skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 11 மே, 2010

அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்

அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் பெய‌ருக்கு முன்னால் ஏக‌ப்ப‌ட்ட‌ ப‌ட்ட‌ பெய‌ர்க‌ளை சேர்த்துக் கொள்ளும் வ‌ழ‌க்க‌ம் கொண்டிருந்த‌வ‌ர்க‌ள்.அது பெரும்பாலும் அவ‌ர்க‌ள் த‌லைமையேற்று ந‌ட‌த்திய‌,போர்க‌ளில் பெற்ற‌ வெற்றியை ப‌றை சாற்றுவ‌தாக‌ இருக்கும்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் நிறைய‌ ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ஆனால் அதுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது.ஏதாவ‌து அல்ல‌க்கை கொடுத்த‌ "தானே உக்காந்த‌ தானைத் த‌லைவ‌ன்" ப‌ட்ட‌த்தை கூட‌ வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ரில் போட்டுக் கொள்வார்க‌ள்.
************************
அர‌ச‌ர்க‌ள் -  ப‌ல‌தார ம‌ணம் முடிக்கும் வ‌ழ‌க்க‌ம் உடைய‌வ‌ர்க‌ள் எனினும் ப‌ட்ட‌த்து அர‌சிக்கே அதிக‌ அதிகார‌ம்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் அப்ப‌டியே,ஒன்றுக்கும் மேற்ப‌ட்ட‌ திரும‌ண‌ம் செய்து கொள்ப‌வ‌ர்க‌ள்.ஆனால் இங்கு எல்லாருக்கும் அதிகார‌ம் உண்டு.ம‌னைவிக‌ளும்,துணைவிக‌ளும் கிச்ச‌னில் இருந்த‌ ப‌டியே அர‌சில் த‌லையிடும் அதிகார‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்.
**********************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் வாரிசுக‌ளிலிருந்து ஒருவ‌ருக்கு ப‌ட்ட‌த்து இள‌வ‌ர‌சாக‌ முடி சூட்டி,அவ‌ருக்கு எல்லா வித‌ ப‌யிற்சிக‌ளையும் அளித்து,அர‌ச‌ர் ஆக்கிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ப‌தவிக்கு வ‌ர‌ த‌குதி,திற‌மை எல்லாம் தேவையில்லை. அர‌சிய‌ல்வாதிக்கு வாரிசாக‌ இருப்ப‌தே பெரிய‌ த‌குதி தான்.ஏழாவ‌து பொண்டாட்டியின் எட்டாவது வாரிசுக்கும் ஏதாவ‌து ஒரு ப‌த‌வி நிச்ச‌ய‌ம்.
***************************************
அர‌ச‌ர்க‌ள் -  அர‌ண்ம‌னைக‌ளில் வாழ்ந்த‌வ‌ர்க‌ள்,த‌ங்க‌ள் பாதுகாப்புக்கென‌ த‌னியே ப‌டை வைத்திருந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ஆர‌ம்ப‌த்தில் குடிசையில் வாழ்ந்தாலும்,ப‌த‌வி வந்த‌ பின் அர‌ண்ம‌னை போன்ற‌ பெரிய‌ வீடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ள்.அர‌சின் இச‌ட் பிரிவு பாதுகாப்பில் இருந்தாலும்,த‌னியே குண்ட‌ர் ப‌டை வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************
அர‌ச‌ர்க‌ள் -  வெளியிலிருந்து வ‌ரும் எதிரியை வெற்றி கொள்ள‌, கூட்டு சேர்ந்து போராடிய‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  இவ‌ர்க‌ளும் எதிரியை,தேர்த‌லில் வெற்றி கொள்ள‌ கூட்ட‌ணி வைத்துக் கொள்ப‌வ‌ர்க‌ள். ஆனால் எதிரியையும்,கூட்டாளியையும் சுழ‌ற்சி முறையில் மாற்றிக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
***************************************************
அர‌ச‌ர்க‌ள் -  த‌ங்க‌ள் முன்னோர்க‌ளை ம‌தித்த‌வ‌ர்க‌ள்.முன்னோர்க‌ள் காட்டிய‌ வ‌ழியில் சென்று,அவ‌ர்க‌ளை விட‌ பெரிய‌ வெற்றியை அடைந்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ம‌ட்டும் முன்னோர்க‌ளை ம‌திப்ப‌வ‌ர்க‌ள்.அவர்க‌ளை காட்டிலும் அதிக‌ சொத்துக்க‌ளை குவித்துக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
**********************************************************
அர‌ச‌ர்க‌ள் -  "ம‌யிர் நீப்பின் உயிர் வாழா க‌வ‌ரி மான்" போல‌ வாழ்ந்த‌வ‌ர்க‌ள்.
அர‌சிய‌ல்வாதிக‌ள் -  வெட்க‌ம்,மான‌ம்,சூடு,சொர‌ணை என்ப‌த‌ற்கும் த‌ங்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை என்ப‌தாக‌ வாழ்ப‌வ‌ர்க‌ள்.
************************************************************
அர‌ச‌ர்க‌ள் -    அர‌சாட்சி என்ற‌ பெய‌ரில் ம‌க்களாட்சி செய்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் -  ம‌க்களாட்சி என்ற‌ பெய‌ரில் அர‌சாட்சி செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.
 ************************************************************
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 10:21 AM
Labels: அர‌சிய‌ல், மொக்கை

11 comments:

நாடோடி சொன்னது…

//இவ‌ர்க‌ளும் நிறைய‌ ப‌ட்ட‌ப் பெய‌ர்க‌ளை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் ஆனால் அதுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்காது.ஏதாவ‌து அல்ல‌க்கை கொடுத்த‌ "தானே உக்காந்த‌ தானைத் த‌லைவ‌ன்" ப‌ட்ட‌த்தை கூட‌ வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ரில் போட்டுக் கொள்வார்க‌ள்.//

த‌ன‌க்கு தானே ப‌ண‌ம் கொடுத்து ப‌ட்ட‌ம் பெறுப‌வ‌ர்க‌ள்..

11 மே, 2010 அன்று 12:11 PM
Chitra சொன்னது…

அர‌ச‌ர்க‌ள் - அர‌சாட்சி என்ற‌ பெய‌ரில் ம‌க்களாட்சி செய்த‌வ‌ர்க‌ள்.

அர‌சிய‌ல்வாதிக‌ள் - ம‌க்களாட்சி என்ற‌ பெய‌ரில் அர‌சாட்சி செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.


.....இதை விட தெளிவாக விளக்க முடியாது. இதுக்கே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும்.

11 மே, 2010 அன்று 7:10 PM
Unknown சொன்னது…

நீர் புலவன் ...

11 மே, 2010 அன்று 7:58 PM
ஜானகிராமன் சொன்னது…

கலக்கிட்டீங்க... வீட்டுக்கு ஆட்டோ, சுமோ வராம பாத்துக்கங்க. நமக்கெல்லாம் Z பாதுகாப்பில்ல.. A to Z வரைக்கும் எந்த பாதுகாப்பும் தரமாட்டாங்க.

11 மே, 2010 அன்று 8:15 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி நடோடி

ந‌ன்றி சித்ராக்கா

ந‌ன்றி செந்தில்

ந‌ன்றி ஜான‌கிராம‌ன்
அபுதாபிக்கெல்லாம் ஆட்டோ வ‌ராது ச‌கா

12 மே, 2010 அன்று 3:36 PM
vadivel சொன்னது…

arasarkal : ethirikalai poritu velvarkal

amacharkal : ethirikalai kasu koduthu vangividuvarkal

12 மே, 2010 அன்று 3:47 PM
ஹுஸைனம்மா சொன்னது…

//ம‌க்களாட்சி என்ற‌ பெய‌ரில் அர‌சாட்சி செய்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.//

இதுக்கு அரசாட்சியே மேல்னு ஏங்க வச்சிட்டாங்க!!

19 மே, 2010 அன்று 2:09 PM
Chitra சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html

:-)

9 ஜூன், 2010 அன்று 4:56 AM
cheena (சீனா) சொன்னது…

அன்பின் கரிசல்காரன்

ஒப்பு நோக்கியது அருமை

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

9 ஜூன், 2010 அன்று 6:42 AM
அண்ணாமலை..!! சொன்னது…

கடேசில சொன்னீங்க பாருங்க!
ரொம்ப அருமையான கருத்துங்கோவ்!!
கிரீடத்தில் பதிச்ச வைரம்!
(உவமை க்ரீட்டா??)
:)

9 ஜூன், 2010 அன்று 2:46 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி சீனா சார்

ந‌ன்றி அண்ணாம‌லை

ந‌ன்றி சித்ராக்கா

9 ஜூன், 2010 அன்று 4:02 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ▼  மே (9)
      • மீண்டும்....(முகில‌னுக்காக‌)
      • த‌மிழ் வ‌ழிக் கொலை
      • ந‌ன்றி ந‌வில‌ல்
      • காண‌வில்லை
      • ச்சும்மா
      • +2வுக்கு அப்புற‌ம் ----- வ‌ழிகாட்டி
      • அம்மாக்க‌ளுக்கு
      • அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்
      • தென்னையைப் பெத்தா இள‌நீரு,பிள்ளையைப் பெத்தா க‌ண்ணீரு
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio