"எழுதனும்னா நெறய படிக்கனும்" என்ற அந்த (இலக்கிய)உலகப் புகழ் பெற்ற வாக்கியத்தை சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.5 வது ரவுண்டு முடித்து விட்டிருந்தோம்.என் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பாரில் இருந்தோம்.இந்த இலக்கிய பார்ட்டி என் நண்பனுக்கு நண்பன், இன்று சரக்கடிக்க நண்பன் அழைத்து வந்திருந்தான்"நண்பனின் நண்பன் எங்களுக்கும் நண்பனே" என்ற உயரிய தத்துவப்படி அவனை உக்கார வைத்து ஊத்தி கொடுத்து கொண்டிருந்தோம்.ஆர்வக் கோளாறு பார்ட்டி ஒருவன் அவனிடம் டேய் நம்ம மச்சி பிளாக் எழுதறண்டா என்று என்னைக் காட்டி உளறி விட்டான்.அதனால் வந்த வினைதான் இது.
ஆமா நானும் நெறய படிக்கிறேன் என்றேன்
என்ன படிக்கிறிங்க என்றான் விடாமல்
நான் கடுப்பாக கோர்த்து விட்டவனை பார்த்தேன் அவன் வேலையில் மும்முரமாக இருந்தான்.இலக்கியவாதி ஏதோ ஐ லவ் யு சொல்லி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருப்பவனைப் போல என் முகத்தயே பாத்துக் கொண்டிருந்தான்,விடாது கடுப்புன்னு நெனைச்சுக்கிட்டு எல்லாமே படிப்பேங்க என்றேன்.
எல்லாமேன்னா பூக்கோ தெரியுமா என்றான் இலக்கியவாதி
எனக்கு எக்கோ தான் தெரியும் நம்ம ஊர் மலை மேல போய் கத்துனா சூப்பரா எக்கோ வரும் என்றேன்.
சரி கேத்தி ஆக்கர் ஆவது தெரியுமா என்றான் கொஞ்சம் கோபமாக
சப்பாத்தி மேக்கர் தான் தெரியும் போன மாசம் தான் எங்க வீட்ல வாங்குனோம் என்றேன்.
ராவாக ஒரு ரவுண்டு ஊத்தி ஒரே கல்ப்பில் அடித்து விட்டு கேட்டான் வேற என்ன தான் தெரியும்?
புரியற மாதிரி எழுதுனா படிக்கத் தெரியும் என்றேன் நான்.
சரி இவ்ளோ கேள்வி கேக்குறல்லா நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் என்றபடி சங்கர் யார்னு தெரியுமா என்றேன்.
சங்கரா யார் அது ? என்றான் இலக்கியவாதி
ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற சரக்கு,கடிச்சுட்டு இருக்கிற சிக்கன்,பிடிச்சுட்டு இருக்கிற சிகரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்சர் அவன் தாண்டா ங்கொய்யாலா ஒன்னைய ஒரு மனுசனா மதிச்சு இவ்ள செலவு பண்ணி வாங்கி குடுத்துருக்கான் அவனை தெரியாது எங்கேயோ இருக்குறவன தெரியும் உன்னையெல்லாம் என்ன பண்ணலாம் என்றபடி செவுளில் ஓங்கி ஒன்னு விட்டான் நண்பனொருவன்.
பார்த்தியா நம் நாட்டில இப்படிதான் இதுவே பிரான்ஸ் ஆ இருந்தா எனக்கு என்ன மரியாதை கிடைக்கும் தெரியுமா என்றான் கன்னத்தை தடவியபடி.
சரி விடுங்க பாஸ் அவன் ஏதோ போதையில அடிச்சுட்டான் டேய் அண்னணுக்கு ஒரு ஆஃப் சொல்லுடா என்றேன்
சரக்கு வந்தவுடன் ஊத்திக் கொடுத்து விட்டு பாஸ் இவ்வளவு போதையிலயும் ரொம்ப தெளிவா பேசுறிங்கல்லா இங்க மதிப்பு,மரியாதை எதுவும் கிடைக்காது ப்ரான்ஸ்ல தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்பன்னா அங்க போய் இலக்கிய சேவை செய்ய வேண்டியது தானே இங்க என்னத்த புடுங்கி கிட்டு இருக்கீங்க என்றேன் அமைதியாக.
அது...... அது...... என்றவன் அடுத்த ரவுண்டை அடித்தான்.
யேய் மச்சி ஏற்கெனவே அடிச்சவனை கூப்பிட்டேன்,அப்போ எந்த பக்கம் அடிச்ச?என்றேன்,லெப்ட் கன்னத்துலடா என்றான்.சரி அப்படின்னா இப்ப ரைட்ல ஒன்னு விடு சொல்லி முடிக்கும் முன் விட்டான் ஒன்று.
சுருண்டு விழுந்த இலக்கியவியாதியை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம்.
13 comments:
ஹி ஹி ஹி! கலக்கலுங்கோ!!!!!!
காமெடியாத்தான் இருக்குது.
யப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ
ம்ம்ம்ம்ம்.நடத்துங்க..
// ப்ரான்ஸ்ல தான் எல்லாம் கிடைக்கும்னு.அப்பன்னா அங்க போய் இலக்கிய சேவை செய்ய வேண்டியது தானே இங்க என்னத்த புடுங்கி கிட்டு இருக்கீங்க என்றேன் //
நீங்க யாரை சொல்லுறீங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சுட்டு...
ரைட்டு நடத்துங்க
@ ஷங்கி
நன்றி சகா
@ராஜு
//காமெடியாத்தான் இருக்குது//
ஒரு இலக்கியவாதி அடி வாங்குறது உங்களுக்கு காமெடியா இருக்கா
@கார்க்கி
என்னப்பாஆஆஆஆஆஆஅ
@தண்டோரா
உங்கள மாதிரியெல்லாம் முடியுமாண்ணே ஏதோ என் லெவலுக்கு
@கண்ணா
உங்கள் ஆதரவுக்கு நன்றி கண்ணா
//டேய் நம்ம மச்சி பிளாக் எழுதறண்டா //
அது !
//ஏண்டா நாதாரி நீ குடிச்சுட்டு இருக்குற சரக்கு,கடிச்சுட்டு இருக்கிற சிக்கன்,பிடிச்சுட்டு இருக்கிற சிகரெட் எல்லாத்துக்கும் ஸ்பான்சர் அவன் தாண்டா//
சங்கர் ரொம்ப பாவம் :)
சூப்பர் காமடி போல...
@பூங்குன்றன்.வே
நன்றி சகா வே
//அமைதியாக.
அது...... அது...... என்றவன் அடுத்த ரவுண்டை அடித்தான்.
//
அடப்பாவி...
இப்பிடி கேட்டதுக்கு கோவங்கூடயா வரல ...?
ரைட்டு நடத்துங்க...!!!!!
@ பிரியமுடன்...வசந்த்
வரவே மாட்டக்கு சகா
@நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
OK சகா
இலக்கியம் நிறைய பேருக்கு சரக்கு முடிந்து போன கிளாஸில்தான் இருக்கிறது..!!
கருத்துரையிடுக