முருகு பார்ப்பதற்கு நமீதாவை நாலடியாக "கம்ப்ரஸ்" பண்ணின மாதிரி இருப்பான்.30 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை/ஆகவிடவில்லை.பார்க்கிற பெண்ணையெல்லாம் எதாவது காரணம் சொல்லி தட்டி கழிச்சு கொண்டிருந்தான்,அவன் சொல்ற காரணம், பொண்ணு பார்க்க போனப்ப அவங்க வீட்ல கொடுத்த மிச்சர்ல கடலையே இல்லை ,பஜ்ஜிக்கு கொடுத்த சட்னில நெறைய காரம் போட்ருந்தாங்க இப்படி போகும்.டேய் பொண்ணு பார்க்க போனாமா கிடைச்ச கேப்ல பொண்ணு கூட கடலைய போட்டோமா ஓகே பண்ணிணோமா அடுத்த முகூர்த்ததலில்யே கல்யாணம் முடிச்சமோனு இல்லாமா ஏண்டா இப்படி படுத்தறேனு கேட்டா "நமக்கு லட்சங்கள் முக்கியமில்லை லட்சியம் தான் முக்கியம்" ன்னு முடியலத்துவம் பேசுவான்
நாங்க வேலை செய்றது ஒரு தேர்ட் பார்டி இன்ஸ்பெக்சன் கம்பெனி, தங்குற இடம்,சாப்பாடு எல்லாமே கிளையன்ட் டோட பொறுப்பு. கிளையன்ட் ஒரு கவர்மென்ட் (அபுதாபி)கம்பெனிங்கிறாதலே சாப்பாடு சூப்பரா இருக்கும்.நம்ம பசங்களெல்லாம் டின்னருக்கு மூணு டீமா சாப்பிட போவோம்.7 மணிக்கு ஒரு டீம்,7.30 க்கு ஒரு டீம்,8 மணிக்கு ஒரு டீம், இவன் முதல் டீமோட சாப்பிட போய்ட்டு கடைசி டீமோட தான் திரும்ப வருவான்.
சூப்ல ஆரம்பிச்சு ஸ்வீட் வரை எந்த ஐட்டத்தையும் மிஸ் பண்ண மாட்டான்.நவரத்னா குருமாவையும் சிக்கன் குருமாவையும் கலந்து கட்டி பரோட்டாவை வச்சிகிட்டு புகுந்து வெளடுவான்.என்னடா பண்றேனு கேட்டால் சாப்பிடற விஷயத்தில் கூச்சப்பட கூடாதுனு எங்க ஆயா சொல்லியிருக்கு என்று அவங்க ஆயாவையும் துணைக்கழைத்துக் கொள்வான்.அங்க கொஞ்ச தூரத்துல இவன் சாப்பிடற அழக பாத்து செஃப் ஆன்ந்த கண்ணிரோட நின்னுக்கிட்ருப்பார்.
சரக்கடிக்க பார்க்கு போனால் 3 சைடிஷ் வாங்குவான்.ஃபிஷ்,சிக்கன்,பீஃப் எல்லாத்திலேயும் ஒன்ணொன்னு.சரக்கடிச்சதுக்கு பிறகு அராப் உடுப்பிக்கு போனா மைசூர் மசாலா தோசை,பொடி தோசை,ஆனியன் ஊத்தப்பம் என சிம்பிளாக முடிச்சுக்குவான்.இவனுக்கு பொண்டாடியா வரப்போற பொண்ணோட நெலமைய நெனைச்சு நாங்க கவலைப் படாத நாளே இல்லை.
இப்படி நாளொரு கிலோவும் பொழுதொரு இன்ச்சுமாக வளர்ந்தவன்
ஊருக்கு லீவுக்கு போய்ட்டு வந்து ஆளே மாறிப் போனான்.
சென்னைல மாமா வீட்ல தங்கி டான்ஸ் ஸ்கூல்ல பணி எடுக்கிற கேரளத்து சேச்சி இவன் அழகுல மயங்கி "ஞான் நிங்கள பிரேமிக்குது"ன்னு பறஞ்சுருச்சாம்.எண்டே அம்மே,இந்த கொடுமைய கேட்டவுடனே நேரா பார்க்கு போயி ஒரு லிட்டர் ரெட் லேபிள முடிச்சதுக்கப்புறம் தான் எங்க வயிறெல்லாம் அணைஞ்சது.
அதுக்கப்றம் நடந்தெல்லாம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை.உடம்ப குறைக்கனும்னு காபிக்கு கூட கலோரி கணக்கு பாக்க ஆரம்பிச்சுட்டான்.பிளாக் காபி,ஓட்ஸ் கஞ்சி அது மட்டுமில்லாமல் கேரட்,வெள்ளரி,பீட்ருட் என ஆடு,மாடு சாப்பிடும் எலை தலை எல்லாம் பச்சையாக சாப்பிடுவான்.4 மணிக்கு ஜிம்க்கு போய் ட்ரெட் மில் அதிர அதிர நடப்பான்.மறந்து கூட சோறு சாப்பிட மாட்டான்.இப்படியாக 94 கிலோ இருந்தவன் ஆறு மாசத்தில் 78 கிலோ ஆனான்.பர் துபாயில் பெல்லி டான்ஸ் ட்ரெஸ்ல்லாம் எடுத்துட்டு ஊருக்கு போனான்.
அந்த சேச்சி வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றும் அவன் ஹதையில் வேறு பணிக்கு சேந்துட்டான் என அறிந்து அவனை தொடர்பு கொண்டேன்.
"சாப்பாட்ட குறச்சவ ஒருத்தி அவளே ஹோட்டல்ல நிறுத்தி தனியா எங்க போனாளோ" ரிங் டோன் ஒலித்தது.
பவார்ச்சியில் சாப்பிட்டுட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடு என கட் பண்ணினான்.
வியாழன், 3 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 comments:
comedyah iruku
ஹா ஹா, நகைச்சுவை நடை உங்களுக்கு இயல்பாக கைவருகிறது.
கலக்குங்க.
கருத்துரையிடுக