1)கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
கழுதைக்கு கற்பூரவாசனை தெரிஞ்சி கலெக்டர் வேலைக்கா போவப்போவுது!
உபயம் "வால்பையன்"
2) சின்ன புள்ளைக வெள்ளாமை வீடு வந்து சேராது
சின்ன புள்ளைகள வெள்ளாமை பண்ண விட்டுட்டு பெரியவங்க நீங்க எந்த ஆமை கூட சுத்திகிட்டு இருந்தீங்க
உபயம் நெப்போலியன் படம் எஜமான்
3) பாத்திரம் அறிந்து பிச்சையிடு
அந்த பவன்ல எவர்சில்வர் தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 50 ரூபாய்
வெள்ளி தட்டுல மீல்ஸ் சாப்பிட்டா பில் 185 ரூபாய்
(பாத்திரம் அறிந்து பில் போடு??????????)
உபயம் அண்ணாச்சி
4) நல்லதே நினை நல்லதே நடக்கும்
டில்லி ஒன்டே மேட்ச்ல இந்தியா ஜெயிக்கனும்னு நான் நினைச்சேன்
இலங்கை ஜெயிக்கனும்னு என் நண்பன் நினைச்சான்
கடைசில மேட்ச்சே நடக்கலை
உபயம் டெல்லி கிரிக்கெட் சங்கம்
5)நிறை குடம் தளும்பாது குறை குடம் கூத்தாடும்
இவன் யார்யா இவன் நாட்டு நடப்பு தெரியாம பேசிக்கிட்டு ஆந்திரால 85 வயசு நிறைஞ்ச குடம் தான் இப்ப கூத்தாடுது
உபயம் ஆந்திர டிவி சேனல்
***********************************************
விஐபி மொழிகள்
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
-ஆழ்வார்பேட்டை ஆண்டவர்
விமர்சனம் எழுதினா ஓட்டு போடனும்
படத்துக்கு போலாமா வேண்டாமானு கேக்க கூடாது
-அண்னண் கேபிள் சங்கர்
கவிதை எழுதினா ரசிக்கனும்
விளக்கம் கேக்க கூடாது
-கவிஞர் ஆதியார்
அ ஆ இ ஈ எழுதினா ஃபீல் பண்னணும்
தூக்கத்துல எழுதற வியாதி இருக்கானு கேக்க கூடாது
-கார்க்கி சகா
**************************************************
நாட்டு நடப்பு மொழிகள்
எலி வளையானலும் தனி வளை வேண்டும்
-சந்திரசேகர் ராவ்
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதே மெய்
-திவாரி (முன்னாள் ஆந்திர கவர்னர்)
****************************************************
ஒரு வருட பயணம்
வியாழன் இரவு இந்தியா செல்கிறேன் விடுமுறைக்கு
அபுதாபிலருந்து விமானம் 2009 டிசம்பர் 31ந் தேதி இரவு 7.55 க்கு புறப்பட்டு 2010 ஜனவரி 1ந் தேதி காலை 3.30 மணிக்கு சென்னை வந்து சேருது.
ங்கொய்யால ஊருக்கு வர்ரதுக்கு ஒரு வருஷம் பயணம் செய்ய வேண்டியது இருக்கு
என்ன கொடுமை குசும்பா இது
எப்படியோ இந்த புது வருஷம் வானத்துல கத்தார் ஏர்வேஸ் தேவதைகளோட.
எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
(சரக்குக்கு மட்டும் எவ்வளவு வேண்டுமானலும் செலவு செய்யும் நண்பர்களை உடையோர் "லெதர்" பாரிலோ அல்லது "நம்பர் 10 ட்வ்னிங் ஸ்டீரிட்டி"லோ போய் புத்தாண்டு கொண்டாட்டத்தை "அடிச்சு பொழிக்க" வாழ்த்துக்கள்)
******************************************************
புதன், 30 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
21 comments:
அழகான விளக்கம் நண்பா.....
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
ங்கொய்யால..
2010 ஆரம்பத்துலயே.. இந்தியாவுக்கு சனியன் காலடி எடுத்து வைக்கே.........
தாய்மண்ணை யாராவது காப்பாத்துங்க..............
just kidding
happy vacation da machaan
HAPPY NEW YEAR
ஏப்பு. இங்க விட்டு அங்கன போகவும் ங்கொய்யால ஊருக்கு திரும்பறதுக்கும் ங்கொய்யாலவா..:)) வாங்க வாங்க.
கண்ணா மாதிரி போயிட்டு வர வாழ்த்துக்கள்...
(அப்பதான, ஒரு 5 மாசம் கழிச்சு வருவ...!!)
கத்தார் ஏர்வேஸ்ல உன்னோட அண்ணிங்க வருவாங்க.. அண்ணன் நான் விசாரிச்சதா சொல்லு!!
சிரிச்சி முடியலை.
கத்தார் ஏர்வேஸில் சாப்பாடு சுமார்தான்.(அதானே நாம சாப்பாட்டுக்காகவா போறோம்)
புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி Sangkavi
நன்றி கண்ணா..
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி கலை
சொல்லிப்புடுறேன்
நன்றி அக்பர்
அதே
நல்ல மொழிகள்!
வாவ் சூப்பர்
வால் பையனை வீணே பழமொழி சொல்லி சீண்டியவர்களுக்கு அவர் கொடுத்த மேற்படி பதிலை ரொம்பவே ரசித்தேன். இன்னமும் அவர் கேட்ட குறள் விளக்கம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.
பல மொழி பழ மொழிகள் ஜூப்பர் கரிசல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் Bon Voyage
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//எப்படியோ இந்த புது வருஷம் வானத்துல கத்தார் ஏர்வேஸ் தேவதைகளோட.//
ரைட்டு கலக்குங்க நண்பா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல மொழிகள் அருமை.
ஹாப்பி ஊர் டேஸ்.
(ஏன் நண்பா, நமக்கு திருவனந்தபுரம் தானே பக்கம். ஏன் சென்னை போய் ஒரு நாள் வேஸ்ட் பண்றீங்க..)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பல மொழி நகைச்சுவை விளக்க தொகுப்பு...இந்தியா வாறியளா..வங்க வாங்க
@அன்புடன் அருணா நன்றி டீச்சர்
நன்றி தர்ஷன் நானும் ரசித்தேன் நண்பா
நன்றி பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றி செ.சரவணக்குமார் (ஸாரி நண்பா)
நன்றி துபாய் ராஜா
நமக்கு சென்னை தான் எப்பவும்.(அண்ணே நானும் சங்கர்ல தான் படிச்சேன்)
நன்றி புலவன் புலிகேசி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
”பலே”மொழிகள்.
புத்தாண்டு வாழ்த்துகள். விடுமுறை உற்சாகமாகக் கழிய வாழ்த்துகள்.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
நன்றி அத்திரி
நன்றி ஷங்கி
நன்றி அக்பர்
நன்றி சரவணகுமரன்
நன்றி கடையம் ஆனந்த்
கலக்கல் சகா
உபயம்: நர்சிம்
//(அதானே நாம சாப்பாட்டுக்காகவா போறோம்)//
அதானே...
//ஏன் நண்பா, நமக்கு திருவனந்தபுரம் தானே பக்கம். ஏன் சென்னை போய் ஒரு நாள் வேஸ்ட் பண்றீங்க..)//
அது வேறஒணணும் இல்ல ராசா...திருவனந்தபுரத்துலருந்து போகும்போது எங்கூரை கிராஸ்பண்ணித்தான் போகனும்... அதான் புள்ளபயந்துருச்சு... கரிசலு உமக்கிருக்குடி...
கருத்துரையிடுக