ராச்சாப்பாடு முடித்தவுடன்
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்தலையை நீவிக் கொண்டே
மெல்ல ஆரம்பிக்கும் ஆச்சி
திண்ணையில் கால் நீட்டி உக்காந்து
வெத்தலையை நீவிக் கொண்டே
மெல்ல ஆரம்பிக்கும் ஆச்சி
"உங்கம்மாவை நெனைச்சுப்பியா ராசா"
என் மொறப்ப கண்டதும்
அதுக்கில்லப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்தவதான் ஆனா
ஒரு புள்ளயக் கூட
அவ வளத்த மாதிரி
வளக்கலப்பா
தரையில விட சம்மதிக்க
மாட்டப்பா ஒன்னைய
தூக்கி சொமந்திருப்பாளே
கொஞ்சமா நஞ்சமா
என் மொறப்ப கண்டதும்
அதுக்கில்லப்பா நானும் அஞ்சு
புள்ள பெத்தவதான் ஆனா
ஒரு புள்ளயக் கூட
அவ வளத்த மாதிரி
வளக்கலப்பா
தரையில விட சம்மதிக்க
மாட்டப்பா ஒன்னைய
தூக்கி சொமந்திருப்பாளே
கொஞ்சமா நஞ்சமா
ஒரு நாளலெல்லாம் ஒனக்கு
மேலுக்குச் சரியில்லை
நொச்சு நொச்சுனு ஒரே அழுகை
அன்னிக்கி ஒரு பொட்டுத்
தூக்கமில்லை புள்ளைக்கு
ராத்திரி பூரா தோள்ல போட்டு
நடந்துகிட்டே இருந்தாப்பா
பெரியாச்சி வீட்டப் பாத்து
கையக் காட்டி அழுவ
தூக்கிட்டு ஒடுவா அந்த
ராத்திரில
அங்க போய் செத்த நேரம்
ஆனதும் இங்க பாத்து
கையக் காட்டுவ
மறுக்கா இங்க தூக்கிட்டு
வருவா
ஏலேன்னு கூப்பிட
மாட்டாப்பா ஒன்னைய
தம்பி தம்பின்னுதான்
உருகுவா
ஒரு தரம் ஒன் மாமன்காரன்
"ஏலேன்னு" கூப்பிட்டதுக்கு
என்ன சண்டை போட்டா
தெரியுமா?
என் வெத்தலைப் பைய
நீ ஒளிச்சு வக்கிறதப் பாத்து
வாய் கொள்ளாம சிரிப்பா
அவ சாகும் போது
ஒனக்கு அஞ்சு வயசு
இந்த திண்ணையில தாம்பா
வச்சிருந்தோம்
ம்ம்...இன்னிக்கு இருந்தாளா
மகராசி ஒன்னையப் பாக்க
மகுந்து போயிருப்பா மகுந்து....
என்ன செய்யறது
அவ தலையெழுத்து அப்படி.....
தன் மகளைப் பற்றி எத்தனை
முறை சொன்னாலும்
அலுத்ததில்லை ஆச்சிக்கு
எங்கம்மாவைப் பற்றி கேட்க
எனக்கும்......
13 comments:
எத்தனை முறை எப்படி எழுதினாலும் படிச்சாலும் சலிக்காம அம்மா..புதுசாவே..
அருமை அம்மாச்சி
super
//தன் மகளைப் பற்றி எத்தனை
முறை சொன்னாலும்
அலுத்ததில்லை ஆச்சிக்கு
எங்கம்மாவைப் பற்றி கேட்க
எனக்கும்......//
அலுக்கா விசயம் தாயும் அவள் அன்பும்.. நல்ல பகிர்வு.
beautiful..
நல்லாருக்குங்க.
அழகா வந்திருக்கு கரிசல்...
நானும் கவிதை எழுதுனும் என்று யோசிக்கிறேன் வரமாடங்குதே......கவிதை அருமை வாழ்த்துகள்
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி வேலு
நன்றி ரியாஸ்
நன்றி முகிலன்
நன்றி ராமசாமி கண்ணண்
நன்றி நடோடி
நன்றி குரு
உருக வச்சிட்டிங்க கரிசல்.
@அக்பர் நன்றி மக்கா
கண்ணீர் பெருக்கும்...வலிக்கும் வரிகள் ...
ரொம்ப பிடிச்சிருக்கு!
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி மக்கா
நன்றி பாரா அண்ணன்
கருத்துரையிடுக