ZEE டிவியில் நேற்று PAA இயக்குனர் பால்கி அவர்களின் பேட்டி ஒளிபரப்பானது.படம்,அமிதாப்,வித்யா பாலன்,இளையராஜா பற்றி சுருக்கமாக பேசினார்.
பா வேறு படங்களைப் போலிருக்கிறது என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் Progeria என்ற வார்த்தைய கேட்டவுடனே அவர்களாக ஏற்கனெவே அது பற்றி வெளிவந்த படங்களுடன் ஓப்பிட்டு கருத்து சொல்கிறார்கள்.எதையும் எதனுடனும் ஒப்பிடாதீர்கள்.அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான்.இந்த படத்தின் கதையும்,திரைக்கதையும் எழுதியது நான்.ஆனா அந்த நோயை நான் உருவாக்கவில்லை.அது கடவுள் உண்டாக்கியது.அதை வைத்து கதையை மட்டும் தான் நான் உருவாக்கினேன் என்றார்.
அமிதாப்புக்கு அறிமுகம் என்று ஏன் டைட்டில் போட்டீர்கள்?
சிரித்துக்கொண்டே ஆம் இந்த படத்தில் அமிதாப் அறிமுகம் தான்.மொத்தமாக அவரின் உருவத்தை மாற்றி அமைத்திருக்கிறோம் அல்லவா, ஆகவே தான் என்றார்.
வித்யா பாலன் பற்றி?
முதலில் அமிதாப்புக்கு அம்மா கேரக்டர் என்றதும் அதிர்ந்து விட்டார்.பின் கதையை விளக்கினேன்,அம்மா கேரக்டர் என்றாலும் வயதான அம்மா இல்லை.நீங்கள் இப்படியே தான் இருப்பீர்கள்,அமிதாப் வயதைத்தான் குறைக்கப் போகிறோம்,என்றவுடன் ஒத்துக் கொண்டார்.
ஆனால் ஒன்று அமிதாப்,அபிஷேக்,வித்யா மூவரில் யார் நடித்திருக்க விட்டாலும் இந்த படத்தை நான் எடுத்திருக்க மாட்டேன் என்றார் உறுதியாக.
அமிதாப்பின் திரையுல வாழ்வில் இந்த கேரக்டர் மிகவும் முக்கியமானது இல்லையா ?
சினிமாவில் இந்த கேரக்டர் முக்கியமானது,அந்த கேரக்டர் சிறப்பானது என்று எதுவுமில்லை.அது அந்தந்த படத்தின் தேவைகளைப் பொறுத்தது.எனக்கு அமிதாப்பின் நஸிம் படத்தின் காமெடி ரோல் தான் ரொம்ப பிடிக்கும்.அதனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
உங்களின் சீனிகம் படத்திலும் பா படத்திலும் ஒரே இசையமைப்பாளர் தான்......
கேள்வியை முடிக்கும் முன்பே குறுக்கிட்ட பால்கி இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமல்ல,ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரிராமும் சீனிகம்மில் பணியாற்றியவர்தான்.
இளையராஜாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்,ஒரு படத்துக்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாடல்கள்,அதில் 3000 பாடல்கள் மெலோடி ரகத்தை சேர்ந்தவை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷனுக்கும் அவர் பாடல் போட்டு விட்டார்,எந்த இயக்குனர்க்கு, எந்த சிச்சுவேஷனுக்கு பாடல் தேவை என்றாலும் அவரிடம் காபி ரைட் வாங்கி விட்டு தாரளாமாக உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ரஹ்மான் வந்த பிறகு தான் தென்னிந்திய இசை பற்றி எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது.ராஜாவைப் பற்றி அதிகம் தெரியாமல் போனதற்கு காரணம்,அவர் உச்சத்தில் இருந்த போது இந்த அளவு தொழில்நுட்பம் வளரவில்லை.மீடியாவும் இப்போது இருப்பது போலில்லை.அதனால் தான் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு அவரைப் பற்றி அறியவில்லை.அவர் இந்தியாவின் சிறந்த இசை மேதை என்றார்.
பா வுக்கு அடுத்து என்ன?
பெரிதாக சிரித்துக்கொண்டே இப்போதைக்கு எந்த ஐடியாவுமில்லை.சொல்லப் போனால் படம் பார்க்கிற எண்ணம் கூட இல்லை.கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட் பார்க்க வேண்டும்.அது மட்டும் தான் என்றார்.
16 comments:
//ரஹ்மான் வந்த பிறகு தான் தென்னிந்திய இசை பற்றி எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது.ராஜாவைப் பற்றி அதிகம் தெரியாமல் போனதற்கு காரணம்,அவர் உச்சத்தில் இருந்த போது இந்த அளவு தொழில்நுட்பம் வளரவில்லை.மீடியாவும் இப்போது இருப்பது போலில்லை.அதனால் தான் நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு அவரைப் பற்றி அறியவில்லை.அவர் இந்தியாவின் சிறந்த இசை மேதை என்றார்.//
100% truth ..
//இளையராஜாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்,ஒரு படத்துக்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் 4500 பாடல்கள்,அதில் 3000 பாடல்கள் மெலோடி ரகத்தை சேர்ந்தவை.என்னைக் கேட்டால் எல்லா சிச்சுவேஷனுக்கும் அவர் பாடல் போட்டு விட்டார்,எந்த இயக்குனர்க்கு, எந்த சிச்சுவேஷனுக்கு பாடல் தேவை என்றாலும் அவரிடம் காபி ரைட் வாங்கி விட்டு தாரளாமாக உபயோகப்படுத்தி கொள்ளலாம்//
ராஜா .. ராஜாதான்..
இந்த விஷயத்தில் யாரும் அவர்கிட்ட நெருங்க முடியாது..
வாங்க கானா பிரபா
நன்றி
@மீன்துள்ளியான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகா
@கண்ணா
ராஜா .. ராஜாதான்..எல்லாருக்கும் (சில பேர்களைத் தவிர்த்து)
ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா..
@கார்க்கி
வருகைக்கு நன்றி சகா
நல்ல பகிர்வு
@கடையம் ஆனந்த்
நன்றி சகா
நல்ல பகிர்வு நண்பரே.
ஏங்க டெக்னாலஜியும் இல்லாமல் மண்டைக்குள்ளேயே எல்லா ட்யூனும் போட்டு ஹிட் கொடுத்தாரே அத விட பெரிய சாதனை எதாவது இருக்கா என்ன?
நல்லாருக்கு.. எங்க உங்க வலைதளத்தில் follower காணோம் ??
நல்ல பதிவு கரிசல் ஸார்.. 'பா'வை விட 'சீனி கம்'மில் இவங்க கெமிஸ்ட்ரி நல்லா இருந்துச்சுங்க.. சாக்ஸபோன்ல ஒரு தீம் வரும்.. அமர்க்களமா இருக்கும்.
-Toto
www.pixmonk.com
@செ.சரவணக்குமார் கூறியது...
நன்றி சகா
@அண்ணாமலையான்
சில பேருக்கு அது புரிய மாட்டக்கு சகா
@mayil
நன்றி சகா சீக்கிரம் செட் பண்ணி விடுகிறேன்
@Toto
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகா
நல்ல இடுகை நம்ம ராஜா சாரை பற்றி..அவரோட பாடல்களை இரவில் கேட்கும்போது சுகமோ சுகம். செயற்கையான இசைக்கருவிகளை பயன்படுத்திருக்கமாட்டார்,இரைச்சல் இருக்காது..இன்னும் இப்படி நிறைய சொல்லலாம்நண்பா.
//பூங்குன்றன்.வே
அவரோட பாடல்களை இரவில் கேட்கும்போது சுகமோ சுகம்.//
எனக்கும் அப்படியே சகா....
கருத்துரையிடுக