skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 23 ஜூன், 2010

செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010

கோவையில் இன்று 23-06-2010 முத‌ல் 27-06-2010 வ‌ரை ந‌ட‌க்க‌ப் போகும் செம்மொழி மாநாட்டால் ஏற்ப‌டும் ப‌ய‌ன் என்ன‌?ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் தான் வீணாகிற‌து என்று சில‌ ப‌திவ‌ர்க‌ள் இடுகை போட்டுள்ளார்க‌ள். 27ந் தேதி மாநாடு முடிவ‌டைகிற‌து,28 ந் தேதி ந‌ட‌க்கப் போகும் அதிச‌ய‌ங்க‌ள் குறித்து அர‌சு வெளியிட‌ப் போகும் அறிக்கை இதோ......

செம்மொழி மாநாட்டால் விளைந்த‌ ந‌ன்மைக‌ள்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் ம‌ட்ட‌த்தை 149 அடியாக‌ உய‌ர்த்திக் கொள்ள‌ கேர‌ள‌ அர‌சு ச‌ம்ம‌த‌ம் தெரிவித்துள்ள‌து.அத‌ற்கான‌ க‌டிதத்தை கேர‌ள‌ நீர்ப்பாச‌ன‌ துறை அமைச்ச‌ர் பிரேம‌ச‌ந்திர‌ன் நேற்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து வ‌ழ‌ங்கினார்.

வ‌ருடா வ‌ருட‌ம் த‌மிழ‌க‌த்திற்கு சேர‌ வேண்டிய‌ த‌ண்ணீர் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌டும்,இனி எந்த‌ சூழ்நிலையிலும்,ம‌ழை பெய்தாலும்,பெய்யாவிட்டாலும் இதை மாற்ற‌ மாட்டோம் என‌
க‌ர்நாட‌க‌ அர‌சு அறிவித்துள்ளது.

த‌மிழ‌க‌த்தின் அனைத்து ந‌திக‌ளும் இணைக்க‌ப்ப‌ட்டு விட்டதால் இனி விவ‌சாயிக‌ள் முப்போக‌ம் விளைவிக்க‌லாம்.அத‌ற்கு தேவையான‌ உர‌ங்க‌ளை அழ‌கிரி வீட்டின் பின்புற‌ம் உள்ள‌ உர‌க்கிட‌ங்கிலிருந்து பெற்றுக் கொள்ள‌லாம்,மேலும் அத‌ற்காகும் போக்குவ‌ர‌தது செல‌வை அர‌சே ஏற்றுக் கொள்ளும்.

க‌ட‌லில் மீன் பிடிக்க‌ச் செல்லும் மீன‌வ‌ர்க‌ள்,இனி இல‌ங்கை க‌ட‌ல் எல்லைக்குள்ளும் மீன் பிடித்துக் கொள்ள‌லாம்,அதோடு ம‌ட்டுமில்லாம‌ல் பிடித்த‌ மீனோடு கொழும்பு சென்று,அங்கேயே ச‌மைத்து சாப்பிட்டு வ‌ர‌லாம்.அத‌ற்கு தேவையான‌ அரிசி,எண்ணெய்,ம‌சாலா சாம‌ன்க‌ளை த‌ந்து உத‌வ‌ இல‌ங்கை அர‌சுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌ட்டுள்ளது.

த‌மிழ்நாட்டில் ந‌டை பெற்று வ‌ந்த‌ மின் திட்ட‌ப் ப‌ணிக‌ள் அனைத்தும் நேற்றுட‌ன் முடிந்து விட்ட‌து,ஆக‌வே இனி த‌மிழ‌க‌த்தில் மின் வெட்டு என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் த‌னியார் க‌ல்லூரிக‌ள் கூட்ட‌மைப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் இன்று முத‌ல்வ‌ரை ச‌ந்தித்து இனிமேல் அனைத்து த‌னியார் ப‌ள்ளிக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் எல்லாருக்கும் இல்வ‌ச‌க் க‌ல்வி அளிக்க‌ப் போவ‌தாக‌ "துண்டைப் போட்டு தாண்டி" உறுதிய‌ளித்துள்ள‌ன‌ர்.இனி அமைச்ச‌ரின் பிள்ளைக‌ளும்,ஆண்டியின் பிள்ளைக‌ளும் அருக‌ருகே அம‌ர்ந்து க‌ல்வி ப‌யிலலாம்.

பொது விநியோக‌ க‌டைக‌ளில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ 1 ரூபாய் அரிசி,இன்று முத‌ல் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்டு "பாசும‌தி" அரிசி  வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.மேலும் ப‌ருப்பு,காய்க‌றிக‌ள்,என்ணெய்,ம‌சாலாப் பொருட்க‌ள் முத‌ல் தாளிக்க‌ தேவையான‌ க‌டுகு,க‌றிவேப்பிலை வ‌ரை அனைத்தும் 1 ரூபாய்க்கே வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர் ப‌ற்றாக்குறை அற‌வே நீக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து,அதோடு ஒரு ஆசிரிய‌ருக்கு ஒரு மாற்று ஆசிரிய‌ர் (ச‌ப்ஸ்டியூட்)ஒருவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.முத‌ன்மை ஆசிரிய‌ர் விடுப்பு எடுத்தால்,மாற்று ஆசிரியர் அவ‌ர் ப‌ணியை மேற்கொள்வார்.இத‌ன் மூல‌ம் ப‌ள்ளிக‌ளில் த‌ங்கு த‌டையில்லாம‌ல் வ‌குப்புக‌ள் ந‌டைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌ அனைவ‌ருக்கும் அர‌சு வேலை கிடைத்தாகி விட்ட‌து.இனி பள்ளிக‌ளில் ஒன்றாம் வ‌குப்பு சேரும் மாண‌வ‌ர்க‌ள்,பிற்கால‌த்தில் எந்த‌ அர‌சு அலுவ‌கல‌த்தில் வேலை செய்ய‌ விருப்ப‌மோ,அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் இப்போதே சென்று வேலை உறுதிக் க‌டித‌ம் பெற்றுக் கொள்ள‌லாம்.

முத‌ல்வ‌ர்,துணை முத‌ல்வ‌ர் ம‌ற்றும் அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ சாலைக‌ளில் போக்குவ‌ர‌த்து ஒரு போதும் நிறுத்த‌ப்ப‌டாது.அவ‌ர்க‌ள் இனி இர‌வு ப‌னிரெண்டு ம‌ணிக்கு மேல்,அதிகாலை ஆறு ம‌ணிக்குள் ம‌ட்டும் சாலையில் செல்வார்க‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதிக‌ளுக்கும் குடி த‌ண்ணீர் வ‌ழ‌ங்க‌ "அக்வாஃபீனா" நிறுவ‌ன‌த்துட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.குழாய்க‌ள் ப‌திக்கும் வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.இந்த‌ மாத‌ இறுதிக்குள் அனைவ‌ருக்கும் "அக்வாஃபீனா" த‌ண்ணீர் உறுதி.

ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கும் சிற‌ப்பான ம‌ருத்துவ‌ சேவை வ‌ழ‌ங்கும் நோக்கில்,அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுட‌னும் அர‌சு ஒப்பந்த‌ம் போட்டுள்ள‌து.இனி அனைவ‌ரும் அனைத்து த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் இல‌வ‌ச‌ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இருண்டு கிட‌க்கும் ப‌னை விவ‌சாயிக‌ளின் வாழ்வில் ஒளியேற்ற‌, க‌ள் இற‌க்க‌ அனும‌தி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ க‌ல‌ய‌ம்,அரிவாள் போன்ற‌வ‌ற்றை அருகிலுள்ள காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் பெற்றுக் கொள்ள‌லாம்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துச் சாலைக‌ளும் ந‌மீதாவின் க‌ன்ன‌ம் போல் வ‌ழ‌வ‌ழ‌ப்பாக‌ மாற்ற‌ப்ப‌டும், அத‌ற்கான‌ ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இவ்வாறு அந்த‌ செய்திக்குறிப்பில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
********************************************************************

இனி செம்மொழி மாநாடு ந‌ட‌த்திய‌தால் விளைந்த‌ "முக்கிய‌மான‌" ந‌ன்மைக‌ள்.

த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் பிர‌ச்சினைக‌ளும் தீர்க்க‌ப்ப‌ட்டு விட்டதாலும்,அர‌சிய‌ல் ந‌ட‌த்த‌ வேறு வ‌ழியில்லாத‌தாலும், தோன்றிய‌திலிருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்மை ம‌ட்டுமே செய்து வ‌ரும் திமுக‌,காங்கிர‌ஸ் த‌விர்த்த‌ அனைத்துக் க‌ட்சிக‌ளும் க‌லைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌.இதைக் கேள்விப்ப‌ட்ட‌ முத‌ல்வ‌ர்,"ம‌றப்போம் ம‌ன்னிப்போம்" என்ற‌ த‌மிழ‌ர் ப‌ண்பாட்டின் ப‌டி ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளை நேற்று அவ‌ர‌து இல்ல‌த்தில் ச‌ந்தித்தார்.இந்த‌ உண‌ர்ச்சிம‌யமான‌ ச‌ந்திப்பில் உட‌னிருந்த‌ அமைச்ச‌ர்க‌ள் துரைமுருக‌ன்,பொன்முடி,த‌யாநிதி மாற‌ன் ம‌ற்றும் ச‌சிக‌லா,வைகோ,ராம‌தாஸ், திருமா, விஜ‌ய‌காந்த்,பாண்டிய‌ன் ஆகியோர் சிந்திய‌ ஆன‌ந்த‌க் க‌ண்ணீரில் அந்த‌ ப‌குதியே வெள்ள‌க் காடான‌து.

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:35 PM
Labels: அர‌சிய‌ல், சினிமா, புனைவு, மொக்கை

18 comments:

நாடோடி சொன்னது…

ஆட்டோ வ‌ருதோ இல்லையோ.... உம்ம‌ போட்டோ மாநாட்டில் வ‌ரும்..

23 ஜூன், 2010 அன்று 4:30 PM
சீ போங்கள் சொன்னது…

அப்படீனா இப்போ கூட லஞ்சம் ஒழிக்கலிய? என்ன கொடுமை ?

நமீதா கன்னம் மாதிரி சாலைகள் இருந்தா, வேக தடைகளை என்னவென்று சொல்ல வேண்டும்? எங்க ஊருக்கு தமன்னா மாதிரி சாலைகள் இருந்த போதும்.

கோவை போய் பாருங்க. கலைஞர் எல்லாருக்கும் அல்வா குடுக்குறாராம்.

23 ஜூன், 2010 அன்று 4:54 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@நாடோடி ஏனிந்த‌ கொல‌வெறிப் பாச‌ம்???

@ச்சீப் போங்க‌ள்
//கோவை போய் பாருங்க. கலைஞர் எல்லாருக்கும் அல்வா குடுக்குறாராம்.//
அது தெரிந்த‌து தானே

மைன‌ஸ் போட்ட‌ அந்த‌ ப‌ர‌மாத்வுக்காக‌

த‌மிழின‌த்த‌லைவ‌ர்
முத்த‌மிழ‌றிஞ‌ர்
செம்மொழிச் சோழ‌ர்
டாக்ட‌ர் ம‌ன்னிக்க‌வும் ம‌ருத்துவ‌ர் க‌லைஞ‌ர் க‌ருணாநிதி வாழ்க‌!!

போதுமாப்பா???

23 ஜூன், 2010 அன்று 5:03 PM
vasu balaji சொன்னது…

இம்புட்டு இம்புட்டு இம்புட்டு ஆவாது:))))

23 ஜூன், 2010 அன்று 7:43 PM
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

இஷ்.................

முடியல

23 ஜூன், 2010 அன்று 9:49 PM
Chitra சொன்னது…

செம்மொழி மாநாட்டோடு ந‌ட‌ந்த த‌மிழ் இணைய‌த்த‌ள‌ மாநாட்டின் மூல‌ம் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்ப‌ க‌ற்றுக் கொண்ட‌ முத‌ல்வ‌ர், இனிமேல் யாருக்கும் க‌டித‌ம் எழுத‌ப் போவ‌தில்லை என‌ ச‌ப‌த‌ம் எடுத்துள்ளார்.


..... ha,ha,ha,ha,ha,ha....

24 ஜூன், 2010 அன்று 1:07 AM
Ajith Bsc MBA சொன்னது…

நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் என்றும் நடக்க போவது எல்லை என்பது மட்டும் உறுதி

24 ஜூன், 2010 அன்று 1:30 AM
அத்திரி சொன்னது…

வூட்டுக்கு ஆட்டோ வராம பாத்துக்குங்க...............

கலக்கல்

24 ஜூன், 2010 அன்று 6:54 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள் சார்
ச‌ரிங்க‌ சார்

ந‌ன்றி உல‌வு.காம்
ச‌த்திய‌மா என‌க்கும் முடியல‌

ந‌ன்றி சித்ராக்கா

ந‌ன்றி அஜித்

ந‌ன்றி அத்திரி
ந‌ம்ம‌கிட்ட‌ கிரேன் இருக்கு த‌ல‌ வ‌ர‌ட்டும் பார்த்துக்க‌லாம்

24 ஜூன், 2010 அன்று 7:06 AM
uvaraj சொன்னது…

இது நம் மொழி , இதை நாம் தான் வளர்க வேண்டும். உம்மால் முடியாதை கலைஞர் செய்கிறார் . அதை வாழ்த்துவதை விட்டு அசிங்க படுத்துவது உமக்கு தான் கேவலம். நீங்கள் சொல்கிற பிரச்சனிகள் எல்லாம் ஒரு முதல்வரால் தீர்க்க முடியாது . தீர்க்க முயற்சி தான் எடுக்க முடியும் . அதை அரசு செய்து கொண்டு தான் இருக்கிறது . அது போல ஒரு மொழி வளர என்ன செய்ய வேண்டுமோ அதை தான் அரசு செய்கிறது. இதை பழித்து பேசும் நீர் ஓர் தற்குறி அன்றி வு ஏதும் இல்லை, இதற்கு ஜால்ராக்கள் வேறு. இது தமிழுக்கு , தமிழருக்கு தான் அசிங்கம். பாவேந்தர் தாயை பழித்தாலும் தமிழை பழித்தவனை விடேன் என்றார், அந்த பூமியில் தான் நாமும் பிருதொமா என்று சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.

24 ஜூன், 2010 அன்று 9:42 AM
Unknown சொன்னது…

யாருயா அறிக்கைய திருடுனது...?

24 ஜூன், 2010 அன்று 10:08 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

அன்பின் uvaraj

கருணாநிதி தான் செய்த‌ வ‌ர‌லாற்றுப் பிழைக‌ளை ம‌ற‌க்க‌டிக்க‌வே இந்த‌ செம்மொழி மாநாடு ந‌ட‌த்துகிறார்.அதில் அவர் வெற்றியும் பெற்று விட்டார் என்ப‌து உங்க‌ள் பின்னூட்ட‌ம் ப‌டிக்கும் போது தெரிகிற‌து? துவ‌க்க விழாவில், எண்ண‌ற்ற‌ த‌மிழ‌றிஞ‌ர்க‌ள் த‌மிழுக்குச் செய்த‌ தொண்டுக‌ளைப் ப‌ற்றி வாய் கிழிய‌ பேசிய‌ அவ‌ருக்கு "செம்மொழி விருது" உருவாக்கும் நேர‌த்தில் த‌ன் பெய‌ர் ம‌ட்டும் நினைவுக்கு வ‌ந்த‌து ஆச்ச‌ரிய‌மே!எளவு வீடாயிருந்தாலும்,க‌ல்யாண‌ வீடாயிருந்தாலும் மாலை த‌ன‌க்கு ம‌ட்டும் தான் என்ப‌தில் உறுதியாய் இருப்ப‌வ‌ர் அவ‌ர்.முத்த‌மிழ‌றிஞ‌ர் சென்று சொல்லிக் கொண்டு திரியும் அவ‌ருக்கு,த‌ன் த‌லைமையில் ஒரு த‌மிழ் மாநாடு கூட‌ ந‌ட‌க்க‌வில்லை என்று வ‌ர‌லாறு ப‌திவு செய்து விட‌க் கூடாதே என்ப‌த‌ற்காக‌த்தான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ இந்த‌ மாநாடு.


கோடிகளைக் கொட்டி கோவையில் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் நிலையில், இதற்கு முன்னால் தமிழுக்காகச் செய்யப்பட்ட காரியங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்று யோசிக்கலாமே!


நாளிதழ்களின் ஒருநாள் தலைப்புச்செய்தி யாக மட்டுமே முடிந்துபோய் கேட்பாரற்றுக் கிடக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இதற்கு முதல் உதாரணம்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு கோலாகல மாக நடத்தி முடிக்கப்பட்டதும் அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரை யில் இப்படி ஒரு சங்கம் உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். இடமும் ஒதுக்கினார். அதன் பிறகு அவர் கண்டுகொள்ளவில்லை. அவரால் தொடங்கப்பட்டது என்பதால், அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் கவலைப்படவில்லை. எம்.ஜி.ஆரின் அறிவிப் பைச் செய்யது முடிக்க வேண்டிய கடமை அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது என்ற எண்ணம் கூட இல்லாமல், ஜெயலலிதாவும் அதை மறந்துபோனார். இன்று அந்த இடத்தில் கழிவு நீர் ஓடுகிறது.

24 ஜூன், 2010 அன்று 10:40 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

இது தொடர்பாக 'தமிழ்த் தாங்கி' அமைப்பைவைத்துப் போராடி வரும் திரவிய பாண்டியனைக் கேட்டபோது, "1981-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்க 14.15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். தமிழரின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழரின் அனைத்துத்திறமை களையும் வெளிப்படுத்தும் ஒரு களமாக, கருவூலப் பெட்ட கமாக இந்த இடம் அமைய வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், 2002-ம் ஆண்டு வரை யாருமே எதையும் கிள்ளிக்கூடப் போடவில்லை. அன்றைய அ.தி.மு.க. ஆட்சி இந்த இடத்தை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் பெயரில் பதிவு செய்தது. நாங்களும் 'சரி,வேலை துவங்கி விட்டது' என்று மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அதன் பின்பும் ஒன்றும் நடக்கவில்லை.

2007-ம் ஆண்டில் தொடர்ச்சியாக மதுரையில் போராட் டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். அதன் பிறகு, தமிழக அரசு இதற்கென ஓர் அதிகாரிகள் குழுவைஅமைத்து ஆய்வு நடத்தியது. தொடர்ந்து அடிக்கல் விழாவை நற்றமிழ் விழா என்ற பெயரில் நடத்த 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. பிறகும் எதுவும் நடக்கவில்லை. திடீரென 2008-09 ஆண்டுவாக்கில் மாநகராட்சி சார்பில் அந்த இடத்தின் குறுக்கே கழிவு நீர் வாய்க்காலைக் கட்டி கழிவு நீரை உள்ளே விட்டுவிட்டார்கள். கடந்த ஆண்டு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. நிதி அமைச்சரான பேராசிரியர் அன்பழகன், 'நடப்பு ஆண்டு பட்ஜெட்டிலேயே உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பதற்காக 14 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துவிட்டோம்' என்று பதில் அளித்தார். தமிழக அரசைப் பாராட்டி மதுரைமுழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். பிறகு, மதுரையில் அதிகாரிகள் இதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்கள். அதோடு சரி. இன்று அந்த இடம் சீரழிந்துகிடக்கிறது" என்கிறார்.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் அன்பழகன், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரை 'தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம்' என்று மாற்றி, தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் காட்சியகம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அமைக்கப்பட்ட பிறகுதான் அதை நம்ப முடியும்

24 ஜூன், 2010 அன்று 10:40 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

இப்படி, 30 ஆண்டுகளாக சுமார் 14 ஏக்கர் நிலத்தைத் தமிழின் பெயரைச் சொல்லி தரிசாகப் போட்டிருந்ததுதான் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூன்று முதலமைச்சர்களால் தமிழ் அடைந்த பயன்!

அடுத்து நம் நினைவுக்கு வருகிறது...சென்னை யில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இது இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்திய பணத்தில் மீதி இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை முன்தொகையாகவைத்து, முதல்வர் கருணாநிதி 1971-ல் தொடங்கினார். இன்று சென்னை தரமணியில் இதற்கான கட்டடம் இருக் கிறது. ஆனால், எப்போது இடிந்து விழுமோ என்ற பரிதாபமான நிலையில் இருக்கிறது. தமிழ்த் துறை தொடர்பான எத்தனையோ அரிய புத்தகங்கள் கொண்ட நூலகம் அங்கு இருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. அவற்றை மழைக் காலத்தில் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறது. சரியான இடவசதி இல்லாததால் புத்த கங்களை மேலே மேலே அடுக்கி எதையும் எடுக்க முடியாத அளவுக்கு வைத்திருக்கிறார்கள். புத்தகங் களை டிஜிட்டல் ஆக்கும் வேலையும் பாதியோடு நின்றுவிட்டது. நூலகம் அமைப்பதற்காக சிவந்தி ஆதித்தன் கட்டிக் கொடுத்த இடத்தையும் சேமிப்புக் கிடங்காக மாற்றிவிட்டார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து... இதனால் ஆராய்ச்சிசெய்ய வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து, அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. 'நிறுவ னத்தின் உள்கட்டமைப்பு வேலைகளுக்காக மூன்று கோடி ரூபாய்க்கு திட்டச் செலவுக் கணக்கை அரசிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இன்னும் அனுமதி வரவில்லை' என்று சொல்லப்படுகிறது.

24 ஜூன், 2010 அன்று 10:41 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

தலைநகரத்தில் இயங்கும் நிறுவனம் இப்படி இருக்கிறதென்றால்... தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நிலை?

தஞ்சை - திருச்சி சாலையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்தப் பல்கலைக் கழகம். பல துறைகளிலும் கள ஆய்வு வழியாக ஆராய்ச்சி நடத்துபவர்கள் மட்டுமே இங்கு நுழைய முடியும். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளைப் பாதுகாப்பது, மொழிபெயர்ப்பது, கல்வெட்டுக்களை ஆய்வு செய்து தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது, உலகத் தரம் வாய்ந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதுபோன்ற நோக்கங்களை இதன் அடிப்படையாக அறிவிக்கப்பட்டது. முனைவர், முது முனைவர் ஆய்வு மட்டுமே இருந்தது.ஆனால், இன்று அதையே பி.ஏ., எம்.ஏ., படிக்கும் கல்லூரி மாதிரி ஆக்கிவிட்டார்கள். பல்கலைக்கழகத்துக்குத் தேவை யான அளவுக்கு நிதி ஒதுக்கப்படாததால், கள ஆய்வு கள் குறைந்துவிட்டன. ஆய்வாளர்களின் ஆய்வேடுகளும் அச்சுக்கு வந்து வெளியிடும் வேலையிலும் சுணக்கம்.

"டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள்கூட இங்கு நடக் கக் கூடாது. அந்தப் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் கூடி தமிழ் ஆய்வுகளைத் தொடர வேண்டிய மைய மாக அது அமைய வேண்டும் என்றுதான் அறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டார். ஆனால், அது காலப்போக்கில் குறைந்து, பட்டம் வாங்கும் இடமாக மாறிப்போனது. ஒரு புத்தகம்கூட எழுதாத ஒருவர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி மூன்று ஆண்டு கள் முடிந்து போகும் நிலை, அந்தப் பல்கலைக்கழகத்தின் தகுதி எப்படித் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கான உதாரணம்" என்று தமிழ் அறிஞர்கள் மத்தியில் நிலவும் கவலையாக இருக்கிறது.

24 ஜூன், 2010 அன்று 10:41 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ஆய்வு நிறுவனங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் குறித்து யோசித் தால்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் 7,000 தமிழாசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலி யாக இருக்கின்றன. ஆனால், தமிழ் படித்துவிட்டு 25 ஆயிரம் பேருக்கு மேல் முறையான வேலை கிடைக்காமல், தெருவில் அலைகிறார்கள். தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைவராக இருக்கும் ஆறுமுகம் சொல்லும் புள்ளிவிவரங்கள் கவலையை அதிகப் படுத்துகின்றன. "தமிழ்நாட்டில் 772 மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ஒன்பது ஆண்டு களாக இல்லை. இப்போது 96 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி இருக்கி றார்கள். அந்தப் பள்ளிகளுக்கும் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. உயர் நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை, சுமார் 200 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை. நடுநிலைப் பள்ளிகளின் நிலைமை இன்னமும் மோசம். மொத்தம் உள்ள 7,800 நடுநிலைப் பள்ளிகளில் 600 பள்ளிகளுக்குத்தான் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். செகண்டரி கிரேடு டீச்சர்களைவைத்து தமிழ் சொல்லித் தருகிறார்கள்.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் படி ஆங்கிலம், கணக்கு, அறிவியல் ஆகியவற்றுக்கு அந்தப் பாடத்தைப் படித்தவர்களை மட்டும்தான் ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்று இருக்கும்போது, தமிழுக்கு மட்டும் செகண்டரி கிரேடு ஆசிரியர்கள் நடத்தலாம் என்பது என்ன நியாயம்?" என்று கேட்கும் ஆறுமுகம்,

"முறையான தமிழ் படித்த தமிழ் ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படும் போதுதான் மாணவர்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சும்மா ஒப்புக்கு வாசிக்கும் ஆசிரியர்கள் தமிழின் சுவையை உணர்த்த முடியாது. தமிழ் ஆர்வம், கற்பனைத் திறன், தமிழில் எழுதும் ஆற்றல் மாணவர்களுக்குக் குறைந்துபோகக் காரணமே பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால்தான்" என்கிறார்.

வேலை இல்லாத பட்டதாரித் தமிழ் ஆசிரியர்கள் தங்களுக்கென ஒரு சங்கமே வைத்திருக்கும் சோகமும் இந்த நாட்டில்தான் நடக்கிறது. சென்னையில் இதுவரை ஏழு தடவை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். தஞ்சைப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். முதல்வரை ஒரு தடவை சந்தித்தார்கள். துணை முதல்வரை மூன்று முறை சந்தித்திருக்கிறார்கள். அதிகாரிகளுடனான சந்திப்புக்கு அளவே இல்லை. "புலவர் பட்டயம் படித்தோம். அதை ஒரு பட்டமாகக்கூட அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தாய் மொழி வாழவைக்கும் என்று நம்பிப் படித்த நாங்கள் தெருவில் நிற்கிறோம்" என்று சொல்கிறார் இந்த அமைப்பின் தலைவர் ராமு.

அவருக்கு என்ன வயது இருக்கும் என்று கேட்கவில்லை. "உங்க காலை பிடிச்சு கெஞ்சிக் கேட்கிறேன்யா" என்று அவர் கதறியது தமிழ்த் தாயின் கதறலாகவே இருந்தது. தமிழ் படித்துவிட்டு ஒரு கூட்டம் வேலை இல் லாமல் அநாதையாக அலைய... முறையான தமிழைப் படிக்க முடியாமல் இளம் மாணவர்கள் திணற.... அதுபற்றிய கவலையே இல்லாமல் 'தமிழ் வாழ்க' முழக்கம் மட்டும் கேட்கிறது!‍

விக‌ட‌ன்

24 ஜூன், 2010 அன்று 10:42 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில்



உள‌வுத்துறை ம‌க்கா

24 ஜூன், 2010 அன்று 10:43 AM
AkashSankar சொன்னது…

ஒரு நிமிஷம் ஏமந்துட்டேன்...ஆனா நல்லா இருக்குங்க...

26 ஜூன், 2010 அன்று 3:48 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ▼  ஜூன் (6)
      • முன்னாள் காத‌லி
      • செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010
      • பால்யம்
      • வேலைவாய்ப்பு QA/QC Inspectors
      • அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்
      • ப‌ட்ச‌ணக் க‌டை
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio