skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 17 ஜூன், 2010

அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்

த‌ன்னுடைய‌ வெளிப்ப‌டையான‌ செய‌ல்பாடுக‌ளின் மூல‌ம் பொது ம‌க்க‌ள் ம‌த்தியில் ந‌ற்பெய‌ர் பெற்றிருக்கும் நாம‌க்கல் மாவட்ட‌ ஆட்சியாளர் திரு சகாயம், கிராமங்களில் முகாம்கள் நடத்தி பட்டா, சிட்டா முதல் தேவைப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ததுட‌ன் , கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டார்.(மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கிராம நிர்வாக அலுவலர்கள், பணிபுரியும் கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும் என்பது நடைமுறை விதி) இது, கிராம நிர்வாக அலுவலர்களை உசுப்பி விடவே, அவர்களில் பலரும் ஒன்று கூடி, ஆட்சியருக்கு எதிராக கடந்த 30.04.10 அன்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், இந்த விஷயம் பொதுமக்களை சீண்டிப் பார்க்கவே... சுமார் 4,000 விவசாயிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள், அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
******************************************************************
தமிழக இ.எஸ்.ஐ. மருத்துவப் பிரிவின் இயக்குநரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநருமான புருஷோத்தம் விஜயகுமார் அவர்க‌ள், அவ்வ‌ப்போது மாறு வேட‌த்தில் மாநில‌ம் முழுவ‌துமுள்ள அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்குச் சென்று, ல‌ஞ்ச‌ம் வாங்குப‌வ‌ர்க‌ளுக்கும்,பணியில் க‌வ‌ன‌க்குறைவாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் த‌க்க‌ த‌ண்ட‌ணையை அளித்து வ‌ருகிறார்(கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் மாறுவேடத்தில் புகுந்து சாட்டையைச் சுழற்றி வருகிறார் விஜயகுமார்).இவரது அதிரடி நடவடிக்கைகளால், மருத்துவத் துறையின் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவிக்க... அவர்களைச் சமாதானப்படுத்தி, விஜயகுமாரைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்படி பச்சைக் கொடி காட்டுகிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

''ஒருமுறை பொங்கல் பரிசு பார்சல் என்கிற பெயரில் எனக்கு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்... அந்தக் கவருக்குள் மலம் வைக்கப்பட்டிருந்தது. என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவர்தான் அனுப்பியிருக்க வேண்டும். இது மட்டுமா? என்னைப்பற்றி எத்தனையோ மொட்டைக் கடிதங்கள் அனுப்புகிறார்கள். நான் கடவுளை நம்புகிறவன். அவர் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தவறு செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து போகிறேன்..!'' என்கிறார் புருஷோத்தம் விஜயகுமார்!

 ந‌ன்றி விக‌ட‌ன்

அண்மையில் ந‌டைபெற்ற‌ முத‌ல்வ‌ரின் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பு நூல்க‌ள் வெளியீட்டு விழாவில் பேசிய‌ சென்னைப் ப‌ல்க‌லைக்"க‌ழ‌க‌" துணைவேந்த‌ர் திருவாச‌க‌ம் "முத‌ல் அமைச்ச‌ர் க‌ருணாநிதியின் எழுத்துக்க‌ள்தான் நோப‌ல் ப‌ரிசு பெற‌ த‌குதியான‌வை" என்று அல்ல‌க்கைக‌ளே கூச்ச‌ப்ப‌டும் ப‌டி ஒரு ப‌னிக்க‌ட்டி ம‌லையை வைத்தார்.இப்ப‌டிப்ப‌ட்ட‌ அதிகாரிக‌ள் ம‌த்தியில் திரு.ச‌காய‌ம் போன்ற‌வ‌ர்க‌ள் ந‌ம‌க்கு கிடைப்ப‌து அத்தி பூத்தாற் போல‌த்தான்.

க‌ட‌மையைச் செய்யும் இவ‌ரைப் போன்ற‌ அதிகாரிக‌ளை எதிர்ப்ப‌து என்ன‌ நியாய‌ம்???
********************************************************************************
நான் த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌த்தில் ஒரு வ‌ருட‌ ப‌யிற்சியில் இருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌மிது.

த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌த்தில் மாவ‌ட்ட‌ந்தோறும் MRT (Meter & Relay Testing ) என்றொரு பிரிவுண்டு.அந்த‌ மாவ‌ட்ட‌த்திலுள்ள‌ துணை மின் நிலைய‌ங்க‌ளின் தொழில்நுட்ப‌ ப‌ராம‌ரிப்பு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ ஒரு குழுவும்,‌ தொழிற்சாலைக‌ளின் (HT Service,LTCT Service) மின் அளவிக‌ள் க‌ண்காணிப்பு,சோத‌னை ம‌ற்றும் ப‌ராம‌ரிப்புக‌ளை மேற்கொள்ள‌ ம‌ற்றொரு குழுவும், த‌னித்த‌னி உத‌விப் பொறியாள‌ர் த‌லைமையில் இய‌ங்கும். தின‌ந்தோறும் ஒவ்வொரு தொழிற்சாலை அல்ல‌து துணை மின் நிலைய‌ம் என‌ அட்ட‌வ‌ணை வைத்துக் கொண்டு மாவ‌ட்ட‌ம் முழுவ‌தும்,சுழ‌ற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருப்பார்க‌ள்.இரு குழுவுக்கும் த‌னித்த‌னி வாக‌ன‌ வ‌ச‌திக‌ளுண்டு.இதில் துணை மின் நிலைய‌ங்க‌ள் செல்லும் குழு,குடிப்ப‌த‌ற்கு த‌ண்ணீர் முத‌ல் கொண்டு அலுவ‌ல‌த்திலிருந்தே எடுத்துச் செல்ல‌ வேண்டும். அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ மேல் வ‌ருமான‌மும் கிடையாது.

தொழிற்சாலைக‌ளுக்கு செல்லும் குழு கையை வீசிக் கொண்டு செல்வார்க‌ள்.எந்த‌ ஊருக்குச் செல்கிறார்க‌ளோ,அந்த‌ ஊரின் பிர‌ப‌ல‌மான் உண‌வ‌க‌த்தில் ம‌திய‌ உண‌வு தொழிற்சாலையின் சார்பாக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு விடும்.உதார‌ண‌த்திற்கு ராஜபாளைய‌ம் கூரைக்க‌டை, அருப்புகோட்டை குறிஞ்சி,சிவகாசி பெல் ம‌ற்றும் ப‌ல‌.இது த‌விர‌ மேல் வ‌ருமான‌மும் உண்டு.  இந்த‌ குழுவின் உத‌விப் பொறியாள‌ர் குறைந்த‌து தின‌மும் ஆயிர‌ம் ரூபாய் கிம்ப‌ள‌ம் இல்லாமல் வீடு செல்ல மாட்டார் என்ப‌து செவி வ‌ழிச் செய்தி.

இந்நிலையில் இரு உத‌விப் பொறியாள‌ர்க‌ளுக்கும் ச‌ண்டை மூண்ட‌து ப‌ல‌ர் பார்க்க‌.எத்த‌னை நாளைக்கு நான் ம‌ட்டும் வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல‌??? நாற்காலியை மாற்றிக் கொள்ள‌லாம் என்று அவ‌ர் சொல்ல‌,நான் இந்த‌ ப‌த‌விக்கு வ‌ந்தே ஒரு வ‌ருட‌ம் தான் ஆகிற‌து முடியாது என‌ இவ‌ர் சொல்ல நில‌வ‌ர‌ம் க‌ல‌வ‌ர‌மான‌து.அன்றைய‌ தின‌ம் மாலையில் சமாதான‌ப் பேச்சுவார்த்தை செய‌ற்பொறியாள‌ர் முன்னிலையில் ந‌டைபெற்ற‌து.இரு உத‌விப் பொறியாள‌ர்க‌ளும் த‌த்த‌ம‌து ச‌ங்க‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.ஒருவ‌ர் நேர‌டியாக‌ உத‌விப் பொறியாள‌ர் ப‌ணிக்கு வ‌ந்த‌வ‌ர்,இவ‌ர் "ப‌ட்ட‌தாரிக‌ள்" ச‌ங்க‌த்தைச் சார்ந்த‌வ‌ர்.ம‌ற்றொருவ‌ர் ப‌த‌வி உய‌ர்வின் மூல‌ம் உத‌விப் பொறியாள‌ர் ப‌ணிக்கு வ‌ந்த‌வ‌ர்,இவ‌ர் "ப‌ட்ட‌ய‌தாரிக‌ள்" ச‌ங்க‌த்தைச் சார்ந்த‌வ‌ர்.பூட்டிய‌ அறைக்குள் ந‌ட‌ந்த‌ பேச்சுவார்த்தையின் முடிவில், இருவ‌ரும் இப்போதைக்கு அப்ப‌டியே தொட‌ர்வ‌தாக‌வும்,ஆறு மாத‌த்திற்கு பின்னர் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் நாற்காலிக‌ளை மாற்றிக் கொள்ளலாம் என‌வும் க‌டுமையான‌ விவாத‌த்திற்கு பின் முடிவாகியாக‌தாக‌ பின்ன‌ர் அறிந்தேன்.

இதில் இர‌ண்டு ச‌ங்க‌மும் ல‌ஞ்ச‌ம் வாங்க‌ கூடாது என்றெல்லாம் கூற‌வில்லை,ச‌ண்டை போட்டுக் கொள்ளாம‌ல் ச‌ரி ச‌ம‌மாக‌ பிரித்துக் கொள்ளுங்க‌ள் என்று தான் சொல்கின்ற‌ன‌!! அதுவும் ல‌ஞ்ச‌ காசில் வாங்கி குடுத்த‌ காபியையும்,போண்டாவையும் சாப்பிட்டு ஏப்ப‌ம் விட்ட‌ப‌டி.

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் ஸ்டாண்டில் உள்ள‌ ஆட்டோவைக் ம‌டிப்பாக்க‌த்திற்கு கூப்பிட்டால் 100 ரூபாய் சொல்வார்கள்,அதே நேர‌த்தில் சைதாப்பேட்டையிலிருந்து வ‌ரும் ஆட்டோவை நிறுத்திக் கேட்டால் 70 ரூபாய் தான் அதே இட‌த்திற்கு செல்ல‌.சில‌ நேர‌ங்க‌ளில் 20 ரூபாய் தான் 4 பேர் சேர்ந்து ப‌ய‌ணித்தால்.ரோட்டில் வேறு ஆட்டோவை நிறுத்தினால் ஸ்டாண்டிலிருந்து ஒருவ‌ர் ஓடி வ‌ந்து ஆட்டோவின் பின்புற‌ம் த‌ட்டுவார் "போ போ இங்க‌ நின்னு ஆள் ஏத்தாதே" என்று.ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ குறைந்த‌ ரேட்டுக்கு வ‌ராது,வ‌ருகிற‌ ம‌ற்ற‌ ஆட்டோக்க‌ளையும் வ‌ர‌ விட‌ மாட்டார்க‌ள்.இங்கு ம‌ட்டும‌ல்ல‌ சென்னையில் எல்லா ஏரியாக்க‌ளிலும் தின‌மும் காண‌க் கிடைக்கும் ஒரு நிக‌ழ்ச்சி.

இதே சென்னையில் மீட்ட‌ர் போட்டு ஆட்டோ ஓட்டுப‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ பாராவின் ப‌திவு.
ல‌க்கிலுக்கின் ப‌திவு.

பெரும்பாலான ஆட்டோ ஓட்டுன‌ர்க‌ள் சிஐடியு ச‌ங்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ள்.ஏழை எளிய‌ ம‌க்க‌ளின் ந‌ல்வாழ்வுக்குப் போராடும்? தோழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ச‌ங்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளை மாற்றலாமே? மீட்ட‌ர் போட்டு ஓட்டாவிட்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் நியாய‌மான‌ ரேட்டிலாவ‌து ஓட்ட‌ச் செய்யலாமே??ஒரு வேளை ஆட்டோவில் செல்ப‌வ‌ர்க‌ள் எல்லாரும் அம்பானிக‌ள் என்று நினைத்து விட்டார்க‌ளோ என்ன‌வோ?

எல்லாருமே தொழிலாள‌ர்க‌ளின் உரிமையைப் பாதுகாக்க‌ போராடுகிறோம்னு சொல்றாங்க‌!ச‌ரி அதிலாவ‌து ஒற்றுமையா இருக்காங்க‌ள‌ன்னு பார்த்தா அதுவும் கிடையாது.ஒவ்வொரு க‌ட்சிக்கும் த‌னித்த‌னியே தொழிற்ச‌ங்க‌ங்க‌ள்! நாளித‌ழின் ஒரு ப‌க்க‌த்தில் அர‌சை எதிர்த்து ஒரு ச‌ங்க‌ம் போராட்ட‌ அறிவிப்பு செய்தால்,அதே நாளித‌ழின் ம‌ற்றொரு ப‌க்க‌த்தில் எங்க‌ள் ச‌ங்க‌ம் போராட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ளாது என்று வேறொரு ச‌ங்க‌த்தின் அறிவிப்பு.

இதில் சில‌ ச‌ங்க‌ங்க‌ள் தேர்த‌ல் நெருக்க‌த்தில் க‌ழ‌க‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு தெரிவித்து வெளிப்ப‌டையாக‌ அறிக்கைக‌ள் வேறு விடுகின்ற‌ன‌.

ஜ‌ன‌நாயக‌ நாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் என்கிறீர்க‌ளா?? அதுவும் ச‌ரிதான்.!‌
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:48 AM
Labels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம்

4 comments:

Chitra சொன்னது…

அண்மையில் ந‌டைபெற்ற‌ முத‌ல்வ‌ரின் ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பு நூல்க‌ள் வெளியீட்டு விழாவில் பேசிய‌ சென்னைப் ப‌ல்க‌லைக்"க‌ழ‌க‌" துணைவேந்த‌ர் திருவாச‌க‌ம் "முத‌ல் அமைச்ச‌ர் க‌ருணாநிதியின் எழுத்துக்க‌ள்தான் நோப‌ல் ப‌ரிசு பெற‌ த‌குதியான‌வை" என்று அல்ல‌க்கைக‌ளே கூச்ச‌ப்ப‌டும் ப‌டி ஒரு ப‌னிக்க‌ட்டி ம‌லையை வைத்தார்.


...... அப்படி போடு அருவாளை!

17 ஜூன், 2010 அன்று 10:59 AM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதுதான் சார் ஜனநாயகம்

17 ஜூன், 2010 அன்று 5:51 PM
ஜோதிஜி சொன்னது…

உங்கள் விமர்சனம் படித்தேன்.

தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.

மனதில் உள்ளதை அப்படியே எழுதி உள்ளீர்கள்.

18 ஜூன், 2010 அன்று 5:24 AM
AkashSankar சொன்னது…

நல்ல பகிர்வு...

18 ஜூன், 2010 அன்று 5:51 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ▼  ஜூன் (6)
      • முன்னாள் காத‌லி
      • செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010
      • பால்யம்
      • வேலைவாய்ப்பு QA/QC Inspectors
      • அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்
      • ப‌ட்ச‌ணக் க‌டை
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio