச்சர் தன் தாய் மொழியில் கருத்துக்களை எடுத்து வைக்க முடியவில்லை. இது தான் தேசியமா? மக்களாட்சியா?
IIT -JEE முதல் எல்லா தேர்வுகளும் ஹிந்தியிலும் எழுதலாம். ஹிந்தி நீதி மன்றமொழி. நாட்டின் எல்லா கருத்து பரிமாற்ற மொழி! அதற்கு யார் இந்த கொம்பு வைத்தது?
இங்கிலீஷ் இந்திய நாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவலக மொழி. இதை எல்லோரும் கற்று விட்டால் அங்கு ஹிந்திக்கு தேவை என்ன?
எல்லா மக்களுக்கும் அடிப்படை கல்வி அவர் மொழியில் அளிக்க முயல்வோம். வேண்டுவதை அவர்கள் முடிவு செய்யட்டும். நாம் அல்ல.
@முகிலன் ஒரு விளக்கம் முதலில் : நான் தாய்மொழி வழி கல்வியை கற்றவன் & அதை ஆதரிக்கிறேன்.(குறிப்பிட்ட அளவு வரை)
//நடுத்தர, மேல்தர வர்க்கம் தான் இப்பிடி பொழைக்க முடியலைன்னு காரணம் சொல்லிக்கிட்டு தாய்மொழியை படிக்காமக் கெடக்கோம்.//
@முகிலன் ஹிந்தி மொழியை தாய் மொழி கல்வியோடு சேர்த்து குழப்பி கொள்கிறீர்கள்.
ஏழைகுழந்தைகள் அரசு பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கற்கிறார்கள். ஆனால் பிறமொழிகளை கற்க தடை செய்யபடுகிறார்கள்.
உயர்குடி, நடுத்தர வர்கத்தினர் ஆங்கில வழி கல்வியை கற்கின்றனர்(கூடவே ஹிந்தியையும்) தமிழ் மொழியை புறக்கணிக்கிறார்கள்.
தனித்தமிழ் என்று முழங்குபவர்கள் தம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி படிக்க வைக்க தயாரா ? எழை குழந்தைகள் முதுகில் தமிழ் புரட்சி செய்ய முயற்சி செய்வது எந்த விதத்தில் நியாயம் ?
//சோறுக்கு வழியில்லாமல் மதிய உணவிற்காக பள்ளிக்கு அனுப்பும் நிலையில இருக்கிற யாரும் பொழப்புக்காக வட மாநிலத்துக்குப் போக வேண்டிய தேவை இருக்காது.//
மதிய உணவு சாப்பிட்டு படித்து உயர்ந்தவர்கள் இல்லையா என்ன ?
// அப்பிடியே போனாக்கூட அவங்களால பொழச்சிக்க முடியும்.//
அதற்காக அவர்கள் படும் கஷ்டம் தான் பிரச்சிணையே.
பணம் படைத்தவனுக்கு ஒரு நிலை. ஏழைகளுக்கு ஒரு நிலை இது தான் சம வாய்ப்பு கல்வியா ?
//இங்கு பதிவு இட்டவரில் இருந்து பின்னூட்டம் இட்ட எல்லா பெரியவர்களும் நலமாக ஒரு குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு நாட்டை பற்றி கவலை கொள்ளும் சிந்தனையாளர்கள் திரு முகிலன் அவர்களைத் தவிர//
IIT -JEE முதல் எல்லா தேர்வுகளும் ஹிந்தியிலும் எழுதலாம். ஹிந்தி நீதி மன்றமொழி. நாட்டின் எல்லா கருத்து பரிமாற்ற மொழி! அதற்கு யார் இந்த கொம்பு வைத்தது?
இங்கிலீஷ் இந்திய நாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவலக மொழி. இதை எல்லோரும் கற்று விட்டால் அங்கு ஹிந்திக்கு தேவை என்ன?
எல்லா மக்களுக்கும் அடிப்படை கல்வி அவர் மொழியில் அளிக்க முயல்வோம். வேண்டுவதை அவர்கள் முடிவு செய்யட்டும். நாம் அல்ல.
இதுக்குப் பேர் என்ன நண்பா
உங்களுக்கு உங்கள் கருத்தை சொல்லும் உரிமை இருப்பது போல் மற்றவர்களுக்கும் இருக்கிறது ஏசி ரூம் ஒரு தடையல்ல
//நான் இப்போது பூனாவில் திரிகிறேன். மொழி புரியாமல். மொழி புரியாமலும் என்னால் இங்கு வாழ முடிகிறது காரணம், நான் கற்ற கல்வி. இந்த கல்வி தான் என்னை இங்கு கொண்டு வந்து உள்ளது. என் தேவை பொறுத்து இந்த மொழியை நான் பயில்வது என் முயற்சி. அதற்காக எல்லா மக்களையும் படிக்க சொல்வது?//
ஒரு வேளை உங்கள் வேலை அப்படிப் பட்டதாக இருக்கலாம்.
ஐந்து பேர் கொண்ட குழுவில் மற்ற நான்கு பேரும் நீங்கள் அறியாத ஒரு மொழியில் தீவிரமாக வேலை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கையில் நடுவில் "ஙே" என்று முழித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கவில்லை போலும்
இதற்குமுன் உங்கள் வலைப்பதிவிற்கு வந்ததில்லை. உங்கள் இடுகையைப் படித்தவுடன் முதலில் விலகிவிட்டேன். பிறகு எவ்வளவு தூரம் நக்கலும் நையாண்டியும் தந்திரமாக நடுக்கூடத்தில் முடிசூடிக் கொள்கின்றன என்ற அவலம் என் மனத்தைப் பற்றிக் கொண்டது. வலக்காரத்தை வலக்காரம் என்று சொல்லத்தான் வேண்டும் என்று தோன்றியது. அதனால் எழுந்த பின்னூட்டு இது.
----------------------------------------
ஏற்கனவே முன்முடிவாகத் தமிழிற் படிப்பதைச் சாடுவதென்று முடிவு செய்துவிட்டீர்கள், அப்புறம் என்ன தப்பும் தவறுமாக ஓம்சு விதிக்குத் தமிழிற் புதுவிளக்கம் தருவது? ஆங்கிலத்தில்
Electric potential = Electrical Current * Electrical resistance
என்று எழுதி தமிழில் நக்கல் அடித்தது போல்
E = E*E
என்று எழுதிப்பாருங்களேன்; நக்கல் அடிக்கலாமே? ஏன் எழுதாது விட்டீர்கள்? வெள்ளைக்காரன் வழி ஆங்கிலத்திற் சொல்லிக் கொடுத்தால் மட்டும் வாலைச் சுற்றி வைத்துக்கொண்டு ஒழுங்காகப் பாடம் படிப்பீர்கள். தமிழென்று வந்தால் மட்டும் கற்பனை கட்டுக்கடங்காது சிறகடித்துப் பறக்குமோ? இதெல்லாம் நெஞ்சழுத்தம் அன்றி வேறென்ன? அங்கு Electrical என்பது ஒரு முன்னொட்டு என்றும், அந்த முன்னொட்டு உள்ளார்ந்து புரிந்து கொள்ளப்படுவதால் பயிலாமலே விடப்படுகிறது என்றும், potential என்பது volltage என்னும் அலகால் அளக்கப்படுகிறது என்றும் உங்களுக்குத் தெரிந்திருப்பதால், அதை யாரோ உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதால்,
voltage = Current * Resistance
என்றும் எழுதி
V=I*R
என்று எழுதுகிறீர்கள் அல்லவா? அதே நேர்மையைத் தமிழிற் காட்டவேண்டாமோ? மின் என்ற முன்னொட்டைத் தவிர்த்து,
அழுத்தம் = ஓட்டம்* தடை
என்றோ,
வோல்ட் = ஓட்டம்*தடை
என்றோ எழுத வக்கில்லையோ? அழுத்தம் என்று சொல்லுவதால், ஆங்கிலத்தில் சொல்லும் potential என்பது ஒருவகையான அழுத்தம் என்பது மாணவனுக்குப் புரியுமே? நீரழுத்தம் போல மின்னழுத்தம் என்று புரியுமே?. வாய்ப்பாடாக எழுதவேண்டுமானால்
அ = ஓ*த
என்று எழுதலாம், இல்லையேல் பள்ளிகளிற் சொல்லிக் கொடுப்பதன் படி, ஆங்கில வாய்ப்பாட்டை அப்படியே எழுதி அழுத்தம், ஓட்டம், தடை ஆகியவற்றிற்கு விளக்கம் கொடுக்கலாம். அதைவிடுத்து இந்த நொள்ளையெல்லாம் எதற்கு? மனம் இருந்தால் வழி உண்டு. உங்களைப் போன்றோருக்குத் தமிழிற் சொல்லிக் கொடுப்பதைச் சாட வேண்டும்; அதற்காக எந்த இழிந்த முறைக்கும், எடுத்துக்காட்டிற்கும் போவீர்கள். இல்லையா? செய்யுங்கள். இன்னும் எத்தனை நாளைக்கு தமிழரை முட்டாளாக்கிக் கொண்டிருப்பீர்கள்? படித்த படிப்பை “மின்னியல்” என்று சொல்லத் தெரியவில்லை. இதில் விளக்கம் வேறு.
அன்புடன்,
இராம.கி.
இவர்கள் ஆட்சிக்கு வந்து சேர்ந்தவுடன் முதல் ஆப்பு..ஹிந்திக்கு 70--களில், முப்பது நாப்பது வருடங்களாக ஹிந்தி படிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்..இப்பொழுது நாசாமாக்க போவது ஆங்கிலம் கத்துக் கொள்வதை..தாத்தாவின் பேரன்கள் பள்ளிகளில் தமிழுக்கு பதில் படித்தது ஃப்ரெஞ்சு, நாம் மட்டும் இந்த தமிழை கட்டிக் கொண்டு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டணும்..அப்பதானே நம் தலையில் இன்னும் மிளகாய் அரைக்க முடியும். அடுத்த மாநிலத்திற்கு போனால் சைகை மொழி தான் நமக்கு கைக்கொடுக்கும்..10 வருடங்களாக தான் அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில இலக்கியம் படித்தவர்களை ஆங்கில் ஆசிரியர்களாய் நியமிக்கிறார்கள்(அம்மா ஆரம்பித்து வைத்தது)அதற்கு முன்னால் அறிவியல்,வரலாறு படித்த ஆசிரியர்கள் தான் நமக்கெல்லாம் ஆங்கில ஆசிரியர்கள் அதான் நம் ஆங்கில் அறிவு குறைவானது...சூனியம் எங்க வைக்கலாம் என விசாரித்து வைக்க போகும் போது சொல்லிட்டு போங்க..பணம் காசு கொடுத்து உதவுறேன்...
//voltage = Current * Resistance
என்றும் எழுதி
V=I*R
என்று எழுதுகிறீர்கள் அல்லவா? அதே நேர்மையைத் தமிழிற் காட்டவேண்டாமோ? மின் என்ற முன்னொட்டைத் தவிர்த்து,
அழுத்தம் = ஓட்டம்* தடை
என்றோ,
வோல்ட் = ஓட்டம்*தடை
என்றோ எழுத வக்கில்லையோ? அழுத்தம் என்று சொல்லுவதால், ஆங்கிலத்தில் சொல்லும் potential என்பது ஒருவகையான அழுத்தம் என்பது மாணவனுக்குப் புரியுமே? நீரழுத்தம் போல மின்னழுத்தம் என்று புரியுமே?. வாய்ப்பாடாக எழுதவேண்டுமானால்
அ = ஓ*த
என்று எழுதலாம்,//
தமிழகத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக கட்டுமான பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இயந்திர பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது
கட்டுமான பொறியியல்,இயந்திர பொறியியல் மட்டும் சொல்லிட்டுப் போக வேண்டியது தானே ஏன் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலம்????
ஒரு பாடத்தின் பெயரையே தமிழ்ல சொன்னா புரியாதுன்னு ஆங்கிலம் உபயோக படுத்துகிறார்கள்.இந்த லட்சணுததுல முழுப்பாடத்தை தமிழ்ல நடத்துனா வெளங்குன மாதிரி தான்.
//அழுத்தம் = ஓட்டம்* தடை
என்றோ,
வோல்ட் = ஓட்டம்*தடை
என்றோ எழுத வக்கில்லையோ? //
புத்தகம் எழுதும் புண்ணியாவான்கள் எப்படி மொழி மாற்றம் செய்கிறார்கள் என்று பார்ப்போம்
//அழுத்தம் என்று சொல்லுவதால், ஆங்கிலத்தில் சொல்லும் potential என்பது ஒருவகையான அழுத்தம் என்பது மாணவனுக்குப் புரியுமே? நீரழுத்தம் போல மின்னழுத்தம் என்று புரியுமே?//
potential னு சொன்னாலே அழுத்தம் என்று புரியற மாணவனுக்கு மறுபடியும் ஏன் அழுத்தம்னு சொல்லி பாடம் நடத்தப் போறாங்க????????????????
நன்றி அமுதா கிருஷ்ணா
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்
Related link:
http://jothi-kannan.blogspot.com/2010/02/blog-post_09.html
One more:
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/02/blog-post_7696.html
//ஆங்கில வாய்ப்பாட்டை அப்படியே எழுதி அழுத்தம், ஓட்டம், தடை ஆகியவற்றிற்கு விளக்கம் கொடுக்கலாம். அதைவிடுத்து இந்த நொள்ளையெல்லாம் எதற்கு? மனம் இருந்தால் வழி உண்டு. உங்களைப் போன்றோருக்குத் தமிழிற் சொல்லிக் கொடுப்பதைச் சாட வேண்டும்; அதற்காக எந்த இழிந்த முறைக்கும், எடுத்துக்காட்டிற்கும் போவீர்கள். இல்லையா? செய்யுங்கள். இன்னும் எத்தனை நாளைக்கு தமிழரை முட்டாளாக்கிக் கொண்டிருப்பீர்கள்? படித்த படிப்பை “மின்னியல்” என்று சொல்லத் தெரியவில்லை. இதில் விளக்கம் வேறு//
அகிலத்தின் ஒழுங்கின்மை (entropy of the universe)
ஒழுங்கை (order)
நேருறவுற்றதாய்க் (direct relation)
மாகைச் (magic)
சேரனைச் சமரிற் (battle and not war)
தும்பைப் போர் (punitive expedition).
தமிழறிஞர் இராம.கி அவர்களே
இந்த வார்த்தைகளெல்லாம் உங்க வலைப் பதிவில் (http://valavu.blogspot.com/) நீங்கள் எழுதியது!
ஏன் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம்?
தமிழ்ல மட்டும் எழுதினா படிக்குற தமிழ் மக்களுக்கு புரியாதுன்னுதானே
இது தான் யதார்த்தம்.
நன்றி ஹுஸைனம்மா
பிளாகர் கரிசல்காரன் கூறியது...
//நான் இப்போது பூனாவில் திரிகிறேன். மொழி புரியாமல். மொழி புரியாமலும் என்னால் இங்கு வாழ முடிகிறது காரணம், நான் கற்ற கல்வி. இந்த கல்வி தான் என்னை இங்கு கொண்டு வந்து உள்ளது. என் தேவை பொறுத்து இந்த மொழியை நான் பயில்வது என் முயற்சி. அதற்காக எல்லா மக்களையும் படிக்க சொல்வது?//
// ஒரு வேளை உங்கள் வேலை அப்படிப் பட்டதாக இருக்கலாம்.
ஐந்து பேர் கொண்ட குழுவில் மற்ற நான்கு பேரும் நீங்கள் அறியாத ஒரு மொழியில் தீவிரமாக வேலை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கையில் நடுவில் "ஙே" என்று முழித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கவில்லை போலும்//
தலைங்களா! நான் எப்படியோ முழிச்சிட்டு போறன். அது என் பாடு. அதுக்காக எங்க ஊரில் ஆடு மேய்க்கும் அண்ணன் பிள்ளை எல்லாம் இந்திய திரு நாட்டின் மொழி எல்லாம் கத்துக்கணும்னு சொல்லி அவனை அமுக்கி வைக்க எனக்கு மனம் இல்லை. ஆங்கிலமே தேவையான அளவு தான்!
சில அறிவாளிகள் தாய் மொழி வழிக் கல்வி அளவோடு தான்! என எல்லை வகுக்கின்றனர். இதையே வெளி நாட்டில் போய் சொல்லுங்கள்! உங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தெரியும். உட்காந்து பெட்டி தட்டுகிற உங்கள் சிந்தனையே இப்படி இருக்கும்போது கல்வியாளர்கள் என்ன ஒண்ணுமே சிந்திக்காமையா தாய் மொழி வழிக் கல்வி பற்றி பேசுகிறார்கள்.
நீங்கள் ஏதாவது சுயமா யோசிச்சி ஆராய்ச்சி உங்கள் துறையில் செய்து இருப்பிங்களா? அது நடக்கணும்னா நீங்க உங்கள் முதல் மொழியில் படித்து இருந்தா மிக எளிது. இல்லனா வெட்டி ஒட்டி வாழ்றது தான் காலம் பூராவும். பாரதி எழுதிய தமிழ் கட்டுரைகளைப் படியுங்கள். தெரியும் தனித்தமிழின் அருமை. கலைஞரின் திரை உரையாடல் கேளுங்கள் , தமிழின் தெளிவு புரியும். உங்களால் முடிந்தால் நீங்கள் கற்றதை தமிழில் எழுத முயலுங்கள். உங்கள் அறிவு விரிவடையும்.
கொஞ்சம் ஏமாந்தா வட மொழி கடவுள் மொழின்னு சொன்ன மாதிரி எல்லாம் சொல்விங்க. என்ன செய்றது தமிழின் விதி அது. போராடி போராடி தான் வாழ்கிறது.
@நாளும் நலமே விளையாடட்டும்
நண்பரே, உங்கள் கருத்துக்களோடு நான் உடன்பட்டாலும்,
//இங்கு பதிவு இட்டவரில் இருந்து பின்னூட்டம் இட்ட எல்லா பெரியவர்களும் நலமாக ஒரு குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு நாட்டை பற்றி கவலை கொள்ளும் சிந்தனையாளர்கள்//
இந்தக் கருத்துக்கு என் கண்டனங்கள். உங்களுக்கு ஒருவரின் கருத்தில் உடன்படில்லை என்றால் அவர் கருத்தை மட்டுமே கண்டியுங்கள். அவர் எங்கு பிறந்தார், எந்த அறையில் அமர்ந்து எழுதிகிறார் என்று பேசாதீர்கள். அது நல்ல கலாச்சாரம் இல்லை என்பது என் எண்ணம்.
@கரிசல்காரன் மற்றும் இதர பின்னூட்ட நண்பர்களே,
தமிழ் வழிக் கல்விக்கு ஏற்ற கட்டமைப்பு இல்லாமல் அவசர கதியில் தமிழ் வழியைக் கொண்டு வருவது தவறு என்ற கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.
ஆனால் அதற்காக தமிழ் வழியில் கல்வி கற்றால் வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வேலை பார்க்க முடியாது என்று சொன்னால் அது அறிவின்மை.
வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ பணிபுரிவதற்கு ஆங்கில வழியில் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது.
//நண்பா நான் வேலை செய்வது கட்டுமானப் பிரிவில் ஆகவே அப்போது படித்த Transformer,Swithgear,UPS,Relays,Motors ஆகியவற்றுடன் தான் இப்போதும் வேலை
படித்த எல்லா பாடங்களுமே பயன் படவில்லை என்றாலும் .....அப்போது படித்த அடிப்படை விஷயங்கள் இப்பவும் உபயோகமாகத் தான் இருக்கிறது.//
இந்த அடிப்படை விசயங்களை நீங்கள் தமிழில் - +2 வரை - தானே படித்தீர்கள்? இல்லை +2 வரை நீங்கள் இவற்றைப் படிக்கவே இல்லையா?
திரு முகிலன் அவர்களே,
நீங்கள் கண்டனங்களை தெரிவித்தாலும் என் கருத்தில் எனக்கு மாறுபாடு இல்லை. இவர்கள் நாட்கூலி பணி செய்யும் மக்களைப் பற்றி என்றுமே கவலை கொள்ளாதவர்கள்.
அட்டாக் காரனிடம் பேரம் பேசும் இவர்கள் உணவகங்களில் அவர்கள் வைத்த விலையில் உண்டு மகிழும் மக்கள். கைகாரி முதல் கொண்டு எல்லோரிடமும் பேரம் செய்வார்கள் இவர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்பதை அரசியல் ஆக்கி வேடிக்கை செய்யும் வினோத மனிதர்கள். என் கோபத்தை நான் வெளிக்காட்டுகிறேன். அவர்களின் எண்ணங்களைத் தான் விமர்சனம் செய்கிறேன். இதில் பண்பாடு தொலைந்ததாக நான் எண்ண வில்லை. மொழி தெரியாத ஒரு மனிதன் பக்கத்தில் இருக்கும்போது தங்கள் தனிப்பட்ட மொழியில் பேசிக் கொள்ளும் மனிதர்களை சூழ்ந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம். தமிழ் வழிக் கொலை என்று பதிவு போடும் நல்லவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் இயல்பு கொண்டவராய் இருத்தல் அவசியம்.
தமிழ் வழிக் கல்வி வேறு, மற்ற மொழி கற்பது என்பது வேறு. தான் கற்றதை திறமுடன் எடுத்து சொல்ல இயலாத மக்களை நான் நிறையப் பார்த்து இருக்கிறேன். இவர்கள் பெரும்பாலும் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றோரே! நம்மூரில் தமிழ் இலக்கியம் கற்ற எத்தனைப் பேச்சாளர்கள்? அதே நேரத்தில் ஆங்கில இலக்கியம் கற்றவர் என்ன ஆனார்கள்?
அரசே முயற்சி செய்து ஆங்கில மொழி வழிக் கல்வியை தமிழ் கூறும் நல் உலகில் தமிழில் கொண்டுவர முயலும்போது இருகரம் நீட்டி வரவேற்காமல் வெட்டி பேச்சு பேசும் இவர்களை எண்ணி நகைக்காமல் வேறு என்ன செய்ய?
முந்தையக் கருத்துரை சில எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் அல்ல.
அட்டாக்-- ஆட்டோக்
கைகாரி -- காய்கறி விற்பவர்
நாளும் நலமே விளையட்டும்
//உங்கள் சிந்தனையே இப்படி இருக்கும்போது கல்வியாளர்கள் என்ன ஒண்ணுமே சிந்திக்காமையா தாய் மொழி வழிக் கல்வி பற்றி பேசுகிறார்கள்.//
அவங்க வாரிசுகள் எல்லாம் எங்க படிக்குறாங்கன்னு பாருங்க நண்பா
//எப்படியோ ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி இரண்டு தலைமுறைய நாசமாக்கியவர்கள்//
உண்மையே இல்லை தலைவரே.. இந்தி படிக்காததாலே எந்த இழப்பும் இல்லை
தமிழ் நாட்டிற்கு வெளியிலே பயன் படுத்த முடியாது என்பதாலும், தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தன்னிறைவு அடையும் காலம் அருகில் இலாத காரணத்தாலும் தமிழில் பொறி இயல் பாடம் தற்போது சரி ஆகாது. தமிழில் பொறி இயல் கற்பிக்க முடியாது என்பது நம் கருத்து அல்ல; நிச்சயமாக கற்றுக்கொடுக்க முடியும் திரு முகிலன் சொல்வது இந்த இடத்தில் சரியே.
சுய சிந்தனைக்கு தாய் மொழியில் கற்பது சிறந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
என்னைக் கேட்டால் (யாரும் கேட்கவில்லை என்பதால் தான் வேறொருவர் பதிவில் பின்னோட்டம்!) , எங்கள் காலத்தில் இருந்தது போல் (எஸ் எஸ் எல் சி : தமிழ் மீடியம்) பத்து வரை தாய் மொழிக் கல்வி; பதினோன்றிலிருந்து, பட்டம் முதலியவை ஆங்கிலம் மூலம். சிறு ஊர்களில் கற்று வந்த என்னைப்போன்ற மாணவர்கள் கொஞ்சமோ நிறையவோ சிரமப் படுவது உண்மை; ஆனால், பதிவர் சொல்வது போல, பட்டம் பெற நினைப்பவர், அந்த கால கட்டத்தைக் கடந்து வந்து, ஆங்கிலத்தில், புரிந்து கொண்டு கற்று, எழுத, உரையாட முடிகிறது.
தமிழையும் சீன மொழியையோ, ஜப்பானிய மொழியையோ,ஜெர்மானிய மொழியையோ ஒப்பீடு செய்தல் மீடியம் என்ற வகையில் பொருளாதாரக் காரணங்களினால் சரியல்ல. தமிழ் இலக்கியங்கள், சமூக இயல் முதலியவை மட்டுமே தமிழ் மீடியத்தில் கற்பது உசிதம் ஆகும். அதே போல, இந்தி திணிப்பையும் கற்கும் மொழி மீடியம் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்தி திணிப்பு அரசியல்; மற்றும் காலத்தின் கட்டாயம்.
matriculation பள்ளியோ அல்லது வேறு சிஸ்டமோ, தாய் மொழி கல்வி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கற்காதவ
ர்கள், தன்னைச் சுற்றி நிலவும் இந்திய சமூக நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்களாக இருப்பதை தினம் தினம் காண்கிறேன்.
//எப்படியோ ஹிந்தி எதிர்ப்புன்னு சொல்லி இரண்டு தலைமுறைய நாசமாக்கியவர்கள்//
உண்மையே இல்லை தலைவரே.. இந்தி படிக்காததாலே எந்த இழப்பும் இல்லை
நசரேயன் (http://www.blogger.com/profile/04763787067876903214)போன்றவர்கள் கொஞ்சம் தங்கள் ஊர்/வட்டம்/மாவட்டம்/மாநிலம் எல்லையைத் தாண்டியவர்களின் சொந்த அனுபவங்களைக் கேட்டு அறிந்து தம் எண்ணங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்
Took me time to read the whole article, the article is great but the comments bring more brainstorm ideas, thanks.
- Johnson
கருத்துரையிடுக