skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 19 ஏப்ரல், 2010

திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........

அருள்மிகு ஸ்ரி காளிய‌ம்ம‌ன் கோயில் பொங்க‌ல் திருவிழாவை முன்னிட்டு,இன்று இர‌ண்டாவது நாள் நிக‌ழ்ச்சியாக‌,திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும் டிவி புக‌ழ் செவ‌ன் ஸ்டார் குழுவின‌ரின் ஆட‌லும் பாட‌லும் நிக‌ழ்ச்சி இர‌வு ச‌ரியாக‌ 9 ம‌ணிய‌ள‌வில் கோயில் முன்பாக‌ அமைந்திருக்கும் திட‌லில் ந‌டைபெறும் என்ப‌தை தெரிவித்துக் கொள்கிறோம்.ப‌க்த‌ கோடிக‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு நிக‌ழ்ச்சியை சிற‌ப்பிக்கும் ப‌டி விழாக் க‌மிட்டியின் சார்பாக‌ கேட்டுக் கொள்கிறோம்.

அடிக்க‌டி க‌ம்பெனி விள‌ம்ப‌ர‌மும் ஒலிக்கும்.உங்க‌ள் இல்ல‌ங்க‌ளில் ந‌டைபெறும் திரும‌ண‌ விழா,புதும‌னை புகு விழா,காத‌ணி விழா ம‌ற்றும் புப்புனித‌ நீராட்டு விழா(?) போன்ற‌ விழாக்க‌ளுக்கு குறைந்த செல‌வில் சிற‌ப்பாக‌ ஒலி ஒளி அமைத்திட‌ அணுகுவீர் ராசாத்தி ச‌வுண்ட் ச‌ர்வீஸ்
ராசாத்தி ச‌வுண்ட் ச‌ர்வீஸ் ராசாத்தி ச‌வுண்ட் ச‌ர்வீஸ் (எக்கோ).மைக் செட் அல‌றிக் கொண்டே இருக்கும்

ஊரில் வைகாசி மாத‌ம் காளிய‌ம்ம‌ன் கோயில்,மாரிய‌ம்ம‌ன் கோயில்,காச்ச‌காரிய‌ம்ம‌ன் கோயில் என எல்லா அம்ம‌ன் கோயில்க‌ளுக்கும் திருவிழாக் கால‌ம்.

செவ்வாய்க்கிழ‌மை ஆர‌ம்பிக்கும் திருவிழா ஒரு வார‌ம் ந‌டை பெறும்.அத‌ற்கு முந்தின‌ செவ்வாய்க்கிழ‌மை கோயிலில் கொடியேற்றி காப்பு க‌ட்டுவார்க‌ள்.காப்பு க‌ட்டிய‌ பின்பு யாரும் வெளியூர் சென்றால் த‌ங்க‌ மாட்டார்க‌ள் எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ஊருக்கு வ‌ந்து விடுவார்க‌ள்.இது இன்று வ‌ரை தொட‌ர்கிற‌து.

அன்று ம‌திய‌மே மேள‌க்கார‌ர்க‌ள் வ‌ந்துடுவாங்க‌.6 ம‌ணி வாக்கில் ஆர‌ம்பிக்கும் சாமிக்கு அருளேற்றும் வைப‌வ‌ம்,ஊரில் சாமி கொண்டாடி என‌ சில‌ர் இருப்பாங்க‌.ப‌ர‌ம்ப‌ரையாக‌ அவ‌ர்க‌ள் தான் ஆடுவாங்க‌.பூசாரி எல்லா சாமி கொண்டாடிக‌ளுக்கும் திறநீறு பூசுவாரு.கொஞ்ச‌ நேர‌ம் விரைப்பாக‌ நிற்பார்க‌ள்,சாமியை கும்பிட்ட‌ ப‌டி.மேள‌த்துக்கு த‌க்க‌வாறு மெல்ல‌ ஆர‌ம்பிக்கும் ஆட்ட‌ம் சிறிது நேர‌த்தில் சூடு பிடித்து விடும்.காளிய‌ம்ம‌ன் சாமி ஆடுப‌வர் கையில் தீச்ச‌ட்டியும்,க‌ருப்ப‌சாமி ஆடுப‌வர் கையில் ஈட்டி க‌ம்பும் (க‌ம்பு முழுவ‌தும் சின்ன‌ ம‌ணிக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்)கொடுக்க‌ப் ப‌டும்.

பின் இர‌வு 11 ம‌ணிவாக்கில் வ‌ட‌க்க‌த்தி அம்ம‌னை கும்பிட‌ போவாங்க‌.ஊருக்கு வெளியே ஒரு அரை கிலோ மீட்ட‌ர் தாண்டி ஒரு வேப்ப‌ ம‌ர‌த்தின் அடியில் ஒரு சாமி சிலை இருக்கும்.அது தான் வ‌ட‌க்க‌த்தி அம்ம‌ன்.மேள‌தாள‌த்தோடு ஊர்வ‌ல‌மாக‌ சென்று வ‌ட‌க்க‌த்தி அம்ம‌னை கும்பிட்டு விட்டு தெருவில் (தெரு என்றால் ஒரு குறிப்பிட்ட‌ சமூக‌ம் என்று கொள்க‌) உள்ள எல்லா வீட்டுக்கும் ஊர்வ‌ல‌ம் செல்லும்.

எல்லா வீட்டிலும் சாமிக‌ளை குளிப்பாட்ட‌ குட‌த்தில் ம‌ஞ்ச‌ள் க‌ரைத்த‌ நீரும்,குடிப்ப‌த‌ற்கு பான‌கம் (புளித்த‌ண்ணிரில் க‌ருப்ப‌ட்டி சேர்ந்தது)வாச‌லில் வைத்து காத்திருப்பார்க‌ள்.சாமி வ‌ந்த‌வுட‌ன் குட‌த்து நீரை அப்ப‌டியே த‌லையில் ஊற்றி,பான‌கம் குடுத்து காலில் விழுந்து ஆசிர்வாத‌ம் வாங்கி கொள்வார்க‌ள்.சாமிக‌ள் கொஞ்ச‌ம் தான் பான‌க‌ம் குடிக்கும் மீதி எல்லாம் கூட‌ வருகிற‌ ஆசாமிக‌ளுக்கு.இப்ப‌டியே சாமியாட்ட‌ம் முடிய‌ காலை 4 ம‌ணி ஆயிரும்.

இதே இர‌வு சாமி ஊர்வ‌ல‌ம் சென்ற‌தும் கோயில் முன் முளைப்பாரி ச‌ட்டிக‌ளை வைத்து அதைச் சுற்றி வ‌ட்ட‌மாக‌ பெண்க‌ள் ந‌க‌ர்ந்து கொண்டே கும்மி (இது ப‌திவுல‌க‌ கும்மி அல்ல‌)அடிப்பார்க‌ள்.சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ட‌த்தில் கூட‌ வ‌ருமே அது.

புத‌ன் கிழ‌மை காலையில் கோயிலுக்கு முன்பு வரிசையாக‌ க‌ல் அடுப்பு வைத்து பொங்க‌ல் வைப்பார்க‌ள்,மொத்த‌மாக‌ ஒரே இட‌த்தில் அம்ப‌து அறுப‌து அடுப்புக‌ளில்.பொங்க‌ல் வைத்து முடிந்த‌ பின் மேள‌க்கார‌ர்க‌ள் ஊர்வ‌லமாக‌ சென்று மாவிள‌க்கு நேர்ந்த‌ பெண்க‌ளை அழைத்து வ‌ருவார்க‌ள்.மாவிள‌க்கு என்ப‌து அரிசி மாவில் க‌ருப்ப‌ட்டி பாகு சேர்த்து பிசைந்து ந‌டுவில் சிறிய‌ ப‌ள்ளம் உண்டாக்கி அதில் ந‌ல்லெண்ணெய் விட்டு திரி போட்டு விள‌க்கெரிய‌ விடுவார்க‌ள்.

பொங்க‌ல் பானை,மாவிள‌க்கு எல்லாவ‌ற்றையும் சாமிக்கு ப‌டைத்து பூஜை எல்லாம் முடிந்த‌ பின் அடுத்து ஆர‌ம்பிக்கும் கெடா வெட்டு வைப‌வ‌ம்.கோயிலுக்கு நேர்ந்து விட்ட‌ ஆடு,சேவ‌ல் எல்லாம் வ‌ரிசை க‌ட்டி நிற்கும்.கெடா வெட்டுப‌வர் சாமி கும்பிட்டு கையில் ப‌ள‌ ப‌ள‌ வென்ற‌ அரிவாளோடு த‌யாராக‌ இருப்பார்.

ப‌லி ஆடை சாமியை நோக்கி நிற்க‌ வைத்து ஒரு குட‌ம் ம‌ஞ்ச‌ த‌ண்ணீர் ஊற்ற‌ப்ப‌டும்.மாலை போட்டு பூசாரியால் திறுநீறு பூச‌ப்ப‌டும்.ஆடு ப‌க்க‌வாட்டில் திரும்பாம‌ல் இருப்ப‌த‌ற்காக‌,ஆட்டின் உரிமையாள‌ர் ஆட்டுக்கு முன்பாக‌ சிறிது தூர‌த்தில் நின்ற‌ ப‌டி கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு ஆட்டுக்கு காட்டிக் கொண்டிருப்பார்.ஆடு அந்த‌ ப‌க்க‌ம் இந்த‌ ப‌க்க‌ம் திரும்பி விட்டால் வெட்டு ச‌ரியாக‌ விழாது.ஆடு வேப்பிலையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரே போடு "ச‌த‌க்" த‌லை த‌னியாக‌ கீழே விழும்.உட‌ம்பு கொஞ்ச‌ நேர‌ம் துள்ளி அட‌ங்கும்.

சேவ‌ல் அறுப்ப‌த‌ற்கு த‌னியாக‌ சின்ன‌ சூரிக்க‌த்தி வ‌ச்சுருப்பாரு.சேவ‌லை உரிமையாள‌ர் பிடித்துக்கொள்ள க‌ர‌ க‌ர‌னு த‌லைய‌ அறுத்து எடுத்துட்டு த‌லையில்லாத‌ சேவ‌லை த‌ரையில் எறிஞ்சுடுவாரு.அது கொஞ்ச‌ நேர‌ம் றெக்க‌கைக‌ளை அடிச்சு த‌ரையில‌ சுத்தி சுத்தி வ‌ரும்,பின் அட‌ங்கிடும்.

அப்புற‌ம் அந்த‌ ஆடு,சேவ‌வெல்லாம் ம‌த்தியான‌ சாப்பாட்டுக்கு குழ‌ம்பாக‌வும்,வ‌ருவ‌லாக‌வும் ஆயிரும்.

ம‌ஞ்ச‌ள் நீராட்டு, பானை உடைத்த‌ல், க‌ர‌காட்ட‌ம், வில்லிசைக்க‌ச்சேரி, ஆட‌லும் பாட‌லும் எல்லாம் அடுத்த‌ ப‌திவில்.


டிஸ்கி.எங்க‌ ஊரில் அம்ம‌ன் கோயில் திருவிழா ந‌டைபெறும் விதத்தை ப‌கிர்ந்துள்ளேன்.ஊருக்கு ஊர் மாறுப‌ட‌லாம்.




Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:41 AM
Labels: அனுப‌வ‌ம், சமூக‌ம், சொந்த‌ ஊர்

16 comments:

vasu balaji சொன்னது…

திருவிழா கண்ணு முன்ன வருது. அந்த கடைசி டெரர்தான் கண்ணகட்டுது அவ்வ்வ்:((

19 ஏப்ரல், 2010 அன்று 9:55 AM
கண்ணா.. சொன்னது…

ரெக்கார்ட் டான்ஸை விட்டுடியே மக்கா...:)

19 ஏப்ரல், 2010 அன்று 11:58 AM
பெயரில்லா சொன்னது…

எந்த ஏரியா?

19 ஏப்ரல், 2010 அன்று 12:20 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

வ‌ருகைக்கு ந‌ன்றி வானம்பாடிகள் சார்
//திருவிழா கண்ணு முன்ன வருது. அந்த கடைசி டெரர்தான் கண்ணகட்டுது அவ்வ்வ்:((//

உண்மைய‌ சொன்னேன்

19 ஏப்ரல், 2010 அன்று 1:36 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி கண்ணா
//ரெக்கார்ட் டான்ஸை விட்டுடியே மக்கா...:)//

அடுத்த‌ ப‌திவுல‌ ம‌க்கா

19 ஏப்ரல், 2010 அன்று 1:37 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி மயில்
//எந்த ஏரியா?//

கோவில்ப‌ட்டி ப‌க்க‌ம்

19 ஏப்ரல், 2010 அன்று 1:38 PM
எல் கே சொன்னது…

oru sila palakam maruthu

19 ஏப்ரல், 2010 அன்று 2:13 PM
பெயரில்லா சொன்னது…

super.

19 ஏப்ரல், 2010 அன்று 2:38 PM
பனித்துளி சங்கர் சொன்னது…

உங்க ஏரியா உள்ள வரலாமா ??????

19 ஏப்ரல், 2010 அன்று 4:51 PM
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

திருவிழா நல்லா இருக்கு!!!
நேர்ல பாத்த மாதிரி இருக்குன்னு சொல்ல
வந்தேன் :))

19 ஏப்ரல், 2010 அன்று 6:53 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

LK
//oru sila palakam maruthu//

ஊருக்கு ஊர் மாறும் ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 7:03 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

கடையம் ஆனந்த்
/super/

ந‌ன்றி ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 7:04 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
//உங்க ஏரியா உள்ள
வரலாமா ??????//

த‌ராளாமாக ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 7:05 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//சைவகொத்துப்பரோட்டா
திருவிழா நல்லா இருக்கு!!!
நேர்ல பாத்த மாதிரி இருக்குன்னு சொல்ல
வந்தேன் :))//

ந‌ன்றி ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 7:05 AM
Vediyappan M சொன்னது…

நல்ல பதிவு. கிட்டதட்ட எல்லாவூர்லயும் அம்மன் திருவிழா நீங்க சொன்னமாதிரிதான் நடக்குது. இந்த கும்மியடிக்கிறது மட்டும் குறைஞ்சுபோச்சோன்னு தோனுது. மற்றபடி திருவிழாவ நேர்ல பார்த்த திருப்தி..

22 ஏப்ரல், 2010 அன்று 4:24 PM
ஜோதிஜி சொன்னது…

நீங்கள் திருப்பூரா?

18 ஜூன், 2010 அன்று 5:37 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio