வெளிநாட்டுப் பதிவர்கள் ஏதேனும் விவாதத்தில் கருத்துச் சொன்னால்.. ஆரோக்கியமாக எதிர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும். அதை விடுத்து ஏசி அறையில் இருந்து கொண்டு பேச வேண்டாம் எனக் கூறுவது என்ன நியாயம் எனத் தெரியவில்லை.
தகவலுக்காக
தகவலுக்காக
(circular from Bupa Middle East (Medical Insurance Company), indicating that the temperature in the major cities of the Kingdom will be rising in coming weeks, i.e. Jeddah may reach 52 C, Alkhobar / Dammam may reach 55 C & Riyadh unbelievable 59 C. )
ஐயாமார்களே..அம்மாமார்களே ஏசி என்பது நம்ம ஊரில் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருக்கலாம்..இங்க அப்படியல்ல.பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் சாதாரண மளிகை கடை வரை.. இவ்வளவு ஏன் சலூன் கடைகளில் கூட ஏசி கட்டாயமிருக்கும் இங்குள்ள வெப்பத்தைச் சமாளிக்க.ஏசி ரூமில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள்.. அவர்களுக்கு அடித்தட்டு மக்களின் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உரிமையில்லை என நினைப்பவர்களுக்கு....பெரிய கம்பெனிகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களில் இருந்து..மளிகை கடை,சின்ன ஹோட்டல்கள், சலூன் கடைகளில் வேலை செய்பவர்கள் வரை எல்லாரும் ஏசியில் தான் இருக்கிறார்கள்.பெரும்பாலனோர் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான்.பொழப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறோம் அவ்வளவே.
இனியாவது வெளிநாட்டுப் பதிவர்கள் சொல்வதில் உடன்பாடில்லை எனில் விவாதம் செய்யுங்கள்...ஏசி யை இழுக்காமல்...

******************************************************
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும்.."நெஞ்சம் மறப்பதில்லை" நிகழ்ச்சி நான் விரும்பி பார்க்கும் ஒன்று.இனிமையான குரல்களில் மறக்க முடியாத பழைய பாடல்களைப் பாடுகிறார்கள்.பாடல் மற்றும் படம் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளது.உதாரணம்.. "அத்தை மடி மெத்தையடி" பாடல் இடம் பெற்ற கற்பகம் படத்தில் தான் கே ஆர் விஜயா அறிமுகமானார்..மேலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் புகழ் பெற்ற கற்பகம் ஸ்டுடியோ உருவானது.பாடல் பற்றிய பிரபலங்களின் கருத்துக்களும் சுவையாக உள்ளது.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
"சிங்கார வேலனே" கேட்கும் போது ஜானகி அம்மாளின் நினைவோடு..அல்காவின் நினைவும்? வருவதை தவிர்க்க முடியவில்லை.
****************************************
உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்று விட்டது.. ஆக்டோபஸ்ஸின் கணிப்பும் கூட வென்று விட்டது.நேற்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவுதான்.ஏகப்பட்ட மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.ஐந்து கோல் அடித்ததோடு..மூன்று கோல்கள் அடிக்க உறுதுணையாயிருந்த ஜெர்மனியின் தாமஸ் முல்லருக்கு தங்க காலணி விருது கிடைத்தது.
******************************************
2050 இல் இந்தியாவின் ஜனத்தொகை 200 கோடியாக இருக்கும்..இது அப்போதைய சீனாவை விட அதிகம்.(தகவல் உபயம் ஏசியாநெட் ரேடியோ)நம்முடைய பெரு நகரங்களின் நிலைமைய நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.வயல்வெளிகள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது..இன்னொரு பிரச்சினை தண்ணீர்ப் பஞ்சம்.அதற்குள்ளாக பசித்தால் ஒரு மாத்திரை,தாகம் எடுத்தால் ஒரு மாத்திரை என மக்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
**********************************************
பிடித்த பஞ்ச் டயலாக்
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
குஜராத் மக்களுக்கு மின்வெட்டு என்றால் என்னவென்றே தெரியாது..பீகாரின் பெரும்பாலான மக்களுக்கு மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது.
நரேந்திர மோடி
குஜராத் முதல்வர்.
***********************************************
9 comments:
பஞ்ச் டயலாக் தான் சூப்பர்.
@வடுவூர் குமார்
நன்றி மக்கா
ஹே!ச்சும்மா அசத்துது:)
shumma supera irukku karisall. blogthan open aaga late pannuthu
வானம்பாடிகள்
//ஹே!ச்சும்மா அசத்துது:)//
நன்றி வானம்பாடிகள் சார்
LK
//shumma supera irukku karisall. blogthan open aaga late pannuthu//
நன்றி LK
பஞ்ச் சூப்பர்.
மொத மேட்டர் சரி சூடு. இப்பவே கடுமையா இருக்கு.
====
பழைய பாடல்கள் கேட்பதற்கு இனிமை.
====
அந்த கடைசி நேர கோல் சூப்பர்.
====
அனேகமாக் உணவுக்கு பதில் மாத்திரை கண்டுபிடித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.
====
பஞ்ச் டயலாக் சூப்பர். இந்த ரெண்டுக்கும் மத்தியில மத்திய பிரதேசம் இல்லை தமிழ் நாடு இருக்கிறதுன்னு நினைக்கிறேன் :)
சரியாச் சொன்னீங்க கரிசல்காரன். வெயிலும் அதிகம் சூடும் அதிகம்..
கருத்துரையிடுக