பதிவர்களுக்குள் நடைபெறும் புனைவு,எதிர் புனைவு,சவால்,எதிர் சவால்கள்,சண்டை சச்சரவுகளைக் கேள்விப்பட்டு நம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்.
கலைஞர்
கலைஞர்
தனி மனித தாக்குதல் திராவிட நாகரிகமல்ல(குல்லுக பட்டர்,அண்டங்காக்கை எல்லாம் ஞாபகம் வந்தால் கழகம் பொறுப்பல்ல).பிணக்குகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.வலைப்பதிவாளர்கள் அடிக்கடி தங்களுக்குள் பாராட்டு விழாக்கள் நடத்திக் கொள்ள வேண்டும்,இதன் மூலம் பிரச்சினைகளை வளர விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.வேண்டிய உதவிகளை ஜெகத்திடம் செய்யச் சொல்லியிருக்கிறேன். வலைப்பதிவாளர்களையும் ஒரு குடும்பமாகக் கருதி நானும் கலந்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.இதன் பிறகும் சண்டை,சச்சரவுகள் தொடர்ந்தால் நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
ஜெயலலிதா
அடுத்து தமிழகத்தில் அமையப் போவது கழக ஆட்சிதான்.தற்போது நான் ஓய்வில் இருப்பதால் 2011 இல் சென்னை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவேன் என உறுதியளிக்கிறேன்.இதனை மீறி யாரேனும் சண்டையில் ஈடுபட்டால் நமது எம்ஜிஆரில் உங்கள் வலைப்பதிவு பெயர் வெளியிடப் படும்.
வைகோ
வலைப்பதிவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு எனது தலைமையில், கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் ஆறு மாத கால "மறுமலர்ச்சி" நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர் அனைவரும் நடைபயணத்தில் கலந்து கொண்டால்,ஆறு மாத காலத்திற்கு பதிவு எழுத யாருமேயில்லாமல் சண்டை தானாகவே நின்று விடும் என்பதை கருத்தில் கொண்டே இந்த பயணம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க்குடிதாங்கி
வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட அணியில் நின்று, தொடர்ந்து வாதாடுவாதலேயே சண்டை தொடர்கிறது எனக் கருதுகிறேன்.மாறாக பதிவர்கள் வாரமொருமுறை அணி மாறி வாதாடினால் சண்டை குறையும் என்கிறேன்.இனியும் தொடர்ந்தால் காடுவெட்டி குரு களம் இறக்கி விடப்படுவார் என நினைவு படுத்த விரும்புகிறேன்.
இம்சை அரசன்

மதம்,சாதி,அரசியல்,புனைவு என தனித்தனியாக வலைபதிவுகள் தொடங்கப்படும். சண்டை போட விரும்புவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வலைபதிவுகளில் சென்று சண்டையிட்டுக் கொல்ல(ள்ள)லாம்.சிறந்த மதச்சண்டை பதிவர்,சிறந்த அரசியல் ச்ண்டைப் பதிவர்,சிறந்த புனைவுப் பதிவர் போன்ற விருதுகள் உருவாக்கப்பட்டு, விருது பெறுபவர்களுக்குப் பரிசாக அக்காமாலா மற்றும் கப்சியில் ஊறப்போட்ட பாம்புச்சட்டை,முயல் போன்றவை வழங்கப்படும்.
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
பொறுப்பி : முன் ஜாமீன் மாதிரி,முன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இதுக்கும் சண்டைக்கு வந்துராதீங்க சாமிகளா!!!
11 comments:
கரிசலுக்கு ஒரு கெடா வெட்டுங்க.....ஹி...ஹி..
இது ரொம்ப நல்லாயிருக்கு. உண்மையில இப்படித்தான் சொல்லியிருப்பாங்களோ.
பேசாம இவங்க சண்டைபோட தனியா வலிப்பக்கத்தை ஆரம்பிக்க்லாம் சூப்பர் ஐடியா! ஸ்கூல்ல பிளேக்கிரவுண்ட் இருக்கிற மாதிரி
புலிகேசியை வழிமொழிகிறேன்...
வாழ்க இம்சை அரசன்.
http://vaarththai.wordpress.com
தமிழ்க்குடிதாங்கியும் வைகோவும் சூப்பர்.
ராமதாஸ்ன்னு பிராக்கெட்ல போடுங்க.
நல்ல நகைசுவுடன் பதிவுலக சண்டையை வெளிபடிதிருகிரீர்கள். வாழ்த்துக்கள்.
கலக்கல்ஸ் :)
வாழ்க இம்சை அரசன்....
ரொம்ப நல்லாயிருக்கு
நன்றி நாடோடி
நன்றி அக்பர்
நன்றி திரவிய நடராஜன்
நன்றி அகல்விளக்கு
நன்றி soundr
நன்றி வழிப்போக்கன்
நன்றி jothi
நன்றி Jey
நன்றி வெறும்பய
இப்படியேவாயா சொன்னாய்ங்க...
இப்படியேன்னா இப்படியே இல்ல... லைட்டா மாத்தி சொன்னாய்ங்கப்பு..
வெட்டுறா ஒரு கெடாவ நம்ம கரிசலுக்கு....
கருத்துரையிடுக