என் பதின்மங்களில் எங்க ஊர் தேவதைகளால் நிரம்பியிருந்தது, ஊர் முழுக்க சிறிதும் பெரிதுமாக அமைந்திருந்த தீப்பெட்டி கம்பெனிகளின் காரணமாக.மொத்தமாக நூத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள்,தெருவுக்கு அஞ்சு ஆறு என ஏக போகமாக வளர்ந்திருந்தது.
தீப்பெட்டி தொழிலை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பணி வாய்ப்புகள் அதிகம்.தீபாவளியின் போது கிடைக்கும் போனஸ் மற்றும் அடுத்தாண்டு பணிக்கு வருவதற்காக கொடுக்கப்படும் முன்பணம் போன்றவைதான் வேலை செய்யுமிடத்தை தீர்மானிப்பவை.இதன் காரணமாக வீடு இருக்கும் தெருவிலேயே கம்பெனி இருந்தாலும் வேறு தெருவில் உள்ள கம்பெனியில் வேலை செய்பவர்களும் உண்டு நிறைய.
இங்கு வேலை செய்பவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் சகோதரனின் படிப்புக்காக,தன்னுடைய திருமணத்திற்கு பணம் சேர்க்க வேண்டி அல்லது பொம்பள புள்ள படிச்சு என்ன ஆகப் போகுது என்ற சாமன்யர்களின் பொது மனப்பான்மை காரணமாக.
காலையில் கோகுல் சாண்டல் பவுடரும்,ராணி ஸ்டிக்கர் பொட்டுமாய் அவர்கள் வேலைக்கு போவதே அழகு தான்.மதியம் உணவுக்கு வீடு சென்று திரும்புவார்கள்.பின்பு இரவு ஏழு, எட்டு மணிக்கு வீடு திரும்பி டிவி நாடகங்களில் மூழ்குவார்கள். சில தேவதைகள் ஒரு நாளைக்கு அஞ்சு முறை வீட்டுக்கும் கம்பெனிக்குமாய் அலைந்து கொண்டே இருப்பார்கள்,காரணம் அவர்கள் காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்கப் படுபவர்கள்.
"பொன் மான தேடி நானும் பூவோடு வந்தேன்" இல்லனா "வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு" இவை போன்ற பாடல்கள் கம்பெனி ஸ்பீக்கரில் கரைந்து வந்தால் தேவதை(களு)க்கு காதல் சோகம் என அர்த்தம் கொள்ளலாம்.
வார இறுதிகளில் சம்பளம், பெரும்பாலும் சனி இரவு அல்லது ஞாயிறு காலை. ஞாயிறுகளில் தவணை முறையில் பொருள் விற்பவர்கள் ஊரில் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் வார வசூல் செய்வதற்காக. துணி, மிக்ஸி, கிரைண்டர், டிவி, அயர்ன் பாக்ஸ், கட்டில்,பீரோ என எல்லாமே கிடைக்கும் அவர்களிடம்.பெரும்பாலான வீடுகளில் உள்ள இந்த மாதிரியான பொருட்கள் தேவதைகளின் உழைப்பால் வாங்கியவை.
கிராமங்களின் வைகாசி மாதம் அழகானது,கோயில் திருவிழாக்களால் ஊரே களை கட்டியிருக்கும்.அந்த நாட்களில் உள்ளூர் தேவதைகளோடு விருந்தாளிகளாக வந்த வெளியூர் தேவதைகளும் சேர்ந்து கொள்வர்.
மொளப்பாரி தூக்க, மாவிளக்கு எடுக்க,சாமியாட்டம் பார்க்க,இரவில் திரை கட்டி போடும் ராமராஜன் படங்கள் பார்க்க என எங்கு காணினும் தேவதைக் கூட்டங்களே.
இப்போது நெறய தீப்பெட்டி கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டார்கள் மூலப் பொருட்கள் (சல்பர்,குளோரெட் மற்றும் கேரளாவில் இருந்து வரும் குச்சி)விலையேற்றம்,தேவதைகள் பற்றாக்குறை,இயந்திர தீப்பெட்டிகள் வருகை போன்றவற்றால்.
அந்த தலைமுறை தேவதைகளை எல்லாம் திருமணம் செய்து ராட்சஸன்கள் கொத்திக் கொண்டு போய் விட்டார்கள் அவங்க ஊர்களுக்கு. அடுத்த தலைமுறை தேவதைகளை நகரத்திலுள்ள பள்ளிகள் வேன் மூலம் அழைத்து செல்ல ஆரம்பித்து விட்டது.
ஆம் இப்போதெல்லாம் தேவதைக்கூட்டங்களை தரிசிக்க வைகாசி வரை காத்திருக்க வேண்டும்
டிஸ்கி:நமக்கு அந்த கொடுப்பினையும் இல்ல.ங்கொய்யாலா எப்ப அந்த பாழாப் போன சவுதி ஏர்லைன்ஸ்ல இடது கால எடுத்து வச்சு பாலைவனத்துல போய் இறங்குனோமோ நம்ம வாழ்க்கையும் அது மாதிரி ஆயிருச்சு.
17 comments:
//"பொன் மான தேடி நானும் பூவோடு வந்தேன்" இல்லனா "வைகை கரை காற்றே நில்லு வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு" இவை போன்ற பாடல்கள் கம்பெனி ஸ்பீக்கரில் கரைந்து வந்தால் தேவதை(களு)க்கு காதல் சோகம் என அர்த்தம் கொள்ளலாம்.//
நீங்க ரெம்ப கிட்ட போய் பார்த்த மாதிரி தெரியுதே :) .....
தேவதைகள் ஆல்வேல்ஸ் மேட் இன் கேரளா என்ற கொள்கையில் வாழ்கிறேன், நீங்க என்னடான்னா தமிழ்நாட்டிலும் தேவதை இருப்பதுபோல் சொல்கிறீர்கள்:)))
@மகா
ஆமாம் இல்ல
@குசும்பன்
அந்த வயசில் அவங்க தான் தேவதைகள்
// பொம்பள புள்ள படிச்சு என்ன ஆகப் போகுது என்ற சாமன்யர்களின் பொது மனப்பான்மை காரணமாக. //
ம்ம் கேடுகெட்ட எண்ணம் பிடிச்ச பொதுவா எல்லாருக்கும் இருக்குற எண்ணம் தானே சகா
கரிசல், போன கவிதையிலயே ஒரு இலக்கியவாதி தெரிஞ்சாரு. முப்பத்தி நாலாவது பதிவிலயே ”எ”லக்கியவாதி ஆகிட்டேங்களேப்பா!
அருமையான ஒரு நாஸ்டால்ஜிக் நினைவுகள்.
வாழ்த்துகள்.
நல்ல கொசுவத்தி
//குசும்பன் சொன்னது…
தேவதைகள் ஆல்வேல்ஸ் மேட் இன் கேரளா என்ற கொள்கையில் வாழ்கிறேன், நீங்க என்னடான்னா தமிழ்நாட்டிலும் தேவதை இருப்பதுபோல் சொல்கிறீர்கள்//
நீங்க வேற ... இவனே ஆபிஸ்ல ஓரு பிலிப்பைனி கிழவி கூட இல்லையேன்னு கவலைல இருக்கும் போது...கொட்டாம்பட்டில கூட தேவதைகளா தெரியத்தான் செய்யும்..
//என் பதின்மங்களில் //
ங்கொய்யால ... இதை எங்க இருந்துடா சுட்ட.....
பகிர்வும், படங்களும் அருமை.
உங்க ஊர்ல தீப்பெட்டி கம்பெனின்னா எங்க ஊரு பக்கம் பீடி சுத்தற தேவதைகள் அதிகம். வீட்டு வாசல்ல வெயில்படாத இடத்துல நாலைந்து பேர் உட்கார்ந்து கதைபேசி,ரேடியோ கேட்டுகிட்டே கை வேகவேகமா பீடி சுத்தும். வாரம் ஒரு நாள் பீடி இலை எடுக்க புட்டாமாவு பூசி கம்பெனி போகும் போது ஊர் மைனர்களும் பின்னாடியே போவாய்ங்க.... :))
ம்ம்ம்.அது ஒரு கனாகாலம். இப்போ வயசுபுள்ளைகள் எல்லாம் டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேன்ல ஏறி வேலைக்கு போறாய்ங்க..இந்த காலத்து மைனர்கள் பைக்ல துரத்துறாய்ங்க... :((
:-) நல்லாருக்கு நினைவலைகள்...
ம்ம்ம். கோவில்பட்டி. கிரா ஊரு. எழுத்துக்கு கேக்கவா வேணும். அசத்துங்க.
நல்ல இடுகை நண்பா. நானும் உங்களைப் போன்றே கரிசல் நிலத்திலிருந்து வந்திருப்பதால் இந்த இடுகையில் உங்களை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
நன்றி கரிசல்.
நல்ல பகிர்வு. தேவதைகள் எனக்கும் பிடிக்கும்.
இடுகையை ரசித்தேன்; கிராமத்து தேவதைகள் மாதிரி வருமா?
நன்றி பிரியமுடன்...வசந்த்
அதே சகா
நன்றி ஷங்கி
நன்றி அத்திரி
நன்றி கண்ணா
நீங்க கிருஷ்ணன் பேர வச்சிருக்கிங்க நிறைய கோபியர்கள் உங்கள சுத்தி இருப்பாங்க நாங்க என்ன பண்றது?.எதையாவது சுட்டாவது இல்ல யாரையாவது சுட்டாவது நான் ஒரு இலக்கியவாதி ஆகாம விடறதில்ல இது உங்க மேல சத்தியம்
நன்றி துபாய் ராஜா
காலம் மாறிப் போச்சு
நன்றி சந்தனமுல்லை
நன்றி வானம்பாடிகள்
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி அக்பர்
நன்றி பூங்குன்றன்.வே
அன்பின் கரிசல்காரன்
நல்லாவே கொசு வத்தி சுத்தி இருக்கீங்க
என்னிக்கு இடது கால வச்சு ஏர்லைன்ஸிலே ஏறினீங்களோ - ம்ம்ம் பாவம்
கோகுல் சாண்டல் ராணி ஸ்டிக்கர் பொட்டு - நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க
குசும்பன் கெடக்கான் - கரிசல் காட்டுத் தேவதைகள் கரிசல்காரனுக்கு சிலிர்ப்புதான்
கவிதை ( இல்லையா ) - கட்டுரை அருமை -
நல்வாழ்த்துகள் கரிசல்காரன்
அன்பின் சுந்தர்
ஆரம்பித்து நாற்பது நாட்களில் முப்பத்து நாலு இடுகைகள் - இருபத்தோரு பதிவர்கள் பின்தொடர்கிறார்கள் - வாழ்க
மேலும் மேலும் வளர நல்வாழ்த்துகள்
கருத்துரையிடுக