இரு வீட்டின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது தீடிரென கணவன் இந்த உலகத்தை விட்டே போய் விட்டால்?
அதுவும் அந்த பெண் முழுக்க முழுக்க கணவனின் சம்பாத்தியத்தை மட்டும் சார்ந்து வாழும் சூழ்நிலையில்???
இப்படித்தான் ஆரம்பிக்கிறது சத்யன் அந்திக்காடு இயக்கிய "கத துடருன்னு" படம். குடும்பக் கதைகளை கொஞ்சம் காமெடி கலந்து சொல்வது இவரது பாணி.இதுவும் அப்படியே.
வித்யா (மம்தா மோகன்தாஸ்),ஷநாவாஸ்(ஆசிப் அலி) இருவரும் காதல் திருமணம் புரிந்து தனியே வாழ்பவர்கள்.அவர்களுக்கு ஒரே மகள் லயா.வித்யா தன் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, ஷநாவாஸை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவள்.ஒர் மழைக்கால இரவில் மகள் ஆசைப்பட்ட மாம்பழம் வாங்க சென்ற ஷநாவாஸ்,ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டு விடுகிறான்.வித்யாவின் வாழ்க்கை அந்த ஓரிரவில் தலைகீழாக மாறிவிடுகிறது.மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முற்படும் போதுதான் பணத்தேவை புரிகிறது.
கணவனின் வருமானம் நின்று விட்ட சூழ்நிலையில்,தான் ஒரு வேலைக்கு முயற்சி செய்ய கசப்பான அனுபவம் ஏற்படுகிறது. செலவுகளை சமாளிக்க தன் நகைகளை விற்கிறாள், குழந்தையின் பள்ளிப் பேருந்தை நிறுத்தி விட்டு,தானே தினமும் நடத்தி கூட்டிச் செல்கிறாள்.வாடகை கொடுக்க முடியாத நிலையில் வீட்டு ஓனர்க்கு பயந்து பார்க்குகளில் நேரம் கடத்துகிறார்கள் அம்மாவும், குழந்தையும்.வாடகை குடுக்க முடியாமல், இருந்த வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்ஃபார்ம்க்கு மாறுகிறார்கள்.
எதிர்பாராத தருணத்தில் வாடகை ஆட்டோ ஓட்டும் பிரேமனை (ஜெயராம்) சந்திக்க,இவர்களின் கதையை கேட்ட அவன், தன் காலனிக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் தங்க வைக்கிறான்.இதற்கிடையில், வித்யாவின் கணவன் இறந்த பிறகு குழந்தை தங்களிடம் தான் வளர வேண்டும் என்று கணவன் வீட்டாரின் மிரட்டல் வேறு.
வித்யா எப்படி இந்த நிலையிலிருந்து மீண்டு ஜெயிக்கிறாள் என்பதே மீதி கதை.
மம்தாவுக்கு பாசஞ்சர் படத்திற்கு அப்புறம் படம் முழுதும் வரும்படியாக ஒரு நல்ல வாய்ப்பு இந்தப் படம்.ஜெயராமுக்கு ஹீரோயின் கிடையாது,சண்டை கிடையாது,ஒரு கேரக்டராக மட்டும் வந்து போகிறார்.

இவர்கள் தவிர கேபிஏசி லலிதா,மம்முக்கோயா போன்றோரும் உண்டு.
ராஜாவின் இசையில் பாடல்கள் அட்டகாசம்,"ஆரோ" என்று தொடங்கும் முதல் பாடல் சூப்பரோ சூப்பர்.
எனக்குப் பிடித்த காட்சிகள்
இடம் வாங்கவே பணம் இல்லாத போது புரோக்கருடன் வீடு கட்ட இடம் பார்ப்பது,இங்க தான் பெட்ரூம்,இல்ல இங்க தான் என கணவனும், மனைவியும் இல்லாத வீட்டுக்கு சண்டை போட்டுக் கொள்வது.
காலனியில் தனித்து வசிக்கும் இன்னொசென்ட், மகன் வீட்டை விட்டு வெளியேற்றிட, வயதான காலத்திலும் சைக்கிளில் லாட்டரி விற்றுப் பிழைக்கிறார்,இவரது மனைவி வேறோரிடத்தில் வேலை செய்கிறார்.எல்லாத்தையும் உள்ளுக்குள் சுருட்டி வைத்து விட்டு,வெளியே மகிழ்ச்சியாக அலைகிறார் இன்னொசென்ட்.மனுஷன் திரையில் வந்தாலே தியேட்டரில் விசில் பறக்கிறது.
தினம் ஒரு யூனிஃபார்ம்,தினம் ஒரு கட்சிக் கொடி என எல்லா கட்சி பொதுக்கூட்டங்களுக்கும் ஆள் சப்ளை செய்பவராக மம்முக்கோயா.250 ரூபாய்,ஒரு குவார்ட்டர்,ஒரு பிரியாணி பொட்டலம் இது தான் கேரளா முழுக்க ஸ்டாண்டர்டு ரேட்,அதுக்கு மேல குடுக்க முடியாதுன்னு சொல்லும் காட்சி.
ரியாலிட்டி ஷோவில் பையன் "எலிமினேட்" ஆகியதற்க்காக,தெருவே அந்த வீட்டில் கூடி ஏதோ எழவு வீடு மாதிரி சோகமாக உட்கார்ந்திருப்பது.
"பொண்ணுங்கன்னா என் பொண்ணு மாதிரி இருக்கணும்,தேவையில்லாம வெளியே எங்கேயும் போக மாட்டா,கோயிலுக்கு போறதோட சரி" இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் கேபிஏசி லலிதாவின் மகள் கோயில் பூசாரியோடு ஓடிப் போவது.
வழக்கமான சத்யன் அந்திக்காடு படம்.
5 comments:
விமர்சனம் நல்லா இருக்கு கரிசல்..
படம் பார்த்த உணர்வைத்தருகிறது கரிசல்.
Looks like a good movie....
நல்ல விமர்சனம்...
நன்றி நாடோடி
நன்றி அக்பர்
நன்றி சித்ராக்கா
இங்கே கிடைக்குமான்னு பாக்கறேன்.
கருத்துரையிடுக