ஊர் பார்க்க தாலி கட்டவில்லை
உறவு நோக்க மெட்டி போடவில்லை
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை
ஆயினும்
உன் குல தெய்வம் கோயிலுக்கு ஒரு நாள் போய் வர
என்னிடம் அனுமதி கேட்டுக் கொண்டு நிற்கிறாயே
இதுக்கு பேர் தான் காதலா?
என் டிரெஸ் நல்லா இருக்கா, உனக்கு பிடிக்கும்னு தான் நீல கலர் அப்பாகிட்ட சொல்லி எடுக்க சொன்னேன் , நிமிர்ந்து பார்த்தேன்.ஆகாய நீல கலர் தாவணி,ஒற்றைச் செயின்,நுனியில் சின்ன முடிச்சிட்ட கூந்தல்,தலை நிறைய மல்லி என எனக்கு பிடித்த மாதிரி இருந்தாய்
ம் நல்லாருக்கு என்றேன்
என் சுரத்தில்லாத பதிலுக்கு முகம் சுண்டிப் போனவளாய் என்ன ஆச்சு என்றாய்?
என்னால் உன்னை கோபிக்க முடியாதென நீ அறிந்திருந்தாலும் வருத்தத்துடன், உன்ன விட்டுட்டு போறேன்னு கோபமா ,ஒரு நாள் தானே நாளைக்கு காலையில உன் முன்னாடி இருப்பேன் என்றாய்.
அதெல்லாம் ஒன்னுமில்லே என்றேன்
வேறன்ன என்றாய் தலையை கோதியபடி
சரி போய்ட்டு வா ஆனா............மருந்து வேணும் என்றேன் கன்னத்தைக் காட்டி சின்ன சிரிப்புடன்
உன்னை எனக்கு தெரியாதடா கள்ளா எனும்படியாக ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒஹோ அதுக்குத்தான் மூஞ்சிய தூக்கி வச்சிருந்தயா? ஆள விடு சாமி வீட்ல எல்லாரும் என்னைத் தேடுவாங்க நான் போகணும்,கணக்குல வச்சுக்கோ கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா தர்றேன்னு சொல்லிட்டு நாக்கை நீட்டி பழிப்பு காட்டியபடி வேகமாக நடந்தாய் நீ, நான் கள்ள கணக்கு எழுதுவேன்னு சொன்னதை காதில் வாங்காமல்.
நாங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஒரு மாலைப் பொழுதில் வந்தவள், வேலை செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து பார்த்து நல்லா வேலை செய்யுங்க, இப்படி மெதுவா வேலை செஞ்சு எப்ப வீடு கட்டி நான் எப்ப இங்க வந்து விளக்கேத்தறது என்று அதட்டினாய் என் அப்பா உள் பக்கம் இருப்பதை அறியாமல்.
அது யாருப்பா இந்த வீட்டுக்கு வரப் போற மகாலஷ்மி என்ற படி வெளியே வந்த அப்பாவைப் பார்த்ததும்,ஒரு கணம் பயந்த நீ அச்சச்சோ என்று கைகளை உதறியபடி என்னைப் பார்த்தாய், நான் சிரித்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும்
"இரு உன்னை" என்று என்னை கண்களாலேயே மிரட்டி விட்டு ஓட்டம் பிடித்தாய் கொலுசுகள் சிணுங்க.
அதன் பிறகு உன் வீட்டில் அப்பா வந்து பேசியதும், நம் திருமணம் முடிந்து என் கள்ள கணக்குகளை நீ தீர்த்து வைத்ததையும் அசை போட்டு கொண்டிருக்கிறேன், நீ ஒரு நல்ல கணக்கை துவக்க உன் பிறந்த வீட்டிற்கு சென்றிருப்பதால்.
15 comments:
என்ன தல உண்மைக் கதை மாதிரி தெரியுது....உண்மையாயிருந்தால் சந்தோசம்தான்..நன்றாய் வளர்த்தீர் காதலை...
மறுபடியும் கல்லூரிக் காலத்துக்கே கொண்டு போய்டுச்சு தல.
அது சரி. இது கவிதையா, கதையா
கிண்டல் பண்றதா நினைக்க வேணாம். சீரியசாத்தான் கேட்குறேன். இந்த கதையோட எழுத்து நடை அப்படி இருக்கு,
அருமையான நடை. :)
நன்றி புலவன் புலிகேசி
உண்மைக் கதை மாதிரி தான்
நன்றி சரண்
நன்றி வானம்பாடிகள் சார்
நல்லா வளங்க..
நல்லாருடே மக்கா...........
அருமையா எழுதிருக்கீங்க சகா அந்த காதல் காட்சிகள் ம்ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்ன்னு தோணுச்சு...
தொடரட்டும் நல்ல படைப்புகள் வாழ்த்துக்கள்...!
நன்றி கண்ணா
உங்க ஆசிர்வாதம்!!
பிரியமுடன் நன்றி ...வசந்த்
நல்ல நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.
முடியலை. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா.
ம்ம்ம். கலக்குங்க.
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி அக்பர்
அதுசரி, இப்படியெல்லாம் நடந்துதா... :))
இம்மாம் கணக்கா சொல்றியே?? நீயும் சென்ஷி போல
கணக்குபுள்ளையாதான் இருக்கனும்...
இதே பழக்கத்துல ஆப்பீசுலேயும் கள்ள கணக்கு எழுதி, கவட்டையில வாங்காம இருந்தா சரி கணககு கரிசலு!!
நன்றி மயிலக்கா
நன்றி கலை
கணக்குபுள்ளை இல்ல கலை
இன்ஸ்பெக்டர்
எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர்
சகா உங்க கதையா? அழகா இருக்கு..................
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
நன்றி Sangkavi
கருத்துரையிடுக