நம்மில் சிலருக்கு விமர்சனம் எழுதாவிட்டால் தூக்கமே வராது. தமிழ்,தெலுகு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம் என எந்த மொழிப் படங்களையும் விட்டு வைப்பதில்லை.விட்டால் போஜ்புரி படத்துக்கும் சுட சுட விமர்சனம் எழுதுவார்கள்.
வேட்டைக்காரனை குறி வைத்து தாக்குகிறார்கள்.படமே இன்னும் வெளி வரவில்லை அதற்குள்ளாகவே ஏகப்பட்ட கருத்துக்கணிப்புகள். பாடல்களுக்கும்,ட்ரெய்லர்களுக்கும் ஏற்கனெவே விமர்சனங்கள் எழுதி தீர்த்தாயிற்று.படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளரை விட,விஜயை விட இவர்கள் தான் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விமர்சிக்க!
இன்னும் சிலர் நுணுக்கமாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று உன்னைப் போல் ஒருவனில் கமல் போட்டுருந்த செருப்பு காமன் மேன் போடும் செருப்பு போலில்லை என புலம்புகிறார்கள்.
நடோடிகளைப் பற்றி எல்லாரும் ஆஹோ ஓஹோ என்கிறார்களே என்று படம் பார்க்க போனேன் ஆனால் படம் சாதாரணமாகத்தான் இருக்கிறது,படத்தில் கொண்டாடும் அளவிற்கு எதுவுமில்லை - இது நடோடிகள் படம் பற்றி ஒரு பதிவர் உதிர்த்த முத்து.
யோகியை பொறுத்தவரை இயக்குனர் சிவா, யோகி ட்ஸோட்சியின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட படம், படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படத்தின் பாதிப்பு என்று நானே சொல்லியிருக்கிறேன் என்று கூறிய பின்பும்,யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ட்ஸோட்சி படத்தை தமிழ் மக்கள் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அல்லது பார்க்க போகிறார்கள்? மொழி புரியாமல் படம் பார்த்து ரசிக்க எல்லாராலும் முடியுமா?
நீங்களே ஒத்துகொண்ட படி அருமையான படமான ட்ஸோட்சியை அவர்கள் யோகி மூலமாக பார்க்கட்டுமே.சினிமா என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் கூறுவீர்களானால் ஆகச் சிறந்த உலக சினிமாவாக கருதும் ஒரு படத்தை உங்கள் நண்பர்களுக்கும்,சுற்றத்தவர்களுக்கும் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்??
எல்லாப் படங்களுக்கும் மார்க் போட்ட விகடன் எடுத்த சிவா மனசுல சக்தி படம் எப்படியிருந்தது? அநேகப் படங்களுக்கு 40க்கு கீழே மார்க் போட்ட அவர்களுக்கு 100 மார்க் போட/எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும் என்று நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.அவர்களால் ஏன் அப்படி ஒரு படத்தை தயாரிக்க முடியவில்லை?
பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து நல்ல சினிமா எடுப்பது எப்படி என விதிமுறைகள் உண்டாக்கி கொடுத்து விட்டீர்களென்றால் இயக்குனர்களுக்கு வேலை எளிதாகிப் போகும்.
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
:)
ஓவரா டென்சன் ஆகிட்டீங்க போல..
/யோகியை பொறுத்தவரை இயக்குனர் சிவா, யோகி ட்ஸோட்சியின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட படம், படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படத்தின் பாதிப்பு என்று நானே சொல்லியிருக்கிறேன் என்று கூறிய பின்பும்,யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.//
எல்லோரும் போட்டு குதறினப்பிறகுதான் இதை அவர் சொல்லியிருக்கார் போல.. படம் ஆரம்பத்துல டூட்சியோட இயக்குனரோட கதையோட பாதிப்புன்னு சொல்லியிருக்கலாமே..
விமர்சனம் எழுதறவங்க மேல விமர்சனம் செய்யறவங்களும் அதிகமாகிட்டுதான் இருக்காங்கன்னு உங்க பதிவைப் பார்த்து சொல்லலாமா :-))
அன்பின் கரிசல்காரன்..
ஏன் இவ்வளவு கோபம் நண்பா, யோகியைப் பொறுத்தவரை அது 'ட்ஸோட்சி' யின் பாதிப்பில் உருவானதென்பதை அமீர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ட்ஸோட்சி படத்தைப் பார்த்ததே இல்லை என்று அமீர் சொன்னதாகத்தான் செய்திகளில் படித்திருந்தேன். அதனால்தான் எனது பதிவில் அமீர் மீதான எனது வருத்தைத்தை குறிப்பிட்டேன். ஒரு படைப்பைப் பற்றிய பார்வையாளனின் விமர்சனம் அத்தனை தவறானதா?
//யோகி ட்ஸோட்சியின் அப்பட்டமான தழுவலே என்று போட்டு குதறிக் கொண்டு இருக்கிறார்கள்//
இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை நண்பரே!
// சென்ஷி கூறியது...
விமர்சனம் எழுதறவங்க மேல விமர்சனம் செய்யறவங்களும் அதிகமாகிட்டுதான் இருக்காங்கன்னு உங்க பதிவைப் பார்த்து சொல்லலாமா :-))//
விமர்சனம் எழுதறவங்க மேல விமர்சனம் செய்யறவங்கள விமர்சனம் பண்ணி பின்னூட்டம் போடுறவங்க இருக்காங்கன்னு உங்க பின்னூட்டம் பார்த்து சொல்லலாமா :))இப்படி ஆரம்பிச்சா அதுக்கு முடிவே கிடையாது தலைவரே
@ செ.சரவணகுமார்
நண்பரே
இயக்குனர் சுப்ரமணிய சிவா சொல்வதைப் பாருங்கள்
வழக்கத்திற்கு மாறுபட்ட படைப்பை தர நினைத்தோம்,தந்திருக்கிறோம்.இந்த முயற்சியில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்து கொள்ள செய்யலாம்.ஆனால் முயற்சியே தவறு என்று சொல்லும் போது தான் வருத்தமாக இருக்கிறது.வருத்தம் என்று சொல்வதை விட முயற்சியில் பின் வாங்கும் எண்ணம் ஏற்படுகிறது.
இதற்கென்ன சொல்ல?
இவுங்க எல்லோருமே இப்பிடித்தான் பாஸ்.. அழுவாதீங்க.! ஹிஹி.
(ஆமா, நானோ சிவாவோ அந்தப்படத்தை பார்த்ததுகூட இல்லன்னு முதலில் அமீர் விட்ட பேட்டியைப்பற்றி என்ன சொல்றீங்க.? அப்படியே முக்காவாசி படத்தை எடுத்துட்டு பாதிப்புன்னு சொன்னா போச்சா? வெளிநாட்டுப்படத்தை தமிழுக்கு கொண்டுவர ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணட்டும். கதை திரைக்கதை நாங்கதான்னு புளுகுற வேலை வேண்டாம்னுதான் சொல்றோம்)
@ஆதிமூலகிருஷ்ணன்
தல துபாய் பிலிம் பெஸ்டிவலுக்கு யோகி செல்கிறது.கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் என்ன நடக்குதுனு பார்க்க
...... டைம் பத்திரிகையால் சென்ற நூற்றாண்டின் சிறந்த 100 படங்களுல் ஒன்றென பாரட்டப்பட்ட "நாயகன்" படத்தையே "காட்பாதர்" காப்பி என்று சொன்னவர்கள் தானே நாம்?
உங்க கோபம் சரிதான். ஆனால் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
நாயகன், காட்ஃபாதர் பாதிப்பில் உருவாகியிருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரே சீன்களைப் பார்க்க முடியாது. யோகி அப்படியல்ல. அதுவும் ஒரு படத்திற்கு இயக்குனர் தான் எல்லாமும் என்று சொன்ன அமீர், யோகியை எப்படி அமீரின் யோகி என்று சொல்லலாம்? சிவாவின் யோகி என்றல்லவ்வா போஸ்டரில் இருந்திருக்க வேண்டும்?
அதே போல் Tsotsiயை தெரியாமல் படம் பார்த்த பலருக்கு படம் பிடிக்கவில்லை. பருத்தி வீரனை கொண்டாடிய நாங்கள்தான் சொல்கிறோம், யோகி குப்பையென்று. அமீரின் மீதான் வெறுப்பல்ல அது. யோகி என்ற படைப்பு மீதுதான்.
எல்லோருக்கும் ரசனை ஒரேபோல இருப்பதில்லை. வலையுலகில் எழுதுவது தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எல்லா விதமான நிறுவனத் தயாரிப்புகளும் விற்பனையாவதே பலவித வாடிக்கையாள்கள் இருப்பதால்தான். உங்களுக்குப் பிடித்திருப்பது மற்றவ்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அவ்வளவுதான். 'விமர்சனத்தை விமர்சனம் செய்யும்' உங்கள் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை 'யோகி'யில் ஏற்கெனவே பார்த்த பல படங்களின் தாக்கம் இருந்ததால் - முழு ஈடுபாடோடு படம் பார்க்க முடியவில்லை- சில காட்சிகளைத் தவிர்த்து.
கருத்துரையிடுக