அப்பாவின் சைக்கிளில் தெருவலம்
தாத்தாவின் மாட்டு வண்டியில் ஊர்வலம்
அம்மா கொண்டு வரும் கொடிக்காப்பழம்
ஆச்சி வாங்கித் தரும் ஆரஞ்சு மிட்டாய்
கள்ளன் போலிசு வெளையாட்டு
இடுப்பில் கயிற்றோடு கெணத்து நீச்சல்
அய்யனார் கம்மா ஆலமர ஊஞ்சல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு
இவையேதுமறியா
அய்யனார் கம்மா ஆலமர ஊஞ்சல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு
இவையேதுமறியா
குழந்தையொன்று
டோராவின் பயணங்கள் பார்த்தபடி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
தனியே.
டோராவின் பயணங்கள் பார்த்தபடி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது
தனியே.
12 comments:
kavitha kavitha piramatham
me firstaaaaaaaaaaaaaaaaaaaa
feelings of abudhabi ...........
iyyo ithu kavitha illa ya
சூப்பர் கரிசல்.... சிந்திக்க வேண்டியவை கடைசி வரிகள் ..
இதெல்லாம் அதுங்களுக்கு தெரியாத வரை இழப்பு தெரியாது:(
குழந்தைகளுக்கும் புரிவதில்லை.... பாவம்ங்க...!
உங்கள் கவிதையும் கருத்தும் நல்லா இருக்குங்க.
காலம் ரொம்ப மாறிபோச்சுங்க. ...எதோ பழைய நினைவுகள் மட்டும் அடி மனத்தில் பசுமையாய். ...
.பள்ளிப்பருவத்தை நினைவு தரும் வரிகள் அழகு.
நன்றி shabi
நன்றி நாடோடி
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி சித்ராக்கா
நன்றி நிலாமதி
உண்மைதானுங்க...
super
இந்த கால குழந்தைகள் எத்தனை விஷயங்களை இழந்து விட்டார்கள்
கருத்துரையிடுக