skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 20 மே, 2010

ந‌ன்றி ந‌வில‌ல்

இப்போதெல்லாம் தின‌மும் ஏதாவ‌து ஒரு சூனா பானா ச‌ங்க‌ம் ஒண்ணுமில்லாத‌ ஒரு காரிய‌த்துக்கு ந‌ம்ம‌ முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிற‌து‌.அவ‌ரும் அறிவால‌ய‌த்துக்கு வ‌ர‌வ‌ழைத்து,த‌ன் அமைச்ச‌ர‌வை ச‌காக்க‌ள் புடை சூழ சால்வையை ஏற்றுக் கொள்கிற‌ மாதிரி புகைப்ப‌ட‌ங்க‌ளை மீடியாக்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி ம‌கிழ்ந்து கொண்டிருக்கிறார்.,

இதே ரேஞ்சில் போனால் இன்னும் யார் யாரெல்லாம் முத‌ல்வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல வேண்டியிருக்கும்............

சீச‌ன் நேர‌ங்க‌ளில் த‌மிழ‌க‌ அர‌சு வ‌ழ‌ங்கும் இலவச‌ வேட்டி,சேலையை க‌ட‌த்தி வ‌ந்து விற்ப‌னை செய்து பிழைத்து கொண்டிருந்த‌ எங்க‌ளுக்கு,இல‌வ‌ச டிவி வ‌ழ‌ங்குவ‌த‌ன் மூல‌ம், ஆண்டு முழுவ‌தும் தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்ப‌டுத்தி, எங்க‌ள் வாழ்வில் "ஒளி" ஏற்றி வைத்த‌ "த‌மிழ‌ன‌த்த‌லைவ‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி.

த‌மிழ‌க‌ இல‌வ‌ச‌ டிவி ச‌காய‌ விலைக்கு விற்ப‌னை செய்யும் சேட்ட‌ன்க‌ள் ச‌ங்க‌ம் கேர‌ளா.
**********************************
பைசா ந‌க‌ர‌ சாய்ந்த‌ கோபுர‌த்துக்கு இணையாக‌,கோவையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்குக்காக‌ வீட்டு வ‌ச‌தித் துறை மூல‌ம் சாய்ந்த‌ வீடுக‌ள் க‌ட்டித் த‌ந்த‌ "ஏழைப் ப‌ங்காள‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

கோவை அம்ம‌ன்புர‌த்துக்கு குடிபுக‌ ப‌ய‌ப்ப‌டுவோர் ச‌ங்க‌ம்
**********************************
கோவை ந‌க‌ரில் போக்குவ‌ர‌த்துக்கு த‌டையாக‌ இருந்த‌ ம‌ர‌ங்க‌ளை, போர்க்கால‌ அடிப்படையில் வெட்டி,கோவையை துபாயாக‌ மாற்றிய‌ "சுற்று சூழ‌ல் காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

செம்மொழி பேசுவோர் ச‌ங்க‌ம் கோவை
************************************
இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும் இல்லாத‌ முறையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வ‌ழ‌ங்கி,நொடித்துப் போன எங்க‌ள் தொழிலை ஏற்ற‌ம் காண‌ வைத்த‌ "தொழிற் துறையின் ந‌ண்ப‌ன்"  டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

இல‌வ‌ச‌ அரிசி ப‌ய‌ன்ப‌டுத்தும் ஹோட்ட‌ல் முத‌லாளிக‌ள் ச‌ங்க‌ம்
**************************************
எல்கேஜி ப‌டிக்கும் பைய‌ன் கூட‌ இ மெயில் மூல‌ம் லீவு லெட்ட‌ர் அனுப்பும் இந்த‌ கால‌த்தில், முக்கியமான‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு மத்திய‌ அர‌சை க‌டித‌ம் மூல‌ம் தொட‌ர்பு கொள்ளும் "த‌க‌வ‌ல் தொழில் நுட்ப புர‌ட்சி நாய‌க‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

தபால் துறை ஊழிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம்
***************************************
+2 தேர்வில், 25 ஆண்டுக‌ளாக‌ தொட‌ர்ந்து மாநில‌ அள‌வில் முத‌ல் இட‌ம் பிடித்தும்,இது வ‌ரை மாவ‌ட்ட‌த்தில் எந்த‌ ஒரு அர‌சு க‌ல்லூரிக்கும் அனும‌தி வழ‌ங்காத‌ "க‌ல்விப் புர‌ட்சி வேந்த‌ன்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

விருதுந‌க‌ர் மாவ‌ட்ட‌ த‌னியார் க‌ல்லூரிக‌ள் ச‌ங்க‌ம்
*****************************************
எங்க‌ள் ப‌ல‌த்தை நாங்க‌ளே அறியாம‌ல் ஓட்டுக்கு அம்ப‌தும்,நூறும் வாங்கி கொண்டிருந்த‌தை மாற்றி ஒரு ஓட்டுக்கு ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ளை அள்ளி வ‌ழ‌ங்கி,எப்ப‌டா ந‌ம்ம‌ எம் எல் ஏ ப‌ர‌லோக‌ம் போவார்,இடைத் தேர்த‌ல் வ‌ரும் என‌ ஏங்க‌ வைத்த‌ ‌ "ஜ‌ன‌நாய‌க‌ காவ‌ல‌ர்" டாக்ட‌ர் க‌லைஞ‌ருக்கு ந‌ன்றி ந‌ன்றி

அனைத்துல‌க‌ அப்பாவி வாக்காளர்க‌ள் ச‌ங்க‌ம்.
******************************************
குறிப்பு: ஆட்டோ அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி ‍ அபுதாபியிலிருந்து வ‌ட‌மேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவ‌ன‌த்தில் த‌னியே த‌ன்ன‌ந்த‌னியே அமைந்துள்ள‌ மாமன்னார் & க‌ம்பெனி

பின்குறிப்பு:ஆட்டோக்கார‌ரிட‌ம் ஜிபிஎஸ் குடுத்து அனுப்ப‌ ம‌ற‌க்க‌ வேண்டாம்‌.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:14 PM
Labels: அர‌சிய‌ல், மொக்கை

15 comments:

எல் கே சொன்னது…

kandippa auto varum

20 மே, 2010 அன்று 1:19 PM
நிகழ்காலத்தில்... சொன்னது…

ஆட்டோ வந்திருக்கனுமே இன்னேரம் :))

20 மே, 2010 அன்று 2:19 PM
ஹுஸைனம்மா சொன்னது…

கரிசல்காரரே, சரியா இடம், அட்ரஸ் சொல்லக்கூடாதா? அபுதாபின்னதும் என் வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க பாருங்க!! உடனே கரெக்டா ஜி.பி.எஸ். அட்ரஸ் சொல்லுங்க!! அனுப்பி வைக்கிறேன்!!

20 மே, 2010 அன்று 3:05 PM
vasu balaji சொன்னது…

கெளம்பீட்டாய்ங்கய்யா கெளம்பீட்டாய்ங்கய்யா! புதுசு புதுசா கலாய்க்கிறாய்ங்களே நான் என்ன பண்ணுவேன்னு எப்புடி புலம்பறதுன்னு சொல்லி குடுக்கதான் வடிவேலு கலைஞர பார்த்தாரோ:))

20 மே, 2010 அன்று 3:37 PM
Chitra சொன்னது…

குறிப்பு: ஆட்டோ அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி ‍ அபுதாபியிலிருந்து வ‌ட‌மேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவ‌ன‌த்தில் த‌னியே த‌ன்ன‌ந்த‌னியே அமைந்துள்ள‌ மாமன்னார் & க‌ம்பெனி

பின்குறிப்பு:ஆட்டோக்கார‌ரிட‌ம் ஜிபிஎஸ் குடுத்து அனுப்ப‌ ம‌ற‌க்க‌ வேண்டாம்‌.



......ha,ha,ha,ha,ha,ha..... நடத்துங்க, நடத்துங்க.....

20 மே, 2010 அன்று 10:49 PM
நாடோடி சொன்னது…

நீங்க‌ க‌ல‌க்குங்க‌...

21 மே, 2010 அன்று 12:47 AM
பனித்துளி சங்கர் சொன்னது…

///////////குறிப்பு: ஆட்டோ அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரி ‍ அபுதாபியிலிருந்து வ‌ட‌மேற்கே 300 கீமீ தொலைவில் பாலைவ‌ன‌த்தில் த‌னியே த‌ன்ன‌ந்த‌னியே அமைந்துள்ள‌ மாமன்னார் & க‌ம்பெனி
////////////

ஏலே மக்கா பாலைவனத்தில் எங்கள இருக்க ???????????? நானும் அதே பாலைவனம்தாம்ல

21 மே, 2010 அன்று 1:06 AM
பருப்பு (a) Phantom Mohan சொன்னது…

சூப்பர் பாஸ், ஊர்ப்பாசம் நமக்குத்தான் அதிகமா இருக்கு பாஸ்...நம்ம மாவட்டத்துல ஒரு மெடிக்கல் காலேஜ் கூட இல்ல..கல்வி அமைச்சர் நம்ம ஊர்க்காரன்..கேவலம்..

மைக் செட்டு, சீரியல் லைட்டு, கல்யாண மண்டபத்துக்காரங்கள மறந்த்திட்டீன்களே...மாசம் மாசம் அங்க தான விழா நடக்குது...அவனுங்க ஒரு நாள் விழா எடுக்கப்போறனுங்க பாருங்க...

ஹ்ம்ம் எப்போ தமிழ் நாட்டுக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமோ தெரியல...

21 மே, 2010 அன்று 1:08 AM
மேவி... சொன்னது…

இன்னும் நிறைய சொல்லிருக்கலாமே ???? ஏன் விட்டுடிங்க ...... அப்படி சொல்லிருந்த ஆட்டோவுக்கு பதிலா லாரி வந்து இருக்குமே

21 மே, 2010 அன்று 4:49 AM
ஸாதிகா சொன்னது…

கரிசல்காரருக்கு துணிச்சல்தான்.அப்படியே உண்மையை விளம்பிட்டீங்க(இந்த பின்னூட்டத்திற்கு ஆட்டோ வந்துவிடாதே?)

21 மே, 2010 அன்று 5:35 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி LK
//kandippa auto varum//
வ‌ர‌ட்டும்

ந‌ன்றி நிகழ்காலத்தில்
//ஆட்டோ வந்திருக்கனுமே இன்னேரம் :))//

இன்னும் இல்லை ந‌ண்பா


ந‌ன்றி ஹுஸைனம்மா
//கரிசல்காரரே, சரியா இடம், அட்ரஸ் சொல்லக்கூடாதா? அபுதாபின்னதும் என் வீட்டுக்கு வந்து நிக்கிறாங்க பாருங்க!! உடனே கரெக்டா ஜி.பி.எஸ். அட்ரஸ் சொலுங்க!! அனுப்பி வைக்கிறேன்!!//

ஏனிந்த‌ கொல‌வெறி

22 மே, 2010 அன்று 7:06 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வானம்பாடிகள் சார்

ந‌ன்றி சித்ராக்கா

ந‌ன்றி ந‌டோடி

22 மே, 2010 அன்று 7:07 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி பனித்துளி சங்கர்
//ஏலே மக்கா பாலைவனத்தில் எங்கள இருக்க ???????????? நானும் அதே பாலைவனம்தாம்ல//

ரூவெய்ஸ் போற‌ வ‌ழில‌ டேரிஃப்னு ஒரு குக்கிராம‌ம் ம‌க்கா

ந‌ன்றி பருப்பு The Great

ந‌ன்றி டம்பி மேவீ
//இன்னும் நிறைய சொல்லிருக்கலாமே ???? ஏன் விட்டுடிங்க ...... அப்படி சொல்லிருந்த ஆட்டோவுக்கு பதிலா லாரி வந்து இருக்குமே//

சொல்லியிருக்க‌லாம்

ந‌ன்றி ஸாதிகா
//(இந்த பின்னூட்டத்திற்கு ஆட்டோ வந்துவிடாதே?)//

வ‌ர்ரூம் ஆனா வ‌ராது

22 மே, 2010 அன்று 7:12 AM
Muthu சொன்னது…

"த‌க‌வ‌ல் தொழில் நுட்ப புர‌ட்சி நாய‌க‌ன்"

ஏலே! மக்கா.
சூப்பர்!
ஆட்டோ வந்தாலும் பயபுள்ளைக
அசரமட்டோம்ல!
ஒருவேள வந்துருச்சுன்னா?
எல்லாம் விதிப்படிதான்
நடக்கும்
கவலைபடாதே!

22 மே, 2010 அன்று 1:32 PM
Priya சொன்னது…

கலக்கலா எழுதி இருக்கிங்க!

22 மே, 2010 அன்று 4:00 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ▼  மே (9)
      • மீண்டும்....(முகில‌னுக்காக‌)
      • த‌மிழ் வ‌ழிக் கொலை
      • ந‌ன்றி ந‌வில‌ல்
      • காண‌வில்லை
      • ச்சும்மா
      • +2வுக்கு அப்புற‌ம் ----- வ‌ழிகாட்டி
      • அம்மாக்க‌ளுக்கு
      • அர‌ச‌ர்க‌ள் Vs அர‌சிய‌ல்வாதிக‌ள்
      • தென்னையைப் பெத்தா இள‌நீரு,பிள்ளையைப் பெத்தா க‌ண்ணீரு
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio