skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குறிஞ்சிப்பூ



சூர்ய‌வ‌ம்ச‌ம் ப‌ட‌த்தில் ச‌ர‌த் ‌ "நான் வேணா ப‌டிக்காத முட்டாளா இருந்துட்டுப் போறேன் நீ ஏன் ப‌டிச்சும் முட்டாளா இருக்க‌னும்" ட‌யலாக் சொல்லி தேவ‌யானியை ஐஏஸ் ப‌டிக்க‌ அனுப்புவார்.அவ‌ங்க‌ளும் ச‌ம‌ர்த்தா போய் ப‌டிச்சு பாஸ் ப‌ண்ணி ஒரு பாட்டு முடிய‌ர‌க்குள்ள‌ க‌லெக்ட‌ர் ஆகி அவ‌ங்க‌ ஊருக்கே வ‌ந்துருவாங்க‌.

நிஜ‌த்தில் எத்த‌னை பேருக்கு ந‌ட‌க்கும்?

ஒரு பெண் க‌ண‌வ‌னின் உற்சாக‌த்தாலும்,உறுதுணையா‌லும் டெபுடி க‌லெக்ட‌ராக‌ ஜெயித்த‌ க‌தை இந்த‌ வார‌ குமுதத்தில் வ‌ந்துள்ள‌து.

அதிகம் படிக்காத கணவன், வசதி வாய்ப்பும் இல்லை.... கலெக்டர் ஆகும் கனவை மறந்து இனி பிள்ளை குட்டிகளை பெற்று கொண்டு வாய்க்கும், வயிற்றுக்கும் கஷ்டப்படும் ஏழ்மை தாயாகவே காலத்தை தள்ள வேண்டியதாகிவிடும். என்ற பயம் தான் திருமணமான புதிதில் துர்காவின் அடிமனதில். கூடவே ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும், தன்னம்பிக்கையும் இருந்தது. அது தான் இன்று அவரை ஒரு டெபுடி கலெக்டராக உருவாக்கியிருக்கிறது.

கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமம் தான் என் அப்பாவோட பூர்வீகம். ஆனா, நான் பிறந்தவுடனேயே எங்க குடும்பத்துடன் மதுரைக்கு நகைப்பட்டறை வேலைக்காக அப்பாவுடன் வந்துட்டோம்.எனக்கு திருணம் முடிந்த ஊரு கரூர் அரவக்குறிச்சி. பிளஸ்டூ படிக்கிற போதே கல்யாணம் பேசிட்டாங்க. அப்புறம், கெஞ்சி, கதறி கேட்டுட்டு டிகிரி முடிச்சேன்.நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. ரெண்டு தம்பிங்க. ரெண்டு பேருமே எய்த்துக்கு மேல படிக்க முடியல. கல்யாணம் வரைக்கும் சும்மா படிக்கட்டும். பொம்பள புள்ளைன்னு என்ன படிக்க வச்சாங்க. நான் விமலா ஸ்கூல்ல டென்த்லயும் பர்ஸ்ட், மதுரை மீனாட்சி காலேஜ்ல பி.எஸ்.சி. மேத்தமடிக்ஸ் படிச்சேன். லாஸ்ட் எக்ஸாம் நடக்கிறலோதே கல்யாணம். காலேஜ்லயும் பர்ஸ்ட் வரணும் நினைச்சேன். 5 மார்க்குல செகண்டா வந்தேன்.

என் கணவர் நகை வேலை செய்யும் ஏழைத்தொழிலாளி என்பதால் கல்யாணத்துக்கு பின் மூன்று வருடம் என் கலெக்டர் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ரெண்டு வயசு வரைக்கும் பையனை வளர்த்தேன். அப்புறம் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு முயற்சி எடுத்தேன். இனி இழந்தையை நாங்க வளர்த்துகிறோம். நீ படிக்க போன்னு கணவரும், அப்பாவும் தைரியம் சொல்லி உற்சாகப்படுத்தினாங்க.

டெல்லியில் எட்டு மாசம் கோச்சிங் கிளாஸ் போனேன். மூணுமுறை ஐ.ஏ.எஸ். எழுதியும் ரிசல்ட் பெயில் தான். ஒவ்வொரு ரிசல்ட் அப்பாவும் குடும்பமே ஒண்ணு கூடி எதிர்பார்ப்போம். ஆனா, ரிசல்ட் வராது. உட்கார்ந்து அழுவேன். ஒரு தடவை யாருமே இல்ல. பையன் மட்டும் தான் இருந்தான். நான் அழுகிறத பார்த்து அவன் தான் கண்ணீரை துடைச்சு ஆறுதல் சொன்னான். அழாதீங்க அம்மா. அடுத்து பாஸ் ஆவீங்கன்னு சொல்லி கட்டி பிடிச்சு ஆறுதல் சொன்னான்.

சரி, இனி குரூப் ஒன் தேர்வு எழுதலாம்னு முடிவு பண்ணினேன். இரண்டு வருஷம் கழித்து ரிசல்ட் வந்தப்போ, நான் டெபுடிகலெக்டர் ஆகிவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. நைட் எல்லாம் தூக்கமே வரலை.

எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண் இருப்பதாக சொல்வாங்க. ஆனா, என்னோட இந்த முயற்சிக்கு முழுசா நம்பிக்கை கொடுத்தது என் கணவர் தான்.

நம்ம மண்ணுலயே டெபுடி கலெக்டராகி ஒர்க் பண்ற வாய்ப்பும் கெடைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு என்று தன் மொத்த வாழ்க்கையையும் சொன்ன துர்காவின் கண்களில் நம்பிக்கை ஒளி.

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:13 AM
Labels: குமுத‌ம், சமூக‌ம்

18 comments:

எல் கே சொன்னது…

arumayana pathivu karisall

20 ஏப்ரல், 2010 அன்று 8:19 AM
Unknown சொன்னது…

நல்ல பகிர்வு... தொடருங்கள்

20 ஏப்ரல், 2010 அன்று 8:29 AM
பனித்துளி சங்கர் சொன்னது…

///////எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண் இருப்பதாக சொல்வாங்க. ஆனா, என்னோட இந்த முயற்சிக்கு முழுசா நம்பிக்கை கொடுத்தது என் கணவர் தான்.///////


மிகவும் பெருமையாகவும் . பிரமிப்பாகவும் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி .

ஏலே மக்கா மீண்டும் வருவேன் .
அந்த க‌லெக்ட‌ர் அம்மாகிட்ட மனு கொடுக்க ஆமா !

20 ஏப்ரல், 2010 அன்று 8:32 AM
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நானும் இதை படித்திருந்தேன்,
பகிர்வுக்கு நன்றி.

20 ஏப்ரல், 2010 அன்று 9:15 AM
vasu balaji சொன்னது…

சாதனைப் பெண்:)

20 ஏப்ரல், 2010 அன்று 9:25 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

LK
//arumayana pathivu karisall//

ந‌ன்றி ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 10:42 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில்
//நல்ல பகிர்வு... தொடருங்கள்//


ந‌ன்றி ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 10:42 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

//ஏலே மக்கா மீண்டும் வருவேன் .
அந்த க‌லெக்ட‌ர் அம்மாகிட்ட மனு கொடுக்க ஆமா !//

வாங்க‌ ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 10:43 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா
//நானும் இதை படித்திருந்தேன்,
பகிர்வுக்கு நன்றி.//


ந‌ன்றி ச‌கா

20 ஏப்ரல், 2010 அன்று 10:44 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

வானம்பாடிகள்
//சாதனைப் பெண்:)//

க‌ண்டிப்பாக‌ ஐயா

20 ஏப்ரல், 2010 அன்று 10:44 AM
ஹுஸைனம்மா சொன்னது…

மகிழ்வு தரும் பகிர்வு! நன்றி!

20 ஏப்ரல், 2010 அன்று 2:54 PM
Prasanna சொன்னது…

நன்றி கரிசல்.. பகிர்விற்கு..

20 ஏப்ரல், 2010 அன்று 11:01 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//ஹுஸைனம்மா
மகிழ்வு தரும் பகிர்வு! நன்றி//

ந‌ன்றி

//அன்புடன் அருணா
பகிர்வுக்கு நன்றி.//

ந‌ன்றி

//பிரசன்னா
நன்றி கரிசல்.. பகிர்விற்கு..//

ந‌ன்றி

21 ஏப்ரல், 2010 அன்று 8:37 AM
மாதேவி சொன்னது…

"ஒரு பெண் க‌ண‌வ‌னின் உற்சாக‌த்தாலும்,உறுதுணையா‌லும் டெபுடி க‌லெக்ட‌ராக‌.." வாழ்த்துக்கள்.

பதிவுக்கு நன்றி.

21 ஏப்ரல், 2010 அன்று 9:03 AM
துபாய் ராஜா சொன்னது…

அருமையான பகிர்வு ஜூனியர்.

21 ஏப்ரல், 2010 அன்று 9:17 PM
துபாய் ராஜா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
21 ஏப்ரல், 2010 அன்று 9:51 PM
Chitra சொன்னது…

Very nice!
Thank you for sharing this super news in your post.

22 ஏப்ரல், 2010 அன்று 1:28 AM
goma சொன்னது…

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சாதனை.

10 ஜூலை, 2010 அன்று 7:28 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio